குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

27.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

தி.மு.க.,வினருக்கு முதல்வர் எச்சரிக்கை

சென்னை: தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கூறுகையில், 'சட்டசபையில் மற்ற உறுப்பினர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அவர்கள் உரிமையை பாதிக்காத வகையில் தி.மு.க.,வினர் நடந்து கொள்ள வேண்டும்.

 

 

சட்டசபையின் மாண்பிற்கு இழுக்கு ஏற்படும் வகையில் தி.மு.க.,வினர் நடந்து கொண்டால், அதற்குரிய பலனை அவர்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும், ' என்றார்.

 

பி.சி., சாக்கோவுக்கு புது பொறுப்பு

புதுடில்லி: காங்கிரஸ் கட்சி விவகாரங்களுக்கான பொறுப்பாளராக இருந்த ஷகீல் அகமது நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பி.சி. சாக்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.

 

ரூ.1,000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தனிநபர் கழிப்பறைக்கு மானிய தொகை வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலரை லஞ்சஒழிப்பு போலீசார் கைது செய்தனர். குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர்.வெள்ளோடு புலவனூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தேசிய வேலையுறுதி திட்டத்தின் மூலம் தனிநபர் கழிப்பறை கட்டி வருகிறார். கழிப்பறை கட்ட முதற்கட்டமாக ரூ.2,500 மானியம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக ரூ.7,500 மானிய தொகை வழங்க ஆர்.வெள்ளோடு ஊராட்சி செயலர் மல்லபுரத்தை சேர்ந்த வீரபாண்டியன் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ் திண்டுக்கல் லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுத்தார். போலீசார் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ஆயிரம் ரூபாயை வீரபாண்டியனிடன் கொடுத்தார். பணத்தை பெற்றபோது மறைந்திருந்த லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி., ஜான் கிளமண்ட் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர்.

 

வரிசெலுத்துவோருக்கு ஏற்ற வரிவிதிப்பு முறைகள்: அருண் ஜெட்லி

புதுடில்லி: வரிசெலுத்துவோர்களுக்கு ஏற்ற வகையில் வரி விதிப்பு முறைகளை ஏற்படுத்த அரசு முயற்சி செய்து வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், வரிசெலுத்துவோர்களுக்கு ஏற்ற வகையில் வரி விதிப்பு முறைகளை ஏற்படுத்த அரசு முயற்சி செய்து வருகிறது. கறுப்பு பண விவகாரம் உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாட்டிலும் கவலைக்குரியதாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, முதலீட்டு சமூதாயத்தின் மத்தியில், வரிவிதிப்பு தொடர்பாக இந்தியாவுக்கு கெட்ட பெயரே நிலவி வருகிறது. இவ்வாறு அருண் ஜெட்லி தெரிவித்தார்.

 

முதல்வருக்கு கருணாநிதி கேள்வி

சென்னை: சட்டசபையை கூட்டச் சொல்வது தரம் தாழ்ந்த விஷயமா என முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டசபையை கூட்டச் சொல்வது தரம் தாழ்ந்த விஷயமா? சட்டசபையை கூட்டச் சொல்லி மற்ற கட்சிகளும் தான் கோரி வருகின்றன. போதிய இடவசதி செய்து கொடுத்தால் நான் சட்டசபைக்கு வரத்தயார். சட்டசபையில் போதிய இடவசதியை ஏற்படுத்தாமல், அவைக்கு வரச் சொல்வது நியாயம் தானா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

பறிமுதல் செய்த போதைப் பொருள் வியாபாரியிடமே ஒப்படைப்பு

திருநெல்வேலி: நெல்லையில் 20 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள புகையிலை போதை பொருட்களை பறிமுதல் செய்தவரிடமே அதிகாரி திருப்பி ஒப்படைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி டவுன், தச்சநல்லூர் மார்க்கெட்டில் நவ.,6ம் தேதி உணவுபாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த உணவு அலுவலர், அதை மீண்டும் வியாபாரிகளிடமே ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை சிவந்திப்பட்டி மலையில் அதிகாரிகள் முன்னிலையில் எரித்துவிட்டதாக அதிகாரிகள் கணக்கு காண்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. உணவுபாதுகாப்பு விஷயத்தில் தில்லுமுல்லு செய்யும் அதிகாரிகளால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சிறிய வங்கி துவங்குவதற்கான வழிகாட்டுதல் வெளியீடு

மும்பை: சிறிய வங்கிகள் துவங்குவதற்கான வழிகாட்டுதல் விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல் விதிமுறைகளின்படி, சிறிய வங்கிகள் துவங்குவதற்கான குறைந்தபட்ச ஆரம்ப மூலதனம் ரூ. 100 கோடியாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட எல்லைக்குள் வங்கிச் சேவையை சிறிய வங்கிகள் அளிக்கும். இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 

திருச்சியில் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, நேற்று இரவு, 11.30 மணிக்கு ஏர்-ஏஷியா விமானம், திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது. இதில், வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, திருச்சி மேலசிந்தாமணி பகுதியை சேர்ந்த பிராண்டின், 29. என்பவரின் டிராலி பேக்கில், 385 கிராம் தங்க கட்டிகள் இருந்தன. இதன் மதிப்பு, 10 லட்சத்து, 33 ஆயிரம் ரூபாய். ஆகும். , தங்க கட்டிகளை பறிமுதல் செய்த வான் நுண்ணறிவு போலீஸார், பிராண்டினை ஏர்போர்ட் போலீஸாரிடம், ஒப்படைத்தனர்.

 

சூரியனை மறைக்க முடியாது-பா.ஜ.,

புதுடில்லி: அமித்ஷா தலைமையில் பா.ஜ., பேரணி நடத்துவதற்கு கோல்கட்டா, முனிசிபல் கார்ப்பரேஷன் அனுமதி மறுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, 'பேரணிக்கு அனுமதி தர மறுத்து, அதை நிறுத்தியதால் எந்த பலனும் அவர்களுக்கு (திரிணமூல் காங்கிரஸ்) கிடைக்கப் போவதில்லை. சூரியனி்ன் ஔியை கைகளால் மறைத்துவிட முடியாது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்,' என்றார்.

 

எல்லையில் மோதல்: 9 பேர் பலி

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம், அர்னியா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இன்று அதிகாலை திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று பொதுமக்கள் பலியாகினர். இதையடுத்து, பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 பயங்கரவாதிகள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். இந்திய தரப்பில் மூன்று வீரர்க்ள் பலியாகி உள்ளனர். மேலும் ஒரு பயங்கரவாதி, ராணுவத்தினர் தோண்டிய பதுங்கு குழியில் பதுங்கியிருப்பதாகவும், அவரை தேடும் பணி நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

லோக்சபாவில் கேரள எம்,பி.,க்கள் அமளி

புதுடில்லி:முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை அதிகரிக்க அனுமதித்தது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் மீறி, கேரள எம்.பி.,க்கள் இன்று லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டனர். அம்மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி., பிரேமச்சந்திரன், 'தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. அதேநேரத்தில் கேரள மக்களின் அச்சத்தை மத்திய அரசு கருத்தில் கொண்டு, அணை நீர் மட்டத்தை உயர்த்துவதை நிறுத்த வேண்டும்,' என்றார். இவருக்கு ஆதரவாக அனைத்து கேரள எம்.பி.,க்களும் கூச்சல் போட்டனர். கேரள அமைச்சர்களின் கோரிக்கையை கண்டித்து அ.தி.மு.க., எம்.பி.,க்கள் கோஷமிட்டனர். இதனால், லோக்சபாவில் அமளி ஏற்பட்டது.

 

அமித்ஷா பேரணிக்கு அனுமதி மறுப்பு

கோல்கட்டா: கோல்கட்டாவில் அமித்ஷா தலைமையில் பா.ஜ., பேரணி நடத்துவதற்கு கோல்கட்டா மாநகராட்சிஅனுமதி மறுத்துள்ளது. வரும் ஞாயிறு அன்று பேரணி நடத்த பா.ஜ., தரப்பில் முடிவு செய்யப்பட்டிருந்தது

 

எரிசக்தி: சார்க் நாடுகள் ஒப்பந்தம்

காத்மாண்டு: சார்க் நாடுகள் இடையே எரிசக்தி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. முன்னதாக, பாகிஸ்தானின் தலையீட்டால், ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது தடைபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

நெல்லை:சர்ச்சை தீர்மானங்கள் ரத்து

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி பகுதியில் மின்விளக்குகளை பராமரிக்கும் பணிகளை பத்து ஆண்டுகள் மேற்கொள்ள தனியார் நிறுவனத்திற்கு 24 கோடி ரூபாய்க்கு குத்தகை விட டெண்டர் விடும் தீர்மானம், அதிகாரிகளால் கொண்டுவரப்பட்டது. தற்போது நெல்லை மாநகராட்சியில் அந்த நிறுவனம்தான் மின்பழுது நீக்கும் பணிகளை மேற்கொள்கிறது. இதற்கு முன்பும் முறையாக பணிகள் மேற்கொள்ளாததால், அந்த நிறுவனத்தை "தடை பட்டியலில்' சேர்த்து முந்தைய அ.தி.மு.க., மேயர் விஜிலா நடவடிக்கை எடுத்திருந்தார். மேலும் கோடிக்கணக்கான மதிப்புள்ள ரோடு,தார்த்தளம் அமைக்கும் பணிகளுக்கான டெண்டர் விட தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானங்களை நிறைவேற்றினால் மாநகராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று பகலில் அ.தி.மு.க.,மேயர் புவனேஸ்வரி தலைமையில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடந்தது. பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக மக்களின் முதல்வர் ஜெ.,க்கு நன்றி தெரிவிப்பதாக மேயர் தெரிவித்தார். பின்னர் வழக்கமான பணிகளுக்கான 10 தீர்மானங்கள் அனுமதிக்கப்படுவதாகவும், தரமில்லாத ரோடு பணிகள், மின்பராமரிப்பு பணிகளுக்கு 24 கோடி ரூபாய் வழங்கும் தீர்மானம் உள்ளிட்ட 37 தீர்மானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்து விட்டு கிளம்பினார். கூட்டம் மொத்தமே ஆறு நிமிடங்கள்தான் நடந்தது. மேயர், தி.மு.க., தலைவரை விமர்சித்து பேசியதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.,கவுன்சிலர்கள் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தினர். இருப்பினும் கூட்டம் நிறைவடைந்தது. நெல்லை மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தும் தீர்மானங்களை மேயர் புவனேஸ்வரி ரத்துசெய்தது குறித்து நிருபர்களிடம் கூறுகையில், சென்னையில் முதல்வரை சந்தித்தபோது மக்களுக்காக பணியாற்றுங்கள் என தெரிவித்தார். எனவே பணிகள், டெண்டர்கள் விடுவதில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும் என்பதற்காக மறுடெண்டர் விட வலியுறுத்தியுள்ளேன் என்றார்.

 

சிவசேனாவுடன் கூட்டாட்சி: பட்னாவிஸ்

மும்பை: சிவசேனாவுடனான பேச்சுவார்த்தை குறித்து மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், 'நாங்கள், சிவசேனாவோடு மகா., ஆட்சியை பகிர்ந்து கொள்ள மிகவும் விரும்புகிறோம். அதற்காக, நாளை பேச்சுவார்த்தையை துவக்குகிறோம். சிவசேனா, தேசிய ஜனநாயக முன்னணியின் ஒரு அங்கம். அக்கட்சி மத்திய ஆட்சியிலும் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது,' என்றார்.

 

கறுப்பு பணம்: முலாயம் கோரிக்கை

புதுடில்லி: பா.ஜ., அரசு கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பார்லியின் இரு அவைகளிலும் பிரச்னையை கிளப்பி வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங், 'கறுப்பு பணத்தை மீட்டு கொண்டுவருவதற்கான கால நிர்ணயத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டியது அவசியம்,' என்றார்.

 

குமுளியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு

குமுளி: தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ள குமுளியில், வணிகவரி, கஸ்டம்ஸ் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. இங்கு, கேரள லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் விவரங்கள் இதுவரை வௌியிடப்படவில்லை.

 

இந்தியாவுடன் நட்புறவு-பாக்., விருப்பம்

இஸ்லாமாபாத்: காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பாக்., தூதர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியா, பாக்., உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுடன் நடக்க இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது. சார்க் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கு வந்த பாக்., பிரதமர் நவாசிடம் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர்த்துவிட்டார். இந்நிலையில், இந்தியாவுடன் நல்லுறவை விரும்புவதாக பாகிஸ்தான் வௌியுறவுத்துறை அறிவித்துள்ளது. அதில், இந்தியாவும் அதே மனப்பாங்குடன் செயல்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

காஷ்மீரை வாட்டும் கடும் குளிர்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் மோசமான வானிலை நிலவி வருகிறது. இரவு நேரத்தில் கடும் குளிர் வாட்டுகிறது. சில நேரங்களில் மழை பொழிவும் உள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மிக கடுமையான குளிர்நிலை நேற்று முன்தினம் இரவு நிலவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பா.ஜ., சிவசேனா இடையே பேச்சுவார்த்தை

மும்பை: மகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைத்துள்ள பா.ஜ., தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி உள்ளது. தேசியவாத காங்கிரஸ் வௌியில் இருந்து, நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க பா,ஜ., விரும்புகிறது. ஆனால், சிவசேனா பல்வேறு நிபந்தனைகளை விதித்தால் பா.ஜ., தயக்கம் காட்டி வந்தது. இந்நிலையில், பா.ஜ., அரசுக்கு ஆதரவு தருவது குறித்து பா.ஜ., சிவசேனா இடையே நாளை மும்பையில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம், அர்னியாவில் பதுங்கி உள்ள பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இன்று காலை நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், பயங்கரவாதிகள் மூன்று பேரை இந்திய வீரர்கள் சுட்டுக் கொன்றனர். தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.

 

ஆஸி., இந்திய கிரிக்கெட் போட்டிகள் ரத்து

சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆஸி,.அணியின் துவக்க ஆட்ட வீரர் ஹியூக்ஸ், பவுன்சர் பந்தால் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக இறந்தார். இதைத் தொடர்ந்து, ஆஸி மற்றும் இந்தியா இடையே நடக்க இருந்த கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மோடியும், நவாசும் கைகுலுக்கினர்

காத்மாண்டு: நேபாளம், காத்மாண்டுவில் நடக்கும் சார்க் மாநாட்டை பொறுப்பேற்று நடத்திய நேபாளத்தின் சார்பில் நேற்று விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் சுசில் கொய்ராலா இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக சென்ற பிரதமர் மோடியும், பாக்., பிரதமர் நவாசும் நேருக்கு நேர் சந்தித்தனர். அப்போது இருவரும் கைகுலுக்கி, பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். சார்க் மாநாட்டின் போது, நவாஸ் ஷெரீப்பை நேருக்கு நேர் சந்திப்பதை பிரதமர் மோடி தவிர்த்து வந்தார். சார்க் நாடுகளின் மற்ற தலைவர்களை சந்தித்து பேசிய மோடி, பாக்., பிரதமர் நவாசிடம் பேசவில்லை. இந்நிலையில், இரு தலைவர்களையும் இணைத்து வைத்து, ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முயற்சியில் சார்க் நாடுகளின் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

ஐ.பி.எல்., சூதாட்டம்.,: தோனிக்கு சிக்கலா?

புதுடில்லி: ஐ.பி.எல்., சூதாட்ட வழக்கை விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட், சென்னை அணியின் கேப்டனான தோனியின் பொறுப்பு குறித்து ஆராய்ந்து வருகிறது. சென்னை அணியின் கேப்டனாக உள்ள தோனி, இந்தியா சிமென்ட் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளதை கவனத்தில் எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் கூறி உள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில், தோனிக்கும் சிக்கல் எழலாம் என தகவல்கள் கூறுகின்றன.

 

எல்லையில் பயங்கரவாத தாக்குதல்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு பகுதியில் அர்னியா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தனர். இதையறிந்த, பாதுகாப்பு படை வீரர்கள் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பயங்கரவாதிகள் திருப்பி சுட்டதில் ஒரு அதிகாரி உள்ளிட்ட 3 ராணுவத்தினர், பொதுமக்களில் ஒருவர் என நால்வர் காயம் அடைந்துள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

 

பி.சி.சி.ஐ.,க்கு தேர்தல்: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: ஐ.பி.எல்., சூதாட்ட வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், சென்னை அணியை வாங்கிய இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் ஸ்ரீனிவாசனுக்கு எந்த அளவிற்கு பங்கு உள்ளது, அந்நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்கள் யார் என்று கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறி உள்ள நீதிபதிகள், இந்த தேர்தலில், ஐ.பி.எல்,, சூதாட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் போட்டியிடாமல் விலகி இருக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.

 

அமெ., 4000 விமானங்கள் பாதிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில், மோசமான குளிர்கால வானிலையால் 4,548 விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏராளமான விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

 

ஐ.பி.எல்.: சென்னை அணி நீக்கப்படுமா?

புதுடில்லி: ஐ.பி.எல்., சூதாட்ட வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள், ஐ.பி.எல்,. விளையாட்டில் இருந்து சென்னையை அணியை நீக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். அந்த அணிக்கு 400 கோடி ரூபாய் முதலீடு செய்தது யார், எப்படி என்ற கேள்விக்கு பதில் கிடைத்ததும், இது குறித்து இறுதி முடிவை கோர்ட் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

நெய்வேலி: 6 வீடுகள் தீக்கிரை

நெய்வேலி: நெய்வேலி அனல்மின் நிலைய விரிவாக்க பணியில், ஒப்பந்த தொழிலாளர்கள் சிலர் பணிபுரிந்து வந்தனர். நேற்று நடந்த ஒரு சம்பவத்தி்ல், இரு பிரிவினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை தாக்கினர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில், கொள்ளியிருப்பு என்ற இடத்தில் இருந்த ஒரு பிரிவினரின் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதில், 5 வீடுகள் தீக்கிரையாகின. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. எஸ்.பி.ராதிகா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

கிரிக்கெட் சூதாட்டம்: சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதுடில்லி: ஐ.பி.எல்., சூதாட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சூதாட்டம் என்பது கிரிக்கெட் விளையாட்டை கொன்றுவிடும் ஒரு விஷயம் என்று கடுமையாக சாடிய நீதிபதிகள், கிரிக்கெட்டின் பாரம்பரியம் காப்பாற்றப்பட வேண்டும் என்றனர். முத்கல் கமிட்டியின் அறிக்கையின்படி, விசாரணை நடக்கிறது. அந்த அறிக்கையில், பிரச்னைக்குரிய சென்னை அணியின் உரிமையாளர்கள் யார் என்ற கேள்விக்கு, குருநாத் மெய்யப்பன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை அணிக்கு 400 கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்தது யார் என்பது குறித்து விவரங்களை சமர்ப்பிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

பூட்டிய வீட்டை உடைத்து நகை கொள்ளை

சேலம்: சேலம் மாவட்டம், தம்மம்பட்டியை அடுத்த செந்தாரப்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். இவர், கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு, பெங்களூரு சென்றார். நேற்று திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் நகைகள், 2 கிலோ வௌ்ளி, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்த புகாரின் பேரில், தம்மம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சேலம் மாமன்ற கூட்டத்தில் அடிதடி

சேலம்: சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் சவுண்டப்பன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க,. கவுன்சிலர்கள் ஜெயலலிதாவை குறிப்பிட்டு பேசியபோதெல்லாம், அம்மா, அம்மா என்றனர். இதை கண்டித்த தி.மு.க., கவுன்சிலர்கள், ஒரு குற்றவாளியின் பெயரை கூட்டத்தில் கூறாதீர்கள் என்றனர். இதையடுத்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஒன்று திரண்டு, தி.மு,.க., கவுன்சிலர்களை புரட்டி எடுத்தனர். இதனால், மாமன்ற கூட்டத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.

 

ஜெ., தரப்பு தங்கநகைகள் சி.பி.ஐ., நீதிபதியிடம் ஒப்படைப்பு

பெங்களூரு: ஜெ., வழக்கில் தீர்ப்பளித்த கர்நாடக சிறப்பு கோர்ட் நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்கா மீண்டும் பெங்களூரு ஐகோர்ட் பதிவாளராக மாற்றப்பட்டார். மேலும் அவரது கண்காணிப்பில் இருந்த ஜெ.,வின் தங்க ஆபரணங்கள் உள்பட அசையும் சொத்துக்களை சி.பி.ஐ., நீதிபதி சோமராஜூவிடம், குன்கா ஒப்படைத்தார்.

 

கேஸ்டைரியை தாக்கல் செய்தது சி.பி.ஐ.,

புதுடில்லி: நிலக்கரி சுரங்க ஊழல் குறித்த வழக்கில், தொழிலதிபர் குமார் மங்களம் பிர்லா உள்ளிட்ட மற்றவர்கள் சம்பந்தப்பட்ட கேஸ்டைரியை, சீல் வைக்கப்பட்ட உறையில் வைத்து, சி.பி.ஐ., அதிகாரிகள் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

 

அசாம்: வெடிபொருட்கள் பறிமுதல்

கவுகாத்தி: அசாம், கவுகாத்தி-ஷில்லாங் நெடுஞ்சாலையில் போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது, மேகாலயாவில் இருந்து வந்த ஒரு காரில், மூன்று பெட்டிகளில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

காங்., மீது வெங்கையநாயுடு புகார்

புதுடில்லி: கறுப்பு பணம் என்பது காங்கிரஸ் காலத்தில் நடந்த ஒரு விஷயம். எனவே இந்த விவகாரத்தை கையாளுவதில் எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை என, மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கூறினார்.

 

அ.தி.மு,.க, உள்கட்சி தேர்தல்-ஜெ., அறிவிப்பு

சென்னை: அ.தி.மு.க., நிர்வாகிகள் தேர்தல் குறித்த அறிவிப்பை, கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வௌியிட்டுள்ளார். அதன்படி, வரும் டிசம்பர் 11ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி வரை, 14 கட்டங்களாக அ.தி.மு,க., கட்சியின் அனைத்து நிலைகளுக்குமான தேர்தல்கள் நடக்க உள்ளன

 

உ .பி., சகோதரிகள் தற்கொலையே; சி.பி.ஐ,.,

லக்னோ: உ .பி., மாநிலம் பாடுவானில் சகோதரிகள் மரத்தில் தொங்கியது தற்கொலையே என சி.பி.ஐ,., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 5 பேர் மீது கொலை வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்த சம்பவம் மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியது.

 

நீலகிரியில் நக்சல் வேட்டை

உதகமண்டலம்: கேரளத்தில் சமீபத்தில் நக்சல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் நக்சல்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

 

நீலகிரி மாவட்ட எல்லையில் கண்காணிப்பு; பறவை காய்ச்சல் எதிரொலி

உதகமண்டலம்: கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கேரளத்திலிருந்து நீலகிரி மாவடட்த்திற்கு வரும் பதையில் 7 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து,அனைத்து வாகனங்களும் கிருமி நாசினி அடிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன. கால்நடை துறையினர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

ஜிசாட்-16 செயற்கைகோள் டிச., 5-ல் ஏவ முடிவு

சென்னை: தொலை தொடர்பு செயற்கை கோளான ஜிசாட்-16 வகை செயற்கை கோள் வரும் 5-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டு்ள்ள செய்திகுறி்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது: பிரான்ஸ் நாட்டின் கயானாவிலிருந்து டிசம்பர் 4-ம் தேதி (இந்திய நேரப்படி 5-ம் தேதி) ஏரியன் ராக்கெட் மூலம் இந்த ஜிசாட்-16 வகை செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. விண்ணி்ல் செலுத்தப்படும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் இந்த வகை செயற்கை கோள் சுமார் 3 ஆயிரத்து 150 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள்என நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.மேலும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 வகை செயற்கை கோள் டிசம்பர் மாதம் மத்தியி்ல் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகவும் மூன்று கட்டங்களாக உள்ள இந்த செயற்கைகோள் 42.4 மீ உயரம் கொண்டதாகவும் சுமார் 630 டன் எடை கொண்டது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

இந்தியாவில் பாக்.,மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

புதுடில்லி: இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை 15 ஆயிரமாக உள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விஒன்றிற்கு பதில் அளி்த்துள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறியதாவது: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான கணக்கெடுப்பின் படி சுமார் 15 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் தங்கியுள்ளனர். இவ்வாறு தங்கியுள்ளவர்களின் எண்ணி்க்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவாதகவும் தெரிவித்தார். கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரையில் சுமார் 12 ஆயிரத்து 137 பேர் அனுமதியின்றி தங்கியிருந்ததாகவும், 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்து 28 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். ஒரே ஆண்டில் சுமார் 2 ஆயிரத்து 891 பேர் தங்கியுள்ளனர் எனவும் இது 23.82 சதவீத அளவாகும் என தெரிவித்தார்.

 

மனோகர் பரிக்கர் எம்.எல்.ஏ.,பதவி ராஜினாமா

பனாஜி:கோவாமாநிலமுதல்வர்மனோகர்பரிக்கர் தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். மத்திய அரசின் விரிவாக்கப்பட்ட அமைச்சரவையில் அவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் உ.பி., மாநிலம் லக்னோவில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். . இந்நிலையில் தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைத்தார். மனோகர் பரிக்கரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ராஜேந்திரா அர்லேகர் முறைப்படி அறிவித்தார்

 

பிரஸ் கவுன்சில் தலைவராக பிரசாத் நியமனம்

புதுடில்லி: இந்தியபிரஸ் கவுன்சில் தலைவராக சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி

சி.கே. பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். துணை ஜனாதிபதி தலைமையிலான 3 உறுப்பினர்கள் கொண்ட குழு இவரை தேர்வு செய்துள்ளது. முன்னதாக பிரஸ் கவுன்சிலின் தலைவராக பதவி வகித்து வந்த சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ ஓய்வு பெற்றதை யடுத்து இப்பதவிக்கு சி.கே. பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த 2010-ம் ஆண்டு முதல் கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி வரையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவிவகித்து வந்தார்.

 

பார்லி.,யின் புதிய செயலாளராக அனுப் மிஸ்ரா நியமனம்

புதுடில்லி: பார்லிமென்ட்டின் புதிய செயலாளராக அனுப்மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். பார்லிமென்ட் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இவரின் பதவிக்காலம் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 வரை உள்ளது. உ.பி., மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனுப்மிஸ்ரா சில ஆண்டு காலம் உ.பி., மாநிலத்தின் தலைமை செயலாளராகவும் பதவிவகித்துள்ளார். மாநிலத்தில் சட்ட ஒழுங்கு,சாலை போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதி்ல் சிறப்பாக பணிபுரிந்துளளார். அதே நேரத்தி்ல் மத்திய அரசிலும் இணை செயலாளர், உள்துறை, பாதுகாப்புத்துறை , வெளியுறவுத்துறை, திட்டக்கமிஷன் துறைகளில் கேபினட் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

 

டாமன் பகுதியில் ஆளில்லா படகுகள் பறிமுதல்

யூனியன பிரதேசமான டையூ டாமன் பகுதியில் கடலோர பாது பாதுகாப்பு படையினர் ரோந்து பணியி்ல் ஈடுபட்டிருந்தனர்.அப்போது டாமன் கடற்கரை பகுதியில் போலியான பதிவு எண் கொண்ட ஆளில்லாத இரண்டு மீன் பிடிபடகுகள் மிதந்தை கண்டறி்ந்து பறிமுதல் செய்தனர்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.