குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

வாக்களித்துவிட்டு தோற்றுப்போகும் தமிழர்களின் தலைவிதி மாறுவது எப்போது? -ஆதி

இலங்கைத்தீவில் 1505 திசைமாறி வந்த போர்த்துக்கீசர்கள் அங்கே முதலில் வர்த்தக தளத்தை அமைத்துக்கொண்டு, பின்னர் அரசியல் உட்பூசல்களை பயன்படுத்தி தமது பலத்தை விஸ்தரித்து கொண்டனர்.

1580 போர்த்துக்கீசத் தளபதி கோட்டே மன்னனுக்கு வாரிசு இல்லாத காரணத்தை பயன்படுத்தி இலங்கையை போர்த்துக்கீச மன்னன் பெயரில் உயில் எழுதிக்கொண்டான். பின்னர் 1597 கோட்டே மன்னன் இறக்க இலங்கையின் கரையோரம் போர்த்துக்கீச வசப்பட்டது. கண்டி இராசதானியுடன் 1638 செய்யபட்ட ஒப்பந்தத்தின் காரணமாக ஒல்லாந்தர் சிறிது சிறிதாக போர்த்துக்கீச வசமிருந்த பகுதிகள் ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது. 1796யில் ஒல்லாந்தர் ஆங்கிலேய கப்பல்களை திருகோணமலை துறைமுகத்தில் தரிக்க இடமளிகாததால் ஆங்கிலேயர்

முதலில் திருகோணமலையையும் பின்னர் மற்றைய இலங்கை கரையோர பகுதிகளையும் கைப்பற்றினர். ஒல்லாந்தர் 1801ரில் ஆங்கிலேயருடன்  ஒப்பந்தத்தின் மூலம் ஆங்கிலேயருக்கு இலங்கையை தத்தம் செய்தனர். ஆங்கிலேயர் தமிழரசனுக்கும் சிங்கள பிரதானிகளுக்கும் இடையில் இருந்த பயன்படுத்தி அதுவரை இலங்கையின் மத்திய பகுதியில், போர்த்துக்கீச, ஒல்லாந்த ஆட்சிகளுக்கு உட்படாது சுதந்திரயரசாயிருந்து வந்த கண்டி 1815 யில் தந்திரத்தால் கைப்பற்றி முழு இலங்கையையும் தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்தனர்.

ஆங்கிலேயரின் 133 வருடகால ஆட்சிக்குப் பின்னர், 1948இல் இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆகமொத்தம் 443 வருடங்கள் அன்நியர்களின் ஆட்சிக்குற்பட்டு

மீண்டும் அந்த நாட்டின் குடிமக்களிடம் ஆட்சி அதிகாரங்களை 1948ஆம் ஆண்டு ஒப்படைத்துவிட்டு ஆங்கிலேயர் வெளியேறியவுடன் இலங்கை சுதந்திரம்

பெற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. இலங்கைத்தீவு அன்நியர்கள் ஆட்சிக்குற்பட்டிருந்தவேளை அங்கே வாழ்ந்த அத்தனை குடிமக்கழும் பாதிக்கப்பட்டார்கள்

வெள்ளையனே! வெளியேறு என்று நாடுமுழுவதும் போராட்டங்களும் சலசலப்புக்களும் தொடர்ந்துகொண்டே இருந்தது. இலங்கைத்தீவின் ஈடு இணையற்ற

செல்வங்களையெல்லாம் வெள்ளையர்கள் கொள்ளையடித்துச்சென்றார்கள் எத்தனையோ கோவில்கள் பள்ளிவாசல்கள் எல்லாம் இடிக்கப்பட்டது இலங்கைத்தீவு

ஆங்கிலேய ஆட்சிக்குற்பட்டிருந்தவேளை தமிழன் சிங்களவன் இஸ்லாமியன் என்ற வேறுபாடுகள் இல்லாது எல்லோருமே பாதிக்கப்பட்டார்கள்

ஆனால் அது சுதந்திரமடைந்ததாகக்கூறப்படும் 1948 இற்கு பின்னர் தமிழ்மக்கள் மட்டும் இன்றுவரைக்கும் சுதந்திரம் என்ற வார்த்தையினைக்கூட

உச்சரிப்பதற்கும் முடியாதவர்களாக எத்தனையோ இழப்புக்களுடன் உள்நாட்டிலேயே அகதிகளாக அலைகின்றனர்.

பிருத்தானியா வேளியேறிய பின்னரும் ஆட்சிக்காலத்தில் சுமுக நிலையில் இருந்துவந்த, தமிழ் – சிங்கள இனங்களுக்கிடையேயான தொடர்புகள், சிறிது சிறிதாகச்

சீர்கெடத் தொடங்கின. இன முரண்பாடுகளின் வெளிப்பாடுகள், அரசியல், பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, குடியேற்றம் போன்ற பலதரப்பட்ட துறைகளிலும்

சிங்கள ஆட்சியாளர்களால் வளர்க்கப்பட்டது.ஐரோப்பிய குடியேற்றவாத காலங்களிலும், அதற்கு முன்னரும், சிங்கள சமுதாயத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைச் சரிசெய்வதாகக் கூறிக்கொண்டு அதிகாரத்தில் இருந்த சிங்களத்தலைவர்கள் தமிழ்மக்களுக்கு அநீதிகளை இழைத்தும் சிங்களகுடிமக்களிடம் இனத்துவேசத்தினை

விதைத்துவிட்டார்கள் அதுவே இன்று நாடுமுழுவதும் தமிழினத்தினை அழிக்கும் விச விருட்சமாக வளர்ந்துள்ளது

1958ல் ஆரம்பித்து, இனக்கலவரங்கள் அடிக்கடி நிகழத்தொடங்கின. 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, சிங்களம் மட்டும் சட்டமும், 1972ல் அறிமுகப்படுத்தப்பட்ட

புதிய குடியரசு அரசியல் யாப்பும், பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வது தொடர்பில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் முறையும், நிலைமையை மேலும் மோசமாக்கின. இன நல்லிணக்கத்தினையும் நல்லாட்சியினையும் ஏற்படுத்தவேண்டிய நாட்டின தலைவர்கள் எல்லோருமே

குள்ளநரிகளாக மாறி தமது ஆட்சியதிகாரத்தினை தக்கவைத்துக்கொள்ளவும் சிங்களமக்களின் பேசும் சக்தியாக தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளவும் இந்த

இனப்பிரச்சனையினை வளத்துவிடத்தலைப்பட்டார்களே தவிர அதற்கு முற்றுப்புள்ளிவைக்க எவரும் விரும்பவில்லை.

பிருத்தானிய வேளியேறி 1972இல் இலங்கை குடியரசுநாடாக அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரைக்கும் இந்த நாட்டின் பல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்

ஆனால் இவர்களில் ஒருவர்கூட இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்க்கமான ஒரு முடிவினை பெற்றுக்கொடுக்கவில்லை மாறாக இனப்பிரச்சினை என்ற ஒன்றினை வைத்தே

அரசியல்ப்பிளைப்புநடத்தினார்கள் என்பதுதான் நிதர்சனம் இது-வில்லியம் கொபல்லாவ (மே 22, 1972 – பெப்ரவரி 4, 1978) ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா

(பெப்ரவரி 4, 1978 – ஜனவரி 2, 1989) ரணசிங்க பிரேமதாசா (ஜனவரி 2, 1989 – மே 1, 1993) டிங்கிரி பண்டா விஜயதுங்கா (மே 2, 1993 – நவம்பர் 12, 1994) சந்திரிகா

குமாரதுங்க (நவம்பர் 12, 1994 – நவம்பர் 19, 2005) மகிந்த ராஜபக்ச (நவம்பர் 19, 2005 – தொடக்கம் இன்றுவரைக்கும் ஆட்சியில் இருக்கும் அத்தனை தலைவர்களுக்கும்

இது பொருந்தும்

இலங்கையின் அரசியல்வாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் புலிகள் என்ற அமைப்பும் பயங்கரவாதம் என்ற சொல்லும் இந்த இரண்டையும் வைத்தே பல

ஆண்டுகள் ஆட்சியிலே இருக்கலாம் எத்தகைய அநீதிகளையும் செய்யலாம் எவளவு ஊளல்கள் செய்துவிட்டும் அதை புரிந்துகொண்டு எவரேனும் கேழ்விகேட்க

எத்தணித்தாலே போதும் வடக்கில் புலி கிழக்கில் பயங்கரவாதம் அய்யகோ ஆபத்து என்று கூக்குரல் போட்டு கூச்சலிட்டு படிப்பறிவோ அரசியல் தொளிவோ

அற்ற அடிமட்ட சிங்களமக்கள் மத்தியிலே ஒரு பீதியைக்கிளப்பிவிட்டு தம்மை மன்னாதி மன்னர்களாக காட்டிக்கொள்ளும் தந்திரோபாயத்தினை ஆட்சிக்கு

வரும் அனைவரும் வெகு விரைவிலேயே கற்றுக்கொண்டுவிடுகின்றனர் எனவேதான் சிங்கள ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் போர் முடிவுற்று ஐந்து

வருடங்களாகியும் புலிகளுக்கு புதைகுழிதோண்டி புதைத்துவிடுவதற்கு விரும்பவில்லை எனவேதான் வெளிநாட்டுப்புலிகள், வெள்ளைப்புலிகள்,

முன்நாள் புலிகள், இன்நாள்ப்புலிகள் என்று பூச்சாண்டிகாட்டிக்கொண்டிருக்கின்றனர்,அதேவேளை மீண்டும் புலிகள் எங்கே எழுந்துவந்துவிடுவார்களோ

என்ற அச்சமும் இவர்களுக்கு இல்லாமல் இல்லை எவேதான் அடிக்கடி தேடுதல்களும் புதிய படைமுகாம்களும் என இரானுவம் தனது வேலைகளை

உள்ளே செய்துகொண்டு இருக்கின்றது, இவர்களைப்பொறுத்தவரை புலிகளை எப்போதுமே கோமாநிலையிலே வைத்திருக்கவேண்டும் அவர்கள் எழுந்துகொண்டால்

சமாளிப்பது கடினம் அவர்களை மரணிக்கச்செய்துவிட்டால் அரசியல் செய்வது கடினம் எனவே தமிழர்களுக்கான ஒரு நியாயமான தீர்வுகிடைக்கும்வரை

புலிகளைவைத்துத்தான் அரசியல் செய்யவேண்டிய கட்டாயம் சிங்களப்பேரினவாதிகளுக்கு உள்ளது ஆனால் இதனால் பாதிக்கப்படுவது நிச்சயமாக தமிழர்கள்

மட்டும்தான்

ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்து வேட்பாளர்களை வெற்றிபெறச்செய்துவிட்டு தோற்றுப்போகின்றனர் தமிழ்மக்கள் இலங்கையின் ஆட்சிபீடத்தில்

அமரும் அதிகாரம் சிங்களக்குடிமகனுக்கே அதிலும் பௌத்த சிங்களக்குடிமகனுக்கே என்று வரையப்படாத ஒரு சட்டத்தினை சிங்களப்பேரினவாதமும் பௌத்த

இனவாதிகளும் வகுத்துவைத்துள்ளனர் எனவேதான் இன்றுவரைக்கும் தமிழர்களோ அல்லது தமிழ்மக்களின் நலன்சார்ந்தவர்களோ இலங்கையின்

ஆட்சிபீடத்திலே அமரவில்லை அமரவும் முடியாது தமிழர்களின் நலன் சார்ந்து பேசுகின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு புலி முத்திரை குத்தி

ஓரம்கட்டிவிடுகின்றமையினையே வழக்கமாக கொண்டுள்ளது சிங்களப்பேரினவாத அரசு .எனவே இலங்கைத்தீவிலே தமிழ்மக்கள் நின்மதியாகவும்

சுதந்திரமாகவும் வாழவேண்டுமேயனால் அவர்களுக்கு அரசியல்ரீதியான ஒரு நல்ல தீர்வு வழங்கப்படவேண்டும் அதைவிடுத்து எந்தக்கட்சிக்கு

மாறி மாறி வாக்களித்தாலும் இறுதியில் தோற்றுப்போவது தமிழர்கள் மட்டுமே

தந்தை செய்வா அவர்கள் குறிப்பிட்ட முக்கியமான விடயம் ஒன்று அதாவது இலங்கையின் அன்றய பிரதான கட்சிகளான இலங்கை சுதந்திரக்கட்சியும்

ஐக்கியதேசியக்கட்சியும் தும்மல்க்கிழவியும் இருமல்க்கிழவியும் என்று இந்த இரண்டுகட்சிகளுக்கும் அவர்களது கொள்கைகளுக்கும் இடையில்

அவளவு பாரியவேறுபாடுகள் இல்லை ஆழும்கட்சியின் ஆட்சியினைகவிழ்க்கவேண்டும் என்று எதிர்க்கட்சி நோக்குமே தவிர மக்கள் நலன்சார்ந்த விடயங்களை

எல்லாம் அவர்கள் கண்டுகொள்ளப்போவதில்லை எனவே இதுவரை ஆட்சியில் இருந்தவர்கள் தமிழ்மக்கழுக்கு எதனைச்செய்தார்களோ அதைத்தான் இனி வரும்

ஆட்சியாளரும் செய்யப்போகின்றார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை ,

நாங்கள் ஆட்சிக்குவந்தால் வெளிநாட்டுப்புலிகளையும் அழிப்போம் என்று அறைகூவல் விடுபவர்களும் நானும் மகிந்தவைப்போல இனவாதிதான்

என்று ஆட்சிக்குவரமுன்னே எக்காளமிடும் எதிர்க்கட்சி வேட்ப்பாளர் மைதிரிபால சிறிசேனவும் ஆட்சிக்குவந்தால் என்ன செய்வார்கள் எப்படி நியாயமான

ஒருதீர்வினைப்பெற்றுத்தரப்போகின்றார்கள் அன்மையில் எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும்

மாகாண சுயாட்சி முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்திருந்தார்.தவிர பௌத்த மதத்திற்கு அரசியல் சாசனத்தில் பிரதான இடம் வழங்க

வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் மேலதிக அதிகாரங்களுடன் கூடிய மாகாண சுயாட்சி முறைமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

அரசியல் தீர்வுக்கான வழிமுறையாக முன்வைத்தபோது. அதனை மைத்திரிபால சிரிசேன நிராகரித்து தானும் ராஜபக்சவிற்கு இணையான பௌத்த சிங்கள

பேரினவாதி எனக் கூறியுள்ளமை இவர்கள் ஆட்சிக்குவந்தால் புதிதாக ஒன்றையும் பெற்றுக்கொடுத்துவிடப்போவதில்லை.என்பதனை தெளிவுபடுத்தும்

ஒருவளை இறைவனின் அருளால் தமிழர்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்கக்கூடிய தமிழர்களின் நலன்சார்ந்து செயற்படக்கூடிய ஒருவர்

இம்முறை ஜனாதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அடுத்தசில மாதங்களிலேயே அவரை துக்கியெறிந்துவிடுவதற்கு சிங்களமக்கள் தயங்கமாட்டார்கள்

அந்த அளவு இனவாதத்தினையும் மதவாதத்தினையும் வளர்த்துவிட்டுள்ளார்கள் ஒருவேளை மைத்திரிபால சிறிசேன தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்

கோரிக்கையினை ஏற்றுக்கொண்டால் ஜாதிக ஹெலஉறுமய பொதுபலசேனா போன்ற பௌத்த மதவாத கட்சிகளும் சம்பிக்க ரணவக்க ,விமல் வீரவன்ச

போன்ற மதவாதிகளும் அதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை உடனே இவர்கள் பௌத்தமதத்திற்கு புறம்பானது என்றும் தேசத்துரோகம் என்றும் வசைபாடி

கூட்டத்தை திரட்டி மைதிரிபால சிறிசேனாவை ஆட்சியில் இருந்து விரட்டிவிடுவார்கள் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களுக்கான நீதி என்பதனை

தேசத்துரோகம் என்றும் பிரிவினைவாதம் என்றும் போதிக்கப்பட்டுள்ளது ஏதோ தமிழர்களுக்கு அரசியல்ரீதியான உரிமைகள் வளங்கப்பட்டால் அவர்கள் இந்த

பூமியில் இருந்து வடக்கையும் கிழக்கையும் பிரித்து எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்கள் என்பதைப்போல ஒரு பீதி உருவாக்கப்பட்டிருக்கின்றது எனவே

கொலைவாள் ஏந்திய சிங்கக்கொடியோடு ஆட்சிபீடத்தில் ஏறும் எவரும் தமிழர்களுக்கு நீதியையோ நியாயத்தினையோ பொற்றுக்கொடுக்கப்போவதில்லை

இலங்கை ஆட்சியாளர்கள் சிங்கள தமிழ் இனப்பிரச்சினையினை ஊடாகவே ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதற்காக என்றோ தீர்க்கப்படவேண்டிய

பிரச்சினைகளை நன்றாக வளர்த்துவிடப்பட்டு இன்று அரசியல்ப்பிளைப்பு நடத்துகின்றனர் தமிழர்களின் நீதியான நியாயமான கோரிக்கைகள் எல்லாம்

பிரிவினைவாதம் பயங்கரவாதம் தேசத்துரோகம் என்ற வார்த்தைகளாக மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது எனவே எத்தனை தேர்தல்கள் வந்தாலும் எத்தனை

ஆட்சிமாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழர்களுக்கு எந்தவித நன்மையும் கிட்டப்போவதில்லை தமிழர்களுக்காக தமிழ்த்தலைமைகள் மிகவும்

மதிநுட்பமாக செயற்பட்டு புலம்ப்யர் தமிழர்களின் ஆதரவுடன் ஒரு அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்தி தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்

கொலைகாறனுக்கு ஆதரவளித்தாலென்ன கொள்ளைக்காறனுக்கு ஆதரவளித்தால் என்ன இழப்புக்கள் மட்டும் தமிழர்களுக்கே அன்றி சிங்களவர்களுக்கு அல்ல

ஏதோ மகிந்தரின் ஆட்சி கவிழப்போகின்றது புதியவர் ஒருவர் வரப்போகின்றார் என்று முந்தியடித்துக்கொண்டு வாக்களித்துவிட்டு வழமைபோல தோற்கப்போவதுதான்

தமிழர்களின் தலைவிதியா? இது மாறுவது எப்போது இதனை மாற்றுவது யார்?

-ஆதி