குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

05.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

முதல் கட்ட விசாரணையை முடித்தார் சகாயம்

மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் முதல் கட்ட விசாரணையை முடித்தார். நேற்று 71 புகார் மனுக்களை பெற்ற அவர், இன்று 37 மனுக்களை பெற்றார். நாளை சென்னை அவர், அடுத்த வாரம் மீண்டும் மதுரை வந்து, கிரானைட் முறைகேடு குறித்து மீண்டும் விசாரணை செய்வார். இதனிடையே, கிரானைட் முறைகேடு குறித்து தொலைபேசி மூலமும் புகார் அளிக்கலாம் என சகாயம் குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஸ்ரீநகர் செல்கிறார் ராணுவ தளபதி

புதுடில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான வீரர்களுக்கு ராணுவ தளபதி ஜெனரல் தல்பீர் சிங், அஞ்சலி செலுத்த உள்ளார். இதற்காக அவர் நாளை ஸ்ரீநகர் செல்கிறார்.

 

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 11 பாதுகாப்பு படையினர் பலி

ஜம்மு: தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி, ஜம்மு வரவுள்ள நிலையில், பாரமுல்லா மாவட்டம், யூரியில் உள்ள ராணுவ முகாமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், லெப்டினன்ட் கர்னல் உள்ளிட்ட 11 பாதுகாப்பு படையினர் பலியானார்கள். 8 பயங்கரவாதிகள் மற்றும் பொது மக்கள் ஒருவர் பலியானார். ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 8 ராணுவ வீரர்கள் மற்றும் 3 போலீசார் பலியானார்கள்.

 

மார்ச் 2019க்கும் 24 மணி நேரம் மின்சாரம்: மத்திய அரசு

புதுடில்லி: வரும் 2019ம் வருடம் மார்ச் மாதத்திற்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். மேலும் அவர், நிலக்கரி சுரங்கங்களில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும் எனவும் கூறினார்.

 

சென்னையில் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு

சென்னை: சென்னை திருவொற்றியூர்ரில் கடை ஒன்றில் பணிபுரியும் காயத்ரி(23) என்ற இளம்பெண் மீது ஆசிட் வீசப்பட்டது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காயத்ரி என்ற பெண் போலீசில் சரணடைந்தார். குடும்ப தகராறு காரணமாக ஆசிட் வீசியதாக, போலீசாரிடம் காயத்ரி கூறியுள்ளார்.

 

மாலத்தீவுக்கு இந்தியாவிலிருந்து குடிதண்ணீர் சப்ளை

புதுடில்லி: மாலத்தீவு தலைநகர் மாலேவில் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டதால், நேற்று இரவு முதல் குடிநீர் விநியோகம்பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாலத்தீவு வேண்டுகோளின்படி, இந்திய விமானப்படை விமானம் குடிநீருடன் மாலே நகர் சென்றது. தங்களுக்கு குடிநீர் விநியோகத்துக்கு உதவ வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவை, மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார். இதன்படி, திருவனந்தபுரம் விமானப்படை தளத்தில் இருந்து விமானம் மூலம் குடி தண்ணீர் சென்றடைந்தது. மேலும் சில விமானங்களும் குடிநீருடன் மாலத்தீவு செல்ல உள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு, மாலத்தீவு அதிபர் நன்றி தெரிவித்து கொண்டுள்ளார்.

 

தமிழகம் வருகிறார் அமித்ஷா

புதுடில்லி: பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, வரும் 20ம் தேதி தமிழகம் வருகிறார் என தமிழகத்திற்கான பொறுப்பாளர் முரளிதரராவ் கூறி உள்ளார். இந்த பயணத்தின் போது மீனவர்கள் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் கேட்டறிவார் என கூறப்படுகிறது.

 

எலுமிச்சை சாகுபடி பாதிப்பு

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் சிறுமலை அடிவாரம், அடியனூத்து, இரண்டெல்லைபாறை, ஏ.வெள்ளோடு பகுதிகளில் 300 ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குளிர்காலம் என்பதால் எலுமிச்சை விளைச்சல் அதிகரித்துள்ளது. ஒரு மரத்தில் 500 க்கும் மேற்பட்ட காய்கள் காய்த்துள்ளன. நாவாபூச்சி தாக்குதலால் பெரும்பாலான பழங்களில் சொறிபுள்ளி நோய் ஏற்பட்டுள்ளது. சில பழங்கள் வெளிறி காய்ந்துள்ளன. விளைச்சல் அதிகமாக இருப்பதால் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.15 க்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். சொறிபுள்ளி நோய் தாக்கிய எலுமிச்சை பழங்கள் ரூ.10 க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

 

எல்லையில் தாக்குதல்:பிரதமர் ஆலோசனை

புதுடில்லி: காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்கும் வகையில், பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்து ராணுவ தளபதி தல்பீர்சிங் சுஹாக்குடன், பிரதமர் நரேந்திரமோடி அவசர ஆலோசனை நடத்தினார்.

 

சிறிய கட்சிகளுக்கு இடமில்லை-பட்னாவிஸ்

மும்பை: மகாராஷ்ட்ரா அமைச்சரவையில் சிவசேனா கட்சிக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த 10 பேர் அமைச்சர் பொறுப்பை ஏற்க உள்ளனர். இந்நிலையில், தங்கள் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு இல்லை என்று கூறிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கூட்டணி கட்சிகளுடனான உறவு தொடரும் என்றார்

 

அடுத்தடுத்து பயங்கரவாதிகள் தாக்குதல்

காஷ்மீர்: காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, பாக்.ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், காஷ்மீர் எல்லை பகுதியில் 12 மணி நேர இடைவௌியில் நான்கு முறை தாக்குதல் நடத்தி உள்ளனர். .

 

அரசுடன் பேச எதிர்கட்சிகளுக்கு யோசனை

புதுடில்லி: மத்திய அமைச்சர் சாத்வியின் சர்ச்சை பேச்சு, ராஜ்யசபாவில் புயலை கிளப்பி உள்ளது. கடந்த இரு தினங்களாக அவை செயல்படாத நிலையில், இன்றும் அதேநிலை நீடித்தது. இதையடுத்து, வரும் திங்கட்கிழமை வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அப்போது பேசிய அவை துணைத் தலைவர் குரியன், 'இப்பிரச்னை குறித்து அரசும், எதிர்கட்சிகளும் அமர்ந்து பேசி ஒரு முடிவை எட்ட வேண்டும்,' என்று யோசனை வழங்கி உள்ளார்.

 

மண்ணெண்ணை மான்யம் ரத்தாகுமா?

புதுடில்லி: மத்திய அரசுக்கு மான்யங்களால் தான் அதிக அளவில் நிதிப் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், அவசியம் இல்லாதவர்களுக்கு கூட மான்யம் வழங்கப்படுவதாகவும் மத்திய நிதி அமைச்சகம் கருதுகிறது. இதனால், மான்ய திட்டங்கள் மீது கத்திரி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியங்கள் மீது நிதி அமைச்சகம் கண் வைத்துள்ளதாகவும், அதனால் மண்ணெண்ணைக்கான மான்யம் முதலில் ரத்தாகும் என்று தகவல்கள் கூறுகின்றன. மான்யங்களை ரத்து செய்வது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடந்து வருவதாகவும், அதன் பின்னரே இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கோஹ்லி, முரளி விஜய் அரைசதம் * பயிற்சி போட்டி 'டிரா'

அடிலெய்டு: இந்தியா, கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிகள் மோதிய இரண்டாவது பயிற்சி போட்டி 'டிரா' ஆனது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 9ம் தேதி துவங்குகிறது. இதற்கு முன், இரண்டு பயிற்சி போட்டியில் விளையாடியது. முதல் போட்டி 'டிரா' ஆன நிலையில், இந்தியா, கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) லெவன் அணிகள் மோதிய இரண்டாவது பயிற்சி போட்டி (இரண்டு நாள்) அடிலெய்டில் நடந்தது. முதல் இன்னிங்சில் சி.ஏ., லெவன் அணி 243 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்து, 144 ரன்கள் பின்தங்கி இருந்தது. கோஹ்லி (30), முரளி விஜய் (39) அவுட்டாகாமல் இருந்தனர். இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. முரளி விஜய் (60), கோஹ்லி (66) ரன்கள் எடுத்து 'ரிட்டையர்டு ஹர்ட்' முறையில் திரும்பினர். சகா 51, ரோகித் 48 ரன்கள் எடுக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 375 ரன்கள் எடுத்தது. பின் களமிறங்கிய சி.ஏ., லெவன் அணி 5 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்த போது, போட்டி 'டிரா' ஆனதாக அறிவிக்கப்பட்டது.

 

நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கல்வராயன்மலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 15 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

போலீஸ் ஸ்டேஷன் மீது தாக்குதல்

காஷ்மீர்: காஷ்மீர் பரமுல்லா மாவட்டம், ஊரி பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பின்னர், சவுரா பகுதியில் இரண்டாவது தாக்குதலை நடத்திய அவர்கள், தற்போது சோபியான் பகுதியில் மூன்றாவது தாக்குதலை நடத்தி உள்ளனர். சோபியானில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் மீது கையெறி குண்டு வீசி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வௌியேற்றம்

சென்னை: சட்ட சபையில், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் அவையில் இருந்து வௌியேற்றப்பட்டனர்.

 

கலைஞர் டிவி வழக்கு: சாட்சியிடம் விசாரணை

புதுடில்லி: கலைஞர் டிவிக்கு, சட்டவிரோத பண பரிவர்த்தனை குறித்த விசாரணை, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் கூடுதல் தனி செயலாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி சாட்சியம் அளித்தார். அப்போது, கலைஞர் டிவிக்கு உரிமம் பெறுவது தொடர்பாக, ராசாவை, சரத்குமார் ரெட்டி சந்தித்தார் என்று கூறிய அவர், அந்த சந்திப்பின் போது தான் உடன் இருந்ததாகவும் சாட்சியம் அளித்தார்.

 

வாலிபர் கொடூர கொலை

பெரம்பலூர்: பெரம்பலூரை அடத்த ஊட்டத்தூரைச் சேர்ந்தவர் சத்யா, 30. இவர், பெரம்பலூரில் தங்கியிருந்து கொண்டு, அங்குள்ள ஸ்டுடியோவில் பணிபுரிந்து வந்தார். இன்று காலை அவர் பணியில் இருந்தபோது, ஸ்டுடியோவிற்கு வந்த மர்ம நபர்கள் இருவர், அவரது கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு தப்பினர். பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், பாரமுல்லா, ஊரி பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 5 பயங்கரவாதிகளும், 10 பாதுகாப்பு படையினரும் பலியாகி உள்ளனர். ஊரி பகுதியில் துப்பாக்கி சண்டை முடிவடைந்த நிலையில், சவுரா பகுதியில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளனர். இதில், ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.

 

சகாயத்திடம் மார்க். கம்யூ., புகார்

மதுரை: கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும் சகாயத்திடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அக்கட்சியின் செயலாளர் ராமகிருஷ்ணன் மனு கொடுத்துள்ளார். இதில், கிரானைட் முறைகேட்டிற்கு முன்னாள் ஆட்சியாளர்கள், வருவாய், கனிமவளத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர். முறைகேட்டிற்கு உதவிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலுர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட கண்மாய்கள் சட்டவிரோத கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக விளைநிலங்கள் வீணாகி உள்ளன. மழை பொழிவும் குறைந்துள்ளது. மேலும், 500 அடிக்கும் ஆழமாக கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதால், நிலத்தடி நீர் வளமும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

 

சகாயம் அறையில் ஓட்டு கேட்பு கருவி?

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் நிறுவனங்களில் நடந்துள்ள முறைகேடுகளை விசாரிப்பதற்காக ஐ.ஏ.எஸ்,. அதிகாரியான சகாயம் தலைமையில் ஒரு குழுவை ஐகோர்ட் நியமித்துள்ளது. இதற்காக, சகாயமும், அவரது குழுவினரும் தற்போது மதுரையில் முகாமிட்டுள்ளனர். சகாயம், மதுரை சர்க்யூட் ஹவுசில், மேல் தளத்தில் உள்ள ஒரு அறையில் தங்கி, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வணிகவளாகத்தில் உள்ள அலுவலகத்தில் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், சகாயம் தங்கி உள்ள அறையில் ஓட்டுகேட்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை தனது அறையை சகாயம் சோதனை நடத்தினார். அவரின் உதவியாளரின் அறையும் சோதனையிடப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, சகாயத்திற்கு தற்போது, சர்க்யூட் ஹவுசின் கீழ் தளத்தில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. சகாயம் புதிய அறைக்கு மாறி உள்ளார். அறையில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

 

காங்., எடுத்த நடவடிக்கை என்ன ?; வெங்கையா நாயுடு

புதுடில்லி: காங்., ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தவர்கள் சர்ச்சை பேச்சில் சிக்கிய போது அந்த அரசு எடுத்த நடவடிக்கை ஏதும் உண்டா என்பதை தெரிவிக்க வேண்டும் என பார்லி., விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

 

குழந்தைகளுக்கு தொந்தரவு: சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

புதுடில்லி: குழந்தைகளுக்கு செக்ஸ், மனரீதியான, உடல்ரீதியான தொந்தரவு குறித்து, கேள்வி எழுப்பிய மனு மீது சுப்ரீம் கோர்ட் , மத்திய மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

 

ராகுல் போராட்டத்திற்கு பா.ஜ., பதிலடி

புதுடில்லி: மத்திய அமைச்சர் சாத்விக்கு எதிராக ராகுல் கறுப்பு துணி போராட்டம் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பா.ஜ., வினர், பார்லி,. வௌிவளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே கூடி ரகுபதி ராகவ ராஜாராம் என்ற பாடலை பாடினர். எதிர்கட்சியினருக்கு போதிய அறிவுத்திறம் கொடு என கடவுளிடம் பிரார்த்தனையும் பா.ஜ., எம்.பி.,க்கள் செய்தனர். இரு தரப்பு போராட்டத்தினால் பார்லி,. வளாகம் இன்று பரபரப்பாக காணப்பட்டது.

 

சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்

சென்னை: சட்டசபையில், தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்வது குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்று, எதிர்கட்சிகள் சார்பில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் மீது சட்டசபையில் விவாதம் நடத்தப்பட்டது.

 

தேர்தலை சீர்குலைக்க சதி

ஜம்மு: காஷ்மீரில், எல்லையில் பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல் குறித்து ஓய்வு பெற்ற, இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ராஜ்கத்யன் கூறுகையில், 'காஷ்மீர் பிரச்னையின் தீவிரம் மங்கிவிடக் கூடாது என்பதற்காகவே இது போன்ற தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. தற்போதுள்ள சூழ்நிலையில், காஷ்மீர் சட்டசபை தேர்தல் அமைதியாக நடக்க விடக்கூடாது என்பதற்காக தாக்குதல் நடத்தப்படுகிறது,' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

 

இடதுசாரி கட்சிகள் போராட்ட அறிவிப்பு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், 'பெண்கள், தலித் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து கொண்டு வருகிறது. பாலியல் வன்கொடுமை நடக்கிறது. ஊழல்கள் அதிகரித்துள்ளன. நாட்டின் கனிம வளம் கொள்ளை போய் கொண்டிருக்கிறது. மொத்த விலை குறைந்தாலும், சில்லறை விற்பனையில் விலை குறையவில்லை. ரயில்வேயில் பிரிமியம் கட்டணம் என்பது விமான கட்டணத்துக்கு ஈடானதாக உள்ளது. 12 ரயில்வே ஸ்டேஷன்களை தனியார் வசம் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு உட்காரவும், நடக்கவும் தனித்தனி கட்டணம் என்று அறிவிக்கப்பட உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இடதுசாரி கட்சிகள் இதை கண்டிக்கின்றன. ஒட்டு மொத்த பிரச்னைகளை முன் வைத்து வரும் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை தெருமுனை கூட்டம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தப்படும்,' என்றார் தா. பாண்டியன் கூறுகையில், 'கச்சா 120 டாலரில் இருந்து 61 டாலராக குறைந்துள்ளது. கிட்டத்தட்ட பாதி அளவிற்கு குறைந்துள்ளது. அப்படி எனில், பெட்ரோல், டீசல் விலை என்பது பாதியாக குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன் பயன் மக்களுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில், மக்கள் விரோத போக்கை கண்டித்து இடதுசாரி கட்சிகள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்துகின்றன' என்றார்.

 

சட்டசபைக்கு வந்த விஜயகாந்த்

சென்னை: தமிழக அரசின் குளிர்கால சட்டசபை கூட்டம் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று தி.மு.க., தலைவர் கருணாநிதி வந்து, தனக்கு தனி இருக்கை அமைக்கப்படவில்லை என்று கூறி, கையெழுத்து போட்டுவிட்டு சென்றுவிட்டார். இன்று காலை, இரண்டாம் நாள் கூட்டம் துவங்கியதும் எதிர்கட்சி தலைவரான விஜயகாந்த் சட்டசபை வளாகத்திற்கு வந்தார். பின்னர், அங்கிருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு, கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறப்பட்டு சென்றுவிட்டார்.

 

ராஜ்யசபாவில் பிரதமரின் விளக்கத்தை ஏற்க மறுப்பு

புதுடில்லி: மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜ்யோதி சாத்வியின் சர்ச்சை பேச்சு குறித்து பிரதமர் நரேந்திரமோடி நேற்று ராஜ்யசபாவில் விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்கட்சிகள், அவை தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அவை ஒத்திவைக்கப்பட்டது.

 

லோக்சபாவில் மோடி பேச்சு

புதுடில்லி: மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜ்யோதி சாத்வியின் சர்ச்சை பேச்சு குறித்து நேற்று ராஜ்யசபாவில் மோடி விளக்கம் அளித்தார். அப்போது, தனது பேச்சுக்கு அமைச்சர் மன்னிப்பு கேட்டுள்ளதால், அப்பிரச்னையை கைவிட்டு, அவை தொடர்ந்து நடத்த எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்நிலையில், அதுபோன்ற விளக்கத்தை லோக்சபாவிலும் பிரதமர் மோடி அளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கோரின. அதைத் தொடர்ந்து, இன்று காலை லோக்சபா கூடியதும், பிரதமர் மோடி பேசினார். அப்போது, லோக்சபாவின் சக உறுப்பினர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், அதை ஏற்று லோக்சபா தொடர்ந்து இயங்க உறுப்பினர்கள் உதவ வேண்டும். இந்த அவையின் பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,' என்றார்.

 

திரிணமூல் காங்., இன்றும் போராட்டம்

புதுடில்லி: தினம் ஒரு பிரச்னையை முன் வைத்து திரிணமூல் காங்கிரசார் பார்லிமென்ட் வளாகத்தின் முன் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று, இக்கட்சியுடன் காங்கிரசாரும் இணைந்து போராட்டம் நடத்தினர்.

 

14 பேருக்கு பறிபோனது கண்பார்வை

அமிர்தசரஸ்: பஞ்சாப், குர்தாஸ்பூர் என்ற இடத்தில் செயல்படும் தனியார் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நடந்த கண் சிகிச்சை முகாமி்ல் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களில் பலருக்கு காட்ராக்ட் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் கட்டவிழ்த்தபோது, கிட்டத்தட்ட 14 பேருக்கு பார்வை பறிபோயிருந்தது. இது குறித்து மாநில அமைச்சர் அனில் ஜோசி கூறுகையில், சுத்தமில்லாத இடத்தில் இந்த அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறி உள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேலானவர்களுக்கு நிரந்திரமாக பார்வை போய்விடும் ஆபத்து உள்ளதாக கூறப்படுகிறது. அறுவை சிகிச்சையின் போது, தவறான மருந்துகளை பயன்படுத்தியதே இந்த பாதிப்பிற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

 

ராகுல் தலைமையில் போராட்டம்

புதுடில்லி: மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜ்யோதி சாத்வியின் சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, காங்., துணைத் தலைவர் ராகுல் தலைமையில், வாயில் கறுப்பு துணி கட்டி காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

 

திருவண்ணாமலையில் இன்று மகாதீபம்

திருவண்ணாமலை: அக்னி தலமான திருவண்ணாமலையில் இன்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இந்த பெருவிழாவிற்காக, அந்த நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. நேற்று இரவு முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை வந்த வண்ணம் உள்ளனர். இவர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. இன்று மாலை 6 மணிக்கு, 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். பாதுகாப்பு பணிக்காக கமாண்டே படை வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆளில்லா விமானங்கள் மூலம் தொடர்ந்து கண்காணி்பபு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

கிருணய்யருக்கு சட்டசபையில் இரங்கல்

சென்னை: கேரள மாநிலம், கொச்சியில் நேற்று காலமான சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யருக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

 

சுரங்கத்துறை அதிகாரிகள் கடத்தல்

சாய்பாசா: ஜார்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பும் மாவட்டத்தில், ஜார்கண்ட் மாநில அரசின் சுரங்கத்துறை அதிகாரிகள் நான்கு பேரை, மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர். அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. கடத்தப்பட்ட அதிகாரிகளை தேடி கண்டுபிடிக்கும் பணியில் மாவட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 

காட்டுயானை தாக்கி 5 பேர் காயம்

வால்பாறை: வால்பாறை, சின்கோனா பகுதியில், டேன்டீ தேயிலை தோட்ட பகுதியில் தொழிலாளர்கள் பணிக்கு சென்றபோது, சாலை வழியாக வந்த காட்டு யானை, அவர்களை துரத்தி, தாக்கியது, இதில், நான்கு பெண்கள் உள்ளிட்ட 5 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஊரி பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 5 ராணுவ வீரர்கள், 2 போலீசார் பலியாகினர். பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அங்கு துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திரமோடி ஜம்மு காஷ்மீர் சென்றிருந்தார். அன்று முதல், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஊரி பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 5 ராணுவ வீரர்கள், 2 போலீசார் பலியாகினர். பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அங்கு துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திரமோடி ஜம்மு காஷ்மீர் சென்றிருந்தார். அன்று முதல், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பாக்தாத்தில் கார் குண்டு தாக்குதல்

பாக்தாத் : பாக்தாத்தின் கிர்குக் பகுதியில் இரண்டு கார்களில் வைக்கப்பட்ிருந்த வெடுகுண்டுகள் வெடித்ததில் 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கடைவீதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் குண்டுகள் வைத்து வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

பா.ஜ., மீது திக்விஜய் சிங் குற்றச்சாட்டு

புதுடில்லி : சாரதா சிட்பண்ட் நிதி, பர்த்வான் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்டது என அமித்ஷா கூறியதாக பா.ஜ., அரசு பார்லியில் கூறியது பொய்யான தகவல். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 50 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோலிய பொருட்களின் விலை இது போன்று குறையவில்லை. அதற்கு பதிலாக வரியை உயர்த்துகிறது. இது நுகர்வோரை ஏமாற்றும் செயல் இல்லையா? என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

மும்பை பலாத்கார வழக்கு: இன்று முடிவு

மும்பை: 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சக்தி மில்ஸ் வளாகத்தில் பெண் பத்திரிக்கையாளர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து மும்பை அமர்வு நீதிமன்றம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை உறுதி செய்யும் மனு மீதான விசாரணை இன்று மும்பை ஐகோர்ட்டில் நடைபெற உள்ளது.

 

எல்லையில் துப்பாக்கிச்சூடு

ஜம்மு : காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் எல்லையில் பதற்றம் காணப்படுகிறது.

 

ரூ.2000 கோடியில் சிவாஜிக்கு நினைவிடம்

மும்பை : சத்ரபதி சிவாஜிக்கு அரபிக் கடல் பகுதியில் சிலையுடனான நினைவிடம் அமைக்க வேண்டும் என மகாராஷ்டிரா அரசு கேட்டுக் கொண்டதன் காரணமாக, சிவாஜிக்கு நினைவிடம் அமைக்க ஒப்புதல் தெரிவித்ததுடன் ரூ.2000 கோடி நிதியையும் ஒதுக்கி உள்ளது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவேத்கர் பேற்று இதனை முறைப்படி அறிவித்தார்.

 

ரிசர்வ் வங்கியிடம் அரசு வலியுறுத்தல்

புதுடில்லி : அனைத்து வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்., மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க செய்யுமாறு ரிசர்வ் வங்கியை வலியுறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ரிசர்வ் வங்கியும், தனியார் பாதுகாப்பு ஏஜென்சிகளும் இணைந்து பாதுகாப்பு திட்டங்களுக்கான வரைவு முன்வடிவங்களை தயாரித்து வருகின்றன.

 

வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்:தத்து

புதுடில்லி : ஐகோர்ட்டுகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குளை விரைந்து முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தத்து, ஐகோர்ட்டுகளை கேட்டுக் கொண்டுள்ளார். நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 5 ஆண்டுகளுக்கு மேலுள்ள வழக்குகள் எதுவும் எந்த கோர்ட்டிலும் நிலுவையில் இருக்கக் கூடாது என அனைத்து ஐகோர்ட் தலைமை நீதிபதிகளுக்கும் தத்து கடிதம் அனுப்பி உள்ளார்.

 

விழுப்புரம் மலைப்பகுதிகளில் துப்பாக்கிகள் பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் மீண்டும் எட்டுக்கும் மேற்பட்ட நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் 10-க்கும் மேற்பட்ட நாட்டுதுப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

வங்க தேச அதிபர் இந்தியா வருகை

டாக்கா: வங்க தேச அதிபர் முகம்மது அப்துல் ஹமீது இரண்டு நாள் பயணமாக வரும் 18 மற்றும் 19 ஆகிய தினங்களி்ல் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். வருகையி்ன்போது அவர் ஜனாதிபதி , பிரதமர் உட்பட பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் கடந்த சில தினங்களாக வங்க தேசத்துடனான எல்லையில் நிலங்களை பரிமாறி்க்கொள்ளும் பேச்சு நடைபெறும் என கூறப்பட்டு வரும் நிலையில் வங்க தேச அதிபரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

கோபிநாத்முண்டே மரணம்: டாக்ஸி டிரைவர்மீது வழக்கு

புதுடில்லி: கார் மோதிய விபத்தில் மரணமடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேயின் வழக்குவிசாரணையில் டாக்ஸி டிரைவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப் பட்டு்ள்ளது. கடந்த மே மாதம் பிரதமர் மோடி தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் இவர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் முண்டே பதவியேற்க இருந்த நிலையி்ல் கார் விபத்தில் சிக்கி பலியானார். இச்சம்பவம் குறி்த்து பல்வேறு அரசியல் தலைவர்கள் சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி வந்தனர். விசாரணை நடத்திய சி.பி.ஐ.யினர் வாடகை கார் ஓட்டுனர் குருவிந்தர் சிங் என்பவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது.

 

பஞ்சாப் : ஆபரேஷனுக்கு பின்னர் பார்வை மாயம்

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் கண் ஆபரேஷனுக் பின்னர் நோயாளிகளுக்கு பார்வை பறிபோனது இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று பொது மக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாமை 10 நாட்களுக்கு முன்னர் நடத்தியது. கண்கள் பாதிப்பு அடைந்தவர்களுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. அவ்வாறு செய்தவர்களில்16 பேருக்கு பார்வை பறிபோனது . பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த அமிர்தசரஸ் நகரின் துணைகமிஷனர் ரவி பகவத் உத்தரவு பிறப்பித்துள்ளார்

 

மதரஸா திறப்பு விழாவுக்கு மனோகர் ஜோஷி அழைப்பு

கான்பூர்:மதரஸா பள்ளியை திறந்து வைக்க, பா.ஜ.,வின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, கான்பூர் பா.ஜ., தலைவர் சுரேந்திர மைத்தானி கூறியதாவது:

மதரஸா பள்ளியை திறந்து வைக்க, பா.ஜ.,வின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு, அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. அதை, அவர் மனமுவந்து ஏற்று கொண்டுள்ளார்.இதையடுத்து, வரும் ஜனவரி மாதம், அவருடைய சொந்த தொகுதிக்குட்பட்ட சியாம் நகரில், மதரஸா பள்ளியை திறந்து வைக்க உள்ளார்.இவ்வாறு,அவர் கூறினார். பா.ஜ., மற்றும் முஸ்லிம்களுக்கு இடையில், நல்லிணக்க உறவுக்கு பாலம் அமைக்கும் விதமாக, ஜோஷிக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது என, அல் - ஜமியா அதுன் நுாரியன் மதரஸாவின் முதல்வர் மெக்ராஜ் தெரிவித்தார்.

 

நடுக்கடலில் தத்தளித்த 16 மீனவர்கள் மீட்பு

தூத்துக்குடி: படகு பழுதானதால், நடுக்கடலில் தத்தளித்த, 16 மீனவர்களை, கடலோர காவல் படையினர் மீட்டனர். தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த மீனவர்கள், 16 பேர், கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். படகில் இன்ஜின் பழுதானதால், தூத்துக்குடி அருகே, 11 கடல் மைல் தொலைவில், நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். கடலோர காவல்படையினர், அதி நவீன படகில் சென்று அவர்களை மீட்டனர்.

 

டெங்கு காய்ச்சலுக்கு 7 மாத குழந்தை பலி

திருநெல்வேலி: நெல்லையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை பரிதாபமாக இறந்தது. திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலையை அடுத்துள்ள மேலக்கலங்கலில் குடிநீரில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. இவர்கள் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தனர். இவர்களில் மனோ கார்த்தீசன் என்ற ஏழு மாத ஆண் குழந்தை இன்று இரவு 10 மணிக்கு பரிதாபமாக இறந்தது. குழந்தையின் தந்த முருகையா ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். குழந்தையின் தாயார் மாரியம்மாள் சிகிச்சையின்போது உடன் இருந்தார். இதனால் மேலக்கலங்கலில் இருந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது.

 

ஜி சாட் - 16 செயற்கைக்கோள் ஏவுவது ஒத்திவைப்பு

கௌரு: பிரெஞ்ச் கயானாவிலிருந்து ஏரியான் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவிருந்த இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் 16 ஏவுவது தட்பவெப்ப நிலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை அதிகாலை இந்த செயற்கைக்கோள் ஏவப்படவிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.