குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

26.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

நடிகை வீணா மாலிக்கிற்கு 26 ஆண்டு சிறை

இஸ்லாமாபாத் : டிவி நிகழ்ச்சி ஒன்றில் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை வீணா மாலிக், அவரது கணவர் மற்றும் டிவி சேனல் உரிமையாளர் ஆகியோருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

குற்றவாளிகள் அனைவரும் வெளிநாடுகளில் இருப்பதால், அவர்கள் சரணடையாவிட்டால் அவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் முடக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

இந்தோனேஷியாவில் கடுமையான பூகம்பம்

மனடோ: இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் கடுமையான பூகம்பம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது.

 

ம.தி.மு.க., கூட்டத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: சென்னை, தி.நகரில், பொதுக்கூட்டம் நடத்த, ம.தி.மு.க.,வுக்கு அனுமதியளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, தி.நகர், பஸ் நிலையம் அருகில், ம.தி.மு.க., சார்பில், 27ம் தேதி தியாக திருநாள் மற்றும் பினாங்கு பிரகடன விளக்க பொதுக் கூட்டம் நடத்த, போலீசில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு, அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ம.தி.மு.க., சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவை, நீதிபதி ராமசுப்ரமணியன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் தேவதாஸ் ஆஜரானார். தி.நகரில் பொதுக்கூட்டம் நடத்த, மனுதாரருக்கு அனுமதியளிக்கும்படி, போலீசுக்கு, நீதிபதி ராமசுப்ரமணியன் உத்தரவிட்டார்.

 

இந்தியாவுடன் பேச்சு துவங்குவதற்கான சாத்தியமில்லை: பாக்.,

காத்மாண்டு: இந்தியாவுடனான ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை தற்போதைக்கு துவங்குவதற்கான சாத்தியக்கூறு எதுவும் தெரியவில்லை என பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் கூறியுள்ளார். மேலும் அவர், இந்தியாவுடன் பேச நாங்கள் தயாராக உள்ளதாகவும், ஆனால் இதற்கான ஏற்பாடுகளை இந்தியா தான் செய்ய வேண்டும் என கூறினார்.

 

சாலை விபத்தில் மூன்று பேர் பலி

வேலூர்: வேலூர் மாவட்டம் கொண்ணம்பட்டியில், நின்று கொண்டிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில், 3 பேர் பலியானார்கள். கோனான்குப்பத்தை சேர்ந்த பீமாராஜ்(35), பாண்டு(25), பிரகாஷ்(30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய வாணியம்பாடி தாலுகா போலீசார், சென்னையை சேர்ந்த அசோகன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

நெல்லை மாநகராட்சி கமிஷனர் திடீர் விடுப்பு

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியின் கூட்டம் நாளை (நவம்பர் 27) நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு மாநகராட்சி கமிஷனர் பதில் கூறுவது வழக்கம். இந்நிலையில், கமிஷனர் லட்சுமி திடீர் விடுப்பில் சென்றுள்ளார். மேயரும் முதல்வரை சந்திப்பதற்காக சென்னை சென்றுள்ளதால் நாளை திட்டமிட்டபடி மாநகராட்சி கூட்டம் நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.

 

ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானது

புஜ்: குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில், புஜ் நகரில் விமானப்படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தின் மதிப்பு ரூ.80 கோடியாகும். விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை.

 

சார்க் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

காத்மாண்டு: சார்க் மாநாட்டில் பங்கேற்க நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு, வங்கதேசம்,பூடான் பிரதமர்களை தனித்தனியே சந்தித்து பேசினார். ஆப்கன் அதிபரையும் மோடி சந்தித்து பேசினார்.முன்னதாக இலங்கை அதிபர் ராஜபக்சேவையும் மோடி சந்தித்து பேசினார்.

 

60 டன் கேரள பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டவந்த 4 லாரிகள் பறிமுதல்: 6 பேர் கைது

திருநெல்வேலி: கேரளாவில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட வந்த நான்கு லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.கேரளாவில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள், மருந்துக் கழிவுகள், கோழி, இறைச்சி உள்ளிட்ட கழிவுகளை இரவோடு இரவாக லாரிகளில் கொண்டுவந்து தமிழகத்தின் கேரள எல்லைப்பகுதிகளான களியக்காவிளை, செங்கோட்டை, புளியரை பகுதிகளில் கொட்டிவிட்டு செல்லும் சம்பவங்கள் நடக்கின்றன. இரவில்கொட்டுவதால் தடுப்பதோ, அகற்றுவதோ, தமிழக விவசாயிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. நேற்று கேரளாவில் இருந்து வந்த நான்கு பெரிய லாரிகள், நெல்லை மாவட்டம் பிரம்மதேசம் அருகே நின்று கொண்டிருந்தனர். லாரிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். விசாரணையில் பிரம்மதேசத்தில் தோட்டம் வைத்துள்ள ராஜகோபாலன் என்பவர்தான், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் பேப்பர் நிறுவனத்தில் இருந்து அனுப்பிவைக்கும்படியும் அதற்காக பணம் வாங்கியிருப்பதும் தெரியவந்தது. இந்த பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு காற்றடிக்கும் திசையில் சென்று சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தனர்.எனவே இதுகுறித்து பிரம்மதேசம் ஊராட்சி துணைத்தலைவர் முருகன் 39, புகாரின் பேரில்போலீசார் அந்த லாரிகளை மடக்கினர்.அனுமதியின்றி கழிவுகளை கொண்டுவந்தது, நிலங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்பட்டது, லாரியை தடுத்தவர்களை மிரட்டியது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.கழிவு கொட்ட அனுமதித்த பிரம்மதேசம் ராஜகோபாலன், அதே ஊரைச்சேர்ந்த புரோக்கர் ஆறுமுகம்,நான்கு லாரிகளின் டிரைவர்கள் மலையடிக்குறிச்சி ராமமூர்த்தி 26, புளியங்குடி கருத்தப்பாண்டி 22, திரிகூடபுரம் அப்துல்ரசாக் 50, சுந்தரேசபுரம் திருமலைக்குமார் 35 ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். டிஎன் 52 சி6113, டிஎன் 52 6334, டிஎன் 28 ஏஎப் 4012, டிஎன் 28ஆர் 7872 ஆகிய நான்கு லாரிகளில் ஒவ்வொன்றிலும் 15 டன் வீதம் மொத்தம் 60 டன் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தன. லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

ஐ.மு., அரசின் தவறுகளை செய்ய மாட்டோம்: ஜெட்லி

புதுடில்லி: கறுப்பு பணம் தொடர்பாக ராஜ்யசபாவில் எதிர்கட்சிகளுக்கு பதிலளித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கறுப்பு பணத்தை மீட்க சிறப்பு புலனாய்வு அமைத்தோம். ஆனால் ஐ.மு அரசு இதனை செய்யவில்லை.அரசின் முன்னுரிமையாக சிறப்பு புலனாய்வு குழு அமைப்பதாக இருந்தது. இதன் மூலம் அரசின் ஆர்வத்தையும்,முயற்சியையும் தெரிந்து கொள்ளலாம். கடந்த காலங்களில், ஐ.மு அரசு செய்த தவறுகளை செய்ய மாட்டோம். சிறப்பு புலனாய்வு குழு அமைத்ததன் மூலம், அரசின் ஆர்வத்தை காட்டுகிறது. கறுப்பு பணம் விவகாரம் தொடர்பாக விவாதத்திற்கும் ஒத்துக்கொண்டோம். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு படி அரசு செயல்படுகிறது. கறுப்பு பணம் தொடர்பான அனைத்து விபரங்களும் இரண்டு நீதிபதிகள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்டங்கள் மற்றும் பொருளாதாரத்தை கணக்கில் கொள்ள வேண்டும். கறுப்பு பணம் பதுக்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதில் பிரச்னையில்லை.ஆனால் எங்கு எப்போது என்பதில் தான் பிரச்னையே உள்ளது என கூறினார். இதனிடையே, ஜெட்லியின் விளக்கத்தை ஏற்க மறுத்து காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தனர்.

 

பறவைக்காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு அரசு நடவடிக்கை

சென்னை: கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளதை தொடர்ந்து, தமிழகத்தில் இந்த நோய் பரவாமல் தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில், கேரளாவிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படும். வாகனங்களில் மீதும் கிருமி நாசினி தெளிக்கப்படும். மாநில எல்லையில் உள்ள அனைத்து சோவடி சாவடிகள் மூலம் கிருமி நாசினி தெளிப்பு செயல்படுத்தப்படும். கோழி, கோழியினம் தொடர்புடைய பொருளை சோதனை சாவடிகளில் சோதனை செய்யப்படும். 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்படும். கேரள எல்லை ஒட்டிய மாநிலங்களில் கண்காணிப்பு செய்யப்படும். நோய் தடுப்புக்காக 800 விரைவு செயலாக்க குழு அமைக்கப்படும். கோழி இனங்களின் உடல்நிலை தினமும் கண்காணிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

நாட்டு நலன் கருதியே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தேன்: குஷ்பு

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறித்து பேட்டியளித்த நடிகை குஷ்பு, நாட்டு நலனுக்காக பாடுபடுவேன். தமிழகம் இந்தியாவில் தான் உள்ளது. எனவே தமிழகத்தை மட்டும் தனித்து பார்க்க முடியாது.நாட்டுநலன் கருதியே காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். மக்களுக்கு நல்லது செய்யும் கட்சி காங்கிரஸ். மதசார்பற்ற கட்சி காங்கிரஸ். நாட்டை ஒற்றுமையாக காங்கிரஸ் கட்சி தான் வைத்திருக்கும் என கூறினார்.

 

காற்றாலை மின் உற்பத்தி உயர்வு

மேட்டூர்: காற்றாலை மின் உற்பத்தியில் சற்று முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், மின்தேவையும் குறைந்ததால், மின் பற்றாக்குறை, 850 மெகாவாட் ஆக சரிந்தது. வடகிழக்கு பருவமழை தீவிரம் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், தமிழகத்தின் மின்தேவை நேற்று , 11,680 மெகாவாட் ஆக உயர்ந்தது. தேவையை விட உற்பத்தி குறைவாக இருந்ததால், 1,250 மெகாவாட் மின்பற்றாக்குறை ஏற்பட்டது. இந்நிலையில், இன்று காற்றாலை மின் உற்பத்தியில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. நேற்று, 680 மெகாவாட் ஆக இருந்த காற்றாலை மின்உற்பத்தி, 800 மெகாவாட் வரை, அதிகரித்தது. இதனால், மின்பற்றாக்குறை, 850 மெகாவாட் ஆக குறைந்தது.

 

அரிசி வியாபாரியிடம் ரூ.1.62 லட்சம் திருட்டு

வடமதுரை: தாமரைப்பாடியில் வங்கிக்கு சென்ற அரிசி வியாபாரியிடம் மர்ம நபர்கள் ரூ.1.62 லட்சத்தை திருடி சென்றனர். வடமதுரை வேல்வார் கோட்டையை சேர்ந்தவர் ஷேக் மீரான்,67. அரிசி வியாபாரியான இவர் தற்போது திண்டுக்கல் என்.ஜி.ஓ., காலனியில் வசித்து வருகிறார். தாமரைப்பாடி சிண்டிகேட் வங்கியில் அடமானம் வைத்திருந்த நகையை திருப்புவதற்காக 1.62 லட்சம் ரூபாயுடன் ஷேக் மீரான் இருசக்கர வாகனத்தில் சென்றார். இவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு பேர் வங்கிக்குள் சென்ற ஷேக்மீரானை அழைத்து,"உங்கள் வாகனத்தில் யாரோ அசுத்தம் செய்துள்ளனர்,' எனக்கூறி வெளியே அழைத்து வந்தனர். பணப்பையுடன் வெளியே வந்த ஷேக்மீரான் மண்ணை எடுத்து வாகனத்தை சுத்தம் செய்ய முயன்றார். மர்ம நபர்கள் இருவரும் "அருகில் தண்ணீர் வாங்கி சுத்தம் செய்யுங்கள்' எனக்கூறியுள்ளனர். வண்டியின் மீது பணப்பையை வைத்தபடி வாகனத்தை ஷேக்மீரான் நகர்த்தினார். அப்போது பணப்பையை எடுத்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பியோடினர். அதிர்ச்சியடைந்த ஷேக் மீரான், வடமதுரை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கவிதா விசாரித்து வருகிறார்.

 

மனோஜுக்கு அர்ஜுனா விருது

புதுடில்லி: குத்துச்சண்டை வீரர் மனோஜ்குமாருக்கு, அர்ஜுனா விருதை மத்திய அமைச்சர் சர்பானந், டில்லியில் நடந்த ஒருவிழாவில் வழங்கினார்.

 

நெல்லை: சர்ச்சைக்குரிய தீர்மானங்கள்?

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நாளை நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கூட்டத்தில், சர்ச்சைக்குரியவை என கூறப்படும் பல தீர்மானங்களை மேயர் புவனேஸ்வரி நிறைவேற்றாமல், நிறுத்தி வைத்தார். இந்த தீர்மானங்களின் பின்னணியில் பல புதிர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட சில அதிகாரிகள் எப்படியாவது இந்த தீர்மானங்களை நாளைய கூட்டத்தில் நிறைவேற்றிவிட முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் பன்னீர்செல்வத்தின் அழைப்பின் பேரில், மேயர் அவரை சந்திக்க சென்றுள்ளார். இதற்கிடையில், நாளைய கூட்டம் நடக்குமா, தீர்மானங்கள் நிறைவேற்றப்படுமா என்பது புரியாத புதிராகவே இதுவரை இருந்து வருகிறது.

 

கூடங்குளத்தில் விரைவில் மின் உற்பத்தி

கூடங்குளம் : கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சில தொழில்நுட்ப காரணங்களால் செப்டம்பர் மாதம் மூடப்பட்ட முதல் அலகில் டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து மீண்டும் மின்உற்பத்தி துவங்கும் என மத்திய அணுசக்தித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.

 

ஆவின் மோசடிவழக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம் : ஆவின் பால் முறைகேடு வழக்கில் வைத்தியநாதனின் ஜாமீன் மீதான தீர்ப்பு நாளைக்க ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

சச்சின் கோரிக்கையை ஏற்றார் அமைச்சர்

புதுடில்லி : குத்துசண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்த் சோனாவலை நேரில் சந்தித்த ராஜ்யசபா எம்.பி.,யும், கிரிக்கெட் வீரருமான சச்சின் டெண்டுல்கர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்ற மத்திய அரசு, சரிதாவிற்கு உ தவி செய்வதாக உறுதி அளித்துள்ளது. இது தொடர்பாக சச்சின் கூறுகையில், சரிதாவிற்கு நாடு முழுவதும் ஆதரவு அளிக்க வேண்டும். அவர் ஏற்கனவே தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டு விட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

 

சார்க் ஒப்பந்தங்களுக்கு தடை?:பாக்., மவுனம்

காத்மாண்டு: நேபாளத்தில் நடக்கும் சார்க் நாடுகளின் மாநாட்டில் எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை. இது இந்தியாவை அதிருப்திபடுத்தி உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் செயல்பாடுகளே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து மாநாட்டிற்கு வந்திருந்த பாக்., பிரதமர் நவாஸ் மற்றும் பாக்.,கின் தேசிய பாதுகாப்பு படை அதிகாரி சர்ஜத் அஜீஸ் ஆகியோரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர்கள் பதில் எதுவும் கூறாமல் சென்றுவிட்டனர். மேலும், பிரதமர் மோடியின் மும்பை தாக்குதல் குறித்த பேச்சு குறித்து கருத்து கேட்டதற்கும், நவாஸ் ஷெரீப் பதில் எதுவும் கூறாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

 

தலைவர்களை சந்திக்கிறார் மோடி

காத்மாண்டு: சார்க் மாநாட்டின் ஒரு பகுதியாக, சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி, ராஜீய உறவுகள் குறித்து பேச உள்ளதாக வௌியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அக்பருதீன் கூறி உள்ளார்.

 

8ம் வகுப்பு மாணவன் தற்கொலை முயற்சி

பரிதாபாத் : அரியானாவில் பரிதாபாத்தில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது தண்ணீர் பாட்டிலில் அந்த மாணவன் பெட்ரோல் எடுத்து வந்திருந்ததுள்ளான். படுகாயமடைந்த மாணவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

 

ஊட்டி ரோஜா பூங்காவில் ஆய்வு

ஊட்டி: சர்வதேச ரோஜா மலர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜோன்ஸ் தலைமையில் 30 பேர் கொண்ட குழு, ஊட்டி ரோஜா பூங்காவில் ஆய்வு நடத்தியது. வரும் 29ம் தேதி ஐதராபாத்தில், சர்வதேச ரோஜா மலர் சம்மேளனத்தின் மாநாடு நடக்க உள்ள நிலையில், இக்குழு ஊட்டி வந்துள்ளது.

 

கறுப்பு பண விவகாரம்:விவாதம் துவங்கியது

புதுடில்லி : கறுப்பு பண விவகாரம் தொடர்பான விவாதம் லோக்சபாவில் துவங்கியது. லோக்சபா காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். 100 நாட்களில் வெளிநாடுகளில் இருக்கும் கறுப்பு பணம் மீட்கப்படும் என பா.ஜ., அளித்த வாக்குறுதி என்னவாயிற்று என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

 

நடிகை குஷ்பூ காங்.,ல் இணைகிறார்?

சென்னை : நடிகை குஷ்பூ காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று மாலை 5 மணிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவையும், துணைத் தலைவர் ராகுலையும் குஷ்பு சந்திக்க உள்ளதாகவும், இந்த சந்திப்பிற்கு பிறகு குஷ்பூ காங்கிரசில் இணைவது தொடர்பான முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ரஜினியால் பா.ஜ.,விற்கு பலமில்லை:தமிழிசை

கோவை : கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பா.ஜ., தலைவர் தமிழசை செளந்தரராஜன், ரஜினியால் பா.ஜ.,வின் பலம் அதிகரிக்கும் என நினைக்கவில்லை. முதல்வர் பன்னீர் செல்வம் முழு அதிகாரத்துடன் செயல்பட வேண்டும். தமிழக அரசு ஒத்துழைத்தால் மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடியை விமர்சிப்பதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிறுத்திக் கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.

 

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: சம்பத் தகவல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி, வரும் ஜனவரி மாதம் அறிவிக்கப்படலாம் என கூறினார்.மார்ச் மாதம் வரை அவகாசம் இருப்பதால் ஜனவரியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், புதிய வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

சிபிஐ இயக்குநர் நியமன மசோதா நிறைவேறியது

புதுடில்லி : சிபிஐ இயக்குநர் நியமனம் தொடர்பான சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், டில்லி போலீசுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்ட திருத்த மசோதாவும் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

பிரபாகரன் குறித்து வைகோ பேச்சு

கரூர்: கரூரில், புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடிய ம.தி.மு.க,., பொதுச் செயலாளர் வைகோ, 'பிரபாகரன் பயங்கரவாதியாக கருதப்படுவாரேயானால், பகத்சிங், நேதாஜி போஸ், மண்டேலா போன்றவர்களும் பயங்கரவாதிகளாக கருதப்படுவார்கள்,' என்றார்.

 

அமெரிக்காவில் தொடரும் போராட்டம்

லண்டன் : அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் போராட்டம் வெடித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் கண்டன ஊர்வலம் நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் முக்கிய நகரங்களில், பலர் குழுக்களாக பிரிந்து கடைடைப்பு, வாகனம் எரிப்பு போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மிசவுரி பர்குசன் நகரில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

பாக்., மீது ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

புதுடில்லி : பாகிஸ்தானில், மும்பை தாக்குதல் வழக்கு விசாரணை மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டி உள்ளார். இந்த வழக்கை விரைவாக விசாரிக்க பாக்., நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.

 

தேர்தல் அதிகாரிகள் மீது நக்சல் தாக்குதல்

ராஞ்சி : ஜார்கண்டின் லடேகர் பகுதியில் தேர்தல் அதிகாரிகள் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதன் காரணமாக நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

 

சார்க் மாநாடு: இந்தியா அதிருப்தி

காத்மாண்டு: காத்மாண்டுவில் நடந்து வரும் சார்க் நாடுகள் மாநாட்டில் எவ்வித ஒப்பந்தமும் செய்யப்படாதது குறித்து இந்தியா அதிருப்தியடைந்துள்ளது. பாகிஸ்தானின் தலையீட்டின் பேரில், ஒப்பந்தங்களுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

சுப்ரீம் கோர்ட்டில் கனிமொழி கோரிக்கை

புதுடில்லி : 2ஜி ஊழல் வழக்கில் தம்மீதான குற்றச்சாட்டுக்களை நீக்குமாறு திமுக எம்.பி., கனிமொழி மனு அளித்திருந்தார். தற்போது, இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை விடுத்துள்ளார். கனிமொழின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், நிலுவையில் உள்ள மனுக்கள் உடனடியாக விசாரிக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

 

இந்தியாவில் இனி இருப்பது சிரமம்:சானியா

புதுடில்லி : இந்தியாவில் இனி இருப்பது கடினம் என டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார். நான் பெண் என்பதால் எனது டென்னிஸ் வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாக்கப்பட்டேன். நான் ஆணாக இருந்திருந்தால் இது போன்ற சர்ச்சைகளை தவிர்த்திருக்கலாம் என்றே நினைக்கிறேன். விளையாட்டுத் துறையிலும்ஆண், பெண் என்ற பேதம் நிலவுவதால் இனி இந்த நாட்டில் இருப்பது கடினம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

திரிணாமுல் எம்.பி.,க்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை

புதுடில்லி : மத்திய அரசுக்கு எதிராக கறுப்பு குடையுடன் போராட்டம் நடத்தி வரும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள், போராட்டத்தை கைவிட வேண்டும் என லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எச்சரித்துள்ளார். கறுப்பு பண விவகாரத்தை சுட்டிக்காட்டி, திரிணாமூல் காங்கிரசார் பார்லி.,வளாகத்தின் முன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

தொழிலாளர் சட்டத்திற்கு ராஜ்யசபா ஒப்புதல்

புதுடில்லி : நாட்டின் மிக முக்கியமான தொழிலாளர் சட்ட மசோதாவிற்கு, எதிர்க்கட்சிகளின் பலவித எதிர்ப்புக்களுக்கு இடையே ராஜ்சபா ஒப்புதல் அளித்துள்ளது.

 

லோக்சபா: எதிர்கட்சிகள் வௌிநடப்பு

புதுடில்லி: லோக்சபாவில், கறுப்பு பணம் குறித்த விவாதம் நடத்த கோரி, காங்கிரஸ் தரப்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, பிற்பகல் 3 மணிக்கு விவாதம் நடத்தப்படும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். இதை கண்டித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வௌிநடப்பு செய்தன.

 

பா.ம.க, நிறுவனர் ராமதாசுக்கு சம்மன்

சென்னை: பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் மீது, உணவுத்துறை அமைச்சர் காமராஜர் தொடர்ந்த அவதூறு வழக்கின் மீது விசாரணை நடத்திய சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், வரும் ஜனவரி 20ம் தேதி நேரில் ஆஜராகும்படி ராமதாசுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

 

மோடி அரசு பற்றி கமல்நாத் கருத்து

புதுடில்லி : மோடி அரசின் 6 மாத கால ஆட்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் கமல்நாத், தனி ஒருவரால் நடத்தப்படும் வர்த்தக ஆலை தான் இந்த ஆட்சி. ஆனால் இயங்காமல் ஒரே இடத்தில் தான் நிற்கிறது என தெரிவித்துள்ளார்.

 

எகிப்தில் கட்டிடம் இடிந்து 19 பேர் பலி

கெய்ரோ : எகிப்தின் மட்டாரியா மாவட்டத்தில் எட்டு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 19 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதனைச் சுற்றி உள்ள 4 கட்டிடங்களும் இடியும் நிலையும் உள்ளதால் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

 

எதிர்கட்சிகள் அமளி: ராஜ்யசபா ஒத்திவைப்பு

புதுடில்லி : எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக ராஜ்யசபா பகல் 12.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

லோக்சபா: காங்., கோரிக்கை நிராகரிப்பு

புதுடில்லி : கறுப்பு பண விவகாரம் குறித்து விவாதிக்க வசதியாக, 0ள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற காங்கிரசின் கோரிக்கையை லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நிராகரித்துள்ளார்.

 

ஒமர் மேலும் ஒரு வேட்புமனு தாக்கல்

ஸ்ரீநகர் : காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சோனாவர் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் ஏற்கனவே பீர்வாக் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

பிரபாகரன் பிறந்தநாள்:கும்பாபிஷேகத்திற்கு தடை

ஆலங்குடி : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் உள்ள அகதிகள் முகாமில், இலங்கை தமிழகர்களால் சக்தி விநாயகர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இவ்வாலய கும்பாபிஷேகத்திற்கு முதல் கால பூஜை நேற்று நடைபெற்ற நிலையில், இன்று 2ம் கால பூஜையும், நாளை கும்பாபிஷேகமும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று, விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதாலும், நாளை மாவீரர் தினம் கொண்டாடப்படுவதாலும் கும்பாபிஷேகத்தை நடத்தக் கூடாது என எஸ்.பி., உமா தலைமையிலான போலீசார் தடை விதித்துள்ளனர். கும்பாபிஷேகத்தை திங்கள்கிழமை நடத்துமாறும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் காலை 7 மணி முதல் 9 மணி வரை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதுக்கோட்டை சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இது தொடர்பாக இலங்கை தமிழர்கள் 84 பேர் கைது செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நோட்டீஸ் அடித்து விளம்பரம் செய்து விட்டதாலும், கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் நடத்தப்பட்டு விட்டதாலும் திட்டமிட்டபடி கும்பாபிஷேகத்தை நடத்த அப்பகுதி மக்கள் உறுதியாக இருப்பதால் போலீசாருக்கும், அப்பகுதியினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.

 

நித்தி மருத்துவ அறிக்கை தாக்கல்

பெங்களூரு: கற்பழிப்பு புகாரில் சிக்கி உள்ள சாமியார் நித்தியானந்தாவிற்கு சமீபத்தில் ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. அதற்கான அறிக்கையை துணை எஸ்.பி., லோகேஷ், ராம்நகர் கோர்ட்டில் இன்று தாக்கல் செய்தார்.

 

கர்நாடகாவை கண்டித்து போராட்டம்

திருவாரூர்: காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்டுவதை எதிர்த்து, திருவாரூர் மாவட்ட தே.மு.தி.க, சார்பில் கண்டன ஆர்பாட்டம், திருவாரூர் பஸ் நிலையம் அருகில் நடந்தது. இதில், மயிலாடுதுறை எம்.எல்.ஏ., பாலஅருட்செல்வம், பாலாஜி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தே.மு.தி.க.,வினர் கலந்து கொண்டனர்

 

கறுப்பு பணம்: காங்.,க்கு பா.ஜ., கேள்வி

புதுடில்லி: கறுப்பு பணம் குறித்து பார்லி.,யில் விவாதம் நடத்த வேண்டும் என காங்., போர்க்கொடி தூக்கி உள்ளது குறித்து பா,.ஜ., எம்,.பி., ஜகதாம்பிகா கூறுகையில், 'கறுப்பு பணம் குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அது குறித்து கடந்த 10 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும்,' என்றார்,

 

கனிமொழி பேச்சு: ராஜ்யசபாவில் அமளி

புதுடில்லி: ராஜ்யசபாவில் பேசிய தி.மு.க., எம்.பி., கனிமொழி, தருமபுரி குழந்தைகள் மரணம் குறித்து விமர்சனம் செய்தார். இதற்கு, அ.தி.மு.க., உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவி்த்தனர். இதனால், அவையில் சில நிமிடங்களுக்கு அமளி நிலவியது. இப்பிரச்னையில் தலையிட்ட அவை தலைவர், கனிமொழியின் பேச்சுக்கு ஆட்சேபணை இருந்தால், அதை அவர் பேசி முடித்த பின்னர் பதிவு செய்யும்படி கூறினார். இதையடுத்து, அமைதி திரும்பியது.

 

சுற்றுலாவில் கவனம் செலுத்த வேண்டும்-மோடி

காத்மாண்டு: சார்க் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பொதுவாக சார்க் மாநாட்டில், நாடுகளுக்கு இடையில் நம்பிக்கையற்ற தன்மையும், குறைகூறும் போக்குமே காணப்படுகிறது என்று கூறி, அதற்கு கவலை தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது: கடந்த சில நாட்களாக நான் வௌிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருந்தேன். நான் சென்ற நாடுகளில் எல்லாம், இந்தியாவி்ன் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான விஷயங்களில் ஒத்துழைப்பும், உடன்பாடும் கோரி உள்ளேன். ஏனெனில், இன்றைய சூழ்நிலையில், பொருளாதார மேம்பாடு சவாலாக உள்ளது. இந்தியாவில் கட்டமைப்பு குறைவாக உள்ளது. எனவே, கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சார்க் நாடுகளில் எல்லைகளில் சாலை போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும். நாம் ஒருவருக்கொருவர், அண்டை நாடுகளிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது அதிகமாக உள்ளது. நமது பிரச்னைகளை நாமே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். சுற்றுலாவை மேம்படுத்துவதில் சார்க் நாடுகள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க சூரிய சக்தியை பயன்படுத்த வேண்டும். இயற்கை வளங்களை பயன்படுத்தி, தொழில்களை துவக்க வேண்டும். இந்தியாவிற்காக நாங்கள் காணும் கனவு, தெற்காசியாவிற்கும் பயன் அளிக்கும். இவ்வாறு மோடி பேசினார்.

 

அண்டை நாடுகளுடன் நல்லுறவு-மோடி

காத்மாண்டு: நேபாளம், காத்மாண்டுவில் நடக்கும் சார்க் நாடுகளின் மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது: இந்த மாநாட்டில் ஒற்றுமை அலை வீசுவதை நான் பார்க்கிறேன். உலகில், இந்தியா தான் மிகப் பெரிய ஜனநாயக நாடு. உலக நாடுகள் இடையே நல்லுறவு ஏற்பட வேண்டும். குறிப்பாக, தெற்காசிய நாடுகளில் நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு அவசரமாக தேவைப்படுகிறது. சார்க் நாடுகள் குறித்து நாம் பேசினால், இரண்டு தாக்கங்களை உணர முடிகிறது.அவை, குறை கூறுதல், நம்பிக்கையற்ற தன்மை. இது கவலையளிக்கிறது. இந்நிலையில், சர்வதேச அளவில் நாம் எந்த இடத்தில் இருக்க விரும்புகிறோம் என்பதை தெற்காசிய நாடுகள் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

 

டிச.1ல் பத்திரிகையாளர்கள் வழக்கு

புதுடில்லி: சர்ச்சை சாமியார் ராம்பாலை கைது செய்வதற்காக போலீசார் அவரின் ஹிசார் ஆஸ்ரமத்திற்கு சென்றபோது, போலீசாருக்கும், சாமியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில், பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். இது குறித்து பத்திரிகையாளர்கள் தொடர்ந்துள்ள வழக்கினை வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரிக்க உள்ளது.

 

பிரபாகரன் பிறந்த நாள் விழா: மறுப்பு

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு, முதலில் தூக்கு தண்டனை பெற்று. பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 60வது பிறந்தநாள் விழாவை, சிறை அறையில் கொண்டாட அனுமதி கேட்டு, ஜெயில் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர். இந்த மனுவை பரிசீலனை செய்த உயர் அதிகாரிகள், பிரபாகரன் பிறந்தநாள் விழாவை கொண்டாட அனுமதி மறுத்துள்ளனர்.

 

மாஜி அமைச்சரிடம் சி.பி.ஐ., விசாரணை

புதுடில்லி: சாரதா சிட்பண்ட் மோசடி குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. அசாம், முன்னாள் அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவிற்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி சர்மா இன்று சி.பி.ஐ., அதிகாரிகள் முன் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடந்தது.

 

தமிழக எல்லையில் கண்காணிப்பு

ஊட்டி: கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதை முன்னிட்டு, தமிழக-கேரளா மற்றும் கர்நாடகா எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டி அருகே கட்கநல்லா செக்போஸ்ட்டிலும், கூடலூர் அருகே நாடுகாணி செக்போஸ்ட்டிலும் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து கோழி, வாத்து உள்ளிட்ட பறவைகளை ஏற்றிக் கொண்டு தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் தடை செய்யப்படுகின்றன.

 

கடன் தொல்லை; தாய், மகன் தற்கொலை

பழநி: பழநிஅடிவாரம் தபால் அலுவலக தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவருடைய மனைவி வேணி (வயது 32), மகன் சதீஷ் (வயது 12). கடன் தொல்லை காரணமாக குடும்பத்தில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இன்ற அதிகாலை வேணியும் சதீஷும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

வாசனின் புதிய கட்சியின் கொடி அறிமுகம்

சென்னை : ஜி.கே.வாசன் சென்னையில் தனது புதிய கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். ஆரஞ்சு, வெள்ளை, பச்சை நிற கொடியின் நடுவே காமராஜர் மற்றும் மூப்பனாரின் படங்களை கொண்டதாக அந்த கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

அண்ணாமலையார் கோயிலில் தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெருவிழாவினை தொடங்குகின்றபோது ஆகம விதிப்படி திருக்கோயிலில் கொடி ஏற்றத்துடன் தொடங்கப்படும், அதன்படி கார்த்திகை தீப திருவிழாவின் முதல்நாள் விழா, இன்று ( 26ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விநாயகர், சமேத முருகர் வள்ளி தெய்வானை, சமேத அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேஸ்வரர், ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளும் தங்க கொடி மரத்தின் அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர், அதனை தொடர்ந்து சுவாமிநாத குருக்கள் தலைமையில் 20க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க , ஓதுவார்கள் தேவாரம் பாட, மங்கல இசைசயுடன் 72 அடி உயர கொடிமரத்தில் காலை 6.40க்கு விருச்சிக லக்னத்தில் கொடி ஏற்றப்பட்டது.

அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர். விழாவில் தமிழக வேளாண்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கலெக்டர் ஞானசேகரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் செந்தில்வேலவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து முதல் நாள் விழாவில் காலை 10மணி அளவில் பஞ்ச மூர்த்திகளான, விநாயகர், முருகர், அண்ணாமலையார் சமேத உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேஸ்வரர், ஆகியோர் கண்ணாடி விமானத்தில் வீதி உலா வருவர்.

பின் இரவு 10மணிக்கு மேல் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வரும் நிகழ்ச்சியில் இதில் விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சமேத வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், சமேத அண்ணாமலையார், உண்ணாமலையம்மன் அதிகார நந்தி வாகனத்திலும், பராசக்தி அம்மன் ஹம்ச வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சின்ன ரிஷப வாகனத்திலும் வீதி உலா வருவர்.

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகம், 9 கோபுரங்களும், கோயிலில் உள்ள அனைத்து சந்நதிகளும், தங்க கொடிமரம், தல விருட்சமான மகிழ மரம், ஆகியவை வண்ண மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளன. திருவண்ணாமலை நகரமே விழா கோலம் பூண்டுள்ளன.

 

சீன சுரங்கத்தில் தீ:24 பேர் பலி

பீஜிங் : சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 54 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சுரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. சீனாவில் சுரங்க விபத்தில் ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

 

சார்க் மாநாடு இன்று துவங்கியது

காத்மண்டு : நேபாளம் தலைநகர் காத்மண்ட்டில் நடைபெறும் சார்க் நாடுகளின் மாநாடு இன்று துவங்கியது. இதில் இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

 

குடிபோதையில் தகராறு; ஒருவர் கொலை

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி அருகே நாராயணன் என்பவரும் ராஜேந்திரன் என்பவரும் குடிபோதையில் நேற்றிரவு தகராறு செய்தனர். அப்போது அங்கு வந்த ராஜேந்திரனின் தந்தை பெருமாள், நாராயணனைத் தள்ளி விடவே, அவர் கீழே விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதைத் தொடர்ந்து ராஜேந்திரனும் பெருமாளும் தலைவமறைவாகி உள்ளனர்.

 

பார்லி.,ல் இன்று கறுப்பு பண விவாதம்

புதுடில்லி : கறுப்பு பண விவகாரத்தை எழுப்பி, குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் எதிர்கட்சிகளால் அவை முடக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று பார்லி.,யின் இரு அவைகளிலும் கறுப்பு பண விவகாரம் குறித்த விவாதம் நடைபெற உள்ளது. மேலும், தேர்தல் வாக்குறுதிகள் எதையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை எனவும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

 

மும்பை தாக்குதல்:பிரதமர் நினைவஞ்சலி

புதுடில்லி : மும்பை தாக்குதல் நடைபெற்றதன் 6ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அணுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், மும்பை தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் எப்போதும் போராடுவோம் என்பதை இந்த நாள் உறுதி செய்கிறது. இந்த தாக்குதலின் போது பயங்கரவாதத்தை எதிர்த்து போராடிய அனைத்து பாதுகாப்பு வீர்களுக்கும் தலை வணங்குகிறேன். பலரின் உயிரை காப்பதற்காக போராடிய அவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் என குறிப்பிட்டிருந்தார்

 

மேலூர்:கால் டாக்சியில் வந்தவர் கொலை:6 பேர் கைது

மேலுார்:கால் டாக்சியில் பயணம் செய்தவரை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற 6 பேர் கொண்ட கும்பல் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள செட்டியாபட்டியி்ல் வரும் போது நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர்.6 பேரையும் கைது செய்து கால்டாக்சியையும் போலீசார் கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர்.கொலையானவர், சென்னை-காஞ்சிபுரத்தை சேர்ந்த கமலநாதன் என்பது தெரியவந்துள்ளது.கமலநாதனும் மற்ற 6 பேரும் கால்டாக்சியில் சென்னையிலிருந்து மதுரைக்கு வரும் வழியில் வண்டலூரில் மது அருந்தியிருக்கின்றனர். இதனையடுத்து முன் விரோதம் காரணமாக இக்கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரைணையில் தெரியவந்துள்ளது.

 

பறவை காய்ச்சல் பரவல்:கர்நாடகம் உஷார்

பெங்களூரு:அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் பரவலால் 7ஆயிரம் வாத்துகள் உயிரிழந்ததை அடுத்து, கர்நாடக மாநிலம் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது.

 

2014ல் 472 மாவோயிஸ்ட்கள் சரண்

புதுடில்லி:இந்தாண்டில்(2014) 472 மாவோயிஸ்ட்கள் சரணடைந்துள்ளனர். இதற்கு முன்னதாக கடந்தாண்டு 2013 அக்.,31 வரை 283 மாவோயிஸ்ட்கள் தான் சரணடைந்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது.இது கடந்த 3 ஆண்டுகளில் இது அதிகம்.குறிப்பாக சத்தீஸ்கர் மாநில அரசும் மாவோயிஸ்டுகள் சரணடைந்தது அதிகரித்துள்ளதாக பதிவு செய்துள்ளது.

 

அமெரிக்கா:கருப்பின இளைஞர் படுகொலை: நீதிமன்ற விசாரணை தேவையில்லை

வாஷிங்டன்:அமெரிக்காவில் கருப்பின இளைஞரை சுட்டுக் கொன்ற காவல் துறை அதிகாரியை நீதிமன்ற விசாரணைக்கு உள்படுத்தத் தேவையில்லை என இது தொடர்பாக விசாரித்து வந்த பெருநடுவர் குழு தீர்ப்பளித்ததையடுத்து, அங்கு வன்முறை வெடித்துள்ளது

 

பயங்கரவாதிகளின் முக்கிய இலக்கு டில்லி: கிரண் ரிஜிஜு தகவல்

புதுடில்லி:இந்தியாவில் தாக்குதல் நடத்த, பயங்கரவாதக் குழுக்கள் எப்போதும் நாட்டின் தலைநகரான புது டில்லியையே முக்கிய இலக்காக கொண்டுள்ளன என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

இது தொடர்பாக லோக்சபாவில் கிரண் ரிஜிஜூ, எழுத்துப்பூர்வமாக நேற்று அளித்துள்ள பதில்:பயங்கரவாதக் குழுக்களின் முக்கிய தாக்குதல் இலக்காக புது டில்லி உள்ளது. ஆகையால், டில்லியை எப்போதும் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் வைத்துள்ளோம். இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புக்கு நிதி உதவி, பயிற்சி, ஆயுதங்கள் ஆகியவை பாகிஸ்தானில் வழங்கப்படுகின்றன என மத்திய உளவுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தை ராஜீய ரீதியிலும், உளவுத்துறை மட்டத்திலும் மத்திய அரசு கையாண்டு வருகிறது என்று கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.டில்லியில், பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் நிகழக் கூடும் என்ற உளவுத்துறைத் தகவல்கள் ஏதும் வரவில்லை.

 

2034ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் வலுவடையும்

டில்லி: ஆண்டுக்கு 9சதவீத வளர்ச்சி விகிதத்துடன் இந்தியா 2034-ஆம் ஆண்டு 10 டிரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக கட்டமைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் தனது ஆய்வில் கணித்துள்ளது.

 

பெரியாறு அணையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஆய்வு

கூடலுார்: முல்லை பெரியாறு அணையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஆய்வு நடத்தினர்.முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் முதன் முறையாக 142 அடியாக உயர்ந்தது. அணை நீர் மட்டம் உயரும்போது, கடந்த நவ., 17 ல் பீர்மேடு எம்.எல்.ஏ., பிஜூமோள் அணைப்பகுதிக்கு கேரள பத்திரிக்கையாளர்களுடன் அத்துமீறி நுழைந்தார். அங்கு பணியில் இருந்த பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாதவன் தடுத்தபோது, அவரை தள்ளி விட்டு, அத்துமீறி நுழைந்து, பேபி அணையினை போட்டோ எடுத்தனர். பணியில் இருந்த கேரள போலீசார் இதனை கண்டுகொள்ளவில்லை.எனவே தமிழக பொதுப்பணித்துறையினர் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் அணைக்கு தேவை என சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு அமைப்பினரும், கட்சியினர் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.இந்நிலையில் நேற்று மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சீனியர் கமாண்டோ அனில்பாலின் தலைமையில் அணைப்பகுதியில் ஆய்வு நடத்தினர். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறித்தும், இனிமேல் தேவைப்படும் பாதுகாப்பு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

 

முதுமலையில் மீண்டும் யானை சவாரி துவக்கம்

கூடலுார்:முதுமலையில் மீண்டும், யானை சவாரி துவங்கியது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் வரும் சுற்றுலா பயணிகளை, வனத் துறையினர் வாகனங்கள் மற்றும் யானை சவாரி மூலம் வனப்பகுதிக்கு அழைத்து செல்கின்றனர். ஒரு யானையின் மீது, நான்கு பேர் வீதம் அமர்ந்து செல்ல, 860 ரூபாய் கட்டணம் பெறப்படுகிறது. ஜூலை மாதம் பெய்த மழைக்கு பின், பாதுகாப்புக்காக முதுமலையில் யானை சவாரி நிறுத்தப்பட்டது. தற்போது மழை குறைந்துள்ளதால், நேற்று முதல் மீண்டும் யானை சவாரி துவங்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், 'முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், யானை சவாரிக்கான முன்பதிவை, தெப்பக்காடு வரவேற்பு மையத்தில் மேற்கொள்ளலாம்' என்றனர்.

 

மாணவி கற்பழிப்பு வழக்கில் இருவருக்கு 7 ஆண்டு சிறை

திருச்சி:திருச்சியில் இருந்து மாணவியை கடத்திச் சென்று, கற்பழித்த வழக்கில், திருச்சி மகிளா நீதிமன்றத்தில், இருவருக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல், நாகல் நகரை சேரந்த்வர் ஐயப்பன், 32. இவரது நண்பர் ஜெயக்குமார், 29. ஐயப்பன் அதே பகுதியை சேர்ந்த, பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரை, காதலித்து வந்தார்.இதை அறிந்த மாணவியின் பெற்றோர், கடந்த, 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம், திருச்சி, கருமண்டபம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு, மாணவியை அனுப்பி வைத்தனர். மாணவி திருச்சியில் இருப்பதை அறிந்த ஐயப்பன், அக்டோபர், 29ம் தேதி, நண்பர் ஜெயக்குமாருடன் திருச்சிக்கு வந்து, மாணவியை, சென்னைக்கு கடத்திச் சென்றார்.மாணவி மாயமானதால், அவரது உறவினர்கள், கருமண்டபம் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், சென்னையில் இருந்து, கரூர் தான்தோன்றி மலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு மாணவியை அழைத்து வந்த ஐயப்பன், உறவினர் வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். போலீஸார் தேடுவதை அறிந்த ஐயப்பன், நவம்பர், 2ம் தேதி, மாணவியை, திண்டுக்கல்லுக்கு அழைத்துச் சென்று, பஸ் ஸ்டாண்டில் விட்டுச் சென்றார்.திருச்சி, கருமண்டபம் போலீஸார் மாணவியிடம் விசாரணை நடத்தி, ஐயப்பன், அவரது நண்பர் ஜெயக்குமார் ஆகியோரை, நவம்பர், 4ம் தேதி கைது செய்தனர்.இவ்வழக்கு, திருச்சி மகிளா நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின், மாணவியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த ஐயப்பன், அவருக்கு உதவியாக இருந்த ஜெயக்குமார் ஆகியோருக்கு, தலா, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

 

நொய்டா டிராபிக் போலீசார் சாதனை

நொய்டா:உத்தரபிரதேசம் மாநிலத்தில் போக்குவரத்து விதியை மீறிய 2,193 பேரிடம், நொய்டா போக்குவரத்து போலீசார்,ரூ.2.38 லட்சம் அபாரதம் வசூலித்து சாதனை செய்துள்ளதாக போக்குவரத்து போலீஸ் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

சீனாவில் மீண்டும் நிலநடுக்கம்

பீஜிங்:சீனாவில் கடந்த 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.சீனாவின் தென்மேற்கு சிசுவான் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதால், மக்கள் அலறியடித்து கொண்டு தெருவிற்கு வந்துவிட்டனர்.நிலநடுக்கம்,ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானதாக நிலநடுக்கம் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சார்க் மாநாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்புகிறார் மோடி

காத்மண்டு: சார்க் மாநாட்டின் போது, பிரதமர் மோடி பயங்கரவாத பிரச்னையை எழுப்ப உள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராக சார்க் நாடுகளின் ஒத்துழைப்பையும் பிரதமர் மோடி கோர உள்ளார். மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் பிரச்னையை மையமாக வைத்து, தெற்கு ஆசியாவில் பயங்கரவாதத்திற்கு எதிராக தெற்கு ஆசிய நாடுகளின் ஆதரவையும் கோர உள்ளார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.