குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

04.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

பொய்யான குற்றச்சாட்டு-முதல்வர்

சென்னை: விதி எண் 110ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை என்று, எதிர்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றன என, முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார். மேலும், விதி எண் 110ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறி்த்தும், அவற்றில் எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்தும் முதல்வர் சட்டசபையில் விளக்கம் அளித்தார்.

கு.க., ஆபரேஷன்: டாக்டருக்கு ஜாமின்

பிலாஸ்பூர்: குடும்ப கட்டுப்பாட்டு ஆபரேஷன் செய்த 12 பெண்கள் பலியான வழக்கில், கைது செய்யப்பட்ட டாக்டர் குப்தாவுக்கு, பிலாஸ்பூர் கோர்ட் இன்று ஜாமின் வழங்கியது. நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த வழக்கில், டாக்டர் ரூ.50 ஆயிரம் பிணைத்தொகையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

பணம் கேட்டு பாலிவுட் நடிகையை மிரட்டிய இளைஞன் கைது

மும்பை: பாலிவுட் நடிகை மாதூரி தீட்சித்தை மிரட்டி பணம் கேட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். பாலிவுட் நடிகை மாதூரி தீட்சித் (47), மும்பை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதில் தன்னுடைய செல்போனில் இரு எஸ்.எம்.எஸ்.கள் வந்ததாகவும், அதில் , தனக்கு பணம் தரவேண்டும் எனவும் இல்லாவிட்டால் உனது குழந்தையை கடத்தி கொலை செய்துவிடுவதாகவும் , மற்றொரு எஸ்.எம்.எஸ்சில், தான் நிழல் உலக தாதா சோட்ட ராஜனிடம் பணியாற்றுவதாகவும் கூறி மிரட்டியுள்ளதாக கூறினார். போலீசார் விசாரணை நடத்தி 23 வயது இளைஞனை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் சினிமா பத்திரிகையில் ஒன்றில் மாதூரி தீட்சித் மொபைல் எண்ணை வைத்து அவரை மிரட்டி பணம் பறிக்க முயன்றது தெரிய வந்துள்ளது.

 

சத்ரபதி சிவாஜிக்கு சிலை அமைக்க ஒப்புதல்

புதுடில்லி: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது, மும்பை நாரிமன் பாயின்ட் பகுதியில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும், மகாராஷ்டிரா மாநிலம் ராஜ்பவனில் இருந்து 1.5 கி.மீ. தொலைவிலும் அரபிக்கடல் பகுதியில் 16 ஹெக்டேர் பரப்பளவில் ரூ. 400 கோடியில் சத்ரபதி சிவாஜிக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.

 

பரோல் கேட்டு சஞ்சய் தத் மனு

மும்பை: 14 நாட்கள் பரோலில் விட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மனு செய்துள்ளார். 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில், சட்டவிரோதமாக பயங்கரவாதிகளிடம் ஆயுதம் வாங்கிய வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் (54), சுப்ரீம் கோர்ட் உத்தரவால் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற மும்பை ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பல முறை பரோலில் வெளியே வந்தாலும், சமீபத்தில் இவரது பரோல் குறித்து சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் தனக்கு 14 நாட்கள் பரோல் வழங்கிட கோரி சஞ்சய் தத் மனு செய்துள்ளார்.

 

ஆஸி.,யில் இந்திய கடற்படை கப்பல்

மெல்போர்ன்: நல்லெண்ண பயணமாக இந்திய கடற்படைக்குச் சொந்தமான ரோந்து கப்பல் ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா இடையே கடற்பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் முயற்சியாக இந்திய கடற்படைக்குச் சொந்தமான ரோந்து கப்பல், டார்வின் துறைமுகம் சென்றடைந்தது. அங்கு இந்திய கடற்படை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டார்வின் துறைமுகத்தில் இந்திய ரோந்து கப்பல் 5 நாட்களுக்கு நிற்கும்.

 

புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தின் பெயர் அறிவிப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு ஸ்பெக்டர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் கிரெய்க் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் மோனிகா பெல்லூசியும், பிரதான வேடங்களில் ஆன்ட்ரூ மார்ட்டின், டேவ் பாடிஸ்டா, லீ ஸீடெக்ஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை சாம் மென்டிஸ் இயக்குகிறார்.

 

தொண்டர்களின் கருத்தை அறிந்து கூட்டணி முடிவு: வாசன்

திருப்பூர்: தொண்டர்களின் கருத்தை அறிந்த பின் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் நிருபர்களிடம் பேசிய அவர், பலமான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்குவதே முதல் குறிக்கோள். தேர்தல் சமயத்தில், கட்சியின் பலத்தை அறிந்து, தொண்டர்களின் கருத்தை அறிந்து கூட்டணி முடிவு எடுக்கப்படும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதைத் தடுக்க இந்திய இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர்கள் சந்தித்து பேசி, சுமூக முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு வாசன் தெரிவித்தார்.

 

கிரானைட் முறைகேடு: சகாயத்திடம் 71 பேர் புகார் மனு

மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சகாயத்திடம் இன்று 71 பேர் புகார் மனுக்களை அளித்துள்ளனர். இவர்களில் 60 பேர் நேரடியாகவும், 11 பேர் தபால் மூலமும் மனுக்களை கொடுத்துள்ளனர்.

 

ஆத்தூரில் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம்

ஆத்தூர்: ஆத்தூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள நான்கு கோர்ட்டுகளில் 220 வக்கீல்கள் உள்ளனர். இந்நிலையில், குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டுகளில் உள்ள நீதிபதிகளை மாற்றக் கோரி, வக்கீல்கள் அனைவரும் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தை துவக்கி உள்ளனர்.

 

சாலை விபத்தில் மூவர் பலி

தர்மபுரி: கேரள மாநிலம், பாலக்காட்டை அடுத்த, கஞ்சிமேட்டை சேர்ந்தவர் சந்தோஷ், 35. இவருடைய மனைவி வந்தனா, 30. சாப்ட்வேர் இன்ஜினியர்களான இருவரும், பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, ஒரு வயதில் தேவதாஸ் என்ற ஆண் குழந்தை உள்ளது. வந்தனாவின் தாய் இந்திரா, 60, வந்தனாவின் தங்கை அஜினா, 25, ஆகியோர், ஒரே குடும்பமாக பெங்களூருவில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும், தங்களது உறவினர் ஒருவரின், சுப காரியத்தில் கலந்து கொள்வதற்காக, இன்று அதிகாலை பெங்களூருவில் இருந்து, கஞ்சிமேட்டுக்கு, ஹோண்டாய் சாண்ட்ரோ காரில் புறப்பட்டனர். காரை, சந்தோஷ் ஓட்டி சென்றார். காலை, 7 மணிக்கு தர்மபுரி அடுத்த குண்டல்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பு சுவரில் மோதி, அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், படுகாயம் அடைந்த சந்தோஷின் மகன் தேவதாஸ், மற்றும் அவரின் மாமியார் இந்திரா, மைத்துனி அஜினா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காரின் இடிபாடுகளில் சிக்கி, உயிருக்கு போராடிய சந்தோஷ், வந்தனா ஆகியோரை, தர்மபுரி தீயணைப்புத் துறையினர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து, மதிகோன்பாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 

தி.மு.க., எம்.எல்.ஏ., வெளியேற்றம்

சென்னை: பால்விலை ஏற்றம் குறி்த்த விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் பன்னீர்செல்வம், தனது விளக்கத்தின் போது ஜெயலலிதாவை பாராட்டி பேசினார். அப்போது தி.மு.க., எம்.எல்.ஏ., குறுக்கிட்டு பேசி, முதல்வரின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, அவரை அவையில் இருந்து வௌியேற்றுமாறு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். அவை காவலர்கள் அன்பழகனை அகற்றினர்.

 

முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் காலமானார்

திருவனந்தபுரம்: சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் இன்று, தனது 100வது வயதில் காலமானார். கடந்த 1914ம் ஆண்டு, பாலக்காடு, வைத்தியநாதபுரத்தில் பிறந்த அவர், கேரள எம்.எல்..ஏ.,வாகவும், அமைச்சராகவும் பின்னர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும் பணியாற்றியவர். கடந்த 1999ம் ஆண்டு அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

 

மாணவர்கள் மாயம்: பஸ்கள் சிறைப்பிடிப்பு

டி.கல்லுப்பட்டி: கள்ளிக்குடியை அடுத்த வளையங்குளத்தைச் சேர்ந்த கண்ணன் மற்றும் பாண்டித்துரை என்ற 10ம் வகுப்பு மாணவர்கள், கடந்த 26ம் தேதி காணாமல் போயினர். இது குறித்து 28ம் தேதி புகார் செய்யப்பட்டது. போலீசார் உடனடியாக மாணவர்கைள கண்டுபிடிக்கவில்லை என்று கூறி, அவ்வழியாக வந்த 4 பஸ்களை அப்பகுதி பொதுமக்கள் சிறை பிடித்தனர். போலீசார் சமாதானம் செய்த பின்னர், பஸ்கள் விடுவிக்கப்பட்டன. டி.கல்லுப்பட்டி: கள்ளிக்குடியை அடுத்த வளையங்குளத்தைச் சேர்ந்த கண்ணன் மற்றும் பாண்டித்துரை என்ற 10ம் வகுப்பு மாணவர்கள், கடந்த 26ம் தேதி காணாமல் போயினர். இது குறித்து 28ம் தேதி புகார் செய்யப்பட்டது. போலீசார் உடனடியாக மாணவர்கைள கண்டுபிடிக்கவில்லை என்று கூறி, அவ்வழியாக வந்த 4 பஸ்களை அப்பகுதி பொதுமக்கள் சிறை பிடித்தனர். போலீசார் சமாதானம் செய்த பின்னர், பஸ்கள் விடுவிக்கப்பட்டன.

 

கூடங்குளம் போராட்ட வழக்கு வாபஸ்

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த 2010ம் ஆண்டு இது சம்பந்தமாக 248 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் 213 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

விஜயகாந்துக்கு கோர்ட் சம்மன்

சென்னை: தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், ஜனவரி 21ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு சென்னை முதலாவது அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. பால் கொள்முதலில் முறைகேடு என்ற விஜயகாந்தின் பேச்சை குறிப்பிட்டு, பால்வளத் துறை அமைச்சர் ரமணா இந்த வழக்கை தொடுத்துள்ளார்.

 

உலக கோப்பை உத்தேச அணி அறிவிப்பு

மும்பை: உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய உத்தேச அணி அறிவிக்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே சேவக், காம்பிர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் ஜாகிர் கான் என, 5 சீனியர்கள் அணியில் சேர்க்கப்படவில்லை. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து 11வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடரை அடுத்த ஆண்டு (பிப்., 14 - மார்ச் 29) நடத்துகின்றன. இத்தொடருக்கான 30 பேர் கொண்ட உத்தேச வீரர்களை, வரும் ஜன., 7ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐ.சி.சி., தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு மும்பையில் இன்று உத்தேச அணிக்கான வீரர்களை தேர்வு செய்தது. இதில் கடந்த 2011 உலக கோப்பை தொடரில், தொடர் நாயகன் விருது வென்ற யுவராஜ் சிங் சேர்க்கப்படவில்லை. துவக்க வீரர்கள் சேவக், காம்பிருக்கும் இடமில்லை. வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்கும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2011 தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர்களாக இருந்த இந்த 5 பேருக்கும், 30 பேர் கொண்ட உத்தேச அணியில் கூட இடம் கிடைக்காதது பெரும் ஏமாற்றமே. அணி விவரம்: பேட்ஸ்மேன்கள்: தோனி, ஷிகர் தவான், ரகானே, ரோகித் சர்மா, முரளி விஜய், உத்தப்பா, கோஹ்லி, ரெய்னா, அம்பதி ராயுடு, மனோஜ் திவாரி, மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், சஞ்சு சாம்சன், சகா. சுழற்பந்து வீச்சாளர்கள்: அஷ்வின், கரண் சர்மா, அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல், ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ். வேகப்பந்து வீச்சாளர்கள்: புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, வருண் ஆரோன், உமேஷ் யாதவ், தவால் குல்கர்னி, டிண்டா, ஸ்டூவர்ட் பின்னி, மோகித் சர்மா.

 

ம.தி.மு.க., சார்பில் ஆர்பாட்டம்

சென்னை: சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் ம.தி.மு.க., சார்பில் பூரண மதுவிலக்கு கோரி போராட்டம் நடந்தது. சென்னையில் வைகோ தலைமையில் ம.தி.மு.க,வினர் போராட்டம் நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 'தமிழகத்தில் பல கிராமங்களில் தண்ணீர் கிடைக்கவில்லை. ஆனால், சாராயம் தாராளமாக கிடைக்கிறது. கேரளாவைப் போல, தமிழகத்திலும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்,' என்றார்.

 

சகாயம் குழுவுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

மதுரை: கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும் சகாயம் மற்றும் அவரது குழுவிற்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும், சில மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சகாயம் குழுவிற்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

முல்லை பெரியாறு குறித்த தீர்மானம்

சென்னை: முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியில் இருந்து152 அடியாக உயர்த்த வேண்டும் என்று கோரி சட்டசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு, கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

மக்கள் முடிவு செய்யட்டும்:சபாநாயகர்

புதுடில்லி: லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் செயல்பாடுகளை எதிர்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. இது குறித்து அவர் கூறுகையில், 'நான் எப்படி அவையை நடத்துகிறேன் என்பது குறித்து மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும். அவையில் பேசுவதற்கு அனைவருக்கும் கட்சி பாகுபாடின்றி வாய்ப்பு தருகிறேன். எந்த சூழ்நிலையிலும் யார் மைக்கின் இணைப்பையும் துண்டிக்க கூறவில்லை,' என்றார்

 

ஜவான்களுக்கு அவமதிப்பு- மத்திய அரசு

புதுடில்லி: சட்டீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலில், சி.ஆர்.பி,.எப்., ஜவான்கள் 14 பேர் பலியாகினர். அவர்கள் குடும்பத்தினருக்கு தலா 38 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜவான்களில் சீருடைகள் குப்பையில் வீசப்பட்டதாகவும், அதன் மூலம் அவர்களின் தியாகம் அவமதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

கவன ஈர்ப்பு தீர்மானங்கள் ஏற்பு

சென்னை: ஆவின் பால் விற்பனை, கொள்முதல் விலை உயர்வு, 110 விதிகளின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை ஆகியவை குறித்து எதிர்கட்சிகள் கொண்டு வந்த 3 தீர்மானங்களை சட்டசபை சபாநாயகர் தனபால் ஏற்றுக் கொண்டார்.

 

நாங்கள் ஒரே கொள்கை கொண்டவர்கள்: பட்னாவிஸ்

மும்பை: மகாராஷ்ட்டிரா அமைச்சரவையில் சிவசேனா இடம்பெறுவது தொடர்பாக சிவனோ - பா.ஜ.,க தரப்பில் கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் முதல்வர் பட்னாவிஸ் நிருபர்களிடம் பேசுகையில், சிவனோ - பா.ஜ., இணைந்து இருக்கவே மகாராஷ்ட்டிரா விரும்புகிறது. நாங்கள் இருவரும் ஒரே சிந்தனை கொண்டவர்கள். 25 ஆண்டுகள் இணைந்தே பணியாற்றி வருகிறோம்.லோக்சபா தேர்தலில் இணைந்து மக்களை சந்தித்தோம். தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம். உத்தவ் தாக்ரேயுடன் நான் இரு தரப்பு உறவு குறித்து கலந்து பேசினேன். 12 அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம் பெறுவர். இவ்வாறு பட்னாவிஸ் பேசினார்.

 

பா.ஜ., சிவசேனா உடன்பாடு

மும்பை: பா.ஜ., தலைமையிலான மகாராஷ்ட்ரா அமைச்சரவைக்கு ஆதரவு கொடுப்பது குறித்து சிவசேனாவுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக நடந்து வந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் பலனாக, இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சிவசேனா உறுப்பினர்கள், அமைச்சரவையில் இடம் பெற உள்ளனர். இதற்காக, அடுத்த சில நாட்களில் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

 

பா.ஜ.,வுக்கு எதிரான அணி கூட்டம்

புதுடில்லி: பா.ஜ.,விற்கு எதிரான அணியை உருவாக்கும் முயற்சியில் எதிர்கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த அணி குறித்து முலாயம், லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார் ஆகியோர் டில்லியில் கூடி இன்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 

சட்டசபை: எதிர்கட்சிகள் வௌிநடப்பு

சென்னை: தங்கள் கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை என கூறி, தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சிகள் சட்டசபையில் இருந்து வௌிநடப்பு செய்தன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், 'காவிரியின் குறுக்கே கர்நாடகா தடுப்பணை, ஆவின் பால் முறைகேடு, தருமபுரி குழந்தைகள் இறப்பு, முதியோர் உதவித் தொகை நிறுத்தம், டெங்கு காய்ச்சல் பரவுதல் என ஏராளமான முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். எனவே, கூட்டத் தொடரை 5 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம், ஆனால், சபாநாயகர் எங்கள் கோரிக்கை எதையும் ஏற்கவில்லை. அதனால் வௌிநடப்பு செய்துள்ளோம்,' என்றார்.

 

மாணவி கொலை வழக்கில் தீர்ப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கிளாகுளத்தைச் சேர்ந்த மாணவி புனிதா, 13, கடந்த 2012ம் ஆண்டு கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த சுப்பையா, 37 என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், இன்று தூத்துக்குடி மகிளா கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. பொறுப்பு நீதிபதி பால்துரை, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

 

பாம்பன் பாலம்:தண்டவாளத்தில் விரிசல்

ராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, அந்த வழியாக செல்ல இருந்த சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. விரிசலை சீர்செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

தனி இருக்கை இல்லை-கருணாநிதி

சென்னை: நான் எதிர்பார்த்தபடி எனக்கு தனி இருக்கை அமைத்து தரப்படாததால், சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார். குளிர்கால சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று சட்டசபைக்கு வந்த கருணாநிதி, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'எத்தனையோ முறை வேண்டுகோள் விடுத்தும், சட்டசபையில் எனக்கு தனி இருக்கை அமைத்து தரப்படவில்லை,' என்றார்.

 

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்

புதுடில்லி: பிரதமர் நரேந்திரமோடி வரும் 8ம் தேதி, காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் செல்ல திட்டமிட்டுள்ளார், இவர் அங்கு வரும் போது, தற்கொலை படை தாக்குதல் மூலம் அவரை கொல்ல லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கம் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, அனைத்து பாதுகாப்பு படை பிரிவுகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

 

நாளை பறக்கிறது ஜிசாட் 16

புதுடில்லி: இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கை கோளான ஜிசாட் 16 நாளை விண்ணில் பறக்க உள்ளது. பிரஞ்ச் காயானாவில் இருந்து இந்த செயற்கைக் கோள் ஏவப்பட உள்ளது.

 

நிதி அமைச்சர் இருக்கையில் முதல்வர்

சென்னை: சட்டசபையில் முதல்வர் இருக்கையில் அமர்ந்து பன்னீர்செல்வம் பணியாற்ற வேண்டும் என எதிர்கட்சிகள் கோரி வந்தன. இந்நிலையில், இன்று கூடிய சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க அவைக்கு வந்த முதல்வர் பன்னீர்செல்வம், வழக்கமாக தான் அமரும் நிதி அமைச்சர் இருக்கையிலேயே அமர்ந்தார்.

 

முதல்வருக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று துவங்கியது. முதல்வராக பன்னீர்செல்வம் பதவி ஏற்ற பின்னர் நடக்கும் முதல் சட்ட சபைக்கூட்டம் இதுவாகும். இதை கருத்தில் கொண்டு, சட்டபைக்கு வந்த தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

 

காதலன் முன் இளம்பெண் பலாத்காரம்

ஐதராபாத் : ஐதராபாத்தின் ஹயாத்நகரில் 22 வயது இளம்பெண்ணை, அவரது ஆண் நண்பரின் கண் எதிரே 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத கட்டிடத்திற்கு அவர்கள் இருவரும் செல்வதை கண்ட மர்ம நபர்கள், அவர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர் அவர்களை மிரட்டியதுடன், அப்பெண்ணையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். காதலர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார், குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் ஏற்கனவே பல பலாத்கார வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

உ.பி.,யில் பள்ளி வாகனம்-ரயில் மோதல்: 5 பேர் பலி

லக்னோ : உ.பி.,யின் மாவ் மாவட்டத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

 

உளுந்தூர்பேட்டையில் மர்ம காய்ச்சல்

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எஸ்.மலையனூரில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் இதுவரை 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவக்குழு அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

கோர்ட்டிடம் அனுமதி கேட்கிறது அரசு

புதுடில்லி : காங்கிரஸ் அரசின் அதிகாரிகள் நியமனம் சர்ச்சையால் லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை கமிஷ்னர் மற்றும் கமிஷ்னர் ஆகிய இடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன. இதனால் காலியாக உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பணியிடங்களை டிசம்பர் 11ம் தேதிக்குள் நிரப்ப அனுமதி அளிக்குமாறு அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹாத்கி, சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்துள்ளார். நியமிக்கப்படும் அதிகாரிகள் குறித்த பட்டியலை அரசு தயாரித்து விட்டதால், நியமனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து:3 பேர் பலி

தர்மபுரி : தர்மபுரி அருகே குண்டல்பட்டியில் நிலை தடுமாறிய கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த ஒரு குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரில் வந்தவர்கள் குறித்த விபரங்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

கறுப்பு பணம்:மத்திய அரசுக்கு கோர்ட் உத்தரவு

புதுடில்லி : வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்போர் தொடர்பாக வருமான வரித்துறையின் விசாரணையை 2015ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் ராம் ஜெத்மலானி, கறுப்பு பண விவகாரம் தொடர்பான விசாரணையை முடிக்க கால நிர்ணயம் விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதன் பேரில், சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

ஊட்டியில் உறைபனிக்காலம் துவங்கியது

ஊட்டி : ஊட்டியில் உறைபனிக்காலம் துவங்கி உள்ளது. இதன் காரணமாக புல்வெளிகளில் உறைபனி காணப்படுகிறது. கடும் குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

ரஷ்யாவிற்கு மேலும் பொருளாதாரத்தடை

வாஷி்ங்டன் உக்ரைன் கிளர்சியாளர்களுக்கு உதவி செய்து வருவதை ரஷ்யா நிறுத்தி கொள்ளாவிடில் மேலும் பொருளாதாரத்தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. நேட்டோ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான்கெர்ரி இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக ரஷ்யாவி்ன பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. தற்போது கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவதை நிறுத்தி விட்டு பிரச்னையை தீர்க்க வழி வகை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையெனி்ல் மேலும் பொருளாதார தடைவிதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

 

கேரளாவில் பறவைக்காய்ச்சல்:ரூ. 870 கோடி இழப்பு

திருவனந்தபுரம்: பறவை காய்ச்சல் நோய் காரணமாக கேரள மாநிலத்திற்கு 870 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள கால்நடை அறிவியல் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பல்கலை வெளியிட்டு்ள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: மாமிச உணவு வகையை விரும்பி உண்ணும் கேரள மக்களால் கோழி இறைச்சி மூலம் ஆண்டிற்கு 700 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வந்தது. கோழி முட்டைகள் மூலம் சுமார் 90 கோடி ரூபாய் வரையிலும், வாத்து முட்டையின் மூலம் 80 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வந்தது. தற்போது பறவைகாய்ச்சலால் காரணமாக அடுத்த ஒராண்டு வரையில் சுமார் 870 கோடி ரூபாய் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

 

பதட்டமான மாநிலம் மணிப்பூர் தொடர்ந்து நீடிப்பு

இம்பால்: பதட்டமான மாநிலமாக மணிப்பூர் மாநிலத்தை தொடர்ந்து நீட்டிக்க மாநில அமைச்சரவை ஒப்புதல்வழங்கியுள்ளது. மாநிலத்தின் அமைச்சரவை கூட்டம் கடந்த ஒன்றாம் தேதி கூடியது. மாநிலத்தின் நிலவரம் குறித்து ஆராயப்பட்டது. அதில் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட பதட்டமான பகுதி நிலையை அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி வரை நீட்டிப்பது என முடிவு செய்யப்பட்டது. இச்சட்டம் இம்பாலில் உள்ள 8 சட்டசபை தொகுதியை தவிர்து இதர பள்ளத்தாக்கு பகுதிகள் மற்றும் மாநிலம் முழுமைக்கும் பொருந்துவதாகும். இதன் மூலம் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க முடியும் என்பதுடன் போலீசாரின் நடவடிக்கைகளுக்கும் பாதுகாப்பு படையினரால் உதவிகள் வழங்க முடியும்.

 

ஐஐடி மாணவிக்கு ஆண்டுக்கு ரூ.1.4 கோடி சம்பளத்தில் வேலை

மும்பை: மும்பை ஐ.ஐ.டி., வளாகத்தில் நடந்த நேர்முக வளாகத்தேர்வில், மாணவி ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.1.4 கோடி சம்பளத்தில் பேஸ்புக் நிறுவனம் வேலை வழங்கியுள்ளது. தீபாலி அத்லகா என்ற அந்த மாணவி கூறுகையில், இது மகிழ்ச்சியான நிகழ்ச்சி. மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட, இந்தளவு சம்பளத்தில் பெண்களுக்கு வேலை வழங்க மறுக்கின்றன. ஆண்களுக்கு மட்டும் அங்கு அதிகளவில் அங்கு சம்பளம் கிடைக்கிறது. தற்போது எனக்கு வேலை கிடைத்திருப்பதன் மூலம், எங்களாலும், ஆண்களுக்கு சரி நிகராக பணி செய்ய முடியும் என்பதை காட்டுகிறது என கூறினார்.

 

தாவூத்தின் கூட்டாளி வங்கதேசத்தில் கைது

டாக்கா: பயங்கரவாத தொடர்பு குறித்து விசாரிக்க நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். அப்துல் ராப் என்ற தாவூத் மெர்ச்சண்ட் என்ற நபர், வங்கதேசத்தில் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 5 ஆண்டு சிறை வாசத்திற்கு பின்னர் இன்று விடுதலையான அவரை, பயங்கரவாத செயல் மற்றும் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் மீண்டும் அவரை கைது செய்துள்ளனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.