குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தமிழகச் சட்டப் பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது.

இந்தக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்றுதான் தமிழகத்திலே உள்ள பல்வேறு எதிர்க் கட்சிகளும், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம், தே.மு.தி.க., பா.ம.க., இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் பலமுறை குரல் கொடுத்தன.

பல முனைகளிலும் கொடுக்கப்பட்ட அழுத்தத்திற்குப் பணிந்து எதிர்க் கட்சிகளின் அறிக்கைகளில் உண்மை இருப்பதை உணர்ந்து கொண்டோ என்னவோ, டிசம்பர் 4ஆம் தேதி பேரவை கூடுமென்று அறிவித்து, அவ்வாறே இன்று பேரவைக் கூட்டம் தொடங்கியிருக்கிறது.

பேரவையில் தமிழக மக்கள் சார்ந்த விவாதிக்கப்பட வேண்டிய பொருள்கள் ஏராளம், ஏராளம்! எனவே குறைந்த பட்சம் ஒரு வார காலத்திற்காவது பேரவை நடைபெற்றால் தான் அவற்றையெல்லாம் ஓரளவுக்காவது விவாதிக்க முடியும்.

எனவே கூட்டத் தொடர் பத்து நாள்கள் நடைபெற வேண்டுமென்று நேற்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுவில் கலந்து கொண்ட மொத்தம் ஆறு கட்சிகளில்; திராவிட முன்னேற்றக் கழகம், தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகிய நான்கு எதிர்க் கட்சிகள் வேண்டுகோள் விடுத்தும் அதனை ஏற்க மறுத்து, மூன்று நாள்கள் மட்டுமே பேரவை நடைபெறுமென்று முடிவெடுத்த போது, இந்த நான்கு கட்சிகளும் அதனையேற்க மறுத்து, அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து விட்டன.

தமிழக மக்களைப் பெரிதும் பாதித்திருக்கும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்சினைகளையும் முழுமையாக இங்கே பட்டியலிட வாய்ப்பில்லை.

எனினும், பேரவையில் உடனடியாக விவாதிக்கப்பட வேண்டிய தலையாய பிரச்சினைகள் சிலவற்றை இங்கே வரிசைப்படுத்தியிருக்கிறேன். அவை வருமாறு :- பேரவையில் விவாதிக்கப்படவேண்டிய முக்கிய பிரச்சினைகள் :-

1.தமிழகத்தில் முதல் அமைச்சர் மாற்றம்.

2.காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவது

3.முல்லைப் பெரியாறு அணை - பேபி டேம் விவகாரம்

4.கேரள அரசு அமராவதி - பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டுவது

5.வரலாறு காணாத வகையில் பால் விலை உயர்வு

6.தொடரும் மின்வெட்டு; மின் கட்டண உயர்வு

7.முதியோர் உதவித் தொகை ரத்து - 7 லட்சம் போலிகள் கண்டுபிடிப்பு

8. நூறு நாள் வேலை நிறுத்தம்.

9.தர்மபுரி, சேலம் மருத்துவ மனைகளில் சிசுக்கள் இறப்பு.

10.போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பற்றி அழைத்துப் பேச வேண்டும்

11.வட கிழக்குப் பருவ மழை பாதித்த மாவட்டங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும்

12.கடும் விலை வாசி உயர்வு

13.தமிழ்நாட்டில் பரவி வரும் டெங்கு காய்ச்சல், பறவைக் காய்ச்சல் சம்பந்தமாக.

14.வடகிழக்கு பருவ மழை காரணமாக நெடுஞ்சாலைத் துறையின் பொறுப்பில் உள்ள சாலைகள் சேதம் - போக்குவரத்து பெரும் பாதிப்பு.

15.வடகிழக்குப் பருவ மழைக்கு முன்னர், ஏரி, குளம், வரத்து வாய்க்கால் தூர் வாராததால் தண்ணீர் வீணாக கடலில் கலப்பது

16.தமிழகம் முழுவதும் யூரியா தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் தவிப்பு

17.மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு.

18.பச்சைத் தேயிலைக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம்

19.சட்டம், ஒழுங்கு சீர்குலைவு - கொலைக்களமாகி வரும் கல்விக் கூடங்கள்

20.கொலைகள் மலிந்து வரும் தென் மாவட்டங்கள்

21.மின்வாரியம் தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தைவாங்குவது பற்றிய பிரச்சினை

22.பேரவைச் செயலாளர் நீக்கம் - பேரவைத் தலைவர் நீக்கம் -

23.சென்னை மாநகர மேயர் மாற்றம் என்றெல்லாம் ஏடுகளில் தொடர்ந்து வந்த பிரச்சினைகள்

24.சத்துணவு முட்டை வாங்குவதில் ஊழல் - ஆவின் பால் விற்பனையில் ஊழல்

25.கிரானைட் முறைகேடுகளை விசாரிக்க நீதி மன்றம் நியமித்த சகாயம் ஐ.ஏ.எஸ்., விசாரணைக் குழு பற்றிய விவரங்கள்

26.அங்கன்வாடிப் பணியாளர் நேர்முகத் தேர்வு திடீர் ரத்து.

27. 69 % இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு

28. தாது மணல் கொள்ளை மீதான விவகாரம்

இவை சட்டப்பேரவையில் அவசியமாக விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்கள்"

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.