குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

29.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

ஜெ.,வின் நிலை என்ன? கருணாநிதி கேள்வி

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க., அரசை பற்றிய பிரச்னைகள் மூன்றரை ஆண்டுகளில் மலை போல் குவிந்து கிடக்கின்றன. முதல்வர் எச்சரிக்கைக்கு அஞ்சாமல் தி.மு.க., தன் கடமையை சட்டப்படி செய்யும். டிச.,4ம் தேதி துவங்கும் சட்டசபை கூட்டத்தொடரில்,கலந்து கொள்வதில் எந்த தடையும் இல்லை.

அதற்கு பயமும் இல்லை. ஆனால் ஜெ.,வின் நிலை என்ன ? அரசின் பொறுப்புகளை கவனிக்கிறாரோ இல்லையோ, தினசரி அறிக்கை விட தவறுவதில்லை. பன்னீர்செல்வத்துக்கு தமிழகத்தை ஆளும் முதல்வர் என்பது மறந்துவிட்டார். கல்லூரி முதல்வர் போல் அறிக்கை விடுகிறார். ஜெ., வழியில்அறிக்கை விட தவறுவதில்லை. ஆட்சியின் அவலங்கள் பற்றி நாள் கணக்கில் பேச ஏராளமான பொருள்கள் தாராளமாகவே உள்ளன. வாயை கொடுத்து வம்பை விலக்கு வாங்குவது ஏன். முதல்வராக பதவியேற்பதற்கு முன்பு இருந்ததை போல் அமைதியாக இருப்பதே பன்னீருக்கு அலகு என கூறியுள்ளார்.

 

நெல்லையில் நடந்த சாலை விபத்தில் குஜராத் பா.ஜ., மாவட்ட பஞ்., தலைவி மரணம்

திருநெல்வேலி: குஜராத் மாநிலம் கினாகத் மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் பீவி பென் பாரியா. பா.ஜ.,வை சேர்ந்த இவர் சுற்றுலாவிற்காக ராமேஸ்வரம் சென்றுவிட்டு, கேரள மாநிலம் கோவளம் சென்ற போது, நெல்லை மாவட்டம் காதக்கிணறு என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் பலியானார். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

 

பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தவருக்கு காவல்

மும்பை:மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சார்ந்த ஆரீப் மஜீத் என்ற இளைஞர், தன் நண்பர்கள் சிலருடன் ஈராக் சென்று, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தார். அங்கு நடந்த சண்டையில், அவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.இந்நிலையில், திடீர் திருப்பமாக, ஆரீப் மஜித் உயிருடன் இருப்பது தெரியவந்தது. அவர், நேற்று மும்பை வந்தார். அவரை, தங்களின் காவலில் எடுத்து, விசாரணை நடத்திய, தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள், பின்னர் கைது செய்தனர். இதையடுத்து, மும்பையில் உள்ள சிறப்பு கோர்ட்டில், ஆரீப் மஜீத் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, 'ஆரீப் மஜீத், பயங்கரவாத அமைப்பில், இளைஞர்களை சேர்ப்பதற்காக, சதித் திட்டம் தீட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது' என, தேசிய புலனாய்வு அமைப்பான, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.உடன், ஆரீப் மஜீத்தை, டிச., 8ம் தேதி வரை என்.ஐ.ஏ., காவலில் வைத்து விசாரிக்க, கோர்ட் அனுமதி அளித்தது.

 

போலி பணி நியமன ஆணை தயாரித்தவரிடம் விசாரணை

கோவை: கோவை மாவட்டம் லாலி ரோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராமன்(33). இவர் பலரிடம் அரசு வேலை, ஆன் லைன் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுள்ளார். இந்நிலையில், இவர் சிலருக்கு போலியாக பணிநியமன ஆணையை தயாரித்து சிலருக்கு கொடுத்துள்ளார். அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலகத்துக்கு கொண்டு சென்றபோது, பணி நியமன ஆணைபோலி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், வேறு சிலருக்கு போலி நியமன ஆணை வழங்கிய போது. சுந்தர்மாமனை, பிடித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

 

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புதுடில்லி: லோக்சபா தேர்தல் செலவு குறித்து அறிக்கையை சமர்ப்பிக்காத பா.ஜ., காங்கிரஸ், ஆம் ஆத்மி,சமாஜ்வாடி, தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி உள்ளிட்ட 20 அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

நடிகர் சங்கத்தில் இருந்து குமரிமுத்துவை நீக்க தடை

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து, சிரிப்பு நடிகர் குமரிமுத்துவை நீக்கும் தீர்மானத்தை அமல்படுத்த, சென்னை சிவில் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை, தி.நகரில் உள்ள, நடிகர் சங்கத்தின் இடத்தில், கட்டுமானம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தால், சங்கத்துக்கு, 150 கோடி ரூபாய், இழப்பு ஏற்பட்டிருப்பதாக, செய்திகள் வெளியாகின. இதுகுறித்து, வெள்ளை அறிக்கை வெளியிடும்படி, நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார் மற்றும் பொதுச் செயலர் ராதாரவிக்கு, சிரிப்பு நடிகர் குமரிமுத்து கடிதம் அனுப்பினார்.இதையடுத்து, குமரிமுத்துவிடம் விளக்கம் கேட்டு, நடிகர் சங்கத்தில் இருந்து, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. அவரும், பதில் அளித்தார். கடந்த ஆண்டு, மார்ச்சில் நடந்த, நிர்வாக குழு கூட்டத்தில், விளக்கம் அளித்தார். பின், நடிகர் சங்கத்தில் இருந்து, குமரிமுத்துவை நீக்குவது என, நிர்வாகக் குழு முடிவெடுத்தது. அந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்கி, கடந்த ஆண்டு, செப்டம்பரில் நடந்த, பொதுக்குழுவில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை எதிர்த்து, சென்னை, சிவில் நீதிமன்றத்தில், குமரிமுத்து, தாக்கல் செய்த மனு: பத்திரிகைகளில் வந்த செய்திகளால், நடிகர் சங்கத்தின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டது, உறுப்பினர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது குறித்து, சங்கத்தின் தலைவர்களுக்கு, கடிதம் அனுப்பினேன். விதிமுறைகளை நான் மீறவில்லை.எனவே, நடிகர் சங்க உறுப்பினரில் இருந்து, என்னை நீக்கியது செல்லாது என, உத்தரவிட வேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், சட்டவிரோதமானது என, உத்தரவிட வேண்டும். தீர்மானத்தை அமல்படுத்த, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, சிவில் நீதிமன்றம், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமல்படுத்த, இடைக்கால தடை விதித்தது. விசாரணையை, டிச., 11ம் தேதிக்கு, தள்ளிவைத்தது.

 

ம.பி.,யில்காஸ் கசிவு: 39 பேர் பாதிப்பு

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில், ஏற்பட்ட காஸ் கசிவில் குறைந்தது 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணைநடைபெற்று வருகிறது.

 

தனியார் வசம் ரயில்வே நிலையங்கள்: மோடி விருப்பம்

ஷில்லாங்: மேகாலாயா சென்றுள்ள பிரதமர் மோடி, மெண்டிபதார்-கவுகாத்தி பயணிகள் ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் உள்ள ரயில்வே நிலையங்களை தனியார் வசமாக்க அரசு விரும்புவதாகவும், முதல் கட்டமாக 10-12 ரயில் நிலையங்கள் தனியார் வசமாக்க ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.

 

ஆற்காட்டில் குழந்தை விற்பனை: 5 பேர் கைது

சேலம்: ஆற்காட்டில் பிறந்து ஒரு மாதமான குழந்தையை விற்ற சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தையின் பெற்றோர் பிச்சாண்டி- தேவி விற்க உதவிய முருகன், பாஷா மற்றும் குழந்தையை ரூ.10 ஆயிரத்துக்கு வாங்கிய சையத் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ஏர் இந்தியா விமான டயரில் புகை ; 132 பயணிகள் தப்பினர்

கோல்கட்டா : மேற்குவங்கம் கோல்கட்டாவில் ஏர் இந்திய விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. டயரில் புகை வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 132 பயணிகள் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர்.

 

அருப்புக்கோட்டை பள்ளி மாணவன் கொலை; ஒருவர் கைது

பெரியநாயக்கன்பாளையம்: அருப்புக்கோட்டை பள்ளி மாணவன் கொலை தொடர்பாக முன்னாள் மாணவன் ஒருவரை பெரியநாயக்கன் பாளையம் போலீசார் கைது செய்தனர். வீரபாண்டி மாரியம்மன் கோயில் அருகே உள்ள அவரது அக்காள் வீட்டில் அந்த மாணவன் பதுங்கி இருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

 

பாக்.,நட்பு நாடல்ல:வி.கே.சிங்

புதுடில்லி : தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் வி.கே.சிங், பாகிஸ்தான் இந்தியாவின் நட்பு நாடல்ல. அண்டை நாடு மட்டுமே. தனது அண்டை நாடுகளுடன் இந்தியா நல்லுறவையே விரும்புகிறது என தெரிவித்துள்ளார்.

 

சீனாவில் தாக்குதல்: 15 பேர் பலி

பீஜிங் : சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலியாகி இருப்பதாகவும், 14 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் சீன செய்தி ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன.

 

சுஷ்மா டம்மி அமைச்சர் இல்லை:பிரகாஷ்

புதுடில்லி : மத்திய அரசின் 6 மாத செயல்பாடு குறித்து பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவேத்கர், காங்கிரஸ் கட்சி தனது ஆட்சி காலத்தில் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை செய்துள்ளோம். கறுப்பு பண விவகாரத்தில் பா.ஜ., பொய்யான வாக்குறுதிகளை அளிக்கவில்லை. சுஷ்மா சுவராஜ் தனது பணியை தீவிரமாக செய்து வருகிறார். அவர் டம்மி அமைச்சர் இல்லை. அவர் மட்டுமல்ல அமைச்சரவையில் இருக்கும் அனைவரும் இரவு பகலாக உழைத்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

 

ஸ்ரீநகரில் வெடிகுண்டு தாக்குதல்

ஸ்ரீநகர் : காஷ்மீரின் ஸ்ரீநகரில் லால் சவுக் பகுதியில் கையெறி குண்டு தாக்குதலில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

 

புதுவையில் 500 ஆண்டு பழமையான நகராட்சி கட்டிடம் இடிந்தது

புதுச்சேரி : புதுச்சேரியில் 500 ஆண்டுகள் பழமையான நகராட்சி கட்டிடம் இடிந்து விழுந்தது. கடற்கரை சாலையில் உள்ள இந்த 3 அடுக்கு கட்டிடத்தில் புனரமைப்ப பணிகள் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

 

ரயில் மறியல்:தேமுதிக எம்.எல்.ஏ கைது

மயிலாடுதுறை : கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் எம்.எல்.ஏ., அருள்செல்வன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 100 பெண்கள் உள்ளிட்ட 500 பேர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், தேமுதிக.,வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து எம்.எல்.ஏ., அருள்செல்வன் உள்ளிட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

மதுரை தி.மு.க., உள்கட்சி தேர்தல் டென்ஷன்

மதுரை: மதுரை மாவட்ட தி.மு.க,. உள்கட்சி தேர்தலில் காரசார வாக்குவாதம் நடந்தது. மாவட்டத்தில் 13 ஒன்றியம் 3 நகராட்சி ஆகியவற்றுக்கு உள்கட்சி தேர்தல் நடந்தது. மேற்கு ஒன்றியத்திற்கு வீரக்குமார், தனசேகர் , செல்வம் ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். மாவட்ட தலைவர் மூர்த்தியின் ஆதரவாளர். ஓட்டு போடும் போது போலி அடையாள அட்டையுடன் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 

ஆரிப் மஜீத்திற்கு டிச.8 வரை காவல்

புதுடில்லி : ஐஎஸ்ஐஎஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பி வந்த ஆரிப் மஜித் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை டிசம்பர் 8ம் தேதி வரை தேசிய புலனாய்வ அமைப்பின் பிடியில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

டிச., 3ல் ஹியுஸ் உடல் அடக்கம்

சிட்னி: 'பவுன்சர்' தாக்கி மரணம் அடைந்த பிலிப் ஹியுஸ் உடல், அவரது சொந்த ஊரில் டிச., 3ல் அடக்கம் செய்யப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் நடந்த முதல் தர போட்டி 'ஷெபீல்டு ஷீல்டு' தொடரில், நியூ சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலிய அணிகள் மோதின. சியான் அபாட் வீசிய 'பவுன்சர்', தெற்கு ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுஸ், 25, கழுத்து மற்றும் தலை பகுதியில் பலமாக தாக்கியது. இதில், நினைவு இழந்த ஹியுசிற்கு, தலையில் 'ஆப்பரேஷன்' நடந்தது. இருப்பினும் மூளையில் தொடர்ந்து ரத்தக் கசிவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் மரணம் அடைந்தார். ஹியுஸ் உடல் அடக்கத்தை ஹியுஸ் சொந்த ஊரான மேக்ஸ்விலியில் நடத்த, அவரது குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்தனர். இதன் படி, வரும் டிச., 3 ம் தேதி, இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு, மேக்ஸ்விலி மேல்நிலைப்பள்ளியில் உள்ள விளையாட்டு மையத்தில் நடக்கவுள்ளது.

 

ராஜ்நாத்திற்கு குர்ஷித் அட்வைஸ்

புதுடில்லி : கவுகாத்தியில் டி.ஜி.பி.,மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், உள்துறை அமைச்சரின் பொறுப்பு ஐஎஸ் பயங்கரவாதிகள் இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதை சொல்வதில் மட்டும் இல்லை. அவர்களை தடுக்க இவர்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள் என்பதை கூறுவதிலும் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

நெல்லையில் கொலை: மார்க்.,கம்யூ மறியல்

திருநெல்வேலி: நெல்லை டவுண் அருகே பேட்டை பகுதியை சேர்ந்தவர் மார்க்., கம்யூ செயலர் கோபி . இவர் ஆட்டோ டிரைவர் ஆவார். இவர் இன்று அபிஷேகப்பட்டி அருகே வெட்டுப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். சுத்தமல்லியை சேர்ந்த ராஜா என்பவர் மீது கோபி கந்து வட்டி புகார் கொடுத்திருந்தார். ஆனால் போலீஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கோபி கொலை செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்., கம்யூ., மாவட்ட செயலர் பாஸ்கரன் தலைமையில் பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரி அருகே மறியலில் ஈடுபட்டனர்.

 

மணிப்பூரில் குண்டுவெடிப்பு:ஒருவர் பலி

தவ்பால் : மணிப்பூரின் தவ்பால் மாவட்டத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஒருவர் பலியாகி இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மூப்பனாரை முன்னிறுத்தி காங்.,செயல்படாது

சென்னை : சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் கட்சிக்காக மூப்பனார் என்ன செய்தார் என தெரியவில்லை. மூப்பனாரை முன்னிறுத்தி காங்கிரஸ் செயல்படாது என தெரிவித்துள்ளார்.

 

வங்கியில் ரூ.1.5 கோடி கொள்ளை

புதுடில்லி : வடக்கு டில்லியில் பணம் ஏற்றி வந்த வங்கி வாகனத்தை வழிமறித்த கொள்ளையர்கள் காவலாளியை கொலை செய்து விட்டு, வாகனத்தில் இருந்த ரூ.1.5 கோடியை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

 

எல்லையில் கர்நாடக வாகனங்கள் நிறுத்தம்

சேலம் : சேலம் மாவட்ட எல்லையில் கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அக்டோபர் 21ம் தேதி சோதனை சாவடி அருகே பழனி என்ற விவசாயி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக கோவிந்தப்பாடி கிராம மக்கள் சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதால் பாதுகாப்பு கருதி பாலாறு எல்லையிலேயே கர்நாடக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு கர்நாடக போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

100 ஆண்டு எதிர்காலத்திற்கான தேர்தல்:மோடி

ஜாம்ஷத்பூர்: ஜார்கண்டின் ஜாம்ஷத்பூரில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கடந்த முறை பாதி மைதானத்திற்கு இங்க மக்கள் கூடியதற்கே நாங்கள் பெரும்பான்மை வெற்றி பெற்றோம். தற்போது முழு மைதானமும் நிரம்பி உள்ளது. நீங்கள் என் மீது காட்டும் அன்பு தான் என்னை மீண்டும் இங்கு அழைத்து வந்துள்ளது. ஜாம்ஷத்பூரும், ஜார்கண்டும் பா.ஜ.,விற்கு அளித்த வெற்றிக்கு நன்றி கூறவே இங்கு வந்துள்ளேன். இதுவரை மாநில பொறுப்பை ஆள சிறந்த தலைவர்களை தேர்வு செய்து வந்துள்ளீர்கள். இந்த தேர்தல் அடுத்த 100 ஆண்டுகளுக்கான இந்த மாநிலத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க போவது. என தெரிவித்துள்ளார்.

 

மாணவன் கொலை: ஒருவர் கைது

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தகுடி அரசு பள்ளியில் 8ம் வகுப்பு மாணவன் பாஸ்கரன் நேற்று, வகுப்பறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மகேஷ்வரன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மாரீஸ்வரனை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.

 

தீவிரமடைகிறது காற்றழுத்த தாழ்வு நிலை

சென்னை வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறி வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் இது மேலும் வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

அரசு மீது மணிஷ் திவாரி குற்றச்சாட்டு

புதுடில்லி : மத்திய அரசால் தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த பொருளாதார வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. சுகாதாரத்துறை அமைச்சரே புகையிலை ஆலை நடத்தி வருகிறார். பிறகு புகையிலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள தடையால் என்ன பயன் இருக்க முடியும்? இது அத்தனையும் பா.ஜ.,வின் இரட்டை வேட நிலைப்பாட்டையே காட்டுகிறது என காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி குற்றம்சாட்டி உள்ளார்.

 

விரைவில் கறுப்பு பண 2வது பட்டியல்:ஜவேத்கர்

சென்னை : சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவேத்கர், மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுப்பதற்கு சிக்னல்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவேத்கர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக மீனவர்கள் பிரச்னையில் விரைவில் தீர்வு காணப்படும். கறுப்பு பணம் வைத்திருப்போர் குறித்த 2வது பட்டியல் விரைவில் வெளியிடப்படும். கறுப்பு பண விவகாரம் தொடர்பாக இதுவரை 428 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

சேலம் மருத்துவமனையில் அமைச்சர்கள் ஆய்வு

சேலம் : சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

 

72 ரத்த வங்கிகளுக்கு நோட்டீஸ்

புதுடில்லி : நோயாளிகளிடம் அதிக பணம் வசூலிப்பதாக வந்த புகாரை அடுத்து 72 ரத்த வங்கிகளுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

 

பயங்கரவாதம் மிகப்பெரிய சவால்:ராஜ்நாத்

கவுகாத்தி : அல்குவைதா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் எனவும், அவர்களை சாதாரணமாக எடை போட்டு விடக் கூடாது எனவும் கவுகாத்தியில் டி.ஜி.பி.,க்கள் மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் உலகம் முழுவதும் பயங்கரவாதம் உள்ளது, ஆனால் அதனை நமது நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது எனவும், சர்வதேச பயங்கரவாதம் இந்தியாவை எந்த விதத்திலும் பாதிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மேகாலயாவில் முதல் ரயில் சேவை

கவுகாத்தி : நான்கு நாட்கள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி, வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்று வருகிறார். இதன் ஒரு பகுதியாக மேகாலயா-அசாம் இடையேயான முதல் ரயில் சேவையை அவர் கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். மேலும் திரிபுராவில் மின்திட்டத்தையும், நாகாலாந்து மற்றும் மணிப்பூரில் நடைபெறும் விழாக்களையும் பிரதமர் துவக்கி வைக்க உள்ளார்.

 

அல்குவைதா,ஐஎஸ்ஐஎஸ் மிகப்பெரிய அச்சுறுத்தல்

கவுகாத்தி : அல்குவைதா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் எனவும், அவர்களை சாதாரணமாக எடை போட்டு விடக் கூடாது எனவும் கவுகாத்தியில் டி.ஜி.பி.,க்கள் மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்

 

கும்பமேளா விபத்திற்கு ரயில்வே காரணம்

புதுடில்லி : 2013ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி அலகாபாத் கும்பமேளாவின் போது ஏற்பட்ட விபத்திற்கு ரயில்வே நிர்வாகத்தின் முறையாக ஒருங்கிணைப்பும், பேரிடர் பாதுகாப்பு திட்டம் இல்லாததுமே காரணம் என பார்லி.,ல் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

 

பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்:ராஜ்நாத்

கவுகாத்தி : கவுகாத்தியில் டி.ஜி.பி.,க்கள் மற்றும் ஐ.ஜி.,க்கள் மாநாட்டை துவக்கி வைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் போலீசார் மற்றும் புலனாய்வு பிரிவின் பங்கு மிக முக்கியமானது. பணியின் போது உயிரிழந்த போலீசாரை தலைவணங்குகிறேன். டில்லியில் தேசிய போலீசார் நினைவிடம் அமைப்பதற்கு ரூ.50 கோடி ஒதுக்கப்படும் என தெரிவித்தார். டில்லிக்கு வெளியே நடைபெறும் முதல் டி.ஜி.பி.,க்கள் மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவும் கலந்து கொண்டுள்ளார்.

 

விழுப்புரம் கல்வராயன்மலையில் துப்பாக்கி தொழிற்சாலை 12 பேர் கைது

கச்சிராப்பாளையம்: விழுப்புரம் கல்வராயன்மலையில் துப்பாக்கி தொழிற்சாலை நடத்திய 2 பேர் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். குத்திராம்பட்டு பாப்பாத்திமூலை பகுதியில் துப்பாக்கி தொழிற்சாலை நடத்துவதாக மாவட்ட எஸ்.பி. விக்கிரமனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் டி. எஸ்.பி., மதிவாணன் தலைமையில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். இதில் தொழிற்சாலை நடத்திய சுப்பிரமணி ( 48), மணிகண்டன் ( 27) , ஆகிய இருவரும் துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்துவது கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து 10 துப்பாக்கிகள் மற்றும் இது தயாரிக்கும் மூல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து துப்பாக்கி வாங்கிய கஜேந்திரன், சிவக்குமார், அண்ணாமலை, மாணிக்கம், கந்தசாமி, வெங்கடேசன், லட்சுமணன், ராஜிமாணிக்கம், ஏழுமலை ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

 

கவுகாத்தியில் டி.ஜி.பி., க்கள் மாநாடு

கவுகாத்தி: கவுகாத்தியில் நடைபெற்று வரும் டி.ஜி.பி.,க்கள் மற்றும் ஐ.ஜி.பி.,க்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கவுகாத்தி சென்றுள்ளார். இக்கூட்டத்தில் பிரதமர் மோடியும் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக கவுகாத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

வைகோவிற்கு சாமி எச்சரிக்கை

புதுடில்லி : பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி, வைகோவிற்கு எனது தகவல் என குறிப்பிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தூக்கி எறியப்படுவதற்குள் நீங்களாகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி விடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

 

200 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமேஸ்வரம் : தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 200 கிலோ கஞ்சா பொருட்களை க்யூ பிரிவு போலீசார் அதிரடியாக வளைத்து பிடித்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

 

மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கடையூரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் காட்டுச்சேரி பகுதியில் இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் தில்லையாடி கோயில் நிலத்தில் அனுமதியின்றி, சட்டவிரோதமாக மணல் அள்ளி உள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்து அங்கு சென்ற அதிகாரிகள், மணல் அள்ளிக் கொண்டிருந்த ஜே.சி.பி., வாகனம் மற்றும் 2 லாரிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

 

ஊட்டியில் கோழிகள் மர்ம சாவு

ஊட்டி: ஊட்டி கூடலூர் அருகே உள்ள புந்தலாடி பகுதியில் 20 கோழிகள் மர்மமான முறையில் பலியாகி உள்ளன. இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

 

நைஜீரியா தாக்குதல்: ஐ.நா., கண்டனம்

ஐ.நா., : நைஜீரியாவில் மசூதி ஒன்றின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 82 பேர் பலியாகினர். இச்சம்பவத்திற்கு ஐ.நா., பொதுச் செயலாளர் பான் கீ மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். அப்பாவி பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், பயங்கரவாதித்திற்கு எதிராக நைஜீரிய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஐ.நா., முழு ஆதரவு தர தயாராக இருப்பதாகவும், சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைகள் அடிப்படையில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

கிருஷ்ணகிரி:போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடிசோதனை:ரூ.2 லட்சம் சிக்கியது

கிருஷ்ணகிரி:.கிருஷ்ணகிரி அருகே கர்நாடக எல்லையை ஒட்டிய ஓசூர் ஜூஜூசாவடி சோதனை சாவடி போக்குவரத்து அலுவலகங்களில், புரோக்கர்கள் மீதான நடவடிக்கையின் காரணமாக இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடிசோதனையில், கணக்கில் வராத பணம் ரூ.2 லட்சம் கைப்பற்றப்பட்டது.மேலும் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர்,தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

காஷ்மீர்: ராணுவம்-பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்தது

உதாம்பூர்:கடந்த 26, 27-ந்தேதிகளில் இந்திய எல்லையில் உள்ள ஆர்னியா பகுதியில் 4 தீவிரவாதிகள் ராணுவ சீருடையில் அங்கிருந்த காந்தார் கிராமத்துக்குள் ஊடுருவினர்.நேற்று முன்தினம் அந்த 4 பேரும் அங்குள்ள சிதைக்கப்பட்ட 2 ராணுவ பதுங்கு குழிகளில் புகுந்து கொண்டனர். பின்னர் ராணுவ வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுடத்தொடங்கினர்.இருப்பினும் சுதாரித்துக்கொண்ட நமது ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சண்டையில் 4 பொதுமக்களும், ராணுவ வீரர்கள் 3 பேரும், 3 தீவிரவாதிகளும் பலியானார்கள்.காஷ்மீரில் 2-வது நாளாக நேற்று நடந்த துப்பாக்கி சண்டையில் எஞ்சியிருந்த தீவிரவாதியும் சுட்டுக்கொல்லப்பட்டான்.இதையடுத்து இந்த சண்டையில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.

 

உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவுக்கு வெற்றி: நிர்மலா சீதாராமன்

புது டில்லி:ஜெனீவாவில், உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில், உணவுப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.ஜெனீவா கூட்டத்தில் இந்தியாவுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

6மாதங்களில் ரூ.3,300 கோடி கறுப்பு பணம்: மத்திய அரசு

புது டில்லி:வருமான வரித் துறை சோதனையின் போது, நிகழ் நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் கணக்கில் வராத ரூ.3,371 கோடி கறுப்பு பணம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா மக்களவையில் நேற்று தெரிவித்தார்.ரூ.283 கோடி மதிப்புடைய சொத்துகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.லோக்சபாவில் இது குறித்து அவர் பேசுகையில்,கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து செப்டம்பர் வரை 273 நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில் வருமானத்துக்கு புறம்பான வகையில் இருந்த ரூ.283 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.3,371 கோடி அளவுக்கு கணக்கில் வராத பணம் இருப்பது தெரிய வந்ததுள்ளது என்றார்.

 

ஆந்திர தலைநகரை நிர்மாணிப்பதில் ஜப்பான் உதவி

டோக்கியோ: ஆந்திர தலைநகரை நிர்மாணிப்பதில் ஜப்பான் உதவி செய்யும் என உறுதியளித்துள்ளது. ஜப்பான் சென்றுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவை சந்தித்து பேசினார். அப்போது, தலைநகரை நிர்மாணிப்பதில் உதவி செய்வோம் என ஜப்பான் பிரதமர் கூறியதாக சந்திரபாபு கூறியுள்ளார். வர்த்தகம், உள்கட்டமைப்பு, தொழில்நட்பம், விவசாயம், ஆட்டோமொபைல் துறைகளில் இந்தியா மற்றும் ஆந்திராவுடன் உறவை மேம்படுத்த விரும்புவதாக ஜப்பான் கூறியதாகவும் சந்திரபாபு கூறினார்.

 

40 இந்திய சிறைக்ககைதிகள் ஒப்படைத்தது பாக்.,

கராச்சி: மோடி, நவாஸ் கைகுலுக்கி கொண்ட அடுத்த நாளில், 40 கராச்சி சிறையில் இருந்த 40 இந்திய சிறைக்கைதிகளை பாகிஸ்தான் விடுதலை செய்தது. இவர்களில், மீனவர்களும் அடக்கம் என கராச்சி சிறை அதிகாரி ஒருவர் கூறினார்.

 

சாமியார் ராம்பாலை கைது செய்ய ரூ.26 கோடி செலவு

சண்டிகர்: அரியானாவில் கொலை வழக்கில் சிக்கிய சாமியார் ராம்பாலை கைது செய்ய ரூ.26.61 கோடி செலவானதாக போலீஸ் டி.ஜி.பி.,, கூறியுள்ளார். பஞ்சாப் மற்றும் அரியானா மாநில அரசுகள் சாமியாரை கைது செய்ய செலவு செய்ததாகவும், பஞ்சாப் மாநில அரசு ரூ.4.34 கோடி செலவு செய்ததாகவும், அரியானா அரசு, ரூ.15.43 கோடியும். சண்டிகர் நிர்வாகம், ரூ. 3.39 கோடி செலவு செய்ததாகவும் கூறினார்.

 

தூய்மை இந்தியா எங்களது திட்டம்: மன்மோகன் சிங் பேச்சு

கும்பலங்கி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டத்தை, பெயரை மாற்றி தூய்மை இந்தியா என பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிர்மல் பாரத் அபியான் திட்டத்துடன், தூய்மை இந்தியா திட்டம் ஒத்துப்போவதாகவும் கூறினார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.