குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

03.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

மதுரை:விசாரணையை துவக்கினார் சகாயம்

மதுரை : கிரானைட் முறைகேடு வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்ட முன்னாள் கலெக்டர் சகாயம் தலைமையிலான அதிகாரிகள் குழு மதுரை வந்துள்ளது. ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்ட 14 அதிகாரிகள் கொண்ட குழுவினர் இன்று காலையிலும், குழு தலைவர் சகாயம் இன்று பிற்பகலிலும் மதுரை வந்தனர்.

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு சிறப்பு அறையில், அதிகாரிகளுடன் சகாயம் ஆலோசனை நடத்தினார். விசாரணை நிலவரம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்ட குழுவால் விசாரணை நடத்தப்பட்டு வருவதால், தற்போது விசாரணை நிலவரம் குறித்த விபரங்களை வெளியிட முடியாது. விசாரணை முடியும் போது அனைத்து விபரங்களும் தெரிவிக்கப்படும் என கூறி, விபரங்களை கூற மறுத்து விட்டார். கிரானைட் வழக்கு தொடர்பாக வேளாண்மை, வருமானவரி, கனிமவளம், கால்நடை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார்.

 

ஆத்தூரில் மர்மமான முறையில் இருவர் மரணம்

ஆத்தூர்: ஆத்தூர் அருகே பூட்டிய வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இருவரின் உடல்களை போலீசார் கைப்பற்றினர். சேலம் மாவட்டம் ஆத்தூரையடுத்த சேர்வாய் புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் லதா (19). இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்நிலையில், இன்று அவரது வீட்டில் லதாவும், வாலிபர் ஒருவரும் உடலில் படுகாயங்களுடன் இறந்து கிடந்தனர். இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சமூக நீதி பெஞ்ச் அறிமுகம்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அதிரடி

புதுடில்லி: சமூக நீதி தொடர்பான வழக்குகளை விசாரிக்க இரண்டு நீதிபதிகள் கொண்ட சிறப்பு பெஞ்ச்சை அமைக்க தலைமை நீதிபதி தத்து முடிவு செய்துள்ளார். இந்த சிறப்பு பெஞ்ச், வெள்ளிக்கிழமை தோறும், வீடு இல்லாதவர்களுக்கு இரவு தங்குவதற்கு முகாம்கள் உள்ளனவா? அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறதா என்பதை விசாரிக்கும். இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்சில், நீதிபதி மதன் பி லோகூர் மற்றும் நீதிபதி யுயு லலித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

அரசு பஸ்சில் தீப்பிடித்ததால் பரபரப்பு

நீலகிரி: குன்னூர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த பஸ்சில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று மாலை 4 மணியளவில், குன்னூர்பஸ் ஸ்டாண்டில் கோத்தகிரி செல்லும் அரசு பஸ்சில், பயணிகள் ஏறிக்கொண்டிருந்தனர். சுமார் 30 பயணிகள் பஸ் சில் இருந்த நிலையில், இன்ஜீனிலிருந்து திடீரென புகை கிளம்பியது. பின்னர் தீப்பிடித்தது. அருகில் இருந்த கடைகளில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் பஸ் ஜெட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

 

அமித் ஷாவின் கருத்துக்கு மத்திய அரசு மறுப்பு

புதுடில்லி: சாரதா சிட்பண்டு மோசடியில் கிடைத்த பணத்திற்கும், புர்துவானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோல்கட்டாவில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ., தலைவர் அமித் ஷா, சாரதா சிட் பண்டு மோசடியில் கிடைத்த பணம், புர்துவானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என கூறியிருந்தார். இது குறித்து இன்று ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங், இதுவரை நடந்துள்ள விசாரணையில், சாரதா சிட் பண்டு மோசடியில் கிடைத்த பணம், வங்கதேசம் வழியாக பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் ஏதுமில்லை என கூறியுள்ளார்.

 

எச்.ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: கடந்த ஜனவரி மாதம் பொதுக்கூட்டம் ஒன்றில், பெரியார் மற்றும் சீமான் குறித்து தரக்குறைவாக பேசியதாக, கொடுக்கப்பட்டிருந்த புகாரின் பேரில், பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மீது தாக்குதலா? ஈரான் மறுப்பு

டெஹ்ரான்: ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஐ.எஸ்., அமைப்பினருக்கு எதிராக ஈரானும் வான்வெளி மூலம் தாக்குதல் நடத்தியதாக பெண்டகன் கூறியுள்ளது. இது தொடர்பாக பெண்டகன் அதிகாரி ஒருவர் கூறுகையில், அமெரிக்கா தனது சொந்த பலத்தின் மூலம் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானுடன் ராணுவ ஒத்துழைப்பில்லை என்ற முடிவில் மாற்றமில்லை என கூறினார். ஆனால், இதனை ஈரான் மறுத்துள்ளது. ஈரான் தாக்குதல் ஏதும் நடத்தவில்லை எனவும், அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் எண்ணம் ஏதுமில்லை எனவும் கூறினார்.

 

பிரதமர் மோடியின் கிராம தத்தெடுப்பு திட்டத்துக்கு ராகுல் பாராட்டு

லக்னோ: ஒவ்வொரு எம்.பி.,க்களும் கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் திட்டத்தின்படி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், உத்தரபிரதேசத்தில் உள்ள ஜக்தீஸ்பூர் கிராமத்தை தத்தெடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கிராமங்களை தத்தெடுப்பது நல்ல திட்டம். இங்கு திட்டங்களை செயல்படுத்த அரசின் நிதி தேவையில்லை என கூறினார். காங்கிரஸ் தலைவர் சோனியாவும் கிராமம் ஒன்றை தத்தெடுக்க போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ஜவான் பலி; 3 பேர் காயம்

ஜம்மு: காஷ்மீரில் வரும் 9ம் தேதி மூன்றாவது கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற உள்ள பூகோ பகுதியில் சி.ஆர்.பி.எப்., வீரர்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு ஜவான் பலியானார். 3 ஜவான்கள் காயமடைந்துள்ளனர்.

 

நூதன முறையில் பணம் திருட்டு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பசும்பொன் நகர் பள்ளிக்கூடம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் குமார், 49. இவர் சின்னக்கடையைச் சேர்ந்த ஒருவரிடம் கணக்கராக வேலை செய்கிறார். கட்டடங்கள், கடைகளுக்குரிய வாடகை வசூல் ரூ.86 ஆயிரத்தை பையில் எடுத்துக்கொண்டு நேற்று முன் தினம் மதியம் வீடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவர், "ரோட்டில் கிடக்கும் பத்து ரூபாய் நோட்டுகள் உங்களுடையது தானா, கவனமாக எடுத்துச் செல்லுங்கள்' என குமாரிடம் கூறினர். உடனே குமார் கீழே கிடந்த பத்து ரூபாய் நோட்டுகளை சேகரித்தார். அப்போது கைப்பையில் வைத்திருந்த ரூ.86 ஆயிரம் பணம் மற்றும் மொபைல் போனை பைக்கில் வந்த இருவரும் பறித்துக் கொண்டு தப்பி விட்டதாக, போலீசில் குமார் புகார் கொடுத்தார். ராமநாதபுரம் டவுன் போலீசார் பைக்கில் தப்பிய மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

 

அணுமின் நிலையத்தில் தீ விபத்து

ஜபோரிஸ்யா: உக்ரைனில் உள்ள ஜபோரிஸ்யா அணுமின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதை அந்நாடு உறுதி செய்துள்ளது. தீ அணைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன என்றும், நாளை மறுநாள் அணுமின் நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

சீன கப்பல்கள் நடமாட்டம்: தோவான்

புதுடில்லி: இந்திய பெருங்கடலில், சீன போர் கப்பல்கள் நடமாட்டம் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். அது குறித்து தொடர் கண்காணிப்பில் இந்திய கடற்படை ஈடுபட்டுள்ளது என, கடற்படை தளபதி தோவான் கூறி உள்ளார்.

 

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

சென்னை : கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் மற்றும் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் காலை 9.15 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

சிவில் சர்வீஸ் தேர்வுகள்:அரசு விளக்கம்

புதுடில்லி: சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதுவதற்கான எண்ணிக்கை மற்றும் வயது வரம்பு ஆகியவற்றை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு கூறி உள்ளது.

 

பிரியங்கா தான் அமித்ஷாவிற்கு போட்டி

லக்னோ : காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்காவால் தான் பா.ஜ., தலைவர் அமித்ஷாவிற்கு பதிலளிக்க முடியும் எனவும், வேறு எவராலும் முடியாது எனவும் உ.பி., காங்கிரஸ் தொண்டர்கள் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

போதை மருந்து கடத்தல்: 27 பேர் கைது

ஜெய்சல்மர்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மர் அருகே, பாகிஸ்தான், இந்திய எல்லையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்த 27 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களில் 17 பேர் இந்தியர்கள், ஐந்து பேர் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவர்கள், 5 பேர் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய சோதனையில் போதை மருந்து, வௌிநாட்டு கரன்சிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

 

பெங்களூரு:மீண்டுமொரு குழந்தை பலாத்காரம்

பெங்களூரு : பெங்களூருவில் தனியார் பள்ளி ஒன்றில் 3 வயது குழந்தை, பள்ளி அட்டென்டரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

துவக்கப்பள்ளி முன் முற்றுகை போராட்டம்

சூலூர்: இடிந்து விழும் நிலையில் உள்ள இருகூர் துவக்கப் பள்ளி கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பள்ளியில் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில், 70 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

டிச.,11 ரஷ்ய அதிபர் இந்தியா வருகை?

புதுடில்லி : ரஷ்ய அதிபர் விலாடிமிர் புட்டின் டிசம்பர் 11ம் தேதி, ஒருநாள் பயணமாக இந்தியா வர உள்ளதாகவும், பார்லி., கூட்டுக் குழு கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்

சென்னை: தமிழக சட்டசபையின் குளிர் கால கூட்டம் நாளை துவங்க உள்ள நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், இன்று மாலை நடைபெறுகிறது. இதில், சட்டசபை கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

 

நெல்லை அருகே ஒருவர் கொலை?

திருநெல்வேலி: நெல்லையை அடுத்த சிவந்திபட்டி அருகே உள்ளது ஸ்ரீராமன்குளம். இங்கு, செய்துங்கநல்லூரைச் சேர்ந்த அங்கப்பன் என்பவர் உடலில் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து சிவந்திபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

முத்தப்போராட்டம்: வைகோ கருத்து

திருப்பூர்: திருப்பூரில், ம,தி.மு.க., பிரமுகர் இல்ல விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தமிழகத்தில் நடந்து வரும் முத்தப் போராட்டம் என்பது தமிழர்களின் கலாசாரத்திற்கும், பண்பாட்டிற்கும் எதிரானது. அதை ஏற்றுக் கொள்ளவோ, ஜீரணிக்கவோ முடியாது,' என்றார். முல்லை பெரியாறு விஷயத்தில் கேரளா தாக்கல் செய்த மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, 'சுப்ரீம் கோர்ட்டின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன்,' என்றார்.

 

பள்ளிக்குள் சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு

வால்பாறை : வால்பாறையை அடுத்த நல்லிகாத்து எஸ்டேட் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 80 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் இன்று பகல் 12 மணியளவில், உணவு இடைவெளியின் போது கை கழுவுவதற்காக மாணவர்கள் வெளியே சென்ற நேரத்தில் சிறுத்தை ஒன்று பள்ளி வளாகத்திற்குள் புகுந்துள்ளது. சிறுத்தையை கண்ட மாணவர்கள் அலறி அடித்தபடி ஓடி உள்ளனர். மாணவர்களின் சத்தம் கேட்டு அங்கு ஆசிரியர்கள் வந்து பார்த்த போது, சிறுத்தை அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. பள்ளிக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் வால்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

காஷ்மீர் இந்தியாவின் பகுதி:ஜெட்லி

புதுடில்லி : எல்லைகளை திருத்தி வரையறுக்க முடியாது என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி எனவும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

 

பூரண மதுவிலக்கு: ஐகோர்ட் கேள்வி

சென்னை: தமிழகத்தில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதன் காரணமாக விபத்து அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா என்பதற்கு வரும் 12ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

பிரதமர் பயணம் : சுஷ்மா அறிக்கை

புதுடில்லி : பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தால் என்ன பயன் என்பது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் லோக்சபாவில் தாக்கல் செய்த அறிக்கையில், பிரதமரின் வெளிநாட்டு பயணத்தால் பல முக்கியத்துவம் தான் முடிவுகள் ஏற்பட்டுள்ளன. இது வெளிநாட்டு கொள்கைகளுக்கான புதிய பாதை. உலக நாடுகளுடனான நல்லுறவை பிரதமர் விரும்புகிறார். பிரதமர் தெற்காசிய நாடுகளின் அமைதிக்காக பணியாற்றி வருகிறார். ஆஸ்திரேலியா மற்றும் நேபாள நாடுகளுடனான உறவில் மேம்பாடு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளா

 

அலுவல் ஆய்வு குழு: தி.மு.க, வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டசபை கூட்ட தொடர் நாளை துவங்க உள்ள நிலையில், சட்டசபை அலுவல் ஆய்வு குழு, சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று காலை கூடியது. அ.தி.மு.க,. தி.மு.க., தே.மு.தி.க., கட்சிகளின் கொறாடாக்கள் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்தை 3 நாட்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், கூட்டம் 5 நாட்கள் நடக்க வேண்டும் என தி.மு.க., தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், அதை ஏற்க மறுத்ததால், கூட்டத்தில் இருந்து தி.மு.க., வௌிநடப்பு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மு.க.,அழகிரி ஆஜராக கோர்ட் உத்தரவு

மேலூர்: மேலூர் தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேரில் ஆஜராக வேண்டும் என மேலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

சட்டசபை அலுவல் ஆய்வு குழு கூடியது

சென்னை: தமிழக சட்டசபை கூட்ட தொடர் நாளை துவங்க உள்ள நிலையில், சட்டசபை அலுவல் ஆய்வு குழு, சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று காலை கூடியது. அ.தி.மு.க,. தி.மு.க., தே.மு.தி.க., கட்சிகளின் கொறாடாக்கள் இதில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

லோக்சபாவில் எதிர்கட்சிகள் அமளி

புதுடில்லி: மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜ்யோதியின் சர்ச்சை பேச்சு குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கோரியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் லோக்சபாவில் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், லோக்சபாவில் கூச்சல், குழப்பம் நிலவியது

 

அமைச்சர் சர்ச்சை பேச்சுக்கு விளக்கம்

புதுடில்லி: மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜ்யோதியின் சர்ச்சை பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் வெங்கையநாயுடு, தனது பேச்சிற்கு அமைச்சர் வருத்தம் தெரிவித்துவிட்டதால், அவர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என, ராஜ்யசபாவில் கூறினார்.

 

சாலை ஓரம் கிடந்த பெண் சிசு மீட்பு

ஊட்டி: கூடலூர்-ஊட்டி சாலை வழியாக போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சென்று கொண்டிருந்தபோது, நடுவட்டம் என்ற இடத்தில், பிறந்து 5 நாட்களே ஆன பெண் சிசு ஒன்று, துணியில் சுற்றப்பட்டு, சாலை ஓரத்தில் கிடந்ததை பார்த்தார். உடனே, உயிருடன் இருந்த அக்குழந்தையை மீட்டு, அருகில் உள்ள சுகாதார மையத்தில் முதல் உதவி அளித்தார். பின்னர் அக்குழந்தை ஊட்டிக்கு கொண்டு வரப்பட்டு, சமூகநலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

திரிணாமூல் காங்., .போராட்டம்

புதுடில்லி: ஏதாவது ஒரு பிரச்னையை மையமாக வைத்து, பார்லிமென்ட் முன் போராட்டம் நடத்துவதை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களாக வழக்கமாக கொண்டுள்ளது. இன்று, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் உற்பத்தி வரியை அதிகரித்துள்ளதை கண்டித்து அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

 

ராஜ்யசபா இயங்காது- திரிணமூல் மிரட்டல்

புதுடில்லி: மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜ்யோதியின் சர்ச்சை பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டிரெக் ஓ பிரெய்ன், 'அமைச்சரின் பேச்சு எல்லைமீறி உள்ளது. அதை பொறுத்துக் கொள்ள முடியாது. அனைத்து கட்சிகளும் சேர்ந்து அவரின் ராஜினாமாவை கோர வேண்டும். அவர் ராஜினாமா செய்யாவிட்டால் ராஜ்யசபா இயங்க கூடாது,' என்றார்.

 

பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் பாக்., பகுதியில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவும் முயற்சியில் பயங்கரவாதிகள் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுள்ளனர். இதற்கு வசதியாக, பாக். துருப்புக்கள் அவ்வப்போது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை, எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

 

நிதி திரட்ட கெஜ்ரிவால் வௌிநாடு பயணம்

புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சிக்கு நிதி திரட்டுவதற்காக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வௌிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.வளைகுடா நாடுகளிலும், அமெரிக்காவிலும் நிதி திரட்ட கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். இதற்காக நாளை அவர் துபாய் புறப்படுகிறார். அங்கிருந்து அமெரிக்கா செல்கிறார் என கட்சி வட்டாரங்கள் தெரிவி்த்துள்ளன.

 

எதிர்கட்சிகளுக்கு வெங்கையா பதில்

புதுடில்லி : பிரதமர் மோடி பார்லி.,க்கு வருவதில்லை என எதிர்க்கட்சிகள் முன் வைத்துள்ள குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் வெங்ககைய நாயுடு, அவையில் வேலையில் இருந்தால் மட்டுமே அவர் அவைக்கு வருவார். ஒருவேளை எதிர்க்கட்சிகள் பிரதமரை பார்க்க விரும்பினால், அவரது பார்லி., அலுவலகத்திற்கு சென்று பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

 

சரத் பவார் தவறி விழுந்து காயம்

புதுடில்லி : தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், டில்லியில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. காலையில் வாக்கிங் சென்ற போது கால் தவறி கீழே விழுந்ததில் அவர் காயமடைந்துள்ளார். 73 வயதாகும் சரத்பவார், உடனடியாக விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

தமிழக நிலை தெரியாது: விஜயகாந்த் பேட்டி

சென்னை: வௌிநாட்டில் இருந்து திரும்பிய தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம், நான்காம் தேதி கூடவுள்ள சட்டசபை கூட்டத்தில் தே.மு.தி.க.வின் செயல்பாடு எப்படி இருக்கும்? எத்தகைய மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவீர்கள் என கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதில் அளித்த விஜயகாந்த், ஒருமாத காலமாக செய்தித்தாள் எதையும் படிக்கவில்லை. தொலைக்காட்சியும் பார்க்கவில்லை. எனவே, தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று எதுவுமே எனக்கு தெரியாது. சட்டமன்ற கூட்டத்திற்கு இனிமேல் தான் தயார் செய்ய வேண்டும்,' என பதில் அளித்தார்.

 

சகாயம் குழுவில் 6 அதிகாரிகள்

மதுரை : மதுரை கிரானைட் முறைகேடு வழக்கை விசாரிக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவில் கனிம வளத்துறையைச் சேர்ந்த 6 அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். சென்னை அறிவியல் நகர மூத்த அதிகாரிகள் ஹேமா, தேவசேனாதிபதி, கனிமவளத்துறை உதவி இயக்குநர்கள் முருகானந்தம், சுதர்சனன், கனிம வளத்துறையின் உதவி மண்ணியலாளர்கள் ரமேஷ் மற்றம் பெருமாள் ராஜா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

 

பிலிப் ஹியூஸ் இறுதிச் சடங்கு துவங்கியது

நியூசவுத்வேல்ஸ் : மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூசின் இறுதிச் சடங்குகள் வடக்குநியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. பொது மக்கள் பலரும் ஹியூசின் உடலுக்கு கண்ணீரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

இந்திய சி.ஏக்களுக்கான தேவை அதிகரிப்பு

கொச்சி:உலகின் பல்வேறு நாடுகளில் இந்திய சி.ஏ.,க்களுக்கானதேவை அதிகரித்து வருவதாக ஐ.சி.ஏ.ஐ.,யின் தலைவர் ரகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் சி.ஏ.,க்களின் தேவை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சில்லறை வர்த்தகம், தொலைபேசி துறை போன்ற பிரிவுகளிலும் இந்திய சி.ஏ.,க்களுக்கான தேவை உள்ளது. வளர்ந்து வரும் சி.ஏ.,க்களின் தேவைக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டத்திலும் மாற்றம் செய்யப்பட உள்ளது. அவைகள் வரும் 2016-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அடுத்து வரும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

போபால் விஷவாயு சம்பவம்: அருங்காட்சியகம் திறப்பு

போபால்: போபால் விஷவசாயு சம்பவம் குறித்த அருங்காட்சியகம் திறக்க்ப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் யூனியன்கார்பைட் நிறுவனத்திற்கு சொந்தமான ராசாயண நிறுவனம் செயல்பட்டு வந்தது. கடந்த 1984-ம் ஆண்டு டிசம்பர் மாதம்2-ம் தேதி இந்த ஆலையில் வெளியேறிய விஷவாயு காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாயினர். இச்சம்பவத்தை நினைவு கூறும் விதமாக அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது. இதன் திறப்பு விழா பலியானவர்களின் 30-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டது. உலகின் மோசமான தொழிற்சாலை விபத்துக்களில்போபால் சம்பவமும் ஒன்றாக கருதப்படுகிறது.

 

78 ஆயிரம் ச.கி.மீ பாக் ஆக்ரமிப்பு :அமைச்சர்

புதுடில்லி: கடந்த 1948-ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் சுமார் 78 ஆயிரம் ச.கி.மீ அளவிற்கு இந்திய பகுதியை ஆக்ரமிப்பு செய்துள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: எல்லைப்பகுதியை சேர்ந்த நாடுகளான மியான்மர், வங்கதேசம் ,பூடான் ஆகிய நாடுகள் நில ஆக்ரமிப்பில் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்தார். சீனா உடனான எல்லைப்பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டுடனானஎல்லை பிரச்னை கொடி அணிவகுப்பு, பேச்சுவார்த்தை போன்றவை மூலம் தீர்வு காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

துபாய் பள்ளி குழந்தைகள் கின்னஸ் சாதனை

துபாய்: துபாய் நாட்டின் தேசியகீதம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க உள்ளது. துபாய் நாட்டில் 43-வது தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதனை சிறப்பிக்கும் வகையில் அந்நாட்டில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. துபாயில் செயல்பட்டு வருகிறது ஜெம்ஸ் பள்ளி இப்பள்ளியில் பல்வேறு நாடுகைள சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.துபாய் உள்பட மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 40 கிளைகளுடன் இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. துபாயின் தேசிய தினத்தன்று இப்பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து துபாயின் தேசிய கீதத்தை பாடிய நிகழ்ச்சி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது.

 

பாக். பிரதமருக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் உள்ளார். பாகிஸ்தானின் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த பக்ரூதீன் இப்ராஹிம் ஓய்வு பெற்றதையடுத்து கடந்த 16 மாதங்களாக அப்பதவி காலியாக உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானிற்கு நிரந்தரமாக தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று நஸ்ரூல் மாலிக் தலைமையிலான முன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

இதில் நிரந்தரமாக தலைமை தேர்தல் ஆணையரை வரும் டிசம்பர் 5ம் தேதிக்குள் நியமிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் பிரதமர் நவாஸ் ஷெரீப், பார்லி. எதிர்க்கட்சிதலைவர் சையத் குர்ஷித் ஷா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

 

இஸ்ரேல் பார்லி.யை கலைக்க பிரதமர் முடிவு

ஜெருசலேம்: இஸ்ரேலில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த இரு அமைச்சர்கள் பிரதமரின் கொள்கை முடிவுகளை விமர்சனம் செய்ததால், அவர்கள் நீக்கப்பட்டனர். இதையடுத்து பார்லி.க்கு முன்கூட்டியே தேர்தல் நடத்திட பிரதமர் முடிவு செய்துள்ளார்.

 

இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெட்டன்யாகூ உள்ளார். இவரது கூட்டணி அரசில் நிதி அமைச்சர் மற்றும் நீதித்தறை அமைச்சர்கள் இருவர் கூட்டணி ஆட்சிக்கு எதிராக அரசின் கொள்ககைளை விமர்சித்தனர்.இதையடுத்து அவர்களின் பதவியை பறித்தார் நெட்டடன்யாகூ.

இந்நிலையில் பார்லி.க்கு முன்கூட்டியே தேர்தல் நடத்திட முடிவு செய்துள்ளதாகவும் அதற்கு வசதியாக விரைவில்பார்லி.யை கலைக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடக்கலாம் என தெரிகிறது.

 

ஹிந்தி சினிமா பாடகரை கொல்ல முயற்சி

பெங்களூரு: ஹிந்தி சினிமா பாடகர் லக்கி அலியை, கொல்ல முயற்சி நடந்தது. ஹிந்தி சினிமா பாடகர் லக்கி அலி. இவரது முன்னோர்களின் சொத்து, எலஹங்காவில் உள்ளது. இந்த சொத்து தொடர்பாக இவருக்கும், இக்பால் என்பவருக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதில், லக்கி அலிக்கு சாதமாக தீர்ப்பு வந்தது. இதனால், ஆத்திரமடைந்த இக்பால், ரவுடி ஷரிஷ், முன்னா, ஆசிப் அலி உட்பட, 8 பேருக்கு பணம் கொடுத்து, லக்கி அலியை கொலை செய்ய ஏற்பாடு செய்தார்.நேற்று முன் தினம் இரவு, எலஹங்காவிலுள்ள பண்ணை வீட்டில், லக்கி அலி துாங்கி கொண்டிருந்த போது, உள்ளே நுழைந்து, அவரை கொல்ல முயற்சித்தனர். அப்போது செக்யூரிட்டி தடுத்து, கூச்சலிட்டார். கும்பல் தப்பியோடியது. காயமடைந்த லக்கி அலி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.செக்யூரிட்டி கொடுத்த தகவலின் படி, எலஹங்கா போலீஸார் விசாரித்து, இக்பால், ஹரிஷ், ஹனிப், முன்னா, ஆசிப் அலி உட்பட எட்டு பேரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.

 

போலி டி.சி., கொடுத்த பயிற்சி கல்லூரி நிர்வாகிகள் 2பேர் கைது

சின்னமனூர்:சின்னமனூரில் போலி மாற்றுச் சான்றிதழ் ( டி.சி., ) தயாரித்து கொடுத்த தனியார் பயிற்சி கல்லூரி நிர்வாகிகள் இருவரை போலீசார் கைது செய்தனர். மூளையாக செயல்பட்டவர் உட்பட இருவர் தலைமறைவாகி விட்டனர். சின்னமனூர் வ.உ.சி., நகரைச் சேர்ந்தவர் ஜமீன் பிரபு, 28. திருச்சியில் பொறியியல் பட்டம் பெற்றவர். தனது நண்பர்கள் கரிச்சிபட்டி இளையராஜா, 27, கன்னிசேர்வைபட்டி கருப்பையா, சருத்துபட்டி மாயன், 28, ஆகியோருடன் சின்னமனூரில் எக்சலண்ட் டுடோரியல் என்ற பெயரில் தனியார் பயிற்சி கல்லூரி நடத்தினார். ஐந்தாம் வகுப்பு படித்து மாற்று சான்றிதழுடன் வருவோருக்கு, 9ம் வகுப்பு டி.சி., தருவதாக விளம்பரப்படுத்தினர். தேனி அரைப்படிதேவன் பட்டி சன்னாசி, 23, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக 9ம் வகுப்பு டி.சி., கேட்டார். இதற்காக ஜமீன்பிரபுவிடம் ரூ.18 ஆயிரத்து 500 கொடுத்தார். வீரபாண்டியில் படித்ததாக சன்னாசிக்கு டி.சி., வழங்கப்பட்டது. ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் இந்த டி.சி., போலியானது என கண்டறியப்பட்டது. எனவே ஜமீன்பிரபுவிடம் பணத்தை திரும்ப தருமாறு சன்னாசி கேட்டார். கொடுக்க மறுத்ததால் சின்னமனூர் போலீசாரிடம் புகார் கூறினார். எக்சலண்ட் டுடோரியல் கல்லூரியை சோதனையிட்ட போலீசார் 6 போலி டி.சி., ஜெராக்ஸ்கள் இருப்பதை கண்டு பிடித்தனர். பயிற்சி கல்லூரியில் இருந்த கருப்பையா, மாயனை கைது செய்தனர். ஜமீன்பிரபு, இளையராஜா தலைமறைவாகி விட்டனர்.

 

தூக்கு தண்டனை தடைக்கு எதிராக தமிழக அரசு பதில் மனு தாக்கல்

கோவை:கோவை பள்ளிக்குழந்தைகள் கொலை வழக்கில், தூக்கு தண்டனை மீதான தடையுத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கோவையை சேர்ந்த, 12, 9 வயது பள்ளிக் குழந்தைகள், பள்ளி வேனுக்காக காத்திருந்த போது, கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். குழந்தைகளை கடத்தி சென்ற டிரைவர் மோகனகிருஷ்ணன், பொள்ளாச்சி அங்களக்குறிச்சி மனோகரன் கைது செய்யப்பட்டனர். மோகனகிருஷ்ணன் என்கவுன்டரில் கொல்லப்பட்டான். வழக்கை விசாரித்த கோர்ட், மனோகரனுக்கு, இரண்டு தூக்கு தண்டனை, மூன்று ஆயுள் தண்டனை விதித்து, தீர்ப்பு அளித்தது. சென்னை ஐகோர்ட் தண்டனையை உறுதி செய்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் , தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, இடைக்கால தடைக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசின் சிறப்பு வக்கீல் யோகேஷ் கன்னா நேற்று பதில் மனு தாக்கல் செய்தார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.