மூன்றாவது முறை முதல்வராக பதவி ஏற்றதற்கும், பல நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதற்கும் அவர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். திரையுலகினர் நேரில் வந்து சந்தித்துப் பாராட்டியதற்கு முதல்வர் நன்றி தெரிவித்தார்.
மகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் கருணாநிதி
தி.மு.க தலைவர் கருணாநிதி தனது 88வது பிறந்த நாளை தனது மகள் கனிமொழியுடன் கொண்டாட முடிவு செய்துள்ளார்.
இதற்காக அவர் விமானம் மூலம் இன்று டெல்லி செல்கிறார். பிறந்தநாளை ஒட்டி அவர் தொண்டர்களுக்கு தெரிவித்துள்ள செய்தியில்,"கூடாநட்பு கேடு தரும்" என குறிப்பிட்டுள்ளார்.
சமூக வளர்ச்சிக்கும், அரசியல் மறுமலர்ச்சிக்கும் பாடுபடும் தி.மு.க தொண்டர்கள் கூடா நட்பை தொடர்ந்தால் கேடாக முடியும் என்று கூறியள்ளார். தேர்தல் தோல்வி, கனிமொழி கைது ஆகிய சம்பவங்களால் கசப்பில் இருக்கும் தி.மு.க - காங்கிரஸ் உறவுக்கு இது மறைமுக உணர்த்துதல் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக அவர் அண்ணாதுரை சமாதிக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பெரியார் நினைவிடத்திலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
சென்னை கோபாலபுரத்தில் இருக்கும் அவரது வீட்டில் திரண்ட தி.மு.க தொண்டர்கள் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். தி.மு.க சட்டசபை தலைவர் ஸ்டாலின், அன்பழகன், துரைமுருகன், பொன்முடி ஆகிய கட்சியின் மூத்த தலைவர்களும் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.