குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

28.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

கள்ளநோட்டு கும்பல்: திடுக் தகவல்கள்

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே மந்திதோப்பு பகுதியை சேர்ந்த பாண்டி மகன் மகேஷ்குமார்,27, செண்பகம் மகன் மணிகண்டன்,33, ஆகிய இருவரையும், கோவில்பட்டி மேற்கு போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

இதில் கள்ள நோட்டுக்களை சவாலப்பேரியை சேர்ந்த கருப்பசாமி, 45 தென்காசியை சேர்ந்த அசன்பாய்,62, ஆகியோர் கொடுத்து, மாற்றச் சொன்னதாக தெரிவித்தனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சாத்தூரை சேர்ந்த சதுரகிரி,43, திருத்தங்கல், லூர்துசாமி, 50 . ஆகியோர் சிக்கினர். அவர்களிடம் இருந்து கள்ள நோட்டு அச்சிடும் இரு பிரிண்டர்கள், ரூ. 7.23 லட்சம் மதிப்பில் 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

ஈராக்கில் இன்னும் பலர் பிடிபட்டுள்ளனர்: ஆரிப் மஜீத் தகவல்

புதுடில்லி: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளிடமிருந்துதப்பி வந்த ஆரிப் மஜீத் என்பவரிடம் தேசிய புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் தான் சண்டையின் போதுகாயமடைந்ததாகவும், அதனால் திரும்பி வந்ததாகவும், இன்னும் பல இளைஞர்கள் ஈராக்கில் பிடிபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

இரு நாட்டு பிரதமர்கள் கைகுலுக்குவது மட்டும் போதாது: ராஜ்நாத்

ஸ்ரீநகர்: இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்பட, இரு நாட்டு பிரதமர்கள் கைகுலுக்குவது மட்டும்போதாது, இரு நாடுகளின் இதயங்களும் ஒன்றாக கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

 

நெல்லை மா.கம்யூ பிரமுகர் ஆட்டோவில் கடத்தி கொலை

திருநெல்வேலி: நெல்லையில் மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் ஆட்டோவில் கடத்தி கொலை செய்யப்பட்டார். திருநெல்வேலி, பேட்டை, திருமால்புரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கோபி 36. மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் தொழிற்சங்க மாவட்ட துணைச்செயலாளராக உள்ளார். சொந்தமாக ஆட்டோ ஓட்டிவருகிறார். இன்று மாலையில் ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து ஆலங்குளத்திற்கு செல்லவேண்டும் என கூறி நான்கைந்துபேர் அழைத்தனர். ஆட்டோவில் அவர்களை ஏற்றிச்சென்றார். நெல்லை-தென்காசி சாலையில் அபிசேகபட்டியை கடந்த போது, ஆட்டோவில் வந்தவர்கள், அவரை அதே பகுதியில் நெடுங்குளம் காட்டுக்குள் கடத்திச் சென்றனர். பின்னர் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர். இறந்த கோபிக்கு கோமதி என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். கொலைக்கான காரணம் தெரியவில்லை.பேட்டை போலீசார் விசாரித்தனர்.

 

பள்ளிகளில் ராணுவ பயிற்சி: பாரிக்கர் தகவல்

புதுடில்லி: இந்திய இளைஞர்கள் குறிப்பாக எல்லைப்பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி அளிப்பது பற்றி பரிசீலனை செய்யப்படும் என கூறியுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர், கட்டாய பயிற்சியளிக்கும் திட்டம் ஏதுமில்லை என கூறியுள்ளார். இது தொடர்பாக ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தின் போது பதிலளித்த அவர், ராணுவ பயிற்சி குறித்து பள்ளிகளில், ஒரு மணி நேர பயிற்சி வகுப்பு அல்லது சிறப்பு வகுப்புக்கள் நடத்தப்படும் எனவும், இது குறித்து பார்லி.,யில் விவாதத்திற்கு பின் முடிவெடுக்கப்படும் என கூறினார்.

 

பாம்பாறு விவகாரத்தில் புகார் எதுவும் வரவில்லை: ஜாவேத்கர்

சென்னை: பாம்பாறு விவகாரத்தில் புகார் எதுவும் வரவில்லை எனவும், இரு மாநிலங்களுக்கும் பிரச்னை எதுவும் வராமல் முடிவெடுக்கப்படும், சென்னையில் உள்ள துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை செய்த பின்னர் முடிவெடுக்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறினார்.

 

மேலிட தலைவர்களுக்காக த.மா.கா.,வினர் காத்திருக்க தேவையில்லை: வாசன்

திருச்சி: திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வாசன் பேசுகையில், தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் திருச்சி கூட்டம் அமைந்துள்ளது. இந்த கூட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருப்பு முனை கூட்டம்.மேலிட பார்வையாளர்களை கொண்ட மாநில கட்சியாக த.மா.கா., செயல்படும், மேலிட தலைவர்கள் யாருக்காகவும் தொண்டர்கள் காத்திருக்க தேவையில்லை. கட்சிக்காக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும். சிறுபான்மையினரின் சலுகைகள், உரிமைகளை பெற்றுதர த.மா.க., போராடும். ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் நலனை த.ம.க., காக்கும். விவசாயிகளுக்கு மருந்து உரம், பூச்சிக்கொல்லி, விதை மருந்து இலவசமாக வழங்கப்படும். மீனவர் பிரச்னையை தீர்க்க போராடுவோம். மணல்,தாதுக்களை திருடுபவர்கள் சமுதாய திருடர்கள். மதுவை அறியாத தமிழ் சமதாயத்தை உருவாக்குவது தான் நோக்கம். விவசாய நிலங்களை விவசாயிகள் விற்றுச்செல்லும் நிலை மாற்ற கட்சி பாடுபடும். ஏழைகளுக்கு எதிரான தொழிலை எதிர்த்து பொதுத்துறை நிறுவனங்களை காப்போம்.லோக் ஆயுக்தா சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.

 

கடல் சீற்றத்தால் திசை மாறிச் சென்ற மீனவர்கள் இலங்கையில் சிறை பிடிப்பு

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே, கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற போது, கடல் சீற்றத்தால் திசை மாறிச் சென்ற புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த, மீனவர்கள் மூவர், இலங்கை போலீஸாரால் சிறை வைக்கப்பட்டுள்ளனர். புஷ்பவனம் மீனவர் தெருவைச் சேர்ந்த பாக்கியராஜ், 30, என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், அதே ஊரைச் சேர்ந்த காளியப்பன், 30, ஜோதிமணி, 45, காளிதாஸ், 35, ஆகியோர் கடந்த, 26ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர் ஆனால், மாலை வரை, மீனவர்கள் கரை திரும்பாததால், கிராம பஞ்சாயத்தார், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் தெரிவித்தனர்இதை தொடர்ந்து, கடலுக்கு சென்று திரும்பாததால், அரசு உத்தரவுப்படி, காரைக்கால் கடலோர காவல்படையினர், கப்பல் மூலம், மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடல் சீற்றம் காரணமாக திசைமாறி சென்ற மீனவர்களை, இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்கள் காப்பாற்றி உள்ளனர். அனுமதி இன்றி இலங்கை பகுதிக்கு சென்ற தமிழக மீனவர்களை, யாழ்ப்பாணம் போலீஸார் சிறை பிடித்துள்ளனர். அந்த மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுக்கு புஷ்பவனம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

தூய்மை இந்தியா திட்டத்தை விமர்சிக்கும் ராகுல்

சைபாசா: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி துணைத்தலைவர் ராகுல் பேசுகையில், தேர்தலுக்கு முன் மோடி, நான் மட்டுமே வேலைகளை உருவாக்குவேன். தொழிற்சாலைகள் சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் அமைப்பேன் என கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்த பின், மக்கள் துடைப்பத்தை எடுக்க வேண்டும் என கூறிவிட்டு ஆஸ்திரேலியா சென்று விட்டார் என கூறினார்.

 

அமித் ஷா பேரணிக்கு அனுமதி: மம்தா மேல்முறையீடு

கோல்கட்டா: கோல்கட்டாவில் அமித் ஷா தலைமையில் பா.ஜ., பேரணிக்கு மேற்கு வங்க ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேற்கு வங்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஐகோர்ட்டின் சிறப்பு நீதிபதிகள் குழு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என தனது மனுவில் மேற்கு வங்க அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

 

மலேசியாவில் பதுங்கியுள்ள ஜாகிர் உசைன் கூட்டாளியை பிடிக்க என்.ஐ.ஏ., தீவிரம்

சென்னை: பாகிஸ்தான் உளவாளி ஜாகிர் உசைனின் கூட்டாளி உசைனியை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக என்.ஐ.ஏ.,கூறியுள்ளது. மேலும் மலேசியாவில் உள்ள உசைனியை பிடிக்க தூதரக ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஜாகிர் உசைனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டாலும், தொடர்ந்து விசாரணை நடக்கும் எனவும், அவர் பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் எனவும் கூறியுள்ளது.

 

கிரானைட் முறைகேடு குறித்து: டிச.,3 முதல் சகாயம் விசாரணை

சென்னை: கிரானைட் முறைகேடு குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் வரும் டிசம்பர் 3ம் தேதி முதல் விசாரணை நடத்த உள்ளார். இந்த விசாரணை தொடர்பாக, மதுரை கலெக்டருக்கு, சகாயம் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், விசாரணைக்கு தேவையான அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறும், அவர்கள் வரும் 1ம் தேதி சென்னை வருமாறும் கூறியுள்ளார்.

 

டி.ஆர்.டி.ஓ., தலைவர் ஓய்வு

புதுடில்லி: மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.,) தலைவர் அவினாஸ் சந்தர் இன்றுடன் ஒய்வு பெற உள்ளார். வரும் 2015ம் வருடம் வரை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், விஞ்ஞானிகளுக்கு பதவி நீட்டிப்பு இல்லை என்ற அரசின் கொள்கை அடிப்படையில், சந்தர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். சந்தர், மூத்த ஏவுகணை விஞ்ஞானியாகவும், பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசகராகவும் உள்ளார்.

 

நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 0.4 சதவீதம் சரிவு

புதுடில்லி: இரண்டாவது காலாண்டில், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 5.7 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக குறைந்துள்ளது. உற்பத்தி வளர்ச்சி சதவீதம் 0.1 சதவீதமும், விவசாய உற்பத்தி சதவீதம் 0.4 சதவீதமும் குறைந்துள்ளது.

 

ஜெ., வருமானவரி வழக்கு முடிவு

சென்னை: ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் கடந்த 1992-93, 93-94 ஆகிய ஆண்டுகளில் வருமானவரி கணக்கு காட்டவில்லை என்று கூறி, வருமான வரித்துறை சார்பில், சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 18 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், வருமானவரி கட்டாததற்கான அபராதத்தை செலுத்த தயாராக இருப்பதாக ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த சமரச மனுவை வருமானவரி துறை ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து, இந்த வழக்கு முடிவுக்கு வருகிறது.

 

தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்

திருச்சி: திருச்சியில் நடந்த மாநாட்டில் தனது புதிய கட்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் என வாசன் பெயர் சூட்டி உள்ளார். சைக்கிள், கட்சியின் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாசனின் பெரும்பாலான ஆதரவாளர்களின் வேண்டுகோளின்படி, இப்பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

திருச்சி: வாசன் கட்சி மாநாடு துவக்கம்

திருச்சி: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் வாசன், புதிய கட்சியை துவங்க முடிவு செய்தார். கட்சியின் கொடி நேற்று முன்தினம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று, திருச்சியில் புதிய கட்சியின் முதல் மாநாடு துவங்கியது. கட்சி கொடியை ஏற்றி வைத்து, வாசன் மாநாட்டை துவக்கி வைத்தார். மாநாட்டில் ஏராளமான வாசன் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

 

லஞ்சம்:வணிகவரி பெண் ஊழியர் கைது

வேலூர்: வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த வேப்பூரைச் சேர்ந்தவர் சதீஷ், 24. எம்.ஏ., படித்த இவர், மினரல் வாட்டர் கம்பெனி ஆரம்பிக்க விரும்பினார். இதற்காக, "டின்' எண் பெற, ஆற்காடு வணிக வரி அலுவலகத்திற்கு சென்று, கடந்த, 19ம் தேதி விண்ணப்பித்தார். ஆனால், சதீசுக்கு, "டின்' எண் கொடுக்காமல் இழுத்தடித்தனர். கடந்த, 25ம் தேதி மீண்டும் வணிக வரி அலுவலகத்திற்கு சென்றார். அங்கு, வணிகவரி அலுவலரான, காட்பாடி காந்தி நகரைச் சேர்ந்த உஷாராணி, 54, தனக்கு, 2,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால், "டின்' எண் கொடுப்பதாக கூறினார்.பணம் கொடுக்க விரும்பாத சதீஷ், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., பாலசுப்பிரமணியம் தலைமையில், போலீஸார் ஆற்காடு வணிகவரித்துறை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு, ரசாயன பவுடர் தடவிய, 2,000 ரூபாயை சதீஷ், வணிக வரி அலுவலர் உஷா ராணியிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த போலீஸார், கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

 

சபரிமலையில் அரவணை தட்டுப்பாடு இல்லை

சபரிமலை: சபரிமலையில் முக்கிய வழிபாட்டு பிரசாதங்களில் ஒன்றான அரவணை தயாரிக்க சர்க்கரை, கற்கண்டு, முந்திரி, ஏலக்காய், சுக்கு போன்ற பொருட்கள் அவசியம். இவை காண்டிராக்ட் முறையில் பெறப்படுகிறது. இந்த முறையில் கற்கண்டு சப்ளை செய்யும் குத்தகை உரிமம், குமுளி ஹைரேஞ்ச் மார்க்கெட்டிங் சொசைட்டிக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் பரிந்துரை படி கற்கண்டு இவர்கள் சப்ளை செய்யவில்லை. ஸ்டோரில் இருந்த கற்கண்டு தீர்ந்து விட்ட நிலையில் அரவணை உற்பத்தி கடந்த 24-ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து தேவசம்போர்டு மார்க்கெட்டில் நேரடியாக கற்கண்டு கொள்முதல் செய்ய முடிவெடுத்தது. அதன்படி தேவசம்போர்டு அதிகாரிகள் நேரடியாக கடைகளில் கற்கண்டு விலைக்கு வாங்கி பம்பை கொண்டு வரப்பட்டது. அவை டிராக்டர் மூலம் சன்னிதானம் கொண்டு வரப்பட்டு நேற்று இரவு மீண்டும் அரவணை உற்பத்தி தொடங்கியது. சீசன் தொடங்குவதற்கு முன்பே 25 லட்சம் டின் அரவணை உற்பத்தி செய்து ஸ்டாக் செய்யப்பட்டதால் பிரசாதம் வழங்குவதில் தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை என்று சபரிமலை நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.

 

பா.ஜ., பேரணிக்கு கோர்ட் அனுமதி

கோல்கட்டா: கோல்கட்டாவில் வரும் 30ம் தேதியன்று, பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்காக கோல்கட்டா முனிசிபல் கார்ப்பரேஷனின் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, பா.ஜ., தரப்பில் கோல்கட்டா ஐகோர்ட்டில் அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், பேரணி நடத்த நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது. விதிமுறைகளின்படி பேரணி நடத்தப்படுகிறதா என்பதை கண்காணித்து, அறிக்கை தாக்கல் செய்ய மூவர் குழு ஒன்றை கோல்கட்டா கோர்ட் நியமித்துள்ளது.

 

அமர்பிரகாஷ் நிறுவனத்திற்கு மேலும் ஒரு விருது

சென்னை: தென்னிந்திய சிறந்த கட்டுமான நிறுவனமான அமர்பிரகாஷ் டெவலப்பர்ஸ் நிறுவனத்திற்கு, இந்தியாவின் சிறந்த சந்தை ஆய்வு நிறுவனமான 'வேல்டுவைடு அச்சீவர்ஸ்' நிறுவனத்தின் 'வேல்டு வைடு அச்சீவர்ஸ் ரியல் எஸ்டேட் அவார்டு 2014' விருது இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை மத்திய அமைச்சர் சஞ்சீவ் குமார் பாலையன், புதுடில்லியில் நடைபெற்ற விழாவில், நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஆதர்ஷ் அமார் சுராணாவிடம் வழங்கினார்.இந்த நிறுவனம் இதுவரை இந்த ஆண்டில் நான்காவது முறையாக விருது பெற்றுள்ளது. 'சென்னை ரியல் எஸ்டேட் அவார்டு 2014'ல் 2 விருதுகளும், சிங்கப்பூரில் நடைபெற்ற 5வது 'CMO Asia awards 2014' ல் 6 விருதுகளும், பெங்களூரில் நடைபெற்ற 'பிராண்ட் அகாடமி'யின் 2 விருதுகளையும் பெற்றுள்ளது. தற்போது பெற்றுள்ள விருது, நிறுவனத்தின் மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

 

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

புதுடில்லி : பாம்பாற்றின் குறுக்கே கேரள அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் உமாபதி மனு தாக்கல் செய்தார். கேரள அரசு, தமிழக அரசுடன் சுமூகமான போக்கை கடைபிடிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பாக்., உளவாளி ஜாகீருக்கு 5 ஆண்டு சிறை

சென்னை : பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனுக்கு 5 ஆண்டு சிறை விதித்து சென்னை பூந்தமல்லி சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.2000 அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

தனியாரிடம் ரயில் டிக்கட் முன்பதிவு

புதுடில்லி: ரயில் பயணிகளின் வசதிக்காக, ரயில் டிக்கட் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத டிக்கட் விற்பனை ஆகியவற்றை தனியாருக்கும் வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரயில்வே துறையின் அங்கீகரிக்கப்பட்ட டிக்கட் முன்பதிவு ஏஜண்டுகளுக்கு இதற்கான அனுமதி வழங்கப்படும். தட்கல் முறையைப் போன்றே, கடுமையான விதிமுறைகள் இத்திட்டத்தில் பின்பற்றப்படும் என்று, மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா ராஜ்யசபாவில் எழுத்து மூலமாக இந்த தகவலை அளித்துள்ளார்.

 

ராஜஸ்தான்:மாணவர்கள்-போலீஸ் மோதல்

ஜெய்பூர் : ராஜஸ்தான் பல்கலைக்கழக தேர்தலை ரத்து செய்து ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை தடுக்க முயன்ற போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

 

40 இந்தியர்கள் நாளை விடுதலை

புதுடில்லி : பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்தியர்கள் 40 பேரை நாளை விடுதலை செய்வதாகவும், இவர்களில் 35 பேர் மீனவர்கள் என்றும், வாகா எல்லையில் அவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

ஐ.எஸ்.ஐ.எஸ்.,ல் சேர்ந்த இளைஞர்கள் மீட்பு

மும்பை: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இந்திய இளைஞர்கள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், உளவுத்துறையும், தேசிய புலனாய்வு பிரிவும் இணைந்து இது குறித்து விசாரணை நடத்தின. இந்த நடவடிக்கையில், மும்பையைச் சேர்ந்த இளைஞர் அரீப் மஜீத் உள்ளிட்ட நான்கு இளைஞர்கள் மீட்கப்பட்டு, இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து அரீப் மஜீத்திடம் விசாரணை நடந்து வருகிறது.

 

இந்தியா விரும்பினால் பேச்சு:நவாஸ்

இஸ்லாமாபாத் : வெளியுறவுத்துறை செயலாளர்களுடனான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்திருக்கக் கூடாது. புதிதாக பேசுவதற்கு ஒன்றுமில்லை. கடந்த காலங்களில் நான் காஷ்மீர் தலைவர்களுடன் பேசி உள்ளேன். பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா தொடர விரும்பினால், காஷ்மீர் விவகாரத்தில் தீவிரமான பேச்சுவார்த்தை நடத்தலாம் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

 

சென்னை சுந்தரம் சாய்பாபா கோவிலில் புதிய தோரணவாயில்

சென்னை : சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சுந்தரம் ஸ்ரீ சத்யசாய்பாபா கோவிலில் 12 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய தோரணவாயில் திறந்து வைக்கப்பட்டது. சாய்பாபாவின் மகாசமாதி உள்ள ஆந்திரா மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள குல்வந்த்அரங்கின் முன் உள்ள பிரம்மாண்டமான நுழைவு வாயில் போலவே இந்த நுழைவு வாயிலும் அமைக்கப்பட்டுள்ளது. தோரணவாயிலின் இருபுறமும் யாளியும் பூதகணங்களும் தாங்கிநிற்க உச்சிகோபுரத்தில் மயில்மேல் அமர்ந்த பாலமுருகன் வீற்றிருக்கிறார். பின்பக்கம் அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய பாபாவின் இலச்சினை(எம்ப்ளம்) இடம் பெற்றுள்ளது.இந்த தோரணவாயிலை தஞ்சையின் புகழ்பெற்ற சிற்பி டி.பாலசுப்பிரமணியம் வடிவமைத்துள்ளார்.புதிய தோரணவாயிலின் திறப்பு விழாவினை முன்னிட்டு பல்வேறு வித ஹோமங்கள் நடைபெற்றது.பின்னர் நாதஸ்வரம் இசைக்க வேதகோஷங்கள் முழங்க ஸ்ரீசத்யசாய் இளைஞர் அணியினர் கையில் சாய்பாபா படத்தை ஏந்தியபடி புதிய தோரணவாயில் வழியாக நுழைந்தனர்.இவர்களை சுந்தரம் பஜன் குழுவினர் பஜன் இசைத்தபடி பின்தொடர்ந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

இது போன்ற வரவேற்பை கண்டதில்லை:மோடி

உதம்பூர் : காஷ்மீரின் உதம்பூரில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இது போன்ற மக்கள் கூட்டத்தை நான் எங்கும் கண்டதில்லை. ஒவ்வொரு மாதமும் வரும் போதும் காஷ்மீரில் இது போன்ற உற்சாக வரவேற்பு வேறு எந்த பிரதமருக்கும் கிடைத்திருக்காது. இங்கு பிரதமர் ஒருமுறை வருவதை கூட மக்கள் பெருமையாக கருதுகிறார்கள். ஆனால் எந்த பிரதமரும் ஒவ்வொரு மாதமும் வரவில்லை. இங்கு வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே இங்கு வந்துள்ளேன். நான் ஒவ்வொரு முறையும் இங்கு வருவது உங்கள் கண்ணீரை துடைப்பதற்காக. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடவே நான் நினைத்தேன். இது அரசியல் நோக்கத்திற்காக அல்ல. ஊழல், சுரண்டல், உணர்வுபூர்வமான மிரட்டல்களே காஷ்மீரில் அரசியல்வாதிகளின் வாடிக்கையாக உள்ளது. காஷ்மீர் மக்களுக்கு உதவ நாங்கள் ஒரு போதும் தயங்கியதில்லை. ஆனால் அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்கு சென்றது என அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாகவே ஆட்சியில் இருப்பவர்களும், எதிர்கட்சியில் இருப்பவர்களும் என்னை குறைகூறி வருவதற்கு காரணம் என மோடி தெரிவித்துள்ளார்.

 

அரசுக்கு சுப்ரீம்கோர்ட் வேண்டுகோள்

புதுடில்லி : நடப்பு கல்வி ஆண்டில் கேந்திரிய வித்தியாலயங்களில் ஜெர்மன் மொழியை தொடர்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

 

நேரடி மானிய திட்டம்:பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை : சிலிண்டருக்கான நேரடி மானிய திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன் தமிழக அரசின் கருத்துகளை பரிசீலிக்க வேண்டும் என தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார். மேலும் ஜனவரி 1ம் தேதி முதல் சிலிண்டருக்கான திருத்தப்பட்ட மானிய திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்திருப்பதாகவும், வேளாண் கூட்டுறவு சங்கம் மற்றும் தபால் நிலையங்கள் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்தவும், நகர்புறங்களில் கூட்டுறவு வங்கிகள் மூலம் மானியம் கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும் எனவும் முதல்வர் தனது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

 

அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கோஷ்டி மோதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி கூட்டம், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தலைவர் தங்கமுத்து தலைமையில் நடந்தது. அப்போது, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த துணைத் தலைவர் வெங்கடாசலம் தலைமையிலான அ.தி.மு.க., கவுன்சிலர்கள், கமிஷன் பெற்றுக் கொண்டு திட்டப்பணிகளை செய்வதால் அவை தரமில்லாமல் உள்ளன என குறை கூறினர். இதையடுத்து, தலைவர், துணைத் தலைவர் கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, அவைக்கு வௌியே இருந்த சிலர், அவைக்குள் நுழைந்து, துணைத் தலைவர் கோஷ்டியினரை தாக்கினர். நாற்காலிகள் தூக்கிவீசப்பட்டன. கூட்ட அறை போர்க்களமாக மாறியது. இதையடுத்து, தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, துணைத்தலைவர் கோஷ்டியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

திருவள்ளுவருக்கு பா.ஜ., எம்.பி., ஆதரவு

புதுடில்லி : லோக்சபாவில் தமிழில் வணக்கம் சொல்லி பேச துவங்கி பா.ஜ., எம்.பி., தருண்விஜய், அகர முதல எழுத்தெல்லாம் குரலை உதாரணம் காட்டி பேசினார். தொடர்ந்து, திருவள்ளுவரின் வாழ்க்கையை பள்ளிகளில் பாடமாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

 

விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு

சென்னை: பால் கொள்முதல் குறித்து வௌ்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரி தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை வௌியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், அரசைப் பற்றி அவதூறான கருத்துக்கள் உள்ளதாக கூறி, அமைச்சர் ரமணா சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

 

டேங்கர் லாரி மோதி 2 பெண்கள் பலி

விக்கிரவாண்டி: விழுப்புரம், விக்கிரவாண்டியை அடுத்த முண்டியம்பாக்கத்தில், பஸ் ஏறுவதற்காக சாலை ஓரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது, டேங்கர் லாரி மோதியதில், இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஆழ்துளைக் கிணறுகள் மாயம்

வேலூர்: வேலூர் நகராட்சியின் 28வது வார்டில் 6 ஆழ்துளை கிணறுகளை அமைக்க எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி திட்டங்களை எம்.எல்.ஏ., விஜய் ஆய்வு செய்தார். அப்போது, 28வது வார்டில், 6 ஆழ்துளை கிணறுகளுக்கு பதில் 2 மட்டுமே இருந்தன. நான்கு ஆழ்துளைக் கிணறுகளை காணவில்லை. இது குறித்து ஆய்வு நடத்தும்படி, நகராட்சி கமிஷனருக்கு எம்.எல்.ஏ., உத்தரவிட்டார். இதற்கிடையில், 28 வது வார்டில் நான்கு ஆழ்துளைக் கிணறுகளை காணவில்லை என்று சமூக ஆர்வலர் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

 

அனைத்து கட்சி போராட்டம் ஒத்திவைப்பு

திருவாரூர்: கர்நாடகாவில், மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே கர்நாடகா தடுப்பணை கட்டுவதை கண்டித்து, நாளை அனைத்து கட்சி சார்பாக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக இந்த போராட்டம் டிசம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பெண் இன்ஜினியர் கொலை: 3 பேருக்கு ஆயுள்

சென்னை : சென்னை சிறுசசேரியில் ஐடி பெண் இன்ஜினியர் உமாமகேஸ்வரி கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி வளாகத்தில் இருந்து மாயமான உமாமகேஸ்வரி, 22ம் தேதி அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, வடமாநிலத்தைச் சேர்ந்த ராம் மண்டல், உத்தம் மண்டல் மற்றும் உஜ்ஜல் மண்டல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

 

39 இந்தியர்கள் கொல்லப்படவில்லை-சுஷ்மா

புதுடில்லி: ஈராக்கில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களின் நிலை குறித்த ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பப்பட்டது. எதிர்கட்சிகள், இந்தியர்கள் அனைவரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுவிட்டதாக, தகவல்கள் கிடைத்துள்ளன என கூறின. இதற்கு பதில் அளித்த வௌியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், 'ஆதாரமில்லாத தகவல்களின் அடிப்படையில் அரசு முடிவெடுக்க முடியாது. இந்தியர்கள் கொல்லப்பட்டதற்கான சாட்சியோ, ஆதாரமோ இல்லை. அவர்கள் உயிருடன் தான் உள்ளதாக ஆறுக்கும் மேற்பட்ட ஏஜன்சிகள் கூறுகின்றன. கடத்தப்பட்டவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என இதுவரை தகவல் இல்லை,' என்றார்.

 

தியேட்டருக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை: கோவை, பூமார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு தியேட்டருக்கு இன்று காலை வந்த ஒரு டெலிபோன் அழைப்பில் பேசிய மர்ம நபர், தியேட்டரில் குண்டு வைத்துள்ளதாகவும், அது எந்த நேரமும் வெடிக்கும் என கூறிவிட்டு, இணைப்பை துண்டித்தார். போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சென்று, தியேட்டரில் சோதனை நடத்தினர். இதில் வெடிபொருட்கள் சிக்கவில்லை. இதையடுத்து, தியேட்டரில் வழக்கம் போல் படம் திரையிடப்பட்டது.

 

கடத்தப்பட்ட இந்தியர்கள்:மாயாவதி நம்பிக்கை

புதுடில்லி : லோக்சபாவில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி., மாயாவதி, ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்புகிறோம். அவர்களை மீட்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

 

மாணவன் கொலை: சாலை மறியல்

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள அயன்கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகன் பாஸ்கர், 14. பந்தல்குடி அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு வந்த பாஸ்கர், வகுப்பறையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த முன்னாள் மாணவரான மாரீஸ்வரன் என்பவர்,, பாஸ்கரின் நெற்றியில் கத்தியால் குத்திவிட்டு, தப்பி ஓடிவிட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாஸ்கர் இறந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், அருப்புக்கோட்டை-பந்தல்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

 

நெல்லையில் டவுசர் கொள்ளையர்கள் பீதி

திருநெல்வேலி: நெல்லை நகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக முகமூடி மற்றும் டவுசர் அணிந்து வந்து ஒரு கும்பல் கொள்ளையடித்து வருகிறது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன் பேட்டையைச் சேர்ந்த சாந்தி என்பவரை தாக்கிய டவுசர் கொள்ளையர்கள், அவர் அணிந்திருந்த ஏழரை பவுன் செயினை பறித்து சென்றனர். இந்நிலையில், திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் உள்ள சிவந்திநகரில் டவுசர் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த சீத்தாலட்சுமி என்பவர் அணிந்திருந்த 22 பவுன் தங்க நகைகளை, முகமூடி மற்றும் டவுசர் அணிந்து வந்த 4 மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதை தடுத்த சீத்தாலட்சுமியின் மகன் ராஜசேகரை அந்த கும்பல் பயங்கரமாக தாக்கிவிட்டு தப்பி உள்ளது. தொடரும் டவுசர் கொள்ளையர்களின் அட்டகாசத்தால் நெல்லை மக்கள் பீதியில் உள்ளனர்.

 

கர்நாடக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

பெங்களூரு : கர்நாடகாவில் ஆரம்ப பள்ளிகளில் கன்னடம் மட்டும் கற்பிக்கப்படுவதற்கு பதிலாக ஆங்கிலத்தையும் கற்பிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு, கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

அந்தமானில் மிதமான நிலநடுக்கம்

புதுடில்லி : அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு விபரங்கள் குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

 

ஈராக் இந்தியர்கள் குறித்து அறிக்கை

புதுடில்லி: ஈராக்கில், பயங்கரவாதிகளால் கடத்தி வைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் குறித்த அறிக்கையை, வௌியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று பார்லிமென்ட்டில் சமர்ப்பிக்க உள்ளதாக, மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கூறி உள்ளார்.

 

உறவுக்கார்கள் ஆகும் லாலு-முலாயம்

புதுடில்லி : அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து, நண்பர்களாக மாறி உள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங்கும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத்தும் விரைவில் உறவுக்காரர்களாக மாற உள்ளனர். முலாயமின் பேரன் தேஜ் பிரதாப்பிற்கும், லாலுவின் இளைய மகள் ராஜ் லட்சுமிக்கும் திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் இந்த திருமணத்திற்கான கொண்டாட்டங்கள் டிசம்பர் மத்தியிலேயே துவங்க உள்ளது.

 

மும்பை பங்குசந்தையின் மதிப்பு ரூ.100 லட்சம் கோடியாக உயர்வு

மும்பை : இந்திய பங்குசந்தைகளில், மிகவும் பிரதானமானது மும்பை பங்குசந்தை. இச்சந்தையின் மதிப்பு ரூ.100 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. ரூ.100 லட்சம் கோடியை கடப்பது இதுவே முதல்முறையாகும். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலீட்டாளின் லாபமும் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக மும்பை பங்குசந்தை தெரிவித்துள்ளது.

 

பா.ஜ.,-சிவசேனா இன்று பேச்சுவார்த்தை

மும்பை : மகாராஷ்டிராவில் அதிகார பங்கீடு தொடர்பாக பா.ஜ.,வும், சிவசேனாவும் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றன.

 

சென்செக்ஸ், நிப்டி மீண்டும் புதிய உச்சம்!

மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்று(நவ.,28ம் தேதி) மீண்டும் ஒரு புதிய உச்சத்தை தொட்டது. கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்படாது என ஒபக் அறிவித்ததன் எதிரொலியாக, எண்ணெய் நிறுவன பங்குகள் உயரத் தொடங்கின. மேலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இன்று வெளியாக இருப்பதாலும், வங்கிவட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பாலும் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 326.61 புள்ளிகள் உயர்ந்து 28,765.52-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 97.20 புள்ளிகள் உயர்ந்து 8,591.40-ஆகவும் இருந்தன.

 

2019ல் காங்., ஆட்சியை பிடிக்கும்:சித்தராமையா

பெங்களூரு : 2019ம் ஆண்டு மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என கர்நாடக முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. 2014ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தது காங்கிரசின் மோசமான செயல்பாட்டால் அல்ல, காங்கிரஸ் அரசு செய்த பணிகள் குறித்த விபரங்களை முறையாக மக்களிடம் கொண்டு சேர்க்காததால் தான். பிரதமர் மோடி அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்ற முடியாதவைகள். அதனால் 2019ல் காங்கிரஸ் தான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

 

இந்தியர்களுக்கு 48 மணி நேரத்தில் விசா

புதுடில்லி: இந்தியாவிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு செல்பவர்களுக்கு 48 மணிநேரத்தி்ல் விசா வழங்கப்படும் என பிரான்ஸ் நாட்டிற்கான தூதர் ரிச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்காக செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டை காட்டிலும் இந்தாண்டு விசா வழங்கிய எண்ணிக்கை 33 சதவீதமாக அதிகரித்து காணப்படுகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு 48 மணி நேரத்தி்ல்விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் இந்தியா முழுவதும் எட்டு இடங்களில் விசா விண்ணப்பங்கள் பெறுவதற்கான மையம் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

புதுடில்லி காங்.,பொறுப்பாளர் நியமனம்

புதுடில்லி: புதுடில்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக பி.சி.சாக்கோ நியமிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இது வரை பொறுப்பில் இருந்து வந்த ஷகீல் அகமதுமூன்று மாத காலம் வெளிநாடுகளுக்கு செல்ல இருப்பதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திற்குள் மாநிலத்தி்ல் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் உடனடியாக பொறுப்பாளராக பி.சி.சாக்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இங்கிலாந்தின் புலனாய்வு எழுத்தாளர் மரணம்

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் புலனாய்வு எழுத்தாளரான பிடிஜேம்ஸ் தனது 94--வயதில் காலமானார். இவர் எழுதிய பல்வேறு புலனாய்வு புத்தகங்கள் மற்றும் துப்பறியும் நாவல்கள் உலகளவில் புகழ்பெற்றவை. பிலிஸ் டோரதிஜேம்ஸ் என்றழைக்கப்படும் இவர் 1920-ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் நகரில் பிறந்தார். 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார் இவர். இவரின் பல நாவல்கள் தொலைகாட்சி மற்றும் திரைப்படமாக லண்டன் மற்றும் ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய தி மர்டர் ரூம், லைட்ஹவுஸ், தி சில்ட்ரன் ஆப் மென், டெத் கம்ஸ் ஆப் பெம்பர்லி போன்றவை புகழ்பெற்றவையாக திகழ்ந்தன. இவரின் மறைவு குறித்து இங்கிலாந்து பிரதமர் டேவி்ட் கேமரூன் உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் மேலும் சில இனங்கள் சேர்ப்பு

புதுடில்லி: தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் மேலும் சில இனங்கள் சேர்க்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கேரளா, ம.பி., திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் உள்ள சில இனங்கள் தாழ்த்தப்பட்டடோர் பட்டியலில் சேர்க்கும் தீர்மானம் மக்களவையில் கொண்டு வரப்பட்டது. இதன்படி மக்களவையில் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவற்றப்பட்டது. அதே நேரத்தில் மதம் மாறி வந்த தலித்த இனத்தவர்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி பேசிய அதிமுகவின் கோபாலகிருஷ்ணன், ஏஐஎம்ஐஎம் கட்சியி்ன் அசாதுதீன்ஓவைசி ஆகியோரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

 

ஆந்திரா துறைமுகம் முதல்வர் கோரிக்கை

ஐதராபாத்:வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஆநதிர துறைமுகம் பயன்படுத்தப்படும் என மாநில முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தெலுங்கானா மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஆந்திர மாநில துறைமுகம் பயன்படுத்தி கொள்ளப்படும். தெலுங்கானா மாநிம் அருகே உள்ள மச்சலிப்பட்டினம் துறைமுகப்பயன்படுத்தி கொள்ளவதற்கான திட்ட வரைமுறை குறித்து ஆந்திரமாநில அரசுக்கு தெரியப்படு்த்தி இருப்பதாகவும், விரைவில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து இது குறித்து பேச இருப்பதாகவும் தெரிவித்தார்.

திருநெல்வேலி: நெல்லை நகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக முகமூடி மற்றும் டவுசர் அணிந்து வந்து ஒரு கும்பல் கொள்ளையடித்து வருகிறது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன் பேட்டையைச் சேர்ந்த சாந்தி என்பவரை தாக்கிய டவுசர் கொள்ளையர்கள், அவர் அணிந்திருந்த ஏழரை பவுன் செயினை பறித்து சென்றனர். இந்நிலையில், திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் உள்ள சிவந்திநகரில் டவுசர் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த சீத்தாலட்சுமி என்பவர் அணிந்திருந்த 22 பவுன் தங்க நகைகளை, முகமூடி மற்றும் டவுசர் அணிந்து வந்த 4 மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதை தடுத்த சீத்தாலட்சுமியின் மகன் ராஜசேகரை அந்த கும்பல் பயங்கரமாக தாக்கிவிட்டு தப்பி உள்ளது. தொடரும் டவுசர் கொள்ளையர்களின் அட்டகாசத்தால் நெல்லை மக்கள் பீதியில் உள்ளனர்.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.