குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

30.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

தமிழக எல்லையில் குரங்கு காய்ச்சல்?

ஊட்டி: நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள கேரள மலை கிராமம் நிலம்பூர். இங்கு ஆதிவாசிகள் வாழ்கின்றனர். இவர்களில் ஒருவர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து அந்த கிராமத்திற்கு சென்ற சுகாதரத்துறை அதிகாரிகள், அவருடைய ரத்த மாதிரியை எடுத்து, ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி உள்ளனர்.

 

ஏற்கனவே பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், தற்போது குரங்கு காய்ச்சல் செய்தி அப்பகுதி மக்களை பயமுறுத்தி உள்ளது.

 

நகைகடை கொள்ளையர்கள் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நகை கடை கொள்ளையில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துகுடியில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நகை கடை ஒன்றின் பூட்டை உடைத்து 8 கிலோ எடை கொண்ட நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக உ.பி., மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

கடன் தொல்லை: தம்பதியர் விஷம் குடித்து தற்கொலை

செங்கல்பட்டு: கடன் தொல்லை காரணமாக தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். செங்கல்பட்டை அடுத்த காட்டூரை சேர்ந்த தம்பதியினர் ராஜன்,லில்லிராணி இவர்களுக்கு பிரின்ஸ் என்ற மகன் உள்ளார். தம்பதியினர் இருவரும் கடன் தொல்லையில் சிக்கி தவித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று குடும்பத்தினர் அனைவரும் விஷம் குடித்து தற்கொலைசெய்து கொள்ள முடிவு செய்தனர். இதில் தம்பதியினர் பலியாயினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரின்ஸ் மருத்துவமனையில் சிகி்ச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

 

ஹியுஸ் இறுதிச்சடங்கில் கோஹ்லி பங்கேற்பு

புதுடில்லி: சமீபத்தில் சிட்னியில் நடந்த உள்ளூர் போட்டியில் சியான் அபாட் வீசிய 'பவுன்சர்' பந்து தாக்கியதில் காயமடைந்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுஸ், 25, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறுதிச்சடங்கு வரும் 3ம் தேதி நடைபெற உள்ளது. இறுதிச்சடங்கில், இந்திய அணியின் விராட் கோஹ்லி, ரவி சாஸ்திரி, பயிற்சியாளர் பிளட்சர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

 

பிரதமர் கலந்து கொண்ட மாநாட்டிலும் தூங்கிய ரஞ்சித் சின்ஹா

கவுகாத்தி: அசாம் தலைநகர் கவுகாத்தியில், நேற்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்ட உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் தூங்கிய சி.பி.ஐ., இயக்குநர் ரஞ்சித் சின்ஹா, இன்று பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாட்டிலும் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வேன் மீது கார் மோதியதில் 3 பேர் பலி

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே, வேன் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள். 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள பேளிக்குறிச்சியிலிருந்து 9 பேர் வேன் மூலம், பெரம்பலூர் மாவட்டம் தேவையூரில் உள்ள தங்களது குல தெய்வம் கோவிலுக்கு வந்துள்ளனர். சாமி தரிசனம் செய்த பின்னர், வீடு திரும்பினர். கோவலில் இருந்து 100 அடி தூரம் சென்ற பின்னர், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேன் திரும்பியது. அப்போது, சென்னை நோக்கி சென்ற கார், வேன் மீது மோதியது. இந்த சம்பவத்தில் பேளிக்குறிச்சியை சேர்ந்த பெரியசாமி மகன் ராஜா(39) மற்றும் நாமகிரிபேட்டையை சேர்ந்த ராஜா மகன் குமரேசன்(25) ஆகியோர் மரணமடைந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரஜினிமாலா என்பவர் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பயங்கரவாதிகளுக்கு ஆதரவு: 2 பேர் கைது

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம், புருலியா பகுதியில் தடை செய்யப்பட்ட ஜமாத் உல் முகாஜீதீன் பயங்கரவாத அமைப்பை ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 10 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

 

ஐதராபாத்தில் கல்லூரி வகுப்பறையில் கல்லூரி மாணவர் கொலை

ஐதராபாத்: கல்லூரி வகுப்பறையில், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவனை, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது வகுப்பில் படிக்கும் மாணவியை, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை மாணவியுடன் படிக்கும் ஹர்சவர்தன் ராவ் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர். ஹர்சவர்தன் முகம் மற்றும் நெஞ்சில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஹர்சவர்தன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பலியானார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

தேர்தலை சீர்குழைக்க ஹூரியத் முயற்சி

ஜம்மு: காஷ்மீரில் வரும் டிசம்பர் 2ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் வெறும் கண்துடைப்பு எனக்கூறி, 2ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த வேண்டும் என பிரிவினை வாத அமைப்பான ஹூரியத் அமைப்பு கூறியுள்ளது. முதல் கட்ட தேர்தலில் மக்கள் அதிகளவில் ஓட்டளித்தது குறிப்பிடத்தக்கது.

 

பஞ்சர் டயருடன் தரையிறங்கிய விமானம்

ஜோத்பூர்: மும்பையில் இருந்து ஜோத்பூர் வழியாக டில்லி செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம், ஜோத்பூரில் பஞ்சர் ஆன டயருடன் தரையிறங்கியது. அதிர்ஷ்டவசமாக விபத்து எதுவும் ஏற்படவில்லை. இந்த விமானத்தில் 100 பயணிகள் இருந்தனர். இது குறித்து ஏர் இந்தியா நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், விமானம் தரையிறங்கிய பின்னரே பஞ்சர் ஆனது. 4 மணி நேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டுவிட்டது,' என்றார்.

 

மம்தாவுக்கு அமி்த்ஷா சவால்

கோல்கட்டா: கோல்கட்டாவில் நடந்த பிரம்மாண்ட பா.ஜ., பேரணியில் பேசிய அமித்ஷா, சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதானவர்களை காப்பாற்ற நீங்கள் (மம்தா) ஏன் துடிக்கின்றீர்கள்? சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில், சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட திரிணாமூல் காங்கிரசை சேர்ந்தவர்கள் குற்றமற்றவர்கள் என்று கூறி தயாரா? என்று கேட்டார். திரிணமூல் காங்கிரசின் ஆட்டத்தை முடிக்கவே தான் இங்கு வந்துள்ளதாக அமித்ஷா தெரிவித்தார். மேலும், வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களுக்கு ஆதரவளிப்பதை மம்தா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

பர்த்வான் குண்டு வெடிப்பு: அமித்ஷா தகவல்

கோல்கட்டா: சாரதா சிட்பண்ட் மோசடி மூலம் கிடைத்த பணத்தை கொண்டு தான், மேற்கு வங்கத்தில் உள்ள பர்த்வானில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது என, பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா கூறி உள்ளார். கோல்கட்டாவில் நடந்த பேரணியில் பேசிய அவர், ' பர்த்வான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை காப்பாற்ற மம்தா பானர்ஜி முயற்சி செய்து வருகிறார். மேற்கு வங்கத்தின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நேரம் முடிந்து கொண்டிருக்கிறது. திரிணாமூல் காங்கிரஸ் இல்லாத மேற்கு வங்கம் என்பது தான் பிரதமர் நரேந்திரமோடியின் அழைப்பாகவும், கோஷ்மாகவும் உள்ளது. நீங்களே சொல்லுங்கள். மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி திட்டங்களை செயல்படுத்தினால் அதை மம்தா பானர்ஜி ஏற்றுக் கொள்வாரா,' என்றார்.

 

பேட்மின்டன்: சிந்து மீண்டும் சாம்பியன்

மக்காவ்: மக்காவ் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சிந்து, மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார். சீனாவில், மக்காவ் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பாட்மின்டன் தொடர் நடந்தது. இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், இந்தியாவின் சிந்து, தென் கொரியாவின் கிம் ஹியோ மின் மோதினர். இதில் அபாரமாக ஆடிய இந்தியாவின் சிந்து, 21-12, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக (2013-14) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

 

மம்தா பானர்ஜிக்கு அமித்ஷா கேள்வி

கோல்கட்டா: கோல்கட்டாவில் நடந்த பிரம்மாண்ட பா.ஜ., பேரணியில், பா.ஜ.,வின் தேசிய தலைவர் அமித்ஷா பேசியதாவது: இந்த பேரணியை நடத்த தீதி (மம்தா) ?அனுமதி கொடுக்கவில்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரால் மக்களின் அன்பை தடுக்க முடியவில்லை. பா.ஜ., மீதான ஆதரவை தடுக்க முடியவில்லை. மக்கள், நல்ல ஆட்சி அமையும், வளர்ச்சி ஏற்படும் என்பதற்காகவே திரிணமூல் காங்கிரசுக்கு ஓட்டு போட்டனர். ஆனால், மூன்றரை ஆண்டுகள் ஆகியும் ஒன்றும் நடக்கவில்லை. கறுப்பு பண விஷயத்தை திரிணமூல் காங்கிரசார் பார்லிமென்ட்டில் எழுப்பி வருகின்றனர். இந்நிலையி்ல, மம்தாவிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். சாரதா சிட் பண்ட் மோசடியால் கிடைத்த பணம் கறுப்பு பணமா? அல்லது வரிகட்டப்பட்ட பணமா?. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

 

இந்தியாவுடன் உறவு: அமெரிக்கா

வாஷிங்டன்: இந்தியாவுடனான உறவு இயற்கையானது என்று அமெரிக்காவின் அரசியல் மற்றும் ராணுவ விவகாரத்துறை அமைச்சர் புனீத் தல்வார் கூறி உள்ளார்.மேலும், இந்திய, அமெரிக்க ராணுவ ஒப்பந்தங்கள் மூலம் புதிய ஆற்றல் கிடைத்துள்ளது. இந்த ஆற்றலை செயலாக்கம் செய்வதில் இரு தரப்பும் இறங்கி உள்ளன,' என்றார்.

 

7.5லட்சம் கி.மீ.,க்கு கேபிள்-ரவிசங்கர்

புதுடில்லி: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், 'நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் பிராட்பாண்ட் வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, அடுத்த மூன்றரை ஆண்டுகளில், 7.50 லட்சம் கி.மீ., தொலைவிற்கு கேபிள்கள் பதிக்கப்பட உள்ள,' என்றார்.

 

ஐ.பி., எஸ்,. அதிகாரியிடம் விசாரணை

புதுடில்லி: ஒடிசா சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக, ஐ.பி.எஸ்.அதிகாரி ராஜேஷ் குமாரிடம் சி,.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.

 

பேரணி குறித்து அமித்ஷா கருத்து

கோல்கட்டா: கோல்கட்டாவில், பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் மாபெரும் பேரணி நடந்தது. முன்னதாக, இந்த பேரணிக்கு கோல்கட்டா முனிசிபல் கார்ப்பரேஷன் அனுமதி மறுத்தது. ஆனால், கோர்ட், சில நிபந்தனைகளுடன் பேரணிக்கு அனுமதி அளித்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமித்ஷா, 'பேரணிக்கு ஐகோர்ட் அனுமதி கொடுத்ததன் மூலம், மக்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது,' என்றார்.

 

இந்தியா மீது தாக்குதல்:உளவுத்துறை

புதுடில்லி: பயங்கரவாதிகள் பெரும் தாக்குதலை நடத்துவதற்காக இந்தியா மீது குறி வைத்துள்ளனர் என, உளவுத்துறை இயக்குனர் ஆசிப் இப்ராஹிம் கூறி உள்ளார். சர்வதேச அளவில் பயங்கரவாதம் பெருகி வரும் நிலையில், பயங்கரவாத தாக்குதலுக்கு அதிகமாக உள்ளாகும் நாடாக இந்தியா உள்ளது என்று கூறிய இப்ராஹிம், ஐ.எஸ்.ஐ.எஸ்., மற்றும் அல்குவைதா ஆகிய பயங்கரவாத அமைப்புக்கள் இந்தியாவிற்கு பெரும் சவாலாக உள்ளன என்றார்.

 

மம்தா குறித்து பா.ஜ., கிண்டல்

கோல்கட்டா: மம்தாவின் சிங்கப்பூர் பயணம் குறித்து பா.ஜ.,வின் தலைவர்களில் ஒருவரான டதகாடா ராய் பேசுகையில், 'மம்தா முதலீட்டை கொண்டு வருவதாக கூறி சி்ங்கப்பூர் பயணம் மேற்கொண்டார். ஆனால், அவர் அங்கிருந்து சிங்கப்பூர் வாழைப்பழங்களை வாங்கிக் கொண்டு தான் வந்தார்,' என்றார்.

 

மோடி தான் எங்கள் அபிமன்யு-ஆர்.எஸ்.எஸ்.,

ஹரித்துவார்: ஹரித்துவாரில், சாதுக்கள் மாநாட்டில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'பிரதமர் நரேந்திரமோடி தான் எங்கள் அபிமன்யு. அவருக்கு விரிக்கப்படும் அனைத்து சக்கர வியூகங்களை அவர் உடைத்தெறிவார். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டாலும், அரசு இயந்திரம் மாறாமல் உள்ளது,' என்றார்.

 

பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறல்

ஜம்மு: சர்வதேச எல்லை பகுதியான சம்பாவில் பாகிஸ்தான் இன்றும் அத்துமீறல் செய்தது. பாக்., படையினர் நடத்திய துப்பாக்சிச்சூட்டில் இந்திய துருப்புக்கள் யாரும் காயமடையவில்லை. பாகிஸ்தானில் தாக்குதலுக்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

 

பெரிய மாற்றங்கள் வருகின்றன-ஜெட்லி

மும்பை:மிக விரைவில், பொருளாதாரத் துறையில் பெரும் மாற்றங்கள், சீர்திருத்தங்கள் வர உள்ளன என, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, ஒரு கருத்தரங்கில் பேசுகையில் கூறி உள்ளார். பொருளாதார துறைக்கான, எப்.எஸ்.எல்.ஆர்.சி., குழுவின் பரிந்துரைகளின் பேரில் இந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்காக சில சட்ட மாற்றங்கள் தேவைப்படுகிறது என்று கூறிய ஜெட்லி, மாற்றங்கள் மூலம் ஒரு நிலைத்தன்மை உருவாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மாநிலத்தின் வளர்ச்சியே நமது எண்ணம் : மோடி

கவுகாத்தி: மாநிலத்தின் வளர்ச்சியே நமது ஆத்மாத்த எண்ணமாக இருக்க வேண்டும் என அசாம் மாநிலம் கவுகாத்தியில் கட்சி தொண்டர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடிபேசினார். அவர் மேலும் பேசுகையில், இங்கு இவ்வளவு திரளாக திரண்டு வந்திருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இந்த பகுதியில் கட்சியை இவ்வளவு தூரம் பலப்படுத்தியிருப்பதற்கு நான் பாராட்டுவதுடன் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பாதுகாப்பு விஷயத்தில் எவ்வித சமரசமும் செய்யக்கூடாது. மாநிலத்தின் வளர்ச்சியே நமது ஆத்மார்த்த எண்ணமாக இருக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

 

பா.ஜ., பார்முலா: ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், 'தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., கொண்டுள்ள பார்முலா, தமிழகத்தில் பலிக்காது. மோடி அரசு பணக்காரர்களுக்கான பொருளாதார கொள்கைகளை கொண்டதாக உள்ளது. இதனால், ஏழைகளுக்கு பெரிய அளவில் எந்த பயனும் கிடைக்கவில்லை, என்றார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்களா என்ற கேள்விக்கு, 'தாங்கள் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவிப்பவர்களை நாங்கள் சேர்த்து, அரவணைத்துக் கொள்வோம்,' என்றார்.

 

இ்ஸ்ரேல்: பந்து தாக்கி அம்பயர் மரணம்

அஸ்தோத்: இஸ்ரேலில் உள்ள அஸ்தோத் நகரில் இஸ்ரேல் லீக் தொடர் நடந்தது. இதில் பேட்ஸ்மேன் விளாசிய பந்து, நேராக எதிரிலிருந்த 'ஸ்டம்பை' தாக்கியது. இதன் பின், அருகில் நின்றிருந்த அம்பயர் ஹிலெல் அவாஸ்கரின் தலையில் பலமாக தாக்கியது. இதில் இவர் நிலைகுலைந்தார். இக்கட்டான நேரத்தில், மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதும், அவாஸ்கரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து இஸ்ரேல் அணியின் தலைலை செயல் அதிகாரி கட்கார் கூறுகையில்,'' சில நாட்களுக்கு முன்தான், ஆஸ்திரேலிய வீரர் ஹியுஸ் பந்து தாக்கி மரணம் அடைந்தார். தற்போது, ஹிலெல் பந்து தாக்கி உயிர் இழந்திருப்பது சோகமானது,'' என்றார். துவக்க வீரராக செயல்பட்டுள்ள அவாஸ்கர், 55, இஸ்ரேல் அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பிலிப் ஹியுஸ், பவுன்சர் தாக்கி உயிர் இழந்த நிலையில், மற்றொரு சம்பவம் ஏற்பட்டிருப்பது கிரிக்கெட் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மம்தா இல்லாத மே.வங்கம்-பா.ஜ.,

கோல்கட்டா: கோல்கட்டா பேரணி குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.,வின் சித்தார்நாத் சிங் கூறுகையில், 'அமித்ஷா தலைமையிலான பேரணியை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என முழு முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், மம்தா இல்லாத மேற்கு வங்கத்தை உருவாக்க வேண்டும் என நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்,' என்றார்.

 

சினிமா மீது மோடி குற்றச்சாட்டு

கவுகாத்தி: சினிமா, போலீசாரை மிக மோசமாக சித்தரித்து காட்டுகின்றன என, பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். அசாம் மாநிலம், கவுகாத்தியில் நடந்த போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் பேசிய மோடி, 'சாதாரண மக்களிடம், போலீஸ் குறித்த எண்ணத்தை சினிமா மோசமாக்கி வருகிறது. ஒரு சில தவறுகள் இருக்கலாம். அதைமட்டுமே ஹைலைட்டாக்குவது ஏன் என்று புரியவில்லை. இது குறித்து திரைப்படங்களை உருவாக்குபவர்களிடம் பேச வேண்டும். அதேநேரத்தில், போலீசாரும், குறைகள் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்,' என்றார்.

 

தெலுங்கானா வெடிவிபத்து: 2 பேர் பலி

கரீம்நகர்: தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் புறநகர் பகுதியில் உள்ள பொம்மை தயாரிப்பு தொழிற்சாலையில் வைக்கட்டிருந்த சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

 

கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், பாலாங்கரைபட்டியில் இருந்து வந்த மாருதி கார் ஒன்று, கழுகுமலை அருகில், சாலை ஓர மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பாலாங்கரையைச் சேர்ந்த மாடத்தி, ஜெயமேரி, அருள் ஆகியோர் பலியாகி உள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தமிழக அரசு மீது தமிழிசை புகார்

மதுரை: ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லை என, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தருமபுரி குழந்தைகள் இறப்பிற்கு மருத்துவர்கள் பற்றாக்குறையே காரணம். தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார். மேலும், கண்மாய்களை தூர்வாருவதற்கான நிதியில், 90 சதவீதம் மத்திய அரசு வழங்கி உள்ளது என்றார்.

 

எச்.ராஜா வீ்ட்டை முற்றுகையிட முயற்சி

காரைக்குடி: ம.தி.மு.க,. பொதுச் செயலாளர் வைகோவை, பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா அவதூறாக பேசியதை கண்டித்து, காரைக்குடி, ம.தி.மு.க, சார்பில் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று காலை ஏராளமான ம.தி.மு.க,. தொண்டர்கள், காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் இருந்து பேரணியாக, சுப்ரமணியபுரத்தில் உள்ள ராஜாவின் வீட்டை நோக்கி சென்றனர். அவர்கைள, பெரியார் சிலை அருகில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

உ.பி., சாலை விபத்து: 7 பேர் பலி

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம், எடாவா என்ற இடத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும்-மோடி

கவுகாத்தி: கவுகாத்தி, போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 'ஸ்மார்ட் போலீஸ் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து யோசனை செய்து வருகிறேன். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கு அதற்கென ஒரு இணைய தளத்தை பெற்றிருக்க வேண்டும் என்பது எனது திட்டம். அவற்றில், போலீசாரின் தியாகங்கள் குறிப்பிடப்பட வேண்டும். இது, போலீஸ் குறித்த மக்களின் எண்ணங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். போலீஸ் நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டியது அவசியம்,' என்றார்.

 

நல்ல உளவு அமைப்பு அவசியம்-மோடி

கவுகாத்தி: கவுகாத்தியில் நடந்த போலீஸ் அதிகரிகள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, 'நாட்டின் பாதுகாப்பிற்கு நல்லதொரு உளவு அமைப்பு அவசியமாகிறது,'' என்றார்.

 

சாராயம் கடத்தியவர் துப்பாக்கியுடன் கைது

நாகப்பட்டினம்: நாகை ஏஎஸ்பி. சசாங் சாய் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஒரு காரில் 3 கேன் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காரை ஓட்டி வந்த கதிரவன், என்பவர் மேலவாஞ்சூரைச் சேர்ந்தவர். அவரிடமிருந்த ஒரு வௌிநாட்டு பிஸ்டலும் பறிமுதல் செய்யப்பட்டது. கதிரவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

புதுக்கோட்டை:தனியார் வங்கியில் கொள்ளை:20 கிலோ நகைகள் மீட்பு

புதுக்கோட்டை:புதுக்கோட்டை, கீரனுார் அருகே, குளத்துார் தனியார் வங்கியில் கொள்ளையடித்து தப்ப முயன்றபோது போலீசார் ரோந்து வருவதை அறிந்து 20 கிலோ நகை மற்றும் பணத்தை போட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பிஓடிவிட்டனர்.இந்நிலையில் போலீசார் நகைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.கொள்ளையர்கள் வங்கியின் பின்பக்க கதவை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

மாஜிதுணை வேந்தர் ஹசன் படுகாயம்

புதுடில்லி:ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைகழக மாஜி துணை வேந்தர் முஷிருல் ஹசன், அரியானா மாநிலம் மிவட்டில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். காயமடைந்த அவர் புதுடில்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

உள்ளாட்சித் தேர்தல் தோல்வி எதிரொலி:தைவான் பிரதமர் ராஜினாமா

தைபே:தைவான் நாட்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பேற்று அந்த நாட்டுப் பிரதமர் ஜியாங் யீ ஹூவா தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.தைவான் நாட்டில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், ஆளுங்கட்சியான குமின்டாங் கட்சி, மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் 5-இல் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்று பிரதமர் ஜியாங் யீ ஹூவா தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.இது குறித்து அவர் பேசுகையில், குமின்டாங் கட்சியின் தோல்விக்கு அரசியல்ரீதியாக பொறுப்பேற்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறினார்.

 

பாக்.,கில் மூத்த அரசியல் தலைவர் சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் ஜாமியத் உலமா இ இஸ்லாம் (பாஜி) கட்சியின் மூத்த தலைவராக திகழ்ந்தவர் டாக்டர் காலித் மக்மூத் சூம்ரோ. சிந்து மாகாணத்தின், லர்கானா பகுதியை சேர்ந்த இவர், 2006-12 காலகட்டத்தில் பாகிஸ்தான் பார்லிமென்ட் மேல்-சபை எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார். சன்னி பிரிவின் முக்கிய தலைவராகவும் விளங்கினார்.இவர் கராச்சியில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ள சுக்குர் என்ற இடத்தில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார்.இந்நிலையில் நேற்று அதிகாலை அவர் அங்குள்ள மசூதி ஒன்றுக்கு சென்று தொழுகை நடத்தி முடித்து விட்டு வெளியே வந்தார். அப்போது அந்த மசூதி வளாகத்துக்குள் துப்பாக்கியுடன் புகுந்த 2 ஆசாமிகள் அவர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பினர்.

 

105 வயதுமுதியவர் மரணம்

காவேரிப்பட்டணம்:காவேரிப்பட்டணம் அடுத்த போத்தாபுரத்தை சேர்ந்தவர் ராஜி, 105. இவர், 1909ம் ஆண்டு பிறந்தார். விவசாயத்தையே அடிப்படை தொழிலாக கொண்ட இவருக்கு, இரண்டு மகன்கள் மற்றும், 30க்கும் மேற்பட்ட பேரன்கள், கொள்ளு பேரன்கள், பேத்திகள் உள்ளனர். ஊரில் நடக்கும் கோவில் திருவிழா உட்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இவர், தலைமையில் பொதுமக்கள் நடந்து வந்தனர்.மேலும், தேர்தலில் போட்டியிடும், பல்வேறு அரசியல் கட்சியினர், இவரை சந்தித்து ஆசி பெற்று வந்தனர்.இவர், நேற்று முன்தினம் திடீரென மரணம் அடைந்தார்.

 

பிரான்ஸ்:எதிர்கட்சி தலைவராக சர்கோஷி தேர்வு

பாரீஸ்:பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஷி,அந்நாட்டின் எதிர்கட்சி(யு.எம்.பி)தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதனயைடுத்து மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கு அவர்,மீண்டும் முயற்சிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

'மாஜி' மகள் மீது நிலமோசடி வழக்கு

திண்டுக்கல்: முன்னாள் எம்.எல்.ஏ.,வின் மகள் மற்றும் உறவினர் மீது திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வால்பாறையில் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் பொன்னையா. இவரது மகள் அகிலாண்டேஸ்வரி திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி., ஜெயச்சந்திரனிடம் அளித்த புகார் மனு:பழநி அழகாபுரியில் வசிக்கிறேன். எனது தந்தைக்கு சொந்தமான 3.99 ஏக்கர் நிலம் பழநியில் இருந்தது. இதில் 2.36 ஏக்கர் நிலத்தை விற்று பணத்தை நானும் எனது சகோதரர்களும் பிரித்து கொண்டோம். மீதமுள்ள 1.63 ஏக்கர் நிலத்தை விற்பதற்காக மற்றவர்கள் எனக்கு தெரியாமல் சகோதரி பரமேஸ்வரிக்கு பவர் பத்திரம் எழுதி கொடுத்துள்ளனர்.அதை பயன்படுத்தி பரமேஸ்வரி அவரது மருமகன் பிரேம்குமாருக்கு நிலத்தை விற்பனை செய்துள்ளார். இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கூறப்பட்டுள்ளது. எஸ்.பி., உத்தரவின் பேரில் பரமேஸ்வரி, பிரேம்குமார் மீது வழக்கு பதிவு செய்து மாவட்ட குற்றபிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.