குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

தமிழகச் சந்தைகளில் இலவசப் பொருளாக ஈழம்!குமரிநாட்டின் பார்வையும் உண்டு.

  03..06.2011.த.ஆ.2042--முன்னுரை: அன்பிற்கினிய உறவுகளே; இப் பதிவின் நோக்கம் தமிழக மக்கள் மத்தியில் உள்ள இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் மீதான தார் மீக ஆதரவைச் சீர் குலைப்பதோ அல்லது தமிழக உறவுகளின் இலங்கைத் தமிழர்கள் பற்றிய உணர்வுகளைத் மதிக்காது செய்வதோ அல்ல. ஈழம் எனும் சொல் இன்றைய கால கட்டத்தில் அகிலமெல்லாம் உச்சரிக்கப்படும் ஒரு சொல்லாகி விட்டது. தமிழக மக்கள் மத்தியில் ஈழம் எனும் சொல்லிற்குரிய அர்த்தமோ, தலை கீழான நிலையில் நோக்கப்படுகிறது.
இலக்கணக்காரரின் கூற்றின் அடிப்படையிலும், வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையிலும், ஈழம் எனும் சொல் ஒட்டு மொத்த அல்லது முழு இலங்கைத் தீவினையும் குறிக்கத் தமிழகத்தின் சங்க கால இலக்கியத்தில் சுட்டப்பட்ட ஒரு சொல்லாக இருக்கின்றது.  குமரிநாட்டின் பதிவாகா இலங்கை வரலாற்று நுால்களில் வன்னிப்பகுதிகளிலும்  யாழ்ப்பகுதிக்கு அருகே இருக்கின்ற பூர்வீக வரலாற்றை கொண்ட பூநகரியும் நாகதீபம் ஈழம் என்ற பெயர்களுடன் விளங்கியதுடன் சிலஊர்கள் ஈழம் என்ற பெயரைக் கொண்டிருந்தது. எனவே இதுபயங்கர வாதிகள் சூட்டிய பெயர் அன்று  என்று வைக்கோ போன்றோர் வெளிநாடுகளில் பரப்புரை செய்ய வேண்டும். இலங்கையில் வேடர்கள் என்ற நல்ல மனிதர்கள் மத மொழி வேறு பாடு இன்றிவாழ்ந்த காலத்திலிருந்து வரும் ஒரு மரபுப் பெயராகப்பார்க்கலாம். பாளிமொழியும் எலுமொழியும் தமிழும் கலந்து சிங்களம் தோன்றியதும் இலங்கை ஈழத்தை-சிங்களம் லங்கா என்றது.தென்னகப் பரப்பரைக் கண்ணுச்சாமி வழித்தோன்றல்களான(2ம் சிறி இராசிங்கன் கண்டி அரசபரம்பரையினர்) சிறிமா ஆட்சியில் புதிய அரசியல் சாதனப்படியே இலங்கை பெத்த சிங்கள சிறிலங்கா என்று உத்தியோகரீதியாக உலகத்திற்கு அறிவித்து கடைப்பிடிக்கப்பட்டு சட்டரீதியான இராணுவ அடக்கு முறைகள் ஆரம்பமானது. உண்மையில் இலங்கையின் சனநாயகக்காலத்தில் சிங்களதமிழ் உயர் குழாங்கள் இணைந்து பல மத இருமொழி மக்களை உயர்நிலையில் இருந்து ஆண்டனர். கண்டி கொழும்பு யாழ் உயர்பகுதியினர் எனத்தமை அடையாளப்படுத்த பொழுதுபோக்காக அரசியலில் இருந்தனர்  இவர்களை கண்டியும் கொழும்பும் விழுங்கிவிட்டு பறைத் தமிழுஎன்றுபறைசாற்றி முழுத்தமிழையும் கீழ்மைப்படுத்தியது. முள்ளிவாய்க்கால்வரை ஒதுக்கி அழித்தது. இதற்கு தமிழர்களின் உயர்நிலைப் பதவியாளர்கள் சாதியாளர்களின் இரு நிலைகாரர்களையும் புலி எதிர் இனராக மாற்றி தமக்கு உதவவும் உலகத்திற்கு பிரச்சாரம் செய்யவும் உலகஇந்திய உளவுகளில் இணைத்துக் கொண்டது. இவர்கள் சிலர் தமதுநட்பு உறவு தொடர்பாளர்ளுளுக்கு மறைமுகமாக எதிர்காலத்தமிழக மாற்றம் பற்றியும் ஈழஅரசியல் பற்றியும் நாசுக்காக விளக்கிஉள்ளனர். தி.மு.க. இந்தியாவில் உடைக்கப்படும் இதனால் அதன் கரு அண்ணா பெரியார் தனித்தமிழ்நாட்டுக் கரு எதிர்காலத்திலும் தோன்றக்கூடாது என்ற திட்டச் செயல்வடிம் மறைமுகமாக செயற்பட்டுக் கொண்டே இருக்குபாருங்கள் பலசரிபிழைகள் இருந்தாலும் தனித்தமிழ்க் கொள்கையில் உரத்துஒலித்த கூட்டம் ஒன்றாக்கப்பட்டும்  எதிர் எதிர் ஆக்கப்பட்டும் நசுக்கப்பட்டு இருக்கிறார்கள்.தனிவாழ்வுப் பிரச்சனைகளை அரசியலுக்குள் இழுத்து அவர்கைளை ஒதுக்குவது இந்திய இரசியல் சித்து. மத்திமாநிலத்துடன் சேர்ந்து கொள்ளை யடிப்பதும்  அதை தருணத்திற்கு ஏற்ப மாநிலத்தில் மாட்டுவதும் இன்னுமொரு இந்திய அரசியல் சித்து. இதில்மொழித்திறன் மிக்கஅனுபவம் மிக்கமுரசொலிமாறன் தயவால் தி.மு.க. தப்பிவந்தது. அவர் இல்லாததால் மாட்டிககொண்டு விழிக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ் அடக்குமுறை இராணுவரீதியாக இலங்கையிலும் அரசியல் ரீதியாக தமிழகத்திலும் வெல்லப்பட்டிருப்பதை உணராத தமிழர்களாக நாம் உள்ளோம். இன்றைய நிலையில் தமிழ் அரசியல் இலங்கைக்கு இந்தியவுக்கு வெளியில் தான் நகரமுடியும் என்பதையும் உணரவேண்டும். சிங்கப்பூரில் உதவிப்பிரதமர் தமிழர். மலேசியாவில் மந்திரியாகத் தமிழர் பணத்தில் தமிழ் எழுத்து வியாபாரத்துறையில் முன்னணியில் தென்னாபிரிக்காவில் வியக்குமளவு தொழிலதிபர்கள். அய்.நாவில்.நவநீதம்பிள்ளை கனடாவில் 22 அகவையில் தமிழ்ப்பெண்பாராளமன்ற உறுப்பினர். இது தமிழ்க்குவியங்களால் குவிக்கப்படாதவரை எந்தப்பயனும் இல்லை.தமிழகமும் இலங்கைத்தமிழும் இணைந்து மெல்லநகரவேண்டிய அவசியமும் உண்டு.

விரிவாகப் பார்க்கையில் தமிழகத்தின் சங்க கால இலக்கியப் பாடல்களில் வரும் கல் வெட்டுக்களின் அடிப்படையில் ஈழத்து நாகனார், ஈழத்து குடுமிகன், ஈழம் எனும் சொற் பிரயோகங்கள் காணப்பட்டன. இலங்கையில் வாழும் தமிழர்களின் பூர்வீக வரலாற்றை அறிய அல்லது ஆராய முற்படும் அறிஞர்களும் ஈழத்தில் சங்க காலம் தொட்டுத் தமிழர்கள் வாழ்ந்தார்கள் எனும் கூற்றினை நிறுவ இக் கல்வெட்டுக்களில் காணப்படும் ஈழம் பற்றிய குறிப்புக்களை மூலாதாரங்களாகச் சுட்டுகிறார்கள்.

ஈழம் எனப்படும் சொல்லிற்குரிய வரலாற்று ரீதியான பெயர் அல்லது புராதன பெயர் முழு இலங்கைத் தீவினையும் குறிக்கவே பயன்படுகின்றது.

ஈழத் தமிழர்கள் என்று நாம் விளிக்கின்ற போது
இலங்கையில் வாழும் - தமிழர் தாயகப் பகுதிகளான வட கிழக்கில் வாழும் தமிழர்கள்(இலங்கைத் தமிழர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், மற்றும்
பிரித்தானியர் காலத்தில் இந்தியாவிலிருந்து மலையகத்திற்கு, தொழிலாளர்களாக கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவளி அல்லது மலையகத் தமிழர்களும் இணைந்து கொள்கிறார்கள்.

தமிழக மக்கள் பார்வையில் இலங்கையின் வட கிழக்கில் வாழும்(தமிழீழம் எனப் போர் இடம் பெற்ற காலத்தில் பிரகடனம் செய்யப்பட்ட) தமிழ் மக்களைத் தான் ஈழத் தமிழர்கள் எனச் சுட்டுகிறார்கள்.  ஆனால் உண்மை அதுவல்ல.  ஈழத் தமிழர்கள் எனும் வட்டத்தினுள் தமிழ் மொழியினைத் தாய் மொழியாகப் பேசும் ஒட்டு மொத்த இலங்கைத் தமிழர்களுமே வந்து கொள்கிறார்கள்.

ஈழம் எனும் சொல், ஒரு சில இடங்களில் வியாபாரங்களை இக் காலத்தில் ஊக்குவிக்கும் சொல்லாக மாறி விட்டது. தமிழகத்தின் வார இதழகள், நாளிதழ்கள் சிலவற்றில் ஈழம் எனும் சொல், அதற்குரிய அர்த்தத்தினைச் சரியாகப் புரிந்து கொள்ளாத காரணத்தால், வியாபாரம் கருதி, வியாபார நோக்கோடு கூடிய ஒரு வருமான மீட்டும் பதமாகி விட்டது.

ஈழத் தமிழர்கள் எனும் தொனிப் பதத்திற்குப் பதிலாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் ‘தமிழர் தாயகப் பகுதி மக்கள்’ அல்லது தமீழ மக்கள் எனும் சொல்லினைக் கையாண்டார்கள்.

அதே போல ஈழம் எனும் சொல் - வரலாற்றின் அடிப்படையில் ஒட்டு மொத்த இலங்கைத் தமிழர்களையும் குறிப்பதால், தமிழீழ மக்கள் எனும் பதம் பிற் காலத்தில் இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளிலும், ஊடகங்களிலும் வழக்கிற்கு வந்தது.

ஆகவே போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஈழத் தமிழர்கள் எனும் கூற்றினை தமிழக ஊடகங்கள் கையாளும் போது, அது இலங்கையில் வாழும், யுத்தத்தை அனுபவிக்காத- கொழும்பில் வாழ்ந்த தனி நாடு விரும்பாத பல தமிழர்களையும் சுட்டி நிற்கிறது.

தமிழக உறவுகளே! இனி மேல் ஈழத் தமிழர்களுக்காக நீங்கள் இரங்க வேண்டாம். ஈழத் தமிழர்களுக்காக நீங்கள் இரக்கமுறுகிறீர்கள் என்றால்- அதன் அர்த்தம் போர் இடம் பெறும் போது போருக்கு ஆதரவாக இருந்த தமிழர்களையும், போர்க் காலத்தில் சுக போகங்களை அனுபவித்து ஈழத்தின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்காகவும் அனுதாபப்படுகிறீர்கள் என்று அர்த்தமாகிறது.

ஈழத்திற்காக தீக் குளித்த முத்துக்குமார்,
ஈழ மக்களுக்கு வெகு விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும்,
தனி ஈழம் தான் ஒரே தீர்வென்று நீங்கள் கூறுவதன் அர்த்தம் என்ன?

தனி ஈழம் தான் தீர்வென்றால்- தனியான இலங்கை என்று தான் அர்த்தப்படுகிறது. ஆகவே தனியான இலங்கை ஒரு குடையாட்சியின் கீழ் இருப்பதையா உங்களில் அனைவரும் விரும்புகின்றீர்கள். சிந்தியுங்கள்! செயற்படுங்கள்! உங்கள் உறவுகள் அனைவருக்கும் ஈழம் எனும் பதத்திற்கான அர்த்தத்தினை தெரியப்படுத்துங்கள்.

இலங்கையில் வாழும் ஒவ்வோர் தமிழ்க் குடி மகனும் ஏதோ ஒரு வகையில் இராணுவச் சோதனைகளுக்கோ, அல்லது சுற்றி வளைப்புத் தேடுதல்களுக்கோ ஆளாகியிருப்பான்.

ஆனால் போரினால் பாதிக்கப்பட்டவர்கள், யுத்தத்தில் பல உயிர், உடமைகளை இழந்தவர்கள் இலங்கையின் தமிழர்களின் பூர்விகப் பகுதியான வட கிழக்கில் வாழும் தமிழர்களே! இவர்களைத் தான் புலிகளின் காலத்தில் தமிழீழ மக்கள் என அழைத்தார்கள். இந்த மக்கள் தான் தமிழர் தாயகப் பகுதிகளில் வாழும் மக்கள்!

ஆகவே இன்று முதல் உங்கள் ஊர்களில் உள்ள ஊடகங்கள் வாயிலாக ஈழத் தமிழர்கள் என்ற பதத்தினைத் தவிர்த்து இலங்கையின் வட கிழக்குத் தமிழர்கள் என்ற பதத்தினையோ அல்லது தமிழீழ மக்கள் எனும் பதத்தினையோ நீங்கள் அறிமுகப்படுத்துங்கள். ஈழத் தமிழன் எனும் சொல்லிற்கான சரியான அர்த்தத்தினை உங்கள் உறவுகள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்!

டிஸ்கி: இப் பதிவினை எழுதுவதற்குத் தூண்டு கோலாகவும், இப் பதிவிற்குரிய கருப் பொருளினையும், ஈழத்திற்கான பொருள் விளக்கம் வேண்டிய கருத்துக்களையும் என்னுடைய கடந்த பதிவினூடாக (ஈழ முஸ்லிம்களை அடக்கி வாழ நினைக்கும் ஈழத் தமிழர்கள்!) எனக்குத் தந்த சகோதரன் ‘ஓட்ட வடை நாராயணண்’ அவர்களிற்கு இந் நேரத்தில் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈழ முஸ்லிம்களை அடக்கி வாழ நினைக்கும் இலங்கைத் தமிழர்கள்! 
இலங்கைத் தீவில் வாழும் மக்களுள் முஸ்லீம் மக்களும் தமக்கென்றோர் தனியான, நீண்ட பாரம்பரிய வரலாற்றினைக் கொண்டவர்களாக வாழ்கிறார்கள்.  இலங்கைத் தீவில்(ஈழத்தில்)  முதன் முதலாக வியாபார நோக்கோடு கி.பி 414ம் ஆண்டு தென் அரேபிய வர்த்தகர்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள். ஆனாலும் அவர்களது வருகையானது வியாபார நோக்கோடு இருந்தது.  இதன் பின்னர், கி.பி 628ம் ஆண்டளவில் 'வஹாப் இப்னு அபீ ஹப்ஸா' எனும் நபிகளின் தோழர் இலங்கைக்கு வருகை தந்து, ’’இலங்கையர்களை இஸ்லாமியர்களாகவும், இலங்கை மன்னனாக அக் காலத்திலிருந்தவனை இஸ்லாமிற்கு மதம் மாறும் படியும் கோரியிருந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

இக் காலப் பகுதியின் பின்னர் இலங்கையில் இஸ்லாமியர்கள் குடியேறியிருந்தாலும், ஈழத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான வரலாறானது, கிபி 711ம் நூற்றாண்டில் இடம் பெற்ற முஹம்மத் பின் காஸிமின் சிந்துப் படையெடுப்போடு தான் ஆரம்பமாகிறது. அதாவது முஹம்மத் பின் காஸிமின் படையெடுப்பு இடம் பெற்ற காலப் பகுதிக்கும்,
கிபி 628ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் ஈழத்தில் முஸ்லிம்கள் குடியேறினாலும், அந்த ஆண்டினைச் சரியாகக் கணிப்பிடக் கூடிய குறிப்புக்கள் வரலாற்று ஆய்வாளர்களின் கைகளுக்குக் கிடைக்காமற் போய் விட்டன.

இக் காலப் பகுதியில், தென் இந்தியாவிலிருந்து ஈழத்தில் குடியேறியிருந்த தமிழர்களிற்கு இடையேயான மத மாற்றச் செயற்பாடுகளோடு தான் இலங்கையில் முஸ்லிம் இனமானது வேர் கொள்ளத் தொடங்குகிறது.(இப்போதைய இலங்கைத் தமிழர்கள் என நாம் சொல்லிக் கொள்வோர்)
இதன் பின்னர் தான் ஈழத்தவர்கள் எனும் அடை மொழிக்குள் இருந்த தமிழர்களில் இஸ்லாமின் கொள்கைகளை ஏற்றுறுக் கொண்டோர், விரும்பி மதம் மாறத் தொடங்குகிறார்கள்.

ஈழத் தமிழர்களோடு உடன் பிறப்புக்களாக இருந்து பின்னர் மதம் மாறிய கன்றுகளை, இன்றும் கூட ஈழத் தமிழர்கள் வெறுத்தும் ஒதுக்கியும் புறம் தள்ளி வருகிறார்கள்.  இதே போல ஈழத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு இடையேயும் நீறு பூத்த நெருப்பாக ஈழத் தமிழர்கள் மீதான வன்மங்கள், குரோதங்கள் மனதளவில் இன்று வரை இருந்தே வருகின்றன.

இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது கட்டவிழ்து விடப்பட்ட முதலாவது கலகம், அல்லது வன்முறை1915ம் ஆண்டளவில் சிங்களவர்களால், முஸ்லிம்களின் மத வழிப்பாட்டுக் கருவியினை அடிப்படையாக வைத்துத் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. பிரித்தானியரின் முஸ்லிம்கள் மீதான நியாயமான தீர்ப்புக்களை அடுத்து இக் கலகமானது முடிவிற்கு வந்தது.

தமிழ்- முஸ்லிம் உறவு மீதான வரலாற்று விரிசலுக்குத் தூண்டிலாக அமையும் சம்பவமாகவும், இதே கலகம் தான் விளங்குகிறது, இதற்கான காரணம் இந்துவாகவும், தமிழனாகவும் அக் காலத்திலிருந்த சேர் பொன் இராமநாதன் அவர்கள் இக் கலவரத்தினை முடிவிற்கு கொண்டு வரும் நோக்கில் சிங்களவர்களுக்காக பிரிட்டிஷ் அரசிடம்- சிங்களவர் பக்கம் நின்று வாதாடினார். இச் சம்பவத்தினை முஸ்லிம்கள் தமிழர்கள் சிங்களவர் பக்கம் நிற்கிறார்கள் எனும் கோணத்தில் பார்த்த காரணத்தால், தமிழர்களை அக் காலம் தொட்டே, முஸ்லிம்கள் தமது எதிரியாகவே பார்க்கத் தொடங்கினார்கள்.

1948ம் ஆண்டில் தனிச் சிங்களச் சட்டம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இடம் பெற்ற சனத் தொகைக் கணக்கெடுப்பின் போது, தமிழினைத் தாய் மொழியாகக் கொண்ட இந்துக்கள், கிறிஸ்தவர்கள் தமிழர்கள் என்ற அடை மொழிக்கு கீழேயும், முஸ்லிம்கள் இஸ்லாமியத் தமிழர்கள் என்ற அடை மொழிக்கு கீழேயும் கணக்கெடுக்கப்பட்டார்கள். இச் சொற்பதமும் தமிழர்கள் தரப்பினால் முஸ்லிம் தமிழர் உறவுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட விரிசலுக்குரிய காரணமாக மாறத் தொடங்கியது.

இந்தச் சர்ச்சையினைத் தணிக்கும் வகையில் முஸ்லிம் இனத் தலைவர்கள் முன் வைத்த சமரச முயற்சிகள் யாவும் தமிழர்களால் புறந்தள்ளப்பட்டன, துஷ் பிரயோகம் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழர்கள் தம்மிடமிருந்து- முஸ்லிம்களைப் பிரித்துக் காட்டும் இன்னோர் முயற்சியாக சோனகர்கள் என்ற பதத்தினை அறிமுகப்படுத்துகிறார்கள்.

இச் சொற்பதமானது பின் நாளில் சோனி என வழக்கொழிந்து, முஸ்லிம்களை எள்ளி நகைக்கவும், துஷ் பிரயோகம் செய்து கிண்டலடிக்கவும் தமிழர்களால் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தையாக மாற்றமுறுகிறது.

ஈழத்திற்கான விடுதலைப் போரானது தீவிரமடைந்த 1980களைத் தொடர்ந்து இஸ்லாமியத் தமிழர்கள் எனும் வேறு பிரித்தறியும் செயற்பாடும் தமிழாதரவுச் சக்திகளால் ஆரம்பித்து வைக்கப்படுகிறது.  முஸ்லிம்களில் கல்வித் தகமைகளில் தேர்ச்சி பெற்றவர்கள்(அதிகம் படித்தவர்கள்) அக் காலப் பகுதியில் குறைவாக இருந்த காரணத்தால், முஸ்லிம்களுக்கென்றிருந்த அரசியல் தலமையான முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் அஸ்ரப் அவர்கள் எஸ்.ஜே.வி செல்வநாயகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டிய நிலமைக்குத் தள்ளப்படுகிறார்.


ஆதிக்க வர்க்கங்களாக உருவாகிய தமிழ் சிங்கள இனங்கள் முஸ்லிம்களின் உரிமைகளையும், அவர்களின் கலாச்சார மத சம்பிரதாயங்களையும் ஒடுக்குவதில் மாத்திரம் தான் முனைப்புக் காட்டினவே தவிர இன்று வரை முஸ்லிம்களைத் தம்மோடு அணைத்து வாழ்வதில், இலங்கைத் தீவில் யாருமே ஆர்வம் காட்டவில்லை.


ஈழப் போராட்டம் தீவிரம் பெற்றிருந்த 1990ம் ஆண்டில், ஒரு சில முஸ்லிம் சகோதரர்கள் காட்டிக் கொடுப்புக்களைச் செய்ததாக புலிகள் அறிந்து கொள்கிறார்கள். இதன் பின்னர் நீண்ட கால அவகாசம் ஏதுமின்றி (குறுகிய மணி நேரத்திற்குள்) யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம்களை அவர்களது சொத்துக்களைச் சூறையாடிப் பறி முதல் செய்த பின்னர் நிர்க்கதி நிலைக்கு ஆளாக்கி 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாணத்தை விட்டுப் புலிகள் வெளியேற்றினார்கள்.  இதே போல இலங்கையில் 1990களில் புலிகளின் ஆளுமையின் கீழிருந்த அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முஸ்லிம்களைப் புலிகள் வெளியேற்றினார்கள்.

இந்தச் சம்பத்தினைத் தொடர்ந்து பெருமளவான முஸ்லிம் இளைஞர்கள் இலங்கை இராணுவத்தில் இணைந்து கொள்கிறார்கள். புலிகளுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்குகிறார்கள்.

இந்தக் குரோதங்களின் உச்ச விளைவாக காத்தான் குடி முஸ்லிம் பள்ளி வாசலில் 126 பேரும், ஏறாவூரில் 116 பேரும் புலிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். இது தவிர இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டும் இக் காலப் பகுதியில் இடம் பெற்ற புலிகளின் சிறு சிறு நடவடிக்கைகள் மூலமாக 500 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள்.

இது ஒரு வரலாற்றுத் துயர் மிகு செயல் எனப் புலிகள் ஒரு தசாப்தத்தின் பின்னர் மன்னிப்புக் கோரி, முஸ்லிம்களை அரவணைக்க நினைத்தாலும், முஸ்லிம் மக்கள் மனங்களைப் புலிகளால் வெல்ல முடியாதிருந்தது. முஸ்லிம் மக்கள் மத்தியில் நம்பிக்கைகளைக் கட்டியெழுப்ப முடியாதிருந்தது. இச் செயற்பாடுகளே இன்று வரை கட்டியெழுப்ப முடியாதிருக்கும் தமிழ் முஸ்லிம் பிரிவிற்கான மூல காரணிகளாகவும் விளங்குகின்றன.

முஸ்லிம்களுக்கென்றிருந்த காத்த்திரமான தலமையாகிய எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் செப்டெம்பர் 16ம் திகதி 2000ம் ஆண்டன்று உலங்கு வானூர்தி விபத்த்தில் உயிரிழக்கிறார். இதன் பின்னர் இன்று வரை முஸ்லிம்களிற்கென்ற உறுதியான தலமை இலங்கையில் உருவாக்கப்படவில்லை என்றே கூறலாம்.

இக் காலப் பகுதியில் புதிதாக வரும் அரசியல்வாதிகள் அனைவரும் தமது சுய நலன்களை அடிப்படையாக வைத்து முஸ்லிம் உரிமைகளைப் பேரம் பேசுகிறார்களேயன்றி, முஸ்லிம்களுக்கான உறுதியான பலம் மிக்க தலமையினை நிர்ணயிப்பதில் பல சிக்கல்களை எதிர் நோக்குகிறார்கள்.

இவற்றை விட சோனிகள், தொப்பி பிரட்டிகள், முழு மாடு தின்னியள், சோனகர், என இழி நிலைக்குத் தமிழர்களால் ஆளாக்கப்ப்படும் முஸ்லிமளுக்கும்,
‘பனங்காய் சூப்பிகள், கோம்பை சூப்பிகள்’ என முஸ்லிம்களால் அழைக்கப்படும் தமிழர்களுக்கும் இடையில் மனதளவில் காணப்படும் பழைய குரோதங்கள்- இப்போதும் நீறு பூத்த நெருப்பாகத் தான் இருக்கின்றன.

யுத்தம் ஓய்ந்த பின்னர் முஸ்லிம்கள் தமது தாயக நிலப்பரப்பிற்குத் திரும்பினாலும், மனதளவில் தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையேயான பழைய நெருப்பு இன்றும் இருந்து கொண்டே இருக்கிறது, அல்லது மக்களை வைத்து தனியரசியல் செய்யும் நபர்களால் காலத்திற்குக் காலம் தூண்டப்பட்டு வருகிறது.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை, தமிழர்களைப் போலன்றி ஒற்றுமையில் சிறந்தவர்கள். அவர்களது பள்ளி வாசல் மூலம் எடுக்கும் தீர்மானங்கள் இந்த ஒற்றுமைக்குச் சான்றாக அமைந்து கொள்ளும்.

இலங்கையின் தென் மாகாணங்களையும், மேல் மாகணத்தையும் பொறுத்தவரை சிறு வயதிலிருந்தே, தமிழ் முஸ்லிம் மாணவர்கள் ஒன்றாக வளருவதால் அவர்களுக்கிடையே குரோதங்களோ, பகைமை உணர்வுகளோ மனதளவில் இல்லை என்றே கூறலாம். ஆனால் இந்தப் பகைமை உணர்வுகளோடு வாழும் வடகிழக்கு மக்கள் எப்போது, எங்கே ஒன்று கூடி முஸ்லிம்களோடு பேசித் தமது காழ்ப்புணர்ச்சிகளை நீக்கிக் கொள்வார்கள் என்பது ஈழத்தில் உள்ள அனைவர் மனங்களிலும் தொக்கி நிற்கும் வினா.

இப் பதிவின் அடிப்படையில் நான் உங்களிடம் சில விடயங்களை முன் வைக்கிறேன்;

*இலங்கை அரசானது தமிழர்களுக்கான தீர்வினைக் காலதி காலமாக இழுத்தடித்துக் கொண்டே வருகிறது. சந்தர்ப்ப சூழ் நிலைகளால் தமிழர்களுக்கான தீர்வு வழங்கப்பட்டாலும்,

’’எந்த ஒரு சுய நிர்ணய உரிமை உடைய இனமும்- இன்னோர் இனத்தின் கீழ் அடங்கி வாழ மாட்டாது. அந்த வகையில் தமிழர்களுக்கான உரிமை வழங்கப்பட்டால் - முஸ்லிம்களின் எதிர்காலத்திற்கு நீங்கள் கூறப் போகும் பதில் என்ன? முஸ்லிம்களுக்கான உரிமையினை யார் வழங்கப் போகிறார்கள்?

*முஸ்லிம்கள் தமிழர்களின் பெரும்பான்மை அதிகாரத்தின் கீழ் வாழ்வதையோ, தமிழர்கள் முஸ்லிம்களோடு இணைந்து வாழ்வதையோ இக் காலச் சந்ததிகள் அல்லது புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் விரிசலை இன்று வரை கட்டிக் காக்கும் புத்தி ஜீவிகள், கல்வியளாளர்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக உள்ள நிலையில்,
இதே பிரிந்து வாழும் அல்லது பிரித்து வாழும் நிலையை ஒவ்வோர் ஈழத் தமிழர்களும் தொடர்ந்தும் முன்னெடுக்கப் போகிறார்களா? அல்லது முஸ்லிம்களையும் எமது உறவுகளாக நினைத்து அரவணைத்து வாழப் போகிறோமா? இல்லை

எமது எதிர்காலச் சந்ததியினருக்கு ஊடாக, தமிழ் முஸ்லிம் உறவினைக் கட்டியெழுப்ப விரும்பினால், நாம் எமது குழந்தைகளினை முஸ்லிம் சகோதர்களோடு அந்நியோன்னியமாகப் பழக விட வேண்டும். அதே போன்று எமது குழந்தைகளுக்கு இனங்களுக்கிடையேயான ஒற்றுமையினை வலியுறுத்திக் கூற வேண்டும். அதனை உங்களில் எத்தனை பேர் செய்யத் தயாராக இருக்கிறீர்கள்?
இத்தகைய ஓர் முயற்சியினைக் வெகு விரைவில் செயற்படுத்த நாம் எவ்வாறான வழி முறையினைக் கையாளாலாம்?

 அரசியல், சமூகப் பார்வை, புலம்பெயர் தமிழர்
.ஈழத்தமிழர்களின் வாழ்வில், அவர்களது இன்ப,துன்பங்களில் புலம்பெயர் தேசத்து உறவுகள் பெருமளவு செல்வாக்கு செலுத்திவருவது யாவருமறிந்ததொரு விடயமே. காலகாலமாக எம் வளர்ச்சிப்படிகளில் அவர்களது வியர்வைத்துளிகள்தான் நிறைந்துள்ளன என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. ஆனால் இவையெல்லாம் குறிப்பிட்டதொரு காலப்பகுதிக்கு முன்னரேயாகும். அப்பொழுது அவர்களது உதவிகள் எமது வளர்ச்சியில் பெரும் பங்காற்றியிருந்தன. தற்பொழுது அவ்வுதவிகள் எமக்கு சாதகமானவையாகவன்றி எம் அவல வாழ்வில் இன்னமும் அவலமாக, குருவி தலையில் பனங்காயை வைத்த கதையாக மாறிவிட்டது.
இன்னமும் பார்க்கப்போனால் எமது சமூகத்தை முன்னேற்றுவதைவிட, எம் வாழ்தலுக்கான அடிப்படைகளை கட்டியெழுப்புவதை விட, இன்னொருவனை மூர்க்கத்தனமாக எதிர்ப்பதிலேயே குறியாக, அதற்காகவே தமது முழு சக்தியையும் பிரயோகிப்பவர்களாக மாறிவிட்டார்கள் எம் புலம்பெயர் உறவுகள். அவல வாழ்க்கை வாழும் எம் உறவுகளிற்கு உதவுங்கள் என்று கோரினால் அதற்கு உதவாமல்(உதவுகிறோம் என்று கூறியவர்கள் கூட கிள்ளித்தான் தெளித்தார்கள்) சிங்களவர்களை எதிர்ப்பதற்கு என்று கூறி பெருமளவில் பணம் சேகரிக்கிறார்கள். ஏன், அந்த பணத்தை வன்னியில் வாழும் எம் உறவுகளுக்கு உதவ பயன்படுத்தலாம்தானே? இது பற்றி ஏற்கனவே மதி. சுதா அண்ணா கூறியிருக்கிறார். அதையும் ஒருதடவை படித்துப்பாருங்கள். மதி. சுதா அண்ணாவின் அந்தப்பதிவை பேஸ்புக்கில் இணைத்தபோது ஒரு புலம்பெயர் உறவு என்ன சொன்னார் தெரியுமா?
 ”இத எழுதினவனும், நீயும் ஒரு தேசத்துரோகி”
பாருங்கள் உண்மையை சொன்னால் நாம் தேசத்துரோகியாம். கீழே பாருங்கள் இன்னொருவரது கருத்தை

கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை வீண்விரயம் செய்யாமல் உபயோகப்படுத்துங்கள் என்று கூறினால் நாம் லூசுப்பசங்களாம். இன்னுமொரு நண்பர் தான் கூறிய கருத்தை பின்னர் அழித்துவிட்டார். அவரது மனச்சாட்சி உறுத்தியதோ என்னவோ!
ஆக, தாம் செய்வது பிழை என்று தெரிந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. ஒருவன், நீ பிழை செய்துவிட்டாய் என்று சுட்டும்போது அவன் கருத்தில் உள்ள நியாயப்பாட்டை ஆராயாமல், அவன் எம்மை குறை சொல்லிவிட்டானே என்ற எண்ணம்தான் அவர்களிடத்து மேலொங்கி நிற்கின்றது. இதற்கு இன்னுமொரு உதாரணம் எனது கடந்த ”தனித்துவத்தை இழந்துவரும் நல்லூர்” என்ற பதிவில் ஒரு சிறு பகுதியில் ”போர் முடிவுக்கு வந்த பின்னர் புலம்பெயர் தமிழர்களின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு வரும் புலம்பெயர் சமூகத்தவர், தாம் முன்னேறிவிட்டார்கள், வெள்ளைக்காரனைப்போல் வாழ்கிறார்கள் !?? என்று பெருமை காட்ட முனைகிறார்கள். இதன் வெளிப்பாடே இறுக்கமான, அரைகுறை ஆடைகளின் தோற்றம். தாம் எதோ வெளிநாடுகளிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் போன்றே இருக்கின்றன அவர்களது செயற்பாடுகள். வேறு இடங்களில்தான் அப்படி அலைகிறார்கள் என்றால் பரவாயில்லை. பக்தி மணம் கமழும் நல்லூர் ஆலய சூழலில் கூடவா அவ்வாறு செல்லவேண்டும்?
இதை பார்க்கும் ஏனையவர்களால் எப்படி தூய்மையான மனதுடன் இறைவனை வழிபடமுடியும்? இவர்களை பார்த்துவிட்டு உள்ளூரில் ஒழுங்காக இருந்த சில வண்டுகளும் இப்போது அலங்கோலமாக திரிவதுதான் கொடுமை” என்று குறிப்பிட்டு இருந்தேன். அதற்கு அவர்களின் பிரதிபலிப்பை பாருங்கள்


தனித்துவத்தை இழந்துவரும் நல்லூர் என்று ஒரு எழுதி இருந்திங்க அதில் "போர் முடிவுக்கு வந்த பின்னர் புலம்பெயர் தமிழர்களின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு வரும் புலம்பெயர் சமூகத்தவர், தாம் முன்னேறிவிட்டார்கள், வெள்ளைக்காரனைப்போல் வாழ்கிறார்கள் !?? என்று பெருமை காட்ட முனைகிறார்கள். இதன் வெளிப்பாடே இறுக்கமான, அரைகுறை ஆடைகளின் தோற்றம்" என்று குறிப்பிட்டு இருந்தது !!! புலம்பெயர் தமிழரை குறை சொல்ல எவனுக்கும் தகுதி இல்லை. ஒழுக்கம் என்பது நம் அணியும் உடையில் இல்லை , நமது மனதில் இருக்கனும்!

இது தான் இந்த வார வியாழன் விவாத மேடை உங்கள் முன் கொண்டு வரும் கேள்விகள்.

டிஸ்கி: இப் பதிவில் பதிவின் அளவினைக் கருத்திற் கொண்டு 2000ம் ஆண்டின் பின்னரான முஸ்லிம், தமிழ் கலவர விடயங்களையும் பல நடை முறை அரசியல் விடயங்களையும் பதிவில் இணைக்க முடியவில்லை உறவுகளே!

டிஸ்கி 2: இப் பதிவிற்கான உச்சாத்துணை நூல்கள், மேற்கோள்கள்
தமிழ் வீக்கிப் பிடியா, இலங்கையின் இஸ்லாமிய வரலாறு, இலங்கையில் இஸ்லாம், இஸ்லாமிய மஞ்சரி முதலிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவையாகும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.