குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

02.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

பா.ஜ.க.,வில் இருந்து ம.தி.மு.க., விலகும் நிலை: கருணாநிதி

சென்னை: பா.ஜ.க.,வில் இருந்து ம.தி.மு.க., விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது, தமழகத்தில் பா.ஜ.க. வுடன் முதலில் கூட்டணி அமைத்த ம.தி.மு.க., தற்போது அந்தக் கூட்டணியிலிருந்து விலகுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிபர் ராஜபக்ச ஆட்சியில் எப்படிப்பட்ட கொடுமைகள் எல்லாம் செய்யப்பட்டன என்ற கோபத்தில் கருத்துகள் தெரிவிக்கப்படுகிற போது, தமிழக பா.ஜ.க. வில் உள்ளவர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்து, அவர்களே பிரதமரிடம் அதுபற்றி எடுத்து தெரிவிக்க வேண்டுமே தவிர, மாறாக தாங்கள் தான் பிரதமருக்கு நேரடி பிரதிநிதி என்பதைப் போலக் கருதிக் கொண்டு, கடுமையான வார்த்தை பிரகடனம் செய்வது நல்லதல்ல என்பதை இனியாவது புரிந்து கொண்டு, பிரதமரின் செயலுக்கு தமிழகத்திலே எப்படிப்பட்ட எதிர்ப்பு இந்த ஒரு விஷயத்தினால் ஏற்பட்டுள்ளது என்பதை அவரிடமே தெரிவித்து, மேலும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்காமல் பார்த்துக் கொள்வது தான் அந்தக் கட்சிக்கே நலன் பயக்குமே தவிர, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது அந்தக் கட்சிக்கும், அந்தக் கட்சியின் தலைமையிலே நடைபெறும் மத்திய ஆட்சிக்கும் நன்மை பயக்காது. கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்திலே கூட, மத்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக நடந்து கொண்ட போது, அந்தக்கூட்டணியில் இடம் பெற்றிருந்த தி.மு.க பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, எவ்வளவோ வேண்டுகோள் விடுத்தும் கேட்காத நிலையில் அந்தக் கூட்டணியிலிருந்து விலகியதையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்துகிறேன்" இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

 

ஐ.எஸ்., தலைவரின் மனைவி மற்றும் மகன் கைது!

பெய்ரூட்: ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் தலைவர் அல் பகாடியின் மனைவி மற்றும் மகனை பிடித்து வைத்துள்ளதாக , லெபனான் அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன் போலி ஆவணங்கள் மூலம் வந்த அவர்களை பிடித்து வைத்துள்ளதாக கூறினர். அவர்களை பற்றிய விபரங்களை தர மறுத்து விட்டனர். கைது செய்யப்பட்ட பெண் சிரியாவை சேர்ந்தவர் என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார்.

 

அரியானா இளம்பெண்கள் குறித்த மற்றொரு வீடியோவால் பரபரப்பு

சண்டிகர்: பஸ்சில் கிண்டல் செய்த மூன்று பேரை, தாக்கிய இரண்டு இளம்பெண்கள் குறித்த மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், பொது இடம் ஒன்றில், ஒரு இளைஞரை, இரண்டு சகோதரிகள் அடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவில் இருப்பது தாங்கள் தான் என அந்த இளம்பெண்கள் உறுதி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சி ஒரு மாதத்திற்கு முன்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.

 

காங்., எம்.பி.,க்களுக்கு சோனியா உத்தரவு

புதுடில்லி: நாள் முழுவதும் காங்கிரஸ் எம்.பி.,க்கள் அனைவரும் லோக்சபாவில் இருக்க வேண்டும் என சோனியா கூறியுள்ளார். கட்சி எம்.பி.,க்கள் மத்தியில் பேசிய சோனியா, உணவு இடைவேளைக்கு பிறகு பல காங்கிரஸ் எம்.பி.,க்கள் அவையில் இருப்பதில்லை எனவும் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன. இன்று உணவு இடைவேளைக்கு பிறகும் சோனியா லோக்சபாவில் இருந்தார்.

 

புதிய சி.பி.ஐ., இயக்குநர் தேர்வு?

புதுடில்லி: சி.பி.ஐ., இயக்குநர் ரஞ்சித் சின்ஹா இன்றுடன் ஒய்வு பெற்றார். இதனையடுத்து புதிய சி.பி.ஐ., இயக்குநரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிய இயக்குநர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தத்து, எதிர்க்கட்சி சார்பில் மல்லிகார்ஜூனா கார்கே ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் 43 பேர் கொண்ட அதிகாரிகள் பட்டியல் பரிசீலனை செய்யப்பட்டதாகவும், அதில் இருந்து எந்த சர்ச்சையிலும் சிக்காத அதிகாரி ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

காஷ்மீரில் பயங்கரவாதி கைது: கையெறி குண்டு பறிமுதல்

குல்காம்: காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள குல்காம் மாவட்டத்தில்பயங்கரவாதிஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். ராம்போரா கிராமத்தை சேர்ந்த பிலால் அகமது சேக் என்பவனை, ராஷ்டிரிய ரைபிள் மற்றும் சி.ஆர்.பி.எப்., படை வீரர்கள் கைது செய்ததாகவும், அவனிடமிருந்து கையெறி வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

 

அமைச்சர் மன்னிப்பு கேட்டதால் பிரச்னை முடிந்தது: மத்திய அரசு

புதுடில்லி: சர்ச்சைக்குரியவகையில் பேசிய மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதிக்கு எதிர்ப்பு தெரிவித்து லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அமைச்சர் மன்னிப்பு கேட்ட போதும், எதிர்க்கட்சிகள் இதனை ஏற்கவில்லை. அமைச்சர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், இடதுசாரி மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிகள்வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில், தனது பேச்சுக்கு அமைச்சர் மன்னிப்பு கேட்டதால், பிரச்னை முடிவுக்கு வந்து விட்டது என மத்திய அரசு கூறியுள்ளது. அமைச்சர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதால், பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். ராஜ்யசபாவில் பிரதமர் மோடி இருக்க வேண்டும் என திரிணமுல் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது பற்றி கருத்து தெரிவித்த வெங்கையா நாயுடு, பிரதமர் இல்லாதது பிரச்னையில்லை. மேற்கு வங்க சட்டசபையில், மம்தா நாள் முழுவதும் உள்ளாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

சொத்துக்களை விற்க சகாரா நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி

புதுடில்லி: சாரதா சிட்பண்டு மோசடி வழக்கில், சகாரா நிறுவன தலைவர் சுபத்ரா ராய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமினில் விடுதலை செய்ய ரூ.10 ஆயிரம் கோடி பிணையத்தொகையாக கட்ட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சகாரா நிறுவனம் ரூ.2,710 கோடி மதிப்பிலான 4 சொத்துக்களை விற்பனை செய்து கொள்ள சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. ஜோத்பூர், புனே, கூர்கான் மற்றும் மும்பையில் உள்ள சகாரா நிறுவனத்தின் சொத்துக்களை விற்க சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

 

முல்லை பெரியாறில் தேசிய கமாண்டோ படையினருக்கு அனுமதி மறுப்பு

தேனி: முல்லைப்பெரியாறில் ஆய்வுக்கு சென்ற தேசிய கமாண்டோ படையினரை அனுமதிக்க கேரள அதிகாரிகள் மறுத்து விட்டனர். வருகைப்பதிவேட்டில் வருகை குறித்து பதிவு செய்ய கேரளவை சேர்ந்த அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் தேசிய கமாண்டோ படையினர், விளக்கமளித்தும் இதனை ஏற்க மறுத்து அனுமதி மறுத்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஆய்வுக்கு சென்ற தமிழக அதிகாரிகளையும் கேரள வனத்துறையினர் அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: காஷ்மீர் சட்டசபை தேர்தலை சீர்குலைக்க இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். குப்வாரா மாவட்டம், நவ்காம் என்ற இடத்தில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். அவர்களை, பார்த்த இந்திய ராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்தனர். இதனை பொருட்படுத்தாமல், இந்திய ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து ராணுவத்தினர் திருப்பி தாக்குதல் நடத்தினர். இதில் 3 பயங்கரவாதிகள் பலியானார்கள். அங்கு பல பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தொடர்ந்து மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது.

 

டீச்சருக்கு பளார் விட்ட மாணவன்

சென்னை: சென்னையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவன் ஒருவன், கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சக மாணவர்களிடம் முரட்டுத் தனமாகவும், மோசமாகவும் அந்த மாணவன் நடந்து கொண்டதால், ஆசிரியை கண்டித்துள்ளார் என்றும், இந்த சம்பவத்திற்கு முன் அந்த மாணவன் ஏற்கனவே ஒருமுறை ஆசிரியை தாக்கியவர் என்றும் கூறப்படுகிறது. மாணவன் தாக்கியதால், ஆசிரியையின் .காது பகுதியில் உள்காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவனின் எதிர்காலம் கருதி போலீசில் புகார் செய்யப்படவில்லை என்றும், கல்வி துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

அமெரிக்கா சேலம் மேயர் வியப்பு

சேலம்: அமெரிக்காவில் உள்ள சேலம் மேயர் அன்னா எம். பீட்டர்சன் இன்று சேலம் வந்தார். சேலத்தை சுற்றி பார்த்த பின்னர் அவர் கூறுகையில், 'சேலத்தில் தொழிற்சாலைகளாகவும், கடைகளாகட்டும், இங்குள்ள அனைவரும் கடின உழைப்பாளிகளாக உள்ளனர். இம்மக்களின் உழைப்பு எனக்கு வியப்பை அளிக்கிறது. கடந்த, 1964ம் ஆண்டு, ஒரே பெயரில், உலகின் வெவ்வேறு நாடுகளில் உள்ள நகரங்களை ஒருங்கிணைக்கும் வகையில், "சிஸ்டர் சிட்டி' உறவு முறையை மேம்படுத்த, குழுக்கள் அமைக்கப்பட்டது. அதன்படி அப்போதைய, அமெரிக்காவின், சேலம் மாநகர மேயர் வில்லர்ட் சி.மார்ஷல், தமிழகத்தில் உள்ள சேலத்துக்கு வந்து, இரண்டு சேலம் நகருக்கும் இடையே, "சிஸ்டர் சிட்டி' நட்புறவை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டார்.நான் மேயராக பொறுப்பேற்ற பின், இந்தியாவில் இருந்து வந்த ரோட்டரி முன்னாள் கவர்னர் அசோகா, அங்கு வந்து பேசினார். எனக்கு தமிழகத்தில் உள்ள சேலத்தின் மீது கொண்ட ஆர்வமும், அக்கறையும் கண்ட பின், சேலம் வருமாறு அழைப்பு விடுத்தார். சிஸ்டர் சிட்டி உறவை மேம்படுத்த உதவும் வகையில், என் பயணம் அமைந்துள்ளது,' என்றார்.

 

கறுப்பு பண பட்டியல் தாக்கல்

புதுடில்லி: கறுப்பு பணத்தை கண்டறிவதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், கறுப்பு பண புள்ளிகளின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. இந்நிலையில், 627 பேர் அடங்கிய இரண்டாவது பட்டியலை அக்குழு சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல் செய்தது.

 

லஞ்சம்: ஊராட்சி துணைத் தலைவர் கைது

கடலூர்: கடலூர் பண்ருட்டி அருகே உள்ள பெரியகாட்டுப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த சத்தியராஜ், காசி ஆகியோர் தானே புயல் நிவாரண திட்டத்தின் கீழ் வீடு கட்டி வந்தனர். இவர்களுக்கு மூன்றாம் தவணைக்கான பணத்தை கேட்டு ஊராட்சி துணைத் தலைவரான சாந்தியை அணுகியபோது, ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இருவரும் புகார் செய்தனர். இதையடுத்து, கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் வாங்கும் போது, சாந்தியை கையும், களவுமாக பிடித்து, கைது செய்தனர்.

 

'பிபா' சிறந்த வீரர் விருது பட்டியல்

பாரிஸ்: சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) சார்பில் இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதுக்கு 23 வீரர்கள் அடங்கிய உத்தேச பட்டியல் கடந்த அக்டோபரில் வெளியிடப்பட்டது. இறுதியாக இந்தப்பட்டியலில் உள்ள வீரர்கள் 3 நபர்களாக குறைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, அர்ஜென்டினாவின் மெஸ்சி, போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஜெர்மனி கோல்கீப்பர் மானுவல் நுயர் இடம்பிடித்துள்ளனர். இவர்களில், ரொனால்டோ மூன்றாவது முறையாக விருது வெல்லும் முனைப்பில் உள்ளார். அதே நேரம், மெஸ்சி ஐந்தாவது முறையாக தட்டி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நுயரைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு உலக கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்திருந்தார். தவிர, சிறந்த கோல்கீப்பருக்கான 'கோல்டன் கிளவுஸ்' விருதும் வென்றுள்ளார். இவர்களில் சிறந்த வீரரை, தேசிய கால்பந்து அணி கேப்டன்கள், பயிற்சியாளர்கள், பத்திரிகையாளர்கள் ஓட்டெடுப்பு மூலம் தேர்ந்தெடுப்பர். வெற்றியாளர் பெயர் அடுத்த ஆண்டு ஜன. 12ல் ஜூரிச்சில் நடக்கவுள்ள விருது வழங்கும் விழாவில் வெளியிடப்படும்.

 

ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் அப்பீல் ஏற்பாடு

புதுடில்லி: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் அப்பீல் செய்வதற்கான பணிகளை ஜெ., தரப்பு வக்கீல்கள் ஈடுபட்டுள்ளனர். கர்நாடாக ஐகோர்ட்டில் வரும் 18ம் தேதிக்குள் அப்பீல் ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கெடு விதித்துள்ளது. இதன் அடிப்படையில் தேவையான ஆவணங்களை பெறுவதற்கு ஜெயலலிதா, சசி , இளவரசி, சுதாகரன் ஆகியோரின் வக்கீல்கள் பரணிக்குமார் செந்தில், பன்னீர்செல்வம் ஆகியோர் பெங்களூரு வந்தனர். சிறப்பு கோர்ட்டில் ஆவணங்களை பெற்று சென்றனர்.

 

பெங்களூரு; சிறுமி தீக்குளித்து தற்கொலை

பெங்களூரு: பெங்களூரு எலகங்காவில் 8 வயது பெண் குழந்தை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 ம் வகுப்பு படிக்கும் இந்த மாணவி தனது தற்கொலைக்கு யாரும் காரணமல்ல என்று கடிதம் எழுதி வைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் 8 வயது கொண்ட சிறுமி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

பிரபல காமெடி நடிகர் காலமானார்!

புனே : பாலிவுட்டின் பிரபல காமெடி நடிகர் தேவன் வர்மா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 78. 1937-ம் ஆண்டு புனேயில் பிறந்தவர் தேவன் வர்மா. சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்தார். ஆரம்பத்தில் காமெடி படங்களில் நடித்து புகழ்பெற்றார். 1960லிருந்து 1980 ஆண்டுகள் வரையில் வந்த படங்களில் இவரது நகைச்சுவை ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. நடிகராக மட்டுமல்லாது 4 படங்களை இயக்கியும், 5 படங்களை தயாரித்தும் உள்ளார். கடைசியாக இவர் 2003ம் ஆண்டு கல்கட்டா மெயில் என்ற படத்தில் நடித்திருந்தார். புனேயில் தனது மனைவி ரூபா கங்குலி மற்றும் இளைய மகளுடன் தங்கியிருந்த தேவன் வர்மாவுக்கு ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு இருந்த நிலையில் இன்று அதிகாலை மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது.

 

பெங்களூரு பஸ் விபத்து: 3 பேர் பலி

பெங்களூரு: பெங்களூருவில், வேகமாக சென்ற ஒரு பஸ், வளைவில் திரும்பும் போது, நிலை தடுமாறி கவிழ்ந்து, எரிந்தது. இந்த விபத்தில், பஸ்சில் இருந்த மூன்று பயணிகள், தீயில் சிக்கி கருகி பலியாகியனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

49 மாவோயிஸ்டுகள் சரண்-உள்துறை

புதுடில்லி: சட்டீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் தாக்கியதில் 14 சி.ஆர்.பி.எப்., ஜவான்கள் இறந்தனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்நிலையில், மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த 49 பேர், பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்துள்ளனர். இந்த தகவலை பார்லிமென்ட்டில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

திருவண்ணாமலைக்கு ரயில் சேவை

புதுடில்லி: லோக்சபாவில் பேசிய வனரோஜா எம்.பி, 'புகழ்பெற்ற திருவண்ணாமலை கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆனால், அந்த நகருக்கு தேவையான ரயில் போக்குவரத்து இல்லை. அவ்வழியாக செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் அங்கு நிற்பதில்லை. அந்த ரயில் அங்கு நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில், திருவண்ணாமலைக்கு கூடுதல் ரயில் சேவையை இயக்க வேண்டும். மேலும், ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வறை, குடிநீர் வசதி உள்ளிட்டவைகளை செய்து தர வேண்டும்,' என்று கோரிக்கை வைத்தார்.

 

டேங்கர் லாரி ஸ்டிரைக் வாபஸ்

சென்னை: சமையல் காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், எண்ணை நிறுவனங்களுக்கும், லாரி உரிமையாளர்களுக்கும் இடையே சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், டேங்கர் லாரி வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தடை செய்து பார்க்கட்டும்: வைகோ சவால்

கோவை: சுப்பிரமணியசாமி முடிந்தால் எங்கள் இயக்கத்தை தடை செய்து பார்க்கட்டும் என ம.தி.மு.க., பொதுசெயலர் வைகோ கூறியுள்ளார். கோவையில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், ராஜிவ், சோனியா, என பல தலைவர்களை நான் விமர்சித்துள்ளேன். யாரும் என்னை மிரட்டவில்லை. ஆனால் ராசா பேச்சு மிரட்டும் படியாக உள்ளது. சுப்பிரமணிய சாமி டுவிட்டரில் தனது இஷ்டத்திற்கு கருத்து தெரிவித்து வருகிறார். முடிந்தால் எங்கள் இயக்கத்தை தடை செய்து பார்க்கட்டும். இவ்வாறு வைகோ கூறினார்.

 

பதவி விலக மாட்டேன்: அமைச்சர் சத்வி

புதுடில்லி: கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்த மத்திய அமைச்சர் சத்வி நிரஞ்சன் ஜ்யோதியை பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் கோரி உள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சத்வி, 'எனது பேச்சுக்கு லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் வருத்தம் தெரிவித்துவிட்டேன். நான் பதவி விலகமாட்டேன்,' என்றார்.

 

உளுந்தூர்பேட்டையில் தி.மு.க., உள்கட்சி தேர்தலில் தடியடி

உளுந்தூர்பேட்டை தி.மு.க., ஒன்றிய தேர்தலில் இரு தரப்பினர் இடையே , அடிதடி நடந்தது. விரைந்து வந்த போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

 

தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 12 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். அது குறித்த விவரம்: தலைமை செயலாளராக ஞானதேசிகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளரக இருந்த மோகன் வர்கீஸ் சுங்கத், அண்ணா ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். அண்ணா ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய இயக்குநராக இருந்த இறையன்பு, பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை முதன்மைச் செயலாளராகி உள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மைச் செயலராக இருந்த பழனியப்பன், பொதுப் பணித்துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய்த்துறை செயலர் பதவியில் இருந்த ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலராகி உள்ளார். நகர்ப்புற திட்ட துறை ஆணையராக இருந்த வெங்கடேசன், வருவாய்த்துறை செயலராகி உள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலராக இருந்த நஜிமுதீன், உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார். வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலர் மோகன் பியாரே, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். மனோகரன், வேளாண் தொழில் மேம்பாட்டுத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை செயலராக இருந்த நிரஞ்சன் மார்டி, கடல்சார் வாரியம் முதன்மைச் செயலராகி உள்ளார். தமிழ்நாடு சிறு தொழில் கூட்டமைப்பு, டான்சி தலைவராக நிர்மலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

அக்னி ஏவுகணை சோதனை வெற்றி

புவனேஸ்வர்: அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட அக்னி 4 ஏவுகணை, ஒடிசா கடற்கரையில் இன்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

 

ஏர்.ஆர். அந்துலே காலமானார்

மும்பை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்ட்ரா முன்னாள் முதல்வரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.ஆர்.அந்துலே தனது 85வது வயதில் காலமானார். கடந்த சிலகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று காலமானார்.

 

ராகுல் தலைமையில் காங்., ஆர்பாட்டம்

புதுடில்லி: மத்திய அரசை கண்டித்து, காங்., துணைத் தலைவர் ராகுல் தலைமையில், பார்லிமென்ட் வளாகத்தின் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம் செய்தனர்.

 

பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கின

மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்று(டிச.,2ம் தேதி) சரிவுடன் துவங்கியுள்ளன. ரிசர்வ் வங்கி வெளியிட இருக்கும் பணவெளியீட்டு கொள்கையின் மீதான எதிர்பார்ப்பில் பங்குசந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 65.35 புள்ளிகள் சரிந்து 28,494.27-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 18.90 புள்ளிகள் சரிந்து 8,537.00-ஆகவும் இருந்தன. மேலும் ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்ற-இறக்கத்தாலும் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன.

 

நக்சல் தாக்குதல்: ஜனாதிபதி கண்டனம்

புதுடில்லி: சட்டீஸ்கர் மாநிலம், சுக்மாவில் நக்சல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சி.ஆர்.பி.எப்., படை வீரர்கள் மீது நடத்திய தாக்கதலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது கடும் கண்டனத்தை தெரியப்படுத்தி உள்ளார்.

 

126 போர் விமானங்கள் வாங்க உடன்பாடு

புதுடில்லி: பிரான்ஸ் நாட்டில் இருந்து 126 போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் முடிவாகி உள்ளது. டில்லி வந்துள்ள பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜீன்யூ வெஸ் லீ டேரியன், பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரிகரை சந்தித்து பேசிய பின்னர் இந்த உடன்பாடு முடிவாகி உள்ளது. மொத்தம் 15 பில்லியன் டாலர் மதிப்பிலான விமானங்களை வாங்குவதில் இதுவரை நீடித்து வந்த முட்டுக்கட்டைகளை நீக்க, பிரான்ஸ் அமைச்சர் ஒப்புக் கொண்டதன் பேரில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஜவான்கள் பலி: ராஜ்நாத்சிங் ஆய்வு

ராய்பூர்: சட்டீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் தாக்கி சம்பவத்தில் 14 சி.ஆர்.பி.எப்., ஜவான்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று ஆய்வு செய்கிறார்

 

வீட்டை உடைத்து நகை திருட்டு

மயிலாடுதுறை: நாகப்பட்டனம் மாவட்டம், சீர்காழியை அடுது்த சட்டநாதபுரத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்தரன். தற்போது இவர், மஸ்கட்டில் பணிபுரிந்து வருகிறார். வீட்டில், மனைவியும், தந்தையும் உள்ளனர். இவர்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு நேற்று சென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள், ஒன்றரை கிலோ வௌ்ளி பொருட்கள், 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தன. இது குறித்து ரவிச்சந்திரனின் மனைவி மாலா கொடுத்த புகாரின் பேரில், சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கொலையாளிகள் சிறை மாற்றம்

வேலூர்: இந்து மத தலைவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன் ஆகியோர் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடத்துவதற்கு வசதியாக அவர்கள் மாற்றப்பட்டுள்ளதாக சிறை நிர்வாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

 

பா.ஜ., சிவசேனா இடையே உடன்பாடு

மும்பை: மகாராஷ்ட்ராவில் பா.ஜ., ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்கும் விஷயத்தில் பா.ஜ.,-சிவசேனா இடையே சிக்கல் நிலவி வந்தது. கடந்த சில தினங்களாக இரு கட்சி தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்படி, பா.ஜ., அமைச்சரவையில் சிவசேனா பங்கு பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு அமைச்சரவையில் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

நெல்லை, தூத்துக்குடியில் ஏடிஜிபி இன்று ஆய்வு

திருநெல்வேலி: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இந்த மாவட்டங்களில் சட்டம்,ஒழுங்கு நிலையை ஆய்வு செய்ய, சட்டம் ஒழுங்கு, ஏடிஜிபி. ராஜேந்திரன் இன்று திருநெல்வேலி வருகிறார்.

 

27 ஆண்டு கால நகராட்சி தலைவர் காலமானார்

ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி தலைவராக 27 ஆண்டு காலம் இருந்த ஏ.ஏ.சுப்புராஜா (வயது 80) இன்று காலை காலமானார். இவர் சிறிது காலம் உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். இவர், 1967 முதல் 1970 வரை சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 5 முறை (27 ஆண்டு காலம்) ராஜபாளையம் நகராட்சி தலைவராக இருந்தார். 2006 முதல் 2011 வரை நகராட்சி துணைத்தலைரவாக இருந்தார்.

 

வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்

மும்பை:தென்னிந்தியாவில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 6 மாநிலங்களில், இன்று வங்கிகள் வேலை நிறுத்தம் செய்கின்றன.ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, இன்று வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.இதில் 1.50 லட்சம் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் வங்கி சேவை இன்று பாதிக்கப்படும்.இதை தொடர்ந்து நாளை(டிச-3) வட இந்தியாவிலும் (டிச-4) கிழக்கு பிராந்தியங்களிலும் (டிச-5) மேற்கு பிராந்தியங்களிலும் வங்கிகள் வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளன.

 

மதுரை: சீர்திருத்தப்பள்ளியில் 10 சிறுவர்கள் தப்பி ஓட்டம்

மதுரை:மதுரையில் உள்ள கீழசந்தைப்பேட்டையில் இருக்கும் சிறுவர்கள் சீர்திருத்தப்பள்ளியில் நள்ளிரவு 1 மணிக்கு 10 சிறுவர்கள்,ஜன்னல் கம்பிகளை உடைத்து தப்பி ஓடிவிட்டனர்.குற்றச்செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள், இந்த சீர்திருத்த பள்ளியில் தங்கியிருப்பார்கள். அவ்வப்போது அவர்கள் பெற்றோர்கள், வந்து பார்த்துவி்ட்டு செல்வது வழக்கமாக இருந்த நிலையில் நேற்று 10 சிறுவர்கள் தப்பிவிட்டனர். இல்ல நிர்வாகி புகாரின் பேரில், தெப்பக்குளம் போலீசார், தப்பி ஓடியவர்களை தேடி வந்ததில் ஒரு சிறுவனை போலீசார் பிடித்துவிட்டனர். மேலும் 9 சிறுவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

 

தாயை சுட்டுதள்ளிய 3 வயது குழந்தை; விளையாட்டு வினையானது

வாஷிங்டன்:அமெரிக்காவின் ஒஹ்லஹோமா மாகாணத்தின் துல்சா நகரை சேர்ந்தவர் கிறிஸ்டா ஏஞ்சல்ஸ். 26 வயது ராணுவ அதிகாரியான கிறிஸ்டாவுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். அண்மையில், மகளின் 'டயாபரை' கிறிஸ்டா மாற்றிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த 3 வயது மகன், தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தாயாரின் தலையை நோக்கி விளையாட்டுத்தனமாக சுட்டான். இதனால் தலையில் குண்டு பாய்ந்து கிறிஸ்டா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்நிலையில் அந்த குழந்தை செய்வதறியாது விளையாடி கொண்டேயிருந்தது.

 

திபெத்திய பாடகருக்கு 4 ஆண்டு சிறை

தர்மசாலா:திபெத்திய மக்களை அரசியல் ரீதியாக ஒன்றிணைக்கும் விதமாக பாடல்களை பாடிய பிரபல திபெத்திய பாடகருக்கு கல்சாங் யார்பெல்க்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 39 வயதான பிரபல பாடகர் கல்சாங் யார்பெல்,திபெத்திய மொழியை வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாடல்களை பாடினார்.இதனையடுத்து, இவரது பாடலை அரசியல் உள்நோக்கம் உள்ளதாக கருதி சிசுவான் மாகாண கோர்ட்டில் வழக்கு போடப்பட்டது.இதில் கல்சாங்கிற்கு 4 ஆண்டு சிறை தண்டனை கொடுத்தது கோர்ட்.

 

சென்னை-மைசூர் மிக அதிவேக ரெயில்கள்:மனோஜ் சின்கா

புதுடில்லி;சென்னை-ஐதராபாத், சென்னை-பெங்களூரு-மைசூர், டில்லி-ஆக்ரா, டில்லி-சண்டிகார், டில்லி-கான்பூர், நாக்பூர்-பிலாஸ்பூர், நாக்பூர்-செகந்திராபாத், மும்பை-கோவா, மும்பை-ஆமதாபாத் ஆகிய 9 வழித்தடங்கள் மிக அதிவேக ரயில் தடங்களாக கண்டறியப்பட்டு உள்ளதாகவும், இந்த பாதைகளில் மணிக்கு 160 முதல் 200 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் பார்லிமென்டில் ரயில்வே ராஜாங்க அமைச்சர் மனோஜ் சின்கா நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக பதில் அளித்ததில் தெரிவித்தார்.

 

முதல்வர் அலுவலக அதிகாரி தூத்துக்குடிக்கு தூக்கி அடிப்பு

சென்னை:முதல்வர் அலுவலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை உதவி இயக்குனராக பணிபுரிந்த சரவணன், தூத்துக்குடி மாவட்டத்திற்கு, இடமாற்றம் செய்யப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஜெயலலிதா முதல்வரானதும், முதல்வர் அலுவலகத்தில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களாக, சரவணன், தங்கையன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதன்பின், இருவரும் உதவி இயக்குனராக, பதவி உயர்வு பெற்றனர். இருவரும் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தனர்.நேற்று திடீரென, உதவி இயக்குனர் சரவணன், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகம், தூத்துக்குடி மண்டல அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இங்கு மக்கள் தொடர்பு அலுவலராக, உதவி இயக்குனர் நிலையில், அயற்பணியில் நியமிக்கப்பட்டு உள்ளார்.நிர்வாக நலன் கருதி, முதல்வர் அலுவலகத்தில் இருந்து, இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார் என, துறை செயலர் ராசாராம் வெளிட்டுள்ள, அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.முதல்வர் அலுவலக அதிகாரி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இவருக்கும், செய்தி மக்கள் தொடர்புத் துறையில், ஓய்வு பெற்று, பணி நீட்டிப்பு பெற்றுள்ள அதிகாரிக்கும் இடையே, ஏற்பட்ட பனிப்போரே, இவரது இடமாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

 

ராகுல் பிரசாரம் செய்தால் பா.ஜ., வெற்றிபெறும்: அமித் ஷா

போகாரோ: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடந்த சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பா.ஜ., தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், தேர்தல் பிரசாரம் செய்யுமிடமெல்லாம் பா.ஜ., எளிதாக வெற்றி பெறும். கடந்த லோக்சபா தேர்தலில் இது தான் நடந்தது. ஜார்க்கண்ட் தேர்தலிலும் இதுதான் நடக்கும். லோக்சபா தேர்தலில் தாய்-மகன் ஆட்சியை அகற்றினீர்கள். தற்போது மாநிலத்தில் நடக்கும் தந்தை-மகன் ஆட்சியை நீக்க வேண்டும். பா.ஜ.,வை முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க செய்ய வேண்டும் என கூறினார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.