குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

01.12.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

கறுப்பு பணம்: ரவிசங்கர் தகவல்

புதுடில்லி: கறுப்பு பணம் மீட்பு குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், 'தேசிய னநாயக முன்னணி அரசு, கறுப்பு பணம் வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேவையான ஆதாரங்களை திரட்டி வருகிறது.

மிக விரைவில் அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட உள்ளனர்,' என்றார்.

 

அட்டப்பாடியில் சந்தனமரம் கடத்திய மூவர் கைது

பாலக்காடு:அட்டப்பாடியில் சந்தனமர கட்டைகளை கடத்த முயன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி பாக்குளத்தில், சிலர் சந்தனமர கடத்தலில் ஈடுபடுவதாக, ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அகளி ரேஞ்சு வன அலுவலர் ரூபி தலைமையிலான வனத்துறையினர், அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது 33 சிறு துண்டுகளாக, 46 கிலோ சந்தமர கட்டைகள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக, மல்லாக 46, மருதன் 25, அய்யப்பன், 38, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அட்டப்பாடி வனத்திலிருந்து அறுத்தெடுக்கபட்ட, சந்தன கட்டைகளை மன்னார்க்காடு கொண்டு செல்ல திட்டமிட்டது தெரியவந்தது. மேலும் விசாரணை நடக்கிறது.

 

சோபியானில் சர்பாஞ்ச் மீது துப்பாக்கிச்சூடு

ஜம்மு: காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த சர்பாஞ்ச் மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று சர்பாஞ்ச் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

திட்டக்கமிஷனை கலைக்க காங்கிரஸ் எதிர்ப்பு

புதுடில்லி: திட்டக்கமிஷனை கலைக்க காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி லோக்சபா எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், திட்டக்கமிஷன் சுதந்திரமாக செயல்படும் அமைப்பு. பல்வேறு விவகாரங்களில், மாநிலங்களின் வளர்ச்சிக்கு திட்டக்கமிஷன் வழிகாட்டியாக செயல்படுகிறது. அதில் குறைபாடு ஏதேனும் இருந்தால், அதை திருத்த வேண்டும். திட்டக்கமிஷனை கலைக்கக்கூடாது. அந்த அமைப்புக்கு புத்துணர்ச்சி அளிக்க வேண்டும் என கூறினார்.

 

மோடி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல: ராமதாஸ்

சென்னை: பிரதமர் மோடி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல என பா.ம.க, நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பா.ஜ.,வும் தமிழிசையும் மோடி பிரதமரானதற்கு பெருமைப்படலாம். ஆனால் மோடி, 122 கோடி மக்களுக்கும் பொதுவானவர். பிரதமர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. தேர்தலுக்கு முன்னர் திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில், இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண்போம் என மோடியும், ராஜ்நாத் சிங்கும் கூறினர். ஆனால் ஆட்சியமைத்த 6 மாதங்களாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கூட்டணி கட்சி எப்படி இருக்க வேண்டும் என மற்ற கட்சிகள் கூறும் அளவுக்கு நாங்கள் இல்லை. கூட்டணிக்காக கொள்கையை விட்டுக்கொடுக்க முடியாது என்பதை பா.ஜ., புரிந்து கொள்ள வேண்டும். நல்ல நட்புடன் இருப்பதால் தான், தவறுகளை சுட்டிக்காட்டுகிறோம். அதனை தீர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இது கூட்டணி எல்லைக்கு அப்பாற்பட்டது என அவர்கள்கருதினால், அவர்கள் பொறுமையில்லாதவர்கள் என நாங்கள் கருதுகிறோம். இலங்கை அதிபர் ராஜபக்சே வெற்றி பெறுவதற்கு மோடி வாழ்த்து தெரிவிப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மரியாதை நிமித்தம் என்றாலும் கூட இதனை ஏற்க முடியாது என கூறினார்.

 

மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ.113 குறைப்பு

புதுடில்லி: மானியமில்லாத சிலிண்டர் விலைரூ.113 குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன் மூலம் சிலிண்டரின் விலை ரூ.865 லிருந்து ரூ.752 ஆக குறைகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், சிலிண்டர் விலை குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்று குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பாலத்தில், இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். இதனால், வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது ஏன்? கருணாநிதி கேள்வி

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிட்ட 4 நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது ஏன்? ரூ.4.40க்கு மேல் தனியாரிடம் மின்சாரம் வாங்கினால் நஷ்டம் ஏற்படும் என ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை செய்துள்ளது. குறிப்பிட்ட 4 நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் கொள்முதல் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

 

நக்சல் தாக்குதலுக்கு ராஜ்நாத் கண்டனம்

புதுடில்லி: சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தாக்குதலில் 13 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பலியான சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இது கோழைத்தனமான தாக்குதல் என கூறியுள்ளார். தாக்குதல் சம்பவம் தொடர்பாக சட்டீஸ்கர் மாநில முதல்வர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.,யிடம் கேட்டறிந்தார். இதனிடையே, ராஜ்நாத் சிங், சட்டீஸ்கர் மாநிலத்திற்கு நாளை வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நக்சல் தாக்குதலில் 13 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பலி

சுக்மா: சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் கசல்பூர் கிராமத்தில், நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 13 சி.ஆர்.பி.ஆப்., வீரர்கள் பலியாகயுள்ளனர். இவர்களில் 2 பேர் சி.ஆர்.பி,எப்., உயர் அதிகாரிகள் என அதிகாரி ஒருவர் கூறினார். பலியான வீரர்கள் 223 பட்டாலியன் பிரிவை சேர்ந்தவர்கள். சி.ஆர்.பி.எப்., டிஜி சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். மாவோயிஸ்ட்கள் மறைந்திருந்து சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

 

மின் கட்டணத்தை உயர்த்தினால் போராடுவோம்:வாசன்

வந்தவாசி: பத்திரிகையாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன், தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தினால் போராடுவோம். மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப த.மா.கா., செயல்படும் என கூறினார்.

 

தோனி பற்றி பேச ஸ்ரீனிவாசன் மறுப்பு

சென்னை: ஐ.பி.எல்., சூதாட்ட வழக்கை விசாரித்து வரும் கோர்ட், சென்னை அணியின் உரிமையாளர் யார் என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு இந்தியா சிமென்ட் நிறுவனத்தில் பங்கு என்ன என்றும் கேள்விகளை அடுக்கி உள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் ஸ்ரீனிவாசனிடம் கேட்டபோது, 'நான் தோனியை பற்றி பேசமாட்டேன். இந்த விஷயம் கோர்ட்டில் இருப்பதால் தோனி குறித்து நான் எதுவும் கூற முடியாது,' என்றார். தோனியை பதவிவிலக கூறுவீர்களா என்று கேட்டபோது, 'நான் ஏன் அவரை பதவி விலக கூற வேண்டும்,' என்று திரும்ப கேட்டார் ஸ்ரீனிவாசன்.

 

ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 ஏவுகணை சோதனை

திருநெல்வேலி: ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஏவுகணை சோதனை இம்மாத இறுதியில் நடத்தப்படும் என்று மகேந்திரகிரி திரவ எரிவாயு திட்ட இயக்குனர் கூறி உள்ளார். முதற்கட்டமாக, 120 கி.மீ., தூரத்திற்கு இந்த சோதனை நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

மான்கள் தொடர்ந்து பலியாகும் அவலம்

சிவகங்கை: இரை, தாகத்தை தீர்ப்பதற்காக இருப்பிடத்தை விட்டு, வெளியேறியதால் சிவகங்கை மாவட்டத்தில் நடப்பாண்டு 35 மான்கள் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளன. மண்மலை, பனங்குடி, சங்கரபதிகாடு, உடையப்பனேந்தல், வேலங்குடி, மணச்சை,கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் புள்ளிமான் அதிகளவு வசிக்கின்றன. காடுகளில் போதிய உணவு, நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாத காலங்களில் மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து விடுகின்றன. இதனால், வாகனங்களில் சிக்கி அடிக்கடி மான்கள் உயிரிழப்பதும், நாய் கடியால் பலியாவதும் தொடர்ந்து நடக்கிறது. இதுபோன்ற சம்பவங்களில் 2013ல், 25 மான்கள் மட்டுமே உயிரிழந்துள்ளன. நடப்பாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 35 மான்கள் இதுவரை பலியாகியுள்ளது.

 

காங்., குறித்து வெங்கைய நாயுடு கருத்து

புதுடில்லி: மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தோல்வியினால் கிடைத்த பாடத்தை காங்கிரசார் இன்னும் படிக்கவில்லை. மீடியாக்களில் பெயர் அடிபட வேண்டும் என்ற முயற்சியில் தான் அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு வெங்கைய நாயுடு கூறினார்.

 

ஆசாராம் ஜாமின் மனு தள்ளுபடி

புதுடில்லி: சர்ச்சை சாமியார் ஆசாராம் மீது கற்பழிப்பு வழக்கு பதியப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமின் வழங்க கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த கோர்ட், அவரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 

ரோத்தாக் சம்பவம்: மூவர் கைது

சண்டிகார்: அரியானா மாநிலம், ரோத்தாக்கில், ஓடும் பஸ்சில் பெண்களை ஈவ் டீசிங் செய்த மூவரை அரியானா போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை டிசம்பர் 3ம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்கும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

புதுடில்லி: சாமியார் ராம்பால் ஆஸ்ரமத்தில் நடந்த மோதலில், செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர். இது குறித்த வழக்கில், விளக்கம் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

 

சிந்துவுக்கு சபாநாயகர் பாராட்டு

புதுடில்லி: சீனாவின், மக்காவ் கிரண்ட் பிரீ பேட்மின்டன் பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை சிந்துவுக்கு, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமையல் காஸ் டேங்கர் லாரி சங்கத்தினர் ஸ்டிரைக்

நாமக்கல்: சமையல் காஸ் டேங்கர் லாரி சங்கத்தினர் இன்று நள்ளிரவு முதல் ஸ்டிரைக் நடத்துகின்றனர். இதனால் சமையல் காஸ் விநியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களுடனான ஒப்பந்தம் 38 பேருக்கு மறுக்கப்பட்டதால் இந்த போராட்டத்தை லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்,

 

பா.ஜ., மீது அஜய்மக்கான் கடும் தாக்கு

புதுடில்லி: ஆட்சிக்கு வந்த பின்னர் பா.ஜ., கறுப்பு பணம் விஷயத்தில் யு டேர்ன் அடிக்கிறது என காங்., செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான அஜய்மக்கான் தெரிவித்துள்ளார். பா.ஜ.,வுக்கு எதிரான குறிப்பேட்டை வெளியிட்டு அவர் மேலும் கூறுகையில், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை என்றார். 6 மாதம் காலம் ஆகியும் எதுவும் நடக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

 

ஜவான்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து

புதுடில்லி: எல்லை பாதுகாப்பு படையின் 49வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வௌியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'இந்நன்னாளில், எல்லை பாதுகாப்பு படை பிரிவின் அனைத்து வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்,' என்று கூறி உள்ளார்.

 

மாஜி முதல்வர் காலமானார்

புதுடில்லி: அருணாசலபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஜர்பம் கம்லின் காலமானார். அவரின் மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

காஷ்மீர் தேர்தல்: பாதுகாப்பு ஏற்பாடு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது. தேர்தல் பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறுகையில், 'காஷ்மீரில் சுதந்திரமான, நேர்மையான ஓட்டு பதிவு நடக்கும் வகையில், மாநில அரசு கேட்டுக் கொண்டதன்படி, போதுமான அளவிற்கு பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்,' என்றார்.

 

கைதான எம்.பி.,க்கு நெஞ்சு வலி

புதுடில்லி: சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பாக, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யான சிரிஞ்ஜோய் போசை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கை மேற்கொண்ட அடுத்த சில நிமிடங்களில் தனக்கு நெஞ்சு மற்றும் கழுத்து பகுதியில் வலிப்பதாக போஸ் கூறினார். இதையடுத்து, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

 

வீர பெண்களுக்கு அரசு பரிசு

சண்டிகார்: அரியானா மாநிலம், ரோத்தக் என்ற இடத்தில் பஸ்சில் வந்த சகோதரிகள் இருவரை, மூன்று பேர் ஈவ்-டீசிங் செய்தனர். உடனே பொங்கி எழுந்த சகோதரிகள் இருவரும், அவர்கள் மூவரையும் நையப்புடைத்தனர். இது, டிவிக்களில் ஔிபரப்பானது. இந்நிலையில், இளம் பெண்களை அரியானா முதல்வர் கத்தார் பாராட்டி உள்ளார். ரொக்க பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

திரிணாமூல் காங்., வெளிநடப்பு

புதுடில்லி: சகாரா நிதி நிறுவன மோசடி குறுித்து பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா மீது சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, பார்லிமென்ட்டின் இரு அவைகளில் இருந்தும் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் வௌிநடப்பு செய்தனர். முன்னதாக, அவர்கள் கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

 

சிவசேனா-பா.ஜ., பேச்சுவார்த்தை சக்சஸ்

மும்பை: மகாராஷ்ட்ரா அரசுக்கு ஆதரவு பெறுவது குறித்து சிவசேனா, பா.ஜ., இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இது குறித்து மகா.,. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், 'பேச்சுவார்த்தை 80 சதவீதம் நடந்துள்ளது. சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடக்கிறது. மிக விரைவில் இப்பேச்சுவார்த்தை நிறைவடையும்.,' என்றார். மேலும், இந்த பேச்சுவார்த்தைக்கு சம்பந்தமில்லாத யாரும் இது குறித்து பேச வேண்டாம் எனறும் பட்னாவிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

நெல்லை கொலை: மூவர் கைது

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் தலைவரான கோபி, கடந்த சில தினங்களுக்கு முன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொடுக்கல் வாங்கல் குறித்த தகராறே இந்த கொலைக்கு காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இந்த கொலை வழக்கு சம்பந்தமாக நெல்லையைச் சேர்ந்த சுத்தமல்லி ராஜா, மற்றும் அவரது சகோதரர்கள் பாபு மற்றும் சுப்ரமணி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

திருப்பூர் கோவில் கும்பாபிஷேகம்

திருப்பூர்: திருப்பூர், வீரராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை 9.47 மணிக்கு சிறப்பாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

சாலை விபத்தில் இருவர் பலி

தூத்துக்குடி: தூத்துக்குடி புறநகரில், தட்டப்பாறை விலக்கு என்ற இடத்தில் பைக்கில் வந்த, உமரிக்கோட்டையைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம் மற்றும் சண்முககனி ஆகிய இருவரும், தண்ணீர் டேங்கர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி போலீசார் வகிசாரணை நடத்தி வருகின்றனர்.

 

நாகாலாந்தில் பிரதமர் மோடி பேச்சு

கொஹிமா: நாகாலாந்தின் புகழ் பெற்ற நிகழ்ச்சியான ஹார்ன்பில் திருவிழாவை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திரமோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: டில்லியில் இருந்து புறப்பட்டால், சில மணி நேரங்களில் வந்து சேரக்கூடிய மாநிலமாக நாகாலாந்து உள்ளது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இங்கு ஒரு பிரதமர் கூட வரவில்லை. நான் இப்போது வந்திருக்கிறேன். இனி, அடிக்கடி வருவேன். நாகாலாந்து இயற்கை செழுமை மிகுந்த ஒரு மாநிலம். இதன் காரணமாக, ஏராளமான முதலீட்டாளர்கள் சுற்றுலா துறையில் முதலீடு செய்ய இங்கு நிச்சயம் வருவார்கள். நாட்டின் பல நகரங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், நாகாலாந்து மாநிலத்தின் இயற்கை வளத்தின் அடிப்படையில், இங்கு இயற்கை பொருளாதார மண்டலங்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். நாங்கள் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் தான் ஆகின்றன. வடகிழக்கு மாநிலங்களுக்கு என பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டுள்ளோம். வடகிழக்கு பகுதி மாணவர்களுக்கு சிறப்பு கல்வி உதவித் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.

 

பார்லியில் மம்தா கட்சியினர் ஆர்பாட்டம்

புதுடில்லி: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் இன்று பார்லி., வளாகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சஹாரா நிதி நிறுவன மோசடியில் அமித்ஷாவிற்கு சம்பந்தம் உள்ளது என்றும், ஊழல் குறித்த டைரியில் அமித்ஷாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறி, கோஷமிட்டனர். சஹாரா அதிபரை பாதுகாக்க அமித்ஷா முயற்சி செய்து வருகிறார் என அவர்கள் குற்றம் சாட்டினர். முன்னதாக, கோல்கட்டாவில் நேற்று நடந்த பா.ஜ., மாநாட்டில், சாரதா சிட்பண்ட் ஊழலில் மம்தா பானர்ஜிக்கும், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என அமித்ஷா பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். அதன் எதிரொலியாக, திரிணமூல் காங்கிரசார் இன்று பார்லியில் இப்பிரச்னையை கிளப்பி உள்ளனர்.

 

காங்., புகாருக்கு வெங்கையநாயுடு பதில்

புதுடில்லி: மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பா.ஜ., அரசை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதனால் தான், அடுத்தடுத்த தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம். இந்நிலையில், அரசியலில் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக, எங்கள் அரசு மீது இல்லாத குற்றச்சாட்டுக்களை காங்கிரஸ் கூறி வருகிறது. எங்கள் ஆட்சியை குறை கூறி புத்தகம் வௌியிடுகிறது. இதனால் எல்லாம் எங்களுக்கு பிரச்னை இல்லை,' என்றார்.

 

வருமானவரி வழக்கு: ஜெ., மனு

சென்னை: வருமான வரிக்கான கணக்கு காட்டவில்லை என, ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீது, வருமானவரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், வருமான வரி கணக்கை காட்டாததற்கு உரிய அபராதத்தை செலுத்துவதாக ஜெயலலிதா தரப்பில் கூறப்பட்டது. இதை வருமான வரித்துறையும் ஏற்றுக் கொண்டது. இந்நிலையில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட உள்ள ஒரு மனுவில், 'வருமான வரித்துறைக்கான அபராதம், வரி பாக்கி ஆகியவை அனைத்தையும் செலுத்திவிட்டோம். வழக்கில் சமரசம் செய்யும் முடிவை வருமான வரித்துறை இதுவரை அறிவிக்கவில்லை. எனவே, இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை, 2 வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பயணம்

புதுடில்லி: இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவல், இலங்கை புறப்பட்டுச் சென்றார். இலங்கையில் நடைபெறும் சர்வதேச கடலோர பாதுகாப்பு குறித்த மாநாட்டில் அவர் பேசுகிறார். இந்த விஜயத்தின் போது அதிபர் ராஜபக்சேவை சந்தித்து அவர் இரு தரப்பு உறவு குறித்து பேசுகிறார். கொழும்பு துறைமுகத்தில், சீன போர்க்கப்பல் முகாம் இட்டிருப்பது குறித்த இந்தியாவின் கவலையை அவர் அப்போது அதிபரிடம் தெரிவிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பாக்.,: நவாஸ் அரசுக்கு இம்ரான் மிரட்டல்

இஸ்லாமாபாத்: பாக்., பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் விலக வேண்டும் என, கடந்த சில மாதங்களுக்கு முன், முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான், இஸ்லாமாபாத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார். இதனால், அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், வரும் டிசம்பர் 16ம் தேதி மீண்டும் பந்த் நடத்த உள்ளதாக இம்ரான்கான் கூறி உள்ளார். அன்றைய தினம் ஒட்டு மொத்த பாகிஸ்தானும் முடங்கும் என்று என, அவர் எச்சரித்துள்ளார்.

 

துணை முதல்வர் கார் மோதி விபத்து

வாராங்கல்: .தெலுங்கானா மாநிலத்தில் துணை முதல்வராக இருப்பவர் ராஜய்யா. இவர், ஹனுமன்கோண்டா சென்றார். யஷ்வந்தபூர் அருகே கான்வாய் சென்று கொண்டிருந்தபோது, எஸ்கார்ட் காரின் டயர் பஞ்சர் ஆகி, நிலை குலைந்து ஓடி, அங்கிருந்த சிலர் மீது மோதியது. இதில், 7 பேர் படுகாயம் அடைந்தனர். பலர் சிறு காயங்களுடன் தப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஆத்தூரில் பொதுமக்கள் மறியல்

ஆத்தூர்: ஆத்தூர் நகராட்சி 26வது வார்டில் உள்ளது காந்திநகர். இங்குள்ள நியாய விலைக்கடையை, 27 வது வார்டுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதை கண்டித்து, காந்திநகரைச் சேர்ந்த மக்கள், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர். தாசில்தார் தேன்மொழி, மாவட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். நியாயவிலைக் கடை மாற்றப்படாது என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது

 

போலீஸ் பாதுகாப்புடன் கோயில் கும்பாபிஷேகம்

ஆத்தூர்: ஆத்தூர், கல்ராயன் மலை,தெற்குநாடு பஞ்சாயத்து, குப்பூர் கிராமத்தில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோயிலில் இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோயிலின் தர்மகர்த்தாவாக தன்னை நியமிக்குமாறு கோரி மாணிக்கம் என்பவரும், மாணிக்கம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவதாக பொதுமக்களும் கலெக்டரிடம் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து, கோர்ட் அனுமதி பெறுமாறு .கூறி, கும்பாபிஷேகத்திற்கு தாசில்தார் தேன்மொழி தடை விதித்திருந்தார். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், போலீஸ் பாதுகாப்புடன் கும்பாபிஷேகத்தை நடத்த மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது. ஐகோர்ட் உத்தரவைத் தொடர்ந்து, இன்று காலை மாவட்ட எஸ்.பி.சக்திவேல், ஆத்தூர் ஆர்டிஓ., தாசில்தார் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 

ராமநாதபுரம்:விபத்தில் போலீஸ்காரர் பலி

ராமநாதபுரம்:சாலைவிபத்தில் போலீஸ்காரர் பலியானார்.நேற்று நள்ளிரவில் கீழக்கரை போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீஸ்காரர் தமிழரசன், இரவுகாவல் பணியின் போது ஷேர் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் தமிழரசன் உயிரிழந்தார்.சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

ஓஹியோ கால்பந்து வீரர் சடலமாக மீட்பு

ஓஹியோ:அமெரிக்காவில் காணாமல் போன ஓஹியோ மாநில பல்கலைகழக கால்பந்து வீரர் கோஸ்டா கராஜார்ஜ், நேற்று சடலமாக மீட்கப்பட்டது.கோஸ்டா, ஓஹியோ மாகாண பல்கலைகழகத்தில் 5 ஆம் ஆண்டு மாணவர்.இவர் கடந்த புதன்கிழமையன்று பயிற்சிக்கு சென்ற போது காணாமல் போய்விட்டார்.கொலம்பஸ் போலீசார் சார்ஜெணட், ரிச்சர்ட் வீனெர், இது குறித்து கூறுகையில், கோஸ்டா, துப்பாக்கியால் சுட்ட காயம் இருப்பதால் தற்கொலை செய்திருக்கிலாம் எனவும் டாட்டூ மூலம் உடல் அடையாளம் காணப்பட்டது என்றார்.

 

துபாயில் அதிநவீன விமான நிலையம்

துபாய்:துபாயில் 3200 கோடிஅமெரிக்க டாலர்கள் செலவில் அதிநவீன விமான நிலையத்தை உருவாக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.4.5 கிலோ மீட்டர் நீளமுள்ள 5 ஓடுபாதைகளுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.2020-ம் ஆண்டு வாக்கில் 120 மில்லியன் பயணிகளையும், 12 மில்லியன் டன் சரக்குகளையும் கையாளும் திறன் கொண்டதாகவும், சுமார் 200 விமானங்களை ஒரே நேரத்தில் நிறுத்தி வைக்கும் வகையிலும் உருவாகவுள்ள இந்த புதிய விமான நிலையம், உலகின் மிகப் பெரியதும், அதிநவீன வசதிகள் கொண்டதாகவும் அமைய உள்ளது.

 

பிரதமர் மோடி இன்று நாகலாந்து, திரிபுரா பயணம்

கொகிமா:பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக, இன்று நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார். நாகலாந்து தலைநகர் கொகிமா அருகேயுள்ள கிசாமா கிராமத்தில் காலை நடைபெறும் மாநிலத்தின் பாரம்பரிய ஹார்ன்பில் திருவிழா, நாகலாந்து மாநில அந்தஸ்தை பெற்ற 51-வது ஆண்டு தின கொண்டாட்டம் ஆகியவற்றில் மோடி கலந்து கொள்கிறார்.இதைத் தொடர்ந்து அவர் திரிபுரா மாநிலத்துக்கு பயணமாகிறார். பலாட்டினா என்னுமிடத்தில் 363 மெகாவாட் திறன் கொண்ட மின்சக்தி திட்டத்தை மோடி, தொடங்கி வைக்கிறார்.

 

எபோலா நோய் பலி எண்ணிக்கை 7,000 ஆக உயர்வு

லண்டன்:எபோலா நோய் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இந்நோய்க்கு இதுவரை 6,928 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.லைபீரியா, கினியா, சியாராலோன் ஆகிய 3 நாடுகளிலும் இந்நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. இது தவிர நைஜீரியா, மாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட மேலும் 5 நாடுளிலும் இந்நோய் பரவியுள்ளது.

 

அமெரிக்கா:கருப்பின இளைஞரை சுட்ட போலீஸ் ராஜினாமா

பெர்குசன்:அமெரிக்காவில்,கருப்பின இளைஞர் சுடப்பட்ட சம்பவத்தில் தொடர்புள்ள போலீஸ் டாரென் வில்சன் ராஜினாமா செய்தார்..அவரது ராஜினாமா கடிதத்தில் கூறியிருந்ததாவது:நான் போலீஸ் பணியில் தொடருவது, பொதுமக்களுக்கும் போலீஸ் துறையினருக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அப்படியொரு நிலை ஏற்படுவதை என்னால் அனுமதிக்க இயலாது. எனவே, நான் காவலர் பணியைவிட்டு விலக முடிவு செய்துள்ளேன்.எனது விலகல், இந்த நகரில் உள்ளவர்களுக்கு ஆசுவாசத்தை அளிக்கும் என்று நம்புகிறேன் என்று அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

பா.ஜ.க.,வில் இணைந்த ஐ.ஜ.த.,மாஜி அமைச்சர்

பாட்னா:ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மாஜி அமைச்சர் ஜாம்ஷெட் அஷ்ரப், தனது ஆதரவாளர்களுடன் நேற்று பா.ஜ.க.,வில் இணைந்தார்.பா.ஜ.க., மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி, பீகார் மாநில பா.ஜ.க., தலைவர் மங்கள் பாண்டே ஆகியோர் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார்.

 

தூத்துக்குடி: 8 கிலோ நகை திருடிய உ.பி., யைச் சேர்ந்த 5 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த பிப்ரவரியில் 8 கிலோ நகை திருடிய உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.திருடப்பட்ட நகைகள் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி ஜின் பாக்டரி ரோட்டை சேர்ந்த ராஜேஷ்,38, நாகேந்திரன்,35 ஆகியோர், பழைய மாநகராட்சிக்கு பின்புறம் காசுக்கடை பஜாரில் லட்சுமி ஜூவல்லரி என்ற நகைக்கடையை நடத்தி வந்தனர்.கடந்த பிப்., 12 ம் தேதி கடையை பூட்டி விட்டு சென்றனர். அதிகாலையில் அந்தப்பகுதியில் நடை பயிற்சிக்கு வந்தவர்கள் கடை பூட்டு உடைந்து கிடப்பதை பார்த்து உரிமையாளர்களுக்கு தெரிவித்தனர்.

மத்திய பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கடையில் இருந்த ரூ. ஒருகோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள, எட்டு கிலோ நகைகள் மற்றும் 2.50 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.தூத்துக்குடி திலக் ஓட்டல் அருகில் சந்தேகத்திற்கிடமாக இருந்த வட மாநில வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் உத்திரப்பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டத்தை சேர்ந்த ராம்பாபு,50. முகமது சுல்தான்,38, அசோக்குமார்,35, கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த பப்பு சோன்கர்,32, தினேஷ்,38, ஆகியோர் லட்சுமி ஜூவல்லரியில் திருடியது தெரியவந்தது. ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் திருடப்பட்ட நகைகள் எதுவும் இல்லை. தங்கள் சொந்த மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் கொண்டு விற்றுள்ளனர். அங்கு சென்று நகைகளை மீட்டு ஒப்படைப்பது பெரும் சிரமம் என போலீசார் தெரிவித்தனர்.

 

சர்பாஞ்ச் சுட்டுக்கொலை: ஒமர் கவலை

ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் தேர்தலை புறக்கணிக்காத சர்பாஞ்சை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள் கவலையளிப்பதாகவும், தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும் எனவும் கூறினார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.