குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இ.இராயதந்திரிகள் இலங்கை பயணம்மீண்டும் தமிழருக்கு பாதகமான சாம்பாறு தயாராகலாம். தமிழுலகமே கவனம்!

05.06. 2011த.ஆ.2042--  சர்ச்சைக்குரிய கூட்டு அறிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை..உயர்மட்ட இந்திய இராசதந்திரிகள் விரைவில் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளனர். இலங்கை வெளிவிவகார அமைச்சர் யீ.எல்.பீரிசின் அண்மைய இந்திய பயணத்தின் போது வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கூட்டு அறிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் இந்திய இராசதந்திரிகள் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளனர்.
 
இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனன், வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமா ராவ் உள்ளிட்ட முக்கியசுதர்கள் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளனர். சனாதிபதி மகிந்த ராசபட்வுடனும் குறித்த பிரதிநிதிகள் குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கமாக அமைந்துள்ளது. அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போதும், இது தொடர்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
எவ்வாறெனினும், கூட்டறிக்கை தொடர்பில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தேசியவாத கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
அதிகாரப் பகிர்வு, 13ம் திருத்தச் சட்ட மூலம், மீனவர் பிரச்சினை, மனித உரிமை மீறல் உள்ளிட்ட சில பிரச்சினைகள் தொடர்பில் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, எதிர்வரும் வாரமளவில் இந்திய இராசதந்திரிகள் இலங்கைக்கு பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில் 'கூடா நட்பு'
05 .6.2011த.ஆ.2042--  சுமார் பதினைந்து வருட நட்பு. இரண்டு முறை ஆட்சியில் பங்கேற்று வளம் கொழிக்கும் பல்வேறு துறைகளையும் பகிர்ந்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் தோழோடு தோள் நின்று கட்சியையும், தங்களையும் வளமிக்கவர்களாக ஆக்கிக் கொண்ட திமுகவிற்கு இப்போதுதான் தெரிந்திருக்கிறது காங்கிரசின் நட்பு என்பது கூடா நட்பு என்று.
 
காங்கிரஸ் கட்சியின் நீண்ட கால வரலாற்றில் இந்திரா அம்மையார் கொண்டு வந்த மிசா அடக்குமுறையிலிருந்து துவங்குகிறது அதன் வீழ்ச்சி. பின்னர் தொண்ணூறுகளில் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் இந்தியா முழுக்கக் கிடைத்த மரண  அடியும். மாநிலவாரியாக பிராந்தியக் கட்சிகளின் எழுச்சியும் காங்கிரஸ் கட்சியின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்தது.
 
பிராந்திய கட்சிகளின் உதவியில்லாமல் மத்தியல் ஆட்சியை தக்க வைக்க முடியாது என்ற நிலை வந்த போது அது பிராந்தியக் கட்சிகளை வளைத்துப் பிடித்தது. இந்தியாவின் மூன்றாவது அணி என்ற ஒன்றை உருவாக்கிய கம்யூனிஸ்டுகள், வி.பி.சிங், கலைஞர் கருணாநிதி போன்றவர்களின் கூட்டை உடைத்து திமுகவை தன் பக்கம் இழுத்து மூன்றாவது அணியை பலவீனப்படுத்தியதன் மூலம் தன்னை பலப்படுத்தி ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ்.
 
கடந்த முறை தமிழகத்திலிருந்து 40 எம்பி தொகுதிகளையும் பெற்றுக் கொண்ட திமுக தார்மீக ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியது. திமுகக் கொடுத்த 40 தொகுதிகளுமே காங்கிரசின் மத்திய ஆட்சிக்கு அஸ்திவாரமாக இருந்தது. வளம் கொழிக்கும் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்ட திமுக காங்கிரஸ் கட்சி எதிர்கொண்ட சவால்களை தன் சவால்களாக ஏற்றுக் கொண்டது. இக்கட்டான இரண்டு அறுதிப்பெரும்பான்மை வாக்கெடுப்புகளை காங்கிரஸ் எதிர்கொண்ட போது திமுகவின் உதவிகோரிய கம்யூனிஸ்டுகளின் கையை உதறிய திமுக காங்கிரஸ் கட்சியை நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து காப்பாற்றியது.
 
அந்த ஐந்தாண்டுகாலத்தில் திமுக தன்னை ஒரு பெரிய நிறுவனமாக கட்டி எழுப்பியது. பெரும் சொத்துள்ள ஒரு அமைப்பாக திமுக உருவானதும். கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் எல்லா தொழில்களையும் கைப்பற்றி மிகப்பெரிய தொழிற் குடும்பமாக உருவானதும் அப்போதுதான். கலைஞர் குடும்பத்திற்குள் இன்றளவும் மாறன் குடும்பத்திற்கும் கருணாநிதியின் தயாளு, ராசாத்தி குடும்பத்திற்குமான உட்பிளவுகள் இருந்தாலும் தொழில் முதலீடுகளில் இவர்கள் பின் தங்கியதில்லை.
 
சினிமா, ஊடகங்கள் தொடங்கி மோட்டார் உதிரிப்பாகங்கள், மரத் தளபாடங்கள்;, முதல் ரியல் எஸ்டேட் வரை கலைஞர் வாரிசுகளின் கைவண்ணம் உள்ளது. கட்சியின் பண பலம் வளர்ந்தது, அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து மதிப்பு வளர்ந்தது. ஆனால் ஒரு சிங்கிள் டீயைக் குடித்து விட்டு திமுகவிற்காக இரவு பகலாக வேலை செய்யும் திமுக தொண்டர்கள் கட்சியை விட்டு விலகிச் சென்றார்கள்.
 
தலைவரைப் போலவே மாவட்டத்தலைவர்களும் அவர்களின் வாரிசுகளை கட்சிப் பதவியிலும் அரசுப் பதவிகளிலும் அமர்த்தினார்கள்.சாதாராண தொண்டன் கட்சியின் சகல மட்டங்களிலும் பரவி விட்ட வாரிசுகளுக்கு சேவை செய்வதையே திமுகவிற்குச் செய்யும் தொண்டாக நினைத்த போது அவர்கள் முகம் சுழித்து விலகிக் கொண்டார்கள். முன்னர் எல்லாம் கொடிக்கம்பம் நடுவது, விளம்பரப் பலகைகள் வைப்பது என்பதை எல்லாம் தொண்டர்கள் செய்த காலம் மாறி அதையும் காண்டிராக்ட் விடும் நிலைக்கு திமுக வந்தது. இன்று எல்லாக் கட்சிகளிலுமே இதுதான் நிலை என்றாலும் இதன் துவக்கமும் அதை ஏலம் விட்டு அதையும் ஒரு லாபல் கொழிக்கும் தொழிலாக உருவாக்கியதும் திமுகதான். கட்சி பண ரீதியாக செல்வாக்கடைந்த நேரத்தில் அடிமட்டத்தில் தொண்டர் பலம் இல்லாமல் ஆட்டம் கண்டது திமுக.
 
காங்கிரஸ் கட்சியோடு திமுக கொண்ட உறவை திமுக தொண்டர்களே ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் தலைவர் சொல்கிறார் என்பதால் அவர்கள் பொறுத்துக் கொண்டனர். 2009- மே மாதம் வன்னி மீதான் போர் உக்கிரமாகி இனப்படுகொலை துவங்கிய போது நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களைக்  கொண்ட திமுக தலைமையிலான தமிழக எம்பிக்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது எப்படியாவது பதவியைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் கலைஞரிடம் இருந்ததே தவிற நாற்பது எம்பிக்களையும் வைத்து மத்திய அரசுக்கு நெருக்கடியை உருவாக்கி போரை நிறுத்துவதற்கான முயர்ச்சியையேனும் எடுக்கும் எண்ணம் அவரிடம் இல்லை. மத்திய அரசின் கொள்கையே மாநில அரசின் கொள்கை என்றார். காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையே திமுகவின் அணுகுமுறை என்று சொன்னதினூடாக ஒரு பெருந்தேசிய கட்சியின் அடையாளத்தோடு ஒரு பிராந்தியக் கட்சியின் அடையாளத்தை ஒன்றிணைத்தார். விளைவு பிரத்தேயகமாக திமுக விற்கென்று இருந்த எல்லா அடையாளங்களும் தொலைந்து போனது. எஞ்சியிருந்த தமிழனத் தலைவர் என்ற பட்டமும் ஈழ விடுதலை ஆதரவாளர்களால் பிடுங்கப்பட சட்டமன்றத் தேர்தலில் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது.
 
இடையில் ஸ்பெக்டரம் ஊழலை வைத்து திமுகவை மிரட்டிப் பணிய வைத்து 63 தொகுதிகளைப் பெற்றுக் கொண்ட காங்கிரஸ் வெறும் 5 இடங்களில் வென்று மண்ணைக் கவ்வ உற்ற நண்பனாக பதினைந்து ஆண்டுகாலம் இருந்த திமுகவிற்கும் அது தோல்வியாக முடிந்துள்ளது. இப்போது கட்சி ஆட்சியை இழந்துள்ளதோடு தொண்டர்களே தலைமை மீது நம்பிக்கை இழந்துள்ளனர்.
 
தோல்விக்குப் பின்னர் கலைஞர் வெளியிட்ட அறிக்கையில் தன் குடும்பம் முறைகேடான வழிகளில் சம்பாதிக்கவில்லை என்றும் ஊழலில் தன் குடும்பம் திளைக்கவில்லை என்றும் தொண்டர்கள் நம்ப வேண்டும் என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார் கலைஞர். பொது மக்களிடம் முழுக்க முழுக்க வெறுப்பைச் சமாதித்துக் கொண்ட திமுக தொண்டர்களிம் தன் நிலையை புரிந்து கொள்ளுமாறு தொண்டர்களுக்கே அறிக்கை விடும் நிலைக்கு கலைஞர் தள்ளப்பட்டுள்ளார்.
 
 தனது கட்சியின் மத்திய அமைச்சர் ஆ.ராசா சிறையில், தனது மகள் கனிமொழி சிறையில் இப்போது பேரன் தயாநிதி மாறனைச் சுற்றியிருக்கிறது விசாரணை வளையம். கூடா நட்பின் உண்மையான பொருளை கலைஞர் இப்போது புரிந்து கொண்டிருப்பார். இத்தனை காலமும் நகமும் சதையுமாக இருந்த தனது நண்பனை காங்கிரஸ் காலை வாரி விட்டது. காங்கிரஸ் கட்சிக்காக ஒட்டு மொத்த தமிழ் மக்களையுமே அடகு வைத்த கலைஞர் இதை எதிர்ப்பார்த்திருக்க இல்லைதான். பழைய நண்பர்கள் போய் இப்போது சோனியா, ராகுல்காந்தி என்று இளம் தலைமுறை தன்னை புரிந்து கொண்டு துணை நிற்பார்கள் என்று கலைஞர் நினைத்திருக்கக் கூடும். ஆனால் காங்கிரஸ் கட்சி அன்றிலிருந்து இன்றூவரை மாறவே இல்லை என்பதை காங்கிரஸ் கட்சியின் நிலை எடுத்துக் காட்டுகிற நிலையில் தனது பிறந்த நாள் விழா தொடர்பாக கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்படிச் சொல்கிறார். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை மறந்து விடாமல் தங்கள் பயணத்தை தொடர வேண்டும் ஃஃ என்கிறார் கலைஞர் இப்போதாவது அவருக்கு அந்த உண்மை புரிந்தால் சரி.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.