குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஐப்பசி(துலை) 11 ம் திகதி வெள்ளிக் கிழமை .

நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை -இலங்கையின் மனச்சாட்சியோடு சம்பந்தப்பட்டது.

04 .06. 2011த.ஆ.2042--  நிமால்கா பெர்ணாண்டோ-- சிறுவர்களை வீடுகளிலிருந்து இழுத்துச் சென்று போரில் ஈடுபடுத்தினார்கள். இவ்வாறான பொறுப்பற்ற விதத்தில் ஒரு தலைமைத்துவம் தொடர்ந்து செயற்படுவதை நாம் ஊட்டி வளர்க்க முடியுமா? கேள்வி: ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை என்னென்ன விடயங்களைக் கொண்டிருக்கிறது?
 
சிறிலங்காவில் நடைபெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பாக ஒரு சரியான புரிதலுக்கு வருவது இந்தக் குழுவின் முன்னாலிருந்த பிரதான சவாலாகும். ஏனென்றால் பலவிதமான குழப்பமான அறிக்கைகளும் தகவல்களும் அப்போது வெளிவந்து கொண்டிருந்தன. அரசாங்கம் புலிகள் ஆகிய இரு தரப்பும் யுத்தத்தைப் பிரகடனம் செய்திருந்தனர். அது ஒரு கெரில்லா யுத்தமாக நடைபெறவில்லை. ஒரு மரபுரீதியான யுத்தமாகவே நடைபெற்றது.
 
 
மனிதாபிமான உதவி அமைப்புக்களாலும் புலம் பெயர்ந்தோராலும் இக்காலகட்டப்பகுதியில் அரசாங்கத்தின் மீது பலகுற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்தன. மனிதாபிமானப் பணிகளுக்கான தடை, வைத்தியசாலைகள் குண்டு வீச்சுக்குள்ளாக்கப்பட்டமை, பொதுமக்கள் வாழிடங்களை நோக்கி மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சக்கள். போன்ற பல சம்பவங்கள் தொடர்பாகப் பலர் சுட்டிக்காட்டியிருந்தனர். இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பாகப் பல அறிக்கைகள் வந்திருந்தன. இது இப்போது மரபு சார்ந்த ஒரு யுத்தமாக இருப்பதால் இந்த  யுத்தமும் ஜெனீவா உடன்படிக்கை போன்ற விதிகளுள் அடங்கும். எனவே இது தொடர்பான விசாரணைகள் ஜெனீவா உடன்படிக்கையின் கீழ் மேற்;கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை இறைமையில் தலையிடுவது என்பதாகாது.
 
இவ்வாறான சட்டங்கள் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற சம்பவங்கள் போன்று மீண்டுமொருமுறை நடைபெற எவருக்கும் அனுமதியளிக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தை உலக மக்களுக்கு வழங்குவதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்பட்டது. வேறுவார்த்தைகளில் சொல்வதானால், இவ்வாறான ஒரு காட்டுமிராண்டித்தனமான இனப்படுகொலை மீள ஒரு முறை நடக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்று உலக மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதி அது.
 
இது ஒருவருடைய சுய உணர்வுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினையும் கூட. இத்தகைய நியமங்களை உயர்த்திப் பிடித்து ஐநாவின் சர்வதேசப் பொறுப்பேற்புக்களைப் பேணுவதும் ஐநா செயலாளர் நாயகத்தின் அடிப்படையான பொறுப்பு.  இவ்வாறான உயரிய கடப்பாடுகளைக் கொண்டவர்கள் அதனை வினைத்திறனுடன் பேணத் தவறுமிடத்து  அவ்வாறான அமைப்புக்கள் கேள்விக்குள்ளாகும் நிலை உருவாகிறது. ஐநாவின் இருப்பின் சாரமென்பது அதனது அங்கத்தினர்களின் கடப்பாட்டுணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் தொடர்புடையதாகும். அது உறுப்பு நாடுகளினுள்ளேயும், அரசாங்கங்களிடையேயும் நாகரீகமான நடத்தைக்கான நியமங்களை உருவாக்கும். உறுப்பு நாடுகளுக்கு மட்டுமல்லாமல்  உறுப்பு நாடுகளின் மக்களுக்கும் இதனால் தான் மேற்படி விடயங்களுக்கு ஒரு களமாகவும் தளமாகவும் இருந்து வருகிறது.
 
நான் ஐநாவுக்கு வெள்ளையடிக்க விரும்பவில்லை. இது ஐக்கிய அமெரிக்காவின் நிய10யோர்க்கில் உள்ளது. ஐநா எடுக்கும் பெரும்பாலான முடிவுகளில் அமெரிக்க நலன்களின் நிழல் பெருமளவில் படிந்திருக்கலாம். ஆனால், இன்று ஐநாவை ஏகாதிபத்திவாதிகளின் களம் என விமர்சிக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், அவருடைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் 1989இல் இளைஞர்கள் காணாமல் போனது பற்றிய முறைப்பாட்டை இதே ஐநாவுக்குத் தான் எடுத்துச் சென்றார்கள்.  நாங்கள் வரலாற்றை மறந்து விட முடியாது.
 
எல்லா மனிதாய உதவி அமைப்புக்களும் மோதல் பிராந்தியத்தை விட்டு வெளியேறிவிட வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு உத்தரவு பிறப்பித்திருந்தது. எந்தவொரு ஊடகமும் போர்ப்பிராந்தியங்களுக்கு அனுமதிக்கப்படவேயில்லை. இலங்கையின் போர் சாட்சியங்களற்ற ஒரு போர் என்றே பெருமளவில் வர்ணிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு ஊடகங்களோ வெளிநாட்டு ஊடகங்களோ எவையும் அப்பிராந்தியத்திற்குள் அனுமதிக்கப்படவேயில்லை. இவ்வாறு சாட்சியங்கள் எதுவுமற்ற நிலையில் நடாத்தப்பட்ட போர் முடிவடைந்த பின்னர் இப்பிரச்சினைகள் தொடர்பாக எழுந்த எந்த பல்வேறு பிரச்சினைகளையும் தீர்ப்பதில் அவற்றுக்குப் பதிலளிப்பதில் அரசாங்கம் தவறி விட்டது.  கிளிநொச்சி அல்லது வன்னிப் பிராந்தியத்தில் எவ்வளவு மக்கள் உள்ளார்கள் என்று அரசாங்கத்திடம் கேட்ட போது எழுபதாயிரம் அளவிலான சிறுதொகையினரே உள்ளனர் என அரசாங்கம் பதிலளித்திருந்தது. ஆனால், வன்னியிலிருந்து மக்கள் வெளியேற்றம் ஆரம்பித்த போது அங்கிருந்து மூன்று இலட்சத்திற்கும் மேலான மக்கள் வந்து சேர்ந்தனர். இதனால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளானது. அரசாங்கம் உண்மையான தகவல்களை ஏன் மறைத்தது? ஏன் இவ்வாறு பொய்யான புள்ளி விபரங்களை வெளியிட்டது என்ற கேள்வி எழுந்தது. இதனால் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து பயங்கரமான சந்தேகம்
எழுந்தது.
 
பின்னர் இடம் பெயர்ந்தவர்கள் தங்களது உறவினர்களைத் தேட ஆரம்பித்தார்கள். பல்வேறு இராணுவ காவலரண்களில் தங்களது கணவன்மாரை அல்லது மகன்மாரை ஒப்படைந்திருந்தவர்கள் அவர்கள் எங்கே என்று கேள்வி எழுப்பினார்கள். அத்தோடு வெள்ளைக் கொடியோடு சென்று சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பான பேச்சுக்கள் வெளிவர ஆரம்பித்தன. உண்மையில் இவ்வாறான சம்பவங்கள் பற்றிய கேள்விகள் இடம் பெயர்ந்தவர்களிடமிருந்தும் புலம் பெயர்ந்தவர்களிடமிருந்துமே வர ஆரம்பித்தன. வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்கள் விடுதலைப் புலிகளினால் பின்னாலிருந்து கொல்லப்பட்டிருக்கவும் கூடும். ஆனால் அப்படிக் கொல்லப்பட்டிருந்தார்கள் என்றாலும் கூட அந்நேரத்தில் அங்கிருந்தவர்கள் என்ற அடிப்படையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அது குறித்த தேவையான ஆதாரங்களை முன்வைத்து அச்சம்பவங்களின் உண்மைத் தன்மையை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு இருக்கிறது. ஆனால் அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை. இத்தகைய ஒரு நிலையில் ஐநா அமைப்பு முறைமைக்கு எதிராக இவ்வன்முறைகளை எதிர்கொள்ளும் விதத்திலான பயன்விளைவுள்ள நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன. இவை தான் இன்று ஐநா நிபுணர்குழுவை நியமிக்கும் நடவடிக்கையை நோக்கித் தள்ளிச் சென்றது என்றே நான் நினைக்கிறேன்.
 
 
கேள்வி: இந்த அறிக்கை அரசாங்கத்திற்கெதிரான குற்றச்சாட்டுக்களை மட்டுமன்றி விடுதலைப் புலிகளும் வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் என்று குற்றம்சாட்டி இருக்கிறதே?
 
ஆம், அது உண்மை. விடுதலைப் புலிகள் கூட ஜெனிவா உடன்படிக்கையை மீறி இருக்கிறார்கள். வன்முறைக்கு எதிராகச் செயற்படுவதற்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் பல்வேறு குற்றவியல் சட்டங்கள் உள்ளிட்ட சட்டங்களை அரசாங்கம் தன்னகத்தே கொண்டுள்ளது. இதனூடாக  பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்பைச் சேர்ந்த எவரொருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் அரசாங்கம்  அதிகாரங்களைக் கொண்டுள்ளது. இது ஒரு அரசினுடைய கடமை. விடுதலைப் புலிகளுடைய தலைமை படுகொலை செய்யப்பட்ட போது அதற்கெதிராகச் செயற்படாமல் இருந்ததற்கான பொறுப்புக் கூட இப்போது அரசாங்கத்தின் தலையில் விழுந்திருக்கிறது. ஏனெனில் இப்போது விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சிலர் ஆட்சியினுள்ளே முக்கியமான பொறுப்புக்களில் இருக்கிறார்கள். அவர்கள் அரசாங்கத்தோடு நெருக்கமாக இருந்து செயற்பட்டு வருகிறார்கள். இப்போது யாராவது குற்றம் செய்தால் அதனோடு இணைத்துப் பார்க்க வேண்டியதென்னவென்றால் அவர் ராஜபக்ஷ சிந்தனையின் சீடராக இருக்கும் பட்சத்தில் அவர் தண்டனையிலிருந்து விலக்குப் பெறுவார் என்பதாகும்.  அப்படிப்பட்ட ஒருவர் தனது அரசியற் சார்பு நிலையை மாற்றி விட்டார் என்பதற்காக அப்பாவியாக மாறி விட முடியாது.
 
எனவே எங்களுக்கு முன்னால் உள்ள இன்னொரு சவால் என்னவென்றால் சிறுவர்களைக் கடத்தியதோடு நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதென்பதாகும். அவர்கள் சிறுவர்களை வீடுகளிலிருந்து இழுத்துச் சென்று போரில் ஈடுபடுத்தினார்கள். இவ்வாறான பொறுப்பற்ற விதத்தில் ஒரு தலைமைத்துவம் தொடர்ந்து செயற்படுவதை நாம் ஊட்டி வளர்க்க முடியுமா?
 


கேள்வி : இந்தக்குழு ஒரு புறத்தில் கற்றறிந்த பாடங்களுக்கான ஆணைக்குழுவுக்கு மக்கள் வழங்கிய ஆதாரங்களைப் பயன்படுத்தியுள்ளது. அதேவேளையில் சர்வதேச நியமங்களுக்கேற்ப அவ்வாணைக்குழு அமையவில்லை எனக்கூறி அதனை நிராகரிக்கவும் செய்கிறது. இதைப்பற்றி ...     
இந்தக் கற்றறிந்த பாடங்களுக்கான ஆணைக்குழு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டஇத்தகைய ஒரு சில குழுக்களில் ஒன்று தான். இவ்வாறான இரண்டே மூன்று ஆணைக்குழுக்களை ஏற்கெனவே அரசாங்கம் நியமித்திருந்தது. அவ்வாணைக்குழுக்களால் தயார் செய்யப்பட்ட அறிக்கைகள் பகிரங்கப்படுத்தப்படவே இல்லை. இவற்றின் அறிக்கைகள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த அறிக்கைகளைப் பார்க்கையில் பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளிகளாக்கும் முயற்சியே நடந்திருக்கிறது என்ற உணர்வே எமக்கு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் யாருக்குமே எத்தகைய நிவாரணங்களும் கிடைக்கவில்லை.
 
 
போரின் இறுதிக்கட்டத்தில் அகப்பட்டவர்கள் தங்களது அனுபவங்களையும் ஆதாரங்களையும் கற்றறிந்த பாடங்களுக்கான ஆணைக்குழுவின் முன் வைத்தார்கள். இந்த மக்களால் வெளியிடப்பட்ட விபரங்களை நாம் அங்கீகரிக்க வேண்டிய தேவை உள்ளது. இவ்வாணைக்குழுவில் வெளிப்படைத் தன்மை என்று எதுவும் இல்லை. அவ்வாணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவர்கள் என்பது மட்டுமல்லாமல் அவரால் நேரடியாகப் பொறுக்கி எடுக்கப்பட்டவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். கற்றறிந்த பாடங்களுக்கான ஆணைக்குழுவிற்கு விசாரணைக்காக வழங்கப்பட்ட ஆணை போரின் இறுதிக்கட்டத்தில் இடம் பெற்ற சம்பவங்களேடு தொடர்புடையதல்ல. அது போர்நிறுத்த உடன்பாடோடு தொடர்புடையது. போர் நிறுத்த உடன்பாடு இனப்பிரச்சினையில் எத்தகைய தாக்கத்தை விளைவித்தது என்று அறிவதோடு தொடர்புடையது. முன்னைய ஆட்சியாளர்களின் தவறுகளைக் கண்டறிந்து அவர்களை யுத்தம் ஏற்பட்டதற்கான காரணமாக்கி  குற்றம்சாட்டும் முயற்சியையே இதன் மூலம் அரசாங்கம் செய்ய முயன்றது. ஆனால், முரண்நகையாக, வடக்கு கிழக்கிலிருந்து சாட்சியமளித்த பாதிக்கப்பட்டவர்கள் இறுதிப் போரில் தமக்கேற்பட்ட அனுபவங்கள் குறித்து அங்கு சாட்சியமளித்தார்கள். பலர் சாட்சியமளிக்க முன்வந்த போதும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒரு துண்டுக் கடதாசியில் தங்களது சாட்சியங்களை எழுதித் தருமாறு அவர்கள் கேட்கப்பட்டனர். மறுபுறத்தில் சாட்சியமளித்தவர்களை அச்சுறுத்தும் வண்ணம் அவர்களது புகைப்படங்கள் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டன.
 
ஆணைக்குழுக்கள் இடைக்கால நீதியை வழங்கும் பொறிமுறைகளாகவே அறியப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் இவ்வாறான பொறிமுறையூடாக நீதி கோருபவர்களுக்கு ஒரு இடைக்கால ஆறுதல் கிடைக்கிறது. இது நீதிமன்ற முறையிலமைந்த தீர்ப்பு வழங்கும் செயன்முறையல்ல. மோதல் இது பிரதானமாக மோதல் நடைபெறும் சு10ழ்நிலைகளில்; சமூகவியல் மற்றும் உளவியல் சார்ந்து செய்யப்படும் ஒரு ஆறுதலுக்கான வழிமுறையாகும் காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு என்ற பெயரில் சந்திரிகா பண்டாரநாயக்கா காலத்தில் இவ்வாறான ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்ட போது, ஆணைக்குழு முன் மக்கள் வந்து சாட்சியமளிக்கக் கூடிய சுதந்திரமான நிலைமை உருவாக்கப்பட்டது.  இராணுவத்தினர் வந்து சாட்சியங்களைப் படம் பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறான காரணங்களாலேயே ஐநா நிபுணர் குழு கற்றறிந்த பாடங்களுக்கான ஆணைக்குழுவை நிராகரித்திருக்கிறது.
 
 
கேள்வி : ஐநா நிபுணர் குழு அறிக்கை வெளியிடப்பட்ட போது அதில் குறிப்பிட்ட விடயங்களில் உண்மை இல்லை என்று கூறி அந்த அறிக்கையை ஏற்க மறுத்து விட்டது அரசாங்கம். அதேவேளை அரசாங்கம் தனது சட்டமா அதிபர் தலைமையிலான ஒரு தூதுக்குழுவை நிபுணர்குழுவைச் சந்திப்பதற்கு அனுப்பி உள்ளதே?
 


ஆம், அரசாங்கம் இந்த வழிமுறைகளை ஏற்றுக் கொண்டுள்ளது என்பதனை இது நிரூபிக்கிறது. இப்போது புலம் பெயர்ந்தவர்கள் நிபுணர் குழுவை தவறாக வழி நடாத்தி உள்ளார்கள் என்று அரசாங்கம் சொல்ல ஆரம்பித்து விட்டிருக்கிறது. நாங்கள் ஒன்றை மறக்கக்கூடாது புலம் பெயர்ந்தவர்களோ நாங்களோ ஐநா போன்ற ஒரு அமைப்பை தவறாக வழிநடாத்திவிட முடியாது. இந்த அறிக்கை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் கொண்டு போய் விடும் என்றும் சொல்கிறது. இது இலங்கையர்களைத் தவறாக வழிநடத்தும் ஒரு விடயமாகும். இது ஒரு பொய்யான பிரச்சாரம். இவ்வறிக்கை அவ்வாறான எதைப்பற்றியும் குறிப்பிடவில்லை. நான் நினைக்கிறேன் இவ்வறிக்கை போருள் அகப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு தீர்வையும் நிவாரணத்தையும் கோருகின்றதென. போரின் இறுதிக்கட்டத்தில் அரசாங்கத்திடம் தஞ்சமடைந்த மக்கள், நடைபெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்புச் சொல்லுமாறு அரசாங்கத்தைக் கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்த அறிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஒரு ஆசீர்வாதம் என்றே நினைக்கிறேன். இறுதிக்கட்டப் போரின் போது என்ன நடைபெற்றதென்பதைப் பகிர்ந்து கொண்டவர்களுடைய விடயங்கள் இந்த அறிக்கையை உருவாக்க உதவியிருக்கிறது. எனவே உண்மைகளை மறைக்க முயற்சிக்காமல் அவ்வாறு துன்பப்படுபவர்களுக்கு உதவிகளை வழங்க நாம் முன்வர வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் தண்டனை வழங்கும்படி கோரவில்லை. அவர்கள் வஞ்சம் தீர்க்கும் ஒரு நீதியைக் கோரவில்லை. அவர்கள் இயல்பு வாழ்க்கையைக் கோருகிறார்கள். அவர்கள் தாங்கள் எங்கு வாழ்ந்தார்களோ அங்கு மீளத்திரும்ப வேண்டும் என்று கோருகிறார்கள். அவர்கள் சுதந்திரத்தைக் கோருகிறார்கள். எதிர்காலத்தில் சுதந்திரமாக வாழ்வதற்கான உத்தரவாதத்தைக் கோருகிறார்கள். எனவே இந்த அறிக்கை மகிந்த ராஜபக்ஷவை மின்சாரக்கதிரைக்கே தள்ளிச் செல்லும் என்று காட்டுவதெல்லாம் தவறானது.   
 
அதற்கப்பால் இந்த அறிக்கையை நிராகரிப்பதென்பது மனிதத்துவத்துக்கு முரணானது. அவ்வாறு செய்தால் பெண்களதும் தாய்மார்களதும் குழந்தைகளதும் கண்ணீரை நிராகரித்தவர்களாவோம். இந்தப் போர் சிங்களவர்களதோ தமிழர்களதோ எவர்களுடைய உயிரையும் பறித்து விட்டிருக்கக் கூடும். இன்று வடக்கு கிழக்கு மக்களுடைய உறவினர்களும் நண்பர்களும் இந்தப் போரில் இறந்திருக்கிறர்கள். அவர்களுடைய ஆன்ம சாந்திக்கான மதக்கிரியைகளைக்கூடச் செய்ய முடியாத நிலையிலேயே அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
 
 
கேள்வி : அரசாங்கத்தில் இருக்கும் பலதரப்பட்டவர்களும் இந்த அறிக்கைக்கு எதிராக மக்களைத் திரட்டி சர்வதேச சமூகத்துக்கு உண்மை நிலையை விளக்குவோம் என்று சொல்லி வருகிறார்கள். அரசாங்கத்தின் இவ்வாறான பிடிவாதமான நிலைமைகளால் என்ன நிகழும் என்று நினைக்கிறீர்கள்?
 
நான் முதலில் ஒன்றைச் சொல்ல வேண்டும் அண்மையில் இலங்கை இராணுவ நீதிமன்றம் அல்லது விசேட தீர்ப்பாயம் என்ற எண்ணக்கருவை ஏற்றுக் கொண்டுள்ளது.  அவ்வாறான ஒரு நீதிமன்றத்தால் சரத் பொன்சேகா குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். அவருக்கெதிராகக் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குற்றவியல் தன்மை சார்ந்ததல்ல. அவை ஆணியும் நட்டும் போன்ற சாதாரண விடயங்கள். தன்மையன. அரசாங்கம் சரியான பாதையில் செல்வதாக இருந்தால் அவ்வாறான குற்றச்சாட்டுக்களை வழமையான நீதிமன்ற முறைகளில் விசாரித்திருக்க முடியும். அவ்வாறு இராணுவ நீதிமன்றத்தை நோக்கி நகர்ந்திருக்கும் நாடு தான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராகக் கூக்குரல் இடுகிறது. சிலர் சொல்கிறார்கள் இந்த ஐநா அறிக்கைக்குப் பின்னால் ஒரு பெரிய சதி இருக்கிறதென்று. அது ஒரு நல்ல நகைச்சுவை. இவ்வாறான கட்டுக்கதைகளுக்குப் பின்னால் நீங்கள் ஒளிந்து கொள்ள முடியாது. அல்லது மின்சாரக் கதிரை அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்று கதையளக்க முடியாது. நான் முன்னர் சுட்டிக்காட்டியதைப் போல இங்கு உள்ள முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த அறிக்கை பிரக்ஞைப10ர்வமான ஒன்றா என்பதும் நாம் ஒரு நாடு அல்லது மக்கள் என்ற வகையில் பிரக்ஞைப10ர்வமாக உள்ளோமா என்பதும் தான். நாங்கள் மனச்சாட்சி உள்ளவர்களாக இருக்கிறோமா என்பது தான்.        
 
நாம் இன்று மிகப் பயங்கரமாக எழுந்து வரும் போக்கு ஒன்றிற்கு முகம் கொடுக்க வேண்டி இருக்கிறது. அரசாங்கம் இந்த அறிக்கையை ஏகாதிபத்தியச் சதி என்று தாக்கி வருகிறது. அவர்கள் இப்போது பாதுகாப்புக்காக இன்னொரு ஏகாதிபத்திய முகாமுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரேரிக்கிறார்கள்.
 
நாங்கள் ஐநாவுக்கு எதிரானவர்களாக இருக்கிறோமா இல்லையா என்பதல்ல. அவர்களுடைய நடவடிக்கைகள் நிறுத்தப்படப் போவதில்லை. உங்களுக்குத் தெரியும் விமல் வீரவன்ச ஐநா அலுவலகத்துக்கு முன்னால் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் ஐநாவோ நிபுணர் குழுவை நியமிப்பதை நிறுத்தவில்லை.
 
இந்த அறிக்கையை நிராகரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சி உண்மையில் எதை உணர்த்துகிறதென்றால் எவ்வளவு பொய்களை நாங்கள் சர்வதேச சமூகத்தின் முன் சொல்லப் போகிறோம் என்பதைத் தான். எனவே இந்த அறிக்கை எங்களுடைய தாய்நாட்டுக்கு எதிரானது என்று பார்த்து இனவாதத்தை உசுப்பிவிட வேண்டாம்.
 
நாங்கள் இப்போது மிகவும் அபாயகரமான போக்கைக் காண்கிறோம். பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபேய ராஜபக்ச இலங்கையைப் பாதுகாக்க சீனாவிடமும் ரஷ்யாவிடமும் உதவி கோரப் போவதாக வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த அறிக்கை இலங்கையை சர்வதேசத்தோடு சம்பந்தப்படுத்தி சர்ச்சைக்குரிய புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தப் போகிறது. இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான நெருக்கடிகளை நாங்கள் எல்லோரும் அறிவோம். இந்தியா இவ்வறிக்கை குறித்து பிரதிபலிப்புக்களை வெளியிடும் என்று நான் நினைக்கவில்லை. இந்தியாவிடமிருந்து உதவியைக் கோருவதாக கோட்டாபேய ராஜபக்ஷ குறிப்பிடவில்லை. மறுபுறத்தில் நாட்டை அரசியல் hPதியாகச் சிக்கலுக்குள் தள்ளிவிடும் அவ்வாறான ஒரு அறிக்கையை வெளியிட கோட்டாபேய ராஜபக்ஷவுக்கு என்ன உரிமை இருக்கிறது? அவர் நியமிக்கப்பட்ட ஒரு செயலாளர் மட்டுமே. இவ்வாறான ஒரு அறிக்கை ஜனாதிபதியால் மட்டுமே வெளியிடப்பட முடியும்.  அதனைக் கூடப் பெரியளவில் அமைச்சரவையில் விவாதித்து அதன் பின்னரே வெளியிட முடியும். நாங்கள் இவ்வாறான போக்கிலேயே செயற்படுவோமாயின் சர்வதேச சமூகத்திலிருந்து நாம் அந்நியப்பட நேரிடுவதுடன் அதை எங்களால் தடுக்க முடியாதும் போய்விடும்.
 
 
கேள்வி : அரசாங்கம் எடுக்க வேண்டிய மிகப் பொருத்தமான நடவடிக்கை என்ன என நீங்கள் கருதுகிறீர்கள்?
 
 
நான் முன்னரே சுட்டிக்காட்டியதைப் போன்று அது இலங்கையின் மனச்சாட்சியோடு சம்பந்தப்பட்டது. அரசாங்கம் இந்த அறிக்கையைப் புறக்கணிக்கலாம். ஏனெனில் அரசாங்கம் இந்த அறிக்கை குறித்த நேரடியான கடப்பாடு எதனையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் எடுக்கும் நடவடிக்கைகள் இலங்கையின் எதிர்காலம் குறித்த தூரதிருஷ்டியான பார்வையைக் கொண்டிருத்தல் அவசியம். எங்கள் எல்லாருக்கும் தெரியும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று. அவை வேண்டுமென்றே செய்யப்படாதிருக்கலாம். அரசாங்கம் செய்யக் கூடியதெல்லாம் இவ்வகையான குற்றச்சாட்டுக்கள் எல்லாவற்றையும் விசாரிக்கக்கூடிய பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும். இது தமிழ் சமூகம், ஐநா, ஜனாதிபதி என்று பல்வேறு தரப்புக்களையும் பிரதிநிதித்துவம் செய்யக் கூடியதானதாக அமைதல் வேண்டும். இவ்வாறான பொறிமுறையை வெளிப்படைத்தன்மையான பொறிமுறை என்பர். பாதிக்கப்பட்ட மக்கள் வெளிப்படையாக வந்து இவ்வாறான ஆணைக்குழு ஒன்றின் முன்னால் சுதந்திரமாகத் தமது கருத்துக்களைச் சொல்ல அனுமதிக்கப்பட வேண்டும். அத்தோடு இடைக்கால நீதி கிடைப்பதற்கும் ஆவன செய்தல் வேண்டும். வெறுமனே இந்த அறிக்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் இலங்கையை நிறுத்தப் போகிறது என்ற போலித்தனமான சித்திரத்தை உருவாக்குவது அருவருக்கத்தக்கது. இந்த அச்சம் நிறைந்த உளவியல் அரசாங்கம் உண்மையாகவே தவறிழைத்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.
 
எந்த ஒரு ஜனநாயக நாடும் தாய் நாட்டின் பெயரால் காணாமல் போதல்களை அங்கீகரித்துவிட முடியாது. ஒருவர் காணாமல் போனால் அல்லது படுகொலை செய்யப்பட்டால் அது குறித்து நாம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யுமாறு கோருவது எப்படித் தவறாகும்? 1990இல் மகிந்த ராஜபக்ச ஜெனீவாவிற்குப் போனார் ஏனெனில் காணாமல் போதல்கள் குறித்து அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதால். தங்களுடைய சொந்த நாடான இலங்கையுள் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதால் தமிழ் தந்தையரும் தாய்மாரும் வேறொரு நாட்டிற்குப் போய் முறையிடுவதை அல்லது சாட்சியமளிப்பதை ஏன் ஜனாதிபதியால் ஏற்க முடியாதிருக்கிறது?
 
இந்த அறிக்கையின் இன்னொரு அம்சம் இவ்வறிக்கை அரசாங்கம் இழைத்த குற்றங்களைப் பற்றி மட்டும் பேசவில்லை. அது விடுதலைப் புலிகளையும் விமர்சிக்கிறது. அரசாங்கத்துடன் நெருக்கமாக இணைந்து இப்போது பணியாற்றும் விடுதலைப் புலிகளின் சில தலைவர்கள் இவற்றுக்குப் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு குற்;றமிழைத்தோர் மகிந்த சிந்தனையை ஏற்றுக் கொண்டால் இந்தக் குற்றங்களிலிருந்து விலக்களிக்கப்படுவது பாரிய ஒரு பிரச்சினை. மகிந்த சிந்தனையை எற்றுக் கொள்ளாதோர் ஏகாதிபத்தியத்தின் சதியாளர்களாகவே காட்டப்படுகின்றனர்.
 
எல்லா வகையான பாகுபடுத்தல்களுக்கும் இன ஒதுக்கலுக்கும் எதிரான சர்வதேச அமைப்பின் ( International Movement Against All Forms of Discrimination and Racism - IMADR) தலைவியும், பெண்ணியச் செயற்பாட்டாளருமான நிமால்கா பெர்ணாண்டோ, கொழும்பிலிருந்து வெளியாகும் ராவய என்கிற பத்திரிகைக்கு அளித்த நேர்காணல்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.