குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

25.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி

உசிலை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சீமானூத்து பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (50), கூலித் தொழிலாளி.இவரது மனைவி ஆண்டிச்சி (44) கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது.

இன்று இரவு 8.30 மணியளவில் சொக்கலிங்கம் மது குடித்துவிட்டு போதையில் மனைவியுடன் தகராறு செய்துவிட்டு போதையில் படுத்துகிடந்துள்ளார். இதை பயன்படுத்தி மனைவி ஆண்டிச்சி கணவன் தலையில் அம்மிகல்லை போட்டு கொலை செய்தார். உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

 

உள்நாட்டு பாதுகாப்பு குறித்த பாதுகாப்பு ஆலோசனை

சென்னை: உள்நாட்டு பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலர் தலைமையில்,நடந்தது.உள்நாட்டில், பெரிய அளவில் வன்முறை ஏற்பட்டால், போலீசார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து, அமைதியை நிலைநாட்டுவது, பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பது குறித்து, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, உயர் அதிகாரிகள் கலந்தாலோசிப்பது வழக்கம். அதன்படி , தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலர் மோகன்வர்கீஸ் சுங்கத் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில், உள்துறை செயலர் அபூர்வவர்மா, டி.ஜி.பி., அசோக்குமார், முப்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டம், ஒன்றரை மணி நேரம் நடந்தது. பாதுகாப்பு தொடர்பாக, பல்வேறு விஷயங்களை விவாதித்துள்ளனர்.

 

அரியானாவில் ஓய்வு பெறும் வயது குறைப்பு

சண்டிகர்: அரியானாவில் உள்ள 6 தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்து முதல்வர் கட்டார் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58 ஆக குறைத்தும் உத்தரவிட்டுள்ளார்.

 

சிகரெட் புகைப்பதை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

புதுடில்லி: சிகரெட் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில், ஒன்றிரண்டாக விற்பனை செய்வதை தடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாக்கெட்டாக மட்டுமே இனிமேல் கடைகளில் இனி சிகரெட் விற்க வேண்டும் என்ற கட்டுப்பாடை கொண்டுவருவது என மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா, ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், கடைகளில் சிகரெட்டை உதிரியாக சில்லறை விற்பனை செய்யப்படும் போக்கு காரணமாகவே அதிக பாதிப்பு இருப்பது தெரியவந்தது. சில்லரையாக விற்பனைக்கு தடை விதித்தால், புகைப்பழக்கத்திற்கு சிறுவர்கள் மற்றும் இளம் வயதினர் அடிமையாவதை தவிர்க்கலாம் என நிபுணர் குழு குறிப்பிடப்பட்டுள்ளது. இதை சுகாதாரத்துறை அமைச்சகம் எற்றுக்கொண்டுள்ளது. இதற்கான மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என கூறினார்.

 

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலர் கைது

திண்டுக்கல்: கிராஜூவிட்டியை வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலர் கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவர். திண்டுக்கல்லில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து, கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். தனக்கு வர வேண்டிய கிராஜூவிட்டி ரூ.9 லட்சத்தை பெறுவதற்காக உதவி தொடக்க கல்வி அலுவலர் கலைச்செல்வியை அணுகினார். இதற்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டார். ரூ.20ஆயிரம் லஞ்சம் தர ஒப்புக்கொண்ட சந்திரசேகர், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பஸ் ஸ்டாண்டில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கலைச்செல்வியை லஞ்ச ஒழிப்புபோலீசார் கைது செய்தனர்.

 

மதுரையில் மட்டும் சகாயம் விசாரணை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக மதுரையில் மட்டும் சகாயம் விசாரணை நடத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது. கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை நியமிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, மதுரையில் மட்டும் விசாரணை நடத்துவதா, அல்லது தமிழகம் முழுவதும் விசாரணை நடத்துவதா என விளக்கமளிக்க வேண்டும் எனக்கோரி சகாயம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரையில் கிரானைட் குவாரிகள் முறைகேடு குறித்து விசாரணை நடத்தினால் போதும் எனவும், ஒரே நேரத்தில் எல்லா மாவட்டங்களிலும் விசாரணை நடத்த வேண்டாம் எனவும், படிப்படியாக விசாரணையை விரிவுபடுத்தி கொள்ளலாம் எனவும், சகாயம் கேட்கும் அதிகாரிகளை அரசு நியமிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

திட்டங்கள் எதையும் மோடி நிறைவேற்றவில்லை: இளங்கோவன்

கிருஷ்ணகிரி: பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலின் போது தெரிவித்த திட்டங்கள் எதுவும் நிறைவேற்றவில்லை என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். மேலும் அவர், மோடி பெரும்பாலும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். கர்நாடகா அணை கட்டுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும். கருணாநிதி கருத்து சொன்ன பின்னரே தமிழக சட்டசபை கூட்டப்படுகிறது என கூறியுள்ளார்.

 

சர்வாதிகாரமாக முதல்வர் பதில் சொல்கிறார்: கருணாநிதி

சென்னை: மேகதாதுவில் கர்நாடக அணை கட்டும் விவகாரத்தில், பிரதமருக்கு கடிதம், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தவிர வேறு எதுவும் இல்லை என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். மேலும் அவர், இது தொடர்பாக சட்டசபையை கூட்ட சொன்னால், சர்வாதிகாரமாக முதல்வர் பதில் சொல்கிறார். அணை கட்டும் பிரச்னையில் கர்நாடகாவில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்துள்ளன என கூறியுள்ளார்.

 

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: நவாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது: பேச்சுவார்த்தைக்கான முயற்சியை இந்தியா தான் செய்ய வேண்டும். நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை இந்தியா தன்னிச்சையாக ரத்து செய்தது. இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை துவக்குவது இந்தியாவின் கையில் தான் உள்ளது.அனைத்து பிரச்னைகளையும் பேசி தீர்க்க தயார். சார்க் அமைக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகியும் எந்தவித முன்னேற்றமும் இல்லை என கூறினார்.

 

240 கிலோ கஞ்சா, காருடன் பறிமுதல்

ராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற 240 கிலோ கஞ்சா மூடைகளுடன் காரை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்தனர். மேலும் மூன்று பேரிடம் விசாரித்து வருகின்றனர். ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்ல, கஞ்சா மூடைகளுடன் காரில் சிலர் சென்னையில் இருந்து கீழக்கரைக்கு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, ராமநாதபுரம் "கியூ' பிரிவு போலீசார் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி ரோடு விலக்கில் நேற்று இரவு 10:30 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த சென்னை பதிவு எண் கொண்ட காரை நிறுத்தினர். அதிலிருந்த இருவர் தப்பி ஓடிவிட்டனர். எஞ்சிய 4 பேர் சிக்கினர். காரில் 10 மூடைகளில் 240 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய்

 

நேபாளம் சென்றடைந்தார் மோடி

காத்மாண்டு: சார்க் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி நேபாளம் சென்றடைந்தார். காத்மாண்டு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

காரைக்குடியில் தீ விபத்து

காரைக்குடி: காரைக்குடி, ஒ. திருவயலைச் சேர்ந்தவர் அருணாசலம். இன்று காலை அவரும், மனைவியும் கோவிலுக்கு சென்றனர். அப்போது, வீட்டின் முன் பகுதியில் தீ பிடித்தது. பின்னர் மளமளவென பற்றி எரிந்தது. காரைக்குடி, தேவகோட்டை ஆகிய இடங்களில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் வந்து, தீயை அணைத்தன. தீ விபத்திற்குள்ளான வீடு, கடந்த 1920ம் ஆண்டு, பர்மா தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களால் கட்டப்பட்டது. தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

 

வாசன் கட்சி கொடி நாளை அறிமுகம்

சென்னை: சென்னை, ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் வாசன், 'பெரும்பாலான ஆதரவாளர்களின் கோரிக்கையை ஏற்று புதிய கட்சியின் கொடி நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது,' என்றார். கட்சியின் பெயரை தமிழ் மாநில காங்கிரஸ் என்ற வைக்க வேண்டும் என, பல ஆயிரம் தொண்டர்கள் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

விவசாயிகள் முற்றுகை போராட்டம்

திருநெல்வேலி: குற்றால அருவிகளில் ஒன்றான சிற்றாறு, மேலப்பிள்ளையார்குளம், கீழப்பிள்ளையார் குளம் வழியாக செல்கிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையால், கீழப்பிள்ளையார்குளம் பாசனத்திற்கு நீர் வரவில்லை என்று கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மானூர் பஞ்சாயத்து அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ராஜஸ்தானில் பா.ஜ., வெற்றிமுகம்

ஜெய்பூர்: ராஜஸ்தானில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில், முக்கியமான ஆறு மாநகராட்சிகளில் பா.ஜ., முன்னணியில் உள்ளது.

 

காஷ்மீரில் விறுவிறுப்பான ஓட்டுபதிவு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட ஓட்டு பதிவு இன்று நடக்கிறது. இந்த தேர்தலை புறக்கணிக்கும்படி பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்திருந்தனர். மேலும், மோசமான வானிலையும் ஓட்டு பதிவை பாதித்தது. இந்நிலையில், வானிலை சீரானதால் விறுவிறுப்பான ஓட்டு பதிவு நடந்து வருகிறது. ஓட்டு போடுவதற்காக ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் ஓட்டு சாவடிகளின் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

 

மன்மோகன்சிங் குறித்து கோர்ட் கேள்வி

புதுடில்லி: நிலக்கரி சுரங்க ஊழல் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஏன் விசாரிக்கவில்லை என டில்லி கோர்ட் சி.பி.ஐ.,க்கு கேள்வி எழுப்பி உள்ளது.மேலும், அந்த துறையின் அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆகியோரை ஏன் விசாரணைக்கு உட்படுத்தவில்லை என்றும் .கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்த சி.பி.ஐ., பிரதமர் தங்கள் விசாரணைக்கு அப்பாற்பட்டவர் என்றும், சம்பந்தப்பட்ட அமைச்சர் வழக்கு விசாரணை வட்டத்தில் இல்லை என்றும் கூறி உள்ளது.

 

வாய்ப்பு கொடுங்கள்-மோடி பிரசாரம்

கும்ளா: ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கும்ளாவில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திரமோடி, 'ஜார்கண்ட்டிற்கு தேவையான அனைதது வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்த பா.ஜ., உறுதி பூண்டுள்ளது. எனவே, முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்,' என்றார்.

 

பிரதமர் மோடி காத்மாண்டு புறப்பட்டார்

புதுடில்லி: நேபாளத்தில் இன்று துவங்கும் சார்க் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி தனி விமானம் மூலம் இருந்து காத்மாண்டு புறப்பட்டுச் சென்றார்.

 

பிரஸ் கவுன்சில் தலைவர் மாற்றம்

புதுடில்லி: பிரஸ் கவுன்சில் தலைவராக இதுவரை முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு பதவி வகித்து வந்தார். இந்நிலையில், அப்பதவிக்கு, முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜஸ்டிஸ் சி.கே.பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

பெங்களூருவில் முத்தப்போராட்டம் : போலீசார் விதித்தனர் தடை

பெங்களூரு: பெங்களூருவில் முத்தப்போராட்டம் நடத்தக்கூடாது என போலீசார் தடை விதித்தனர். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் , இந்து அமைப்புக்கள் முத்த போராட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் ரெட்டி போராட்டத்திற்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளார்.

 

நாமக்கல் அருகே புதையல் கண்டுபிடிப்பு

நாமக்கல்: நாமக்கல், ராசிபுரத்தை அடுத்த அரசபாளையத்தைச் சேர்ந்தவர் அருள்சாமி. இவரது தோட்டத்தில், பண்ணை குட்டை அமைப்பதற்காக பள்ளம் தோண்டியபோது, மூன்று சிறிய செப்பு குடங்களில் 31 தங்ககாசுகள் இருந்தன. இது குறித்து அருள்சாமி கொடுத்த தகவலின் பேரில், வருவாய் மற்றும் போலீஸ் அதிகாரிகள் புதையலை ஆய்வு செய்தனர்.

 

ஜெனரேட்டர் புகையால் பாதிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி, சிதம்பரம் நகரில் ஐ.ஓ.பி., வங்கி உள்ளது. இங்கு பணிபுரிபவர் சுப்ரமணியம். இன்று காலை சுப்ரமணியத்தின் மகள், லாக்கரில் வைத்துள்ள நகையை எடுப்பதற்காக வங்கிக்கு வந்தார். சுப்ரமணியமும், அவரது மகளும் லாக்கர் இருந்த அறைக்கு சென்றனர். அப்போது, அந்த அறையில், ஜெனரேட்டரில் இருந்து வௌியேறிய புகை சூழ்ந்திருந்தது. இதை சுவாசித்த இருவரும் மயங்கி விழுந்தனர். பின்னர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

 

பள்ளி இடத்தில் கோவில் கட்ட முயற்சி

கடலூர்: கடலூர், 10வது வார்டில் அரசு மகளிர் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் கோவில் கட்டட அப்பகுதியைச் சேர்ந்த ஒருசிலர் முயற்சி செய்தனர். தகவல் அறிந்த போலீசார் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 10 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். அங்கிருந்த ஜேசிபி இயந்திரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

இன்சூரன்ஸ் மசோதா: அவகாசம் நீட்டிப்பு

புதுடில்லி: இன்சூரன்ஸ் மசோதா குறித்து தேர்வு கமிட்டி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தை தொடர்ந்து, வரும் டிசம்பர் 12ம் தேதிக்குள் அறிக்கையை தேர்வு கமிட்டி தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 

பயங்கரவாதம்:சுஷ்மா ஸ்வராஜ் பேச்சு

காத்மாண்டு: சார்க் நாடுகளின் வௌியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில், சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது: இன்றைய சூழ்நிலையில், பயங்கரவாதம் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. அதை சமாளிக்க கூட்டு முயற்சி தேவைப்படுகிறது. எங்களை பொறுத்த வரையில், வளர்ச்சிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை தாரக மந்திரமாக கொண்டுள்ளோம். சார்க் நாடுகளிடமும் அதையே கொள்கையாக கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

 

ஓட்டல் அதிபர் வீட்டில் திருட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த கொட்டபட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. ஓட்டல் அதிபர். இவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கோஷங்களால் ராஜ்யசபாவில் பாதிப்பு

புதுடில்லி: ராஜ்யசபா இன்று கூடியவுடன், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதாதளம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் கறுப்பு பண நடவடிக்கை குறித்து அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

 

பார்லி.,யில் எதிர்கட்சிகள் அமளி

புதுடில்லி: லோக்சபா குளிர்கால கூட்டத் தொடரில் இன்று, எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. கறுப்பு பண விவகாரம் குறித்து விவாதிக்க, கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கோரியது. இதற்கு சமாஜ்வாடி ஆதரவு அளித்தன. இதனால், லோக்சபாவில் அமளி நீடித்தது. ராஜ்யசபாவில், அவை நடத்த முடியாத அளவிற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

 

ராகுல் இன்று காஷ்மீரில் பிரசாரம்

புதுடில்லி: ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலில், இரண்டாம் கட்ட ஓட்டு பதிவு நடக்க உள்ள தொகுதிகளில் பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் இன்று காஷ்மீர் செல்கிறார்.

 

காஷ்மீர் தேர்தல்: தளபதி ஆய்வு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு பதிவு நடந்து வருகிறது. இதை சீர்குலைக்க பாக்., ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கங்கள் திட்டமிட்டுள்ளன. இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சூழ்நிலை குறித்து இந்திய ராணுவ தளபதி தல்பீர்சிங் சுஹாக் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.

 

தீ அணைப்பு துறைக்கு புதிய வாகனங்கள்

மதுரை: மதுரை தீ அணைப்பு துறை அலுவலகத்தை ஆய்வு செய்த தமிழ்நாடு தீ அணைப்பு துறை இயக்குனர் ரமேஷ் குடவாலா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீ அணைப்பு துறையில் தற்போது 20 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை, அடுத்த 3 மாதங்களில், தேர்வாணயம் மூலம் நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீ அணைப்பு நிலையங்களுக்கு, 18 கோடி ரூபாய் செலவில் புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மாநிலத்தில் உள்ள அனைத்து கோட்ட அலுவலகங்களிலும் இன்டர்நெட் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணி மூப்பு அடிப்படையில், ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படும். தாம்பரத்தில் உள்ள மண்டல பயிற்சி மையம் விரைவில் நவீனப்படுத்தப்படும். திருக்கழுக்குன்றம் அருகே, 12.84 ஏக்கர் பரப்பளவில் தீ அணைப்பு பயிற்சி மையம் உருவாக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மதுரையில் மண்டல பயிற்சி மையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு ரமேஷ் குடவாலா கூறினார்.

 

உச்சத்தை தொட்ட பங்குசந்தைகள் சரிந்தன

மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்ட நிலையில், இன்று சரிவை சந்தித்துள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(நவ.25ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 41.67 புள்ளிகள் உயர்ந்து 28,541.22-ஆகவும், நிப்டி 5.20 புள்ளிகள் உயர்ந்து 8,535.35-ஆகவும் இருந்தன. ஆனால் சற்றுநேரத்திலேயே பங்குசந்தைகள் சரிய தொடங்கின. காலை 10.15 மணியளவில் சென்செக்ஸ் 50 புள்ளிகளும், நிப்டி 25 புள்ளிகளும் சரிந்தன. முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்க தொடங்கியதால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளன.

 

பிரபல கதக் நடன கலைஞர் காலமானார்

மும்பை: பிரபல கதக் நடன கலைஞர் சிதாரா தேவி, தனது 94வது வயதில், மும்பையில் காலமானார். அவரது மறைவிற்கு இசைக் கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

ஆற்காடு புறவழிச்சாலையில் விபத்து: தாயும் மகனும் பலி

திருவண்ணாமலை: சென்னையைச் சேர்ந்த புவனேஸ்வர், குடும்பத்துடன் காரில் திருவண்ணாமலை சென்று திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் அவருடைய மனைவி பவானி ( வயது 37), மகன் மோகன கண்ணன் ( வயது 14 ) ஆகியோர் பலியாயினர். புவனேஸ்வரும் அவருடைய மற்றொரு மகன் ராம்குமார் படுகாயம் அடைந்து வேலூர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றரன்.

 

விழுப்புரம்:வீடுகள் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு

விழுப்புரம்:விழுப்புரம் அருகே வி.புதூரில் வசிக்கும் நடராஜன்,ராஜசேகர் ஆகியோரது வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள். முன்விரோதம் காரணமாக வெடிகுண்டுகள் வீசப்பட்டனவா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

 

பெங்களூரு:இன்று காமன்வெல்த் அறிவியல் மாநாடு

பெங்களூரு:பெங்களூருவில் காமன்வெல்த் அறிவியல் மாநாட்டை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று (நவ.25) தொடக்கிவைக்கிறார்.இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் மாநாட்டு வழிகாட்டுதல் குழுவின் இணைத் தலைவரும், விஞ்ஞானியுமான சி.என்.ஆர்.ராவ் நேற்று கூறுகையில்,கடந்த 50 ஆண்டுகளில் முதல்முறையாக காமன்வெல்த் அறிவியல் மாநாடு பெங்களூருவில் இன்று தொடங்குகிறது. 4 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டை இந்திய அரசு, மகாராணி எலிசபெத் வைர விழா அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து, தி ராயல் சொசைட்டி நடத்துகிறது என்றார்.

 

டில்லி - காத்மாண்டு: பஸ் போக்குவரத்து இன்று துவக்கம்

புதுடெல்லி: டெல்லியில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு இன்று பஸ் போக்குவரத்து சேவை தொடங்குகிறது. மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி முதல் பஸ்சை கொடியசைத்து அனுப்பி வைக்கிறார்.இதுகுறித்து மாநில போக்குவரத்துத் துறை செய்தித் தொடர்பாளர் மின்ஹாஸ் கூறியதாவது: சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நேபாளம் செல்லும் நிலையில், டில்லியில் இருந்து நேபாளத் தலைநகர் காத்மாண்டுவுக்கு பஸ் போக்குவரத்து இன்று முதல் தொடங்குகிறது. டில்லி -காத்மாண்டு இடையேயான பஸ் கட்டணம் ரூ.2,300. தினமும் காலை 10 மணிக்கு இந்த பஸ் நிலையத்தில் இருந்து காத்மாண்டுவுக்கு பஸ் புறப்பட்டுச் செல்லும். ஆக்ரா, கான்பூர், சுனாலி (உ.பி.) வழியாக 30 மணி நேரத்தில் காத்மாண்டுவைச் பஸ் சென்றடையும். இவ்வாறு மின்ஹாஸ் கூறினார்.

 

பிரம்மபுத்திராவில்அணை:தவறில்லை என்கிறது சீனா

பீஜிங்:திபெத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் மீது நாங்கள் அணைகள் கட்டுவதில் தவறில்லை என சீனா நேற்று தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக சீனத் தலைநகர் பீஜிங்கில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹு சுன்யிங் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது,பிரம்மபுத்திரா ஆற்றில் நீர்மின் நிலையங்களை அமைப்பதால், அந்த ஆறு செல்லும் பகுதிகளில் இருக்கும் நாடுகளுக்கு தண்ணீர் விநியோகம் பாதிக்கப்படாது. அந்நாடுகளின் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாது. என்றார்.

 

சிம்லா:பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 4 பேர் பலி

சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் நேற்று மலைப் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.நங்கேரியில் இருந்து சிம்லா நோக்கிச் சென்ற அந்த கார், லாலன் கிராமம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 200 மீட்டர் ஆழ பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

 

பாக்தாத் கார் குண்டுவெடிப்பில் 8 பேர் பலி

பாக்தாத்:ஈராக் தலைநகர் பாக்தாத்தின் வடபகுதியில் உள்ள மார்க்கெட்டில் நேற்று கார் குண்டு வெடித்தது. சம்பவ இடத்தில் 8 பேர் பலியானார்கள்.மேலும் 22 பேர் காயமடைந்து சிகி்ச்சை பெற்று வருவதாக போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்னர்.

 

துருக்கி அதிபர் எர்டோஹனின் சர்ச்சை பேச்சு

அங்காரா:பெண்களின் நீதி குறித்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய துருக்கி அதிபர் ரெசப் தாயிப் எர்டோஹன், பெண்கள், ஆண்களுக்கு சமமானவர்கள் அல்ல என கூறியதால் சர்ச்சை எழுந்துள்ளது.பெண்களையும் ஆண்களையும் ஒரே சமமாக பார்க்கமுடியாது. அது இயற்க்கைக்கு எதிரானது.பெண்கள் இயல்பாகவே வித்தியாசமாக படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றார் எர்டோஹன்.

 

கலசம் கடத்திய 5 பேர் சிக்கினர்

பழநி:கொடைக்கானலில் இருந்து கோயில் கலசத்தை கடத்தி வந்த 5 பேர் பழநியில் சிக்கினர். போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த முனியாண்டி, பாண்டி, சாலமன்ராஜா ஆகியோர் கோயில் கலசத்தை விற்க கரூர் சேர்ந்த நாகராஜ், ஹரியிடம் பேரம் பேசினர். கலசத்திற்காக ரூ.72 லட்சம் தருமாறு கூறினர். இவர்கள் கொடைக்கானல் பூம்பாறையில் இருந்து காரில் (டி.எண்.05கே 959)பழநி நோக்கி வந்தனர். பழநி தேக்கம் தோட்டம் போலீஸ் சோதனை சாவடியில் 5 பேரும் சிக்கினர். அவர்களிடம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

 

திருவண்ணாமலை தீப திருவிழா துவக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கார்த்திகை தீப திருவிழா, நேற்று துர்க்கையம்மன் உற்சவத்துடன் துவங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய விழாவான கார்த்திகை தீப திருவிழாவில், நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனை வழிபடும் விழா, நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று இரவு, 8:30 மணிக்கு, காமதேனு வாகனத்தில் துர்க்கையம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதில், வேளாண்மைத்துறை அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, கோவில் இணை ஆணையர் செந்தில்வேலவன் உட்பட, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று, அண்ணாமலையார் கோவிலில் உள்ள பிடாரி அம்மனுக்கும்; நாளை, விநாயகருக்கும் விழா எடுக்கப்படும். வரும், 26ம் தேதி அண்ணாமலையார் கோவிலில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. வரும், டிச., 2ம் தேதி, பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும்; டிச., 5ம் தேதி, அதிகாலை, 4:00 மணிக்கு, பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.