குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 17 ம் திகதி வெள்ளிக் கிழமை .

24.11.2014- இன்றைய இந்திய செய்திகளின் சிறப்பு தொகுப்பு

ராகுலை திருமணம் செய்யணும்:உ.பி., பெண்ணால் பரபரப்பு

ஆக்ரா: உத்தரபிரேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுலை திருணம் செய்துகொள்ள விரும்பி, போலீஸ் ஸ்டேஷன் உதவியை நாடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.போலீசாரிடம் இது தொடர்பாக அப்பெண் எழுத்துப் பூர்வமாக புகார் எதுவும் அளிக்கவில்லை.

ராகுல் குறித்து புகார் தெரிவித்த அப்பெண், வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், ஆனால் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல தோன்றுவதாகவும் மகளிர் போலீஸ் நிலைய பொறுப்பாளர் தேஜேஸ்வரி சிங் கூறியுள்ளார்.

சித்தா எம்.டி., சேர்க்கை கலந்தாய்வில் குழப்பம்
சென்னை:குளறுபடிகள் நடப்பதாக சர்ச்சை எழுந்ததால், சித்தா எம்.டி., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பாதிக்கப்பட்டது.சென்னை, பாளையங்கோட்டையில் உள்ள, சித்த மருத்துவக் கல்லுாரிகளில், எம்.டி., சித்தா பிரிவுக்கு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நேற்று நடந்தது.'ஒதுக்கீட்டு பிரிவில், ஏதோ குளறுபடி நடக்கிறது; வெளிப்படைத்தன்மை இல்லை' என, கலந்தாய்வுக்கு வந்தோர், திடீரென போர்க்கொடி உயர்த்தினர்.இதனால், கலந்தாய்வு நிறுத்தப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டனர். 'விதிமுறைப்படிதான் கலந்தாய்வு நடக்கிறது; எந்த குளறுபடியும் இல்லை' என, சேர்க்கை அதிகாரிகள் தெரிவித்தனர். பின், போலீஸ் பாதுகாப்புடன் கலந்தாய்வு நடந்தது.கடந்த வாரம் நடந்த, சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புக்கான மறு கலந்தாய்விலும், இதேபோன்று பெற்றோர்கள் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
தமிழக- கேரள போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
பந்தலுார்: நீலகிரி மாவட்டம், பந்தலுாரில், தமிழக, கேரள போலீஸ் உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், மாலை நடந்தது.இதில், தமிழக அதிரடிப்படை ஐ.ஜி., சங்கர்ஜுவல், எஸ்.பி., கருப்புசாமி, நீலகிரி மாவட்ட எஸ்.பி., செந்தில்குமார், கேரள மாநிலம், கண்ணுார் டி.ஐ.ஜி., தினேந்திரகேசப், வயநாடு எஸ்.பி., புட்ட விமலாதித்யா உள்ளிட்ட, இரு மாநில போலீசார், அதிரடிப்படையினர், உளவுத்துறையினர் பங்கேற்றனர். கூட்டத்தில், 'இரு மாநில எல்லையில், அதிரடிப்படையினர் இணைந்து, தொடர் ரோந்து பணிகளை மேற்கொள்வது; இதற்காக, ஏழு குழுக்கள் அமைப்பது; தமிழக, கேரள மாநில குற்றவாளிகள் தப்பிச் செல்லாத வகையில், பரஸ்பரம் தகவல்களை பரிமாறிக்கொள்வது என, முடிவு செய்யப்பட்டது.நீலகிரி மாவட்ட எஸ்.பி., செந்தில்குமார் கூறுகையில், ''இரு மாநிலங்களில் நடக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வகையிலான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது,'' என்றார்.
அமெரிக்க ராணுவ அமைச்சர் ராஜினாமா
வாஷிங்டன்: அமெரிக்க ராணுவ அமைச்சர் செக் ஹேகல் திடீரென ராஜினாமா செய்தார். அமெரிக்க அதிபர் ஒபாமா அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக உள்ளவர் செக் ஹேகல், இன்று ராணுவ தலைமையகமான பென்டகன் வந்தார்.உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அமைச்சராக பணியாற்றிட தனக்கு ஆதரவு அளித்த அதிபர் ஒபாமா உள்ளிட்டோருக்கு தான் நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார். ஹேகல் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஒபாமாவும் அங்கிகரீத்து முறையாக அறிவித்தார்.
பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடியின் மனைவி கேள்வி
ஆமதாபாத்: தனக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து மாநில அரசிடம் பிரதமர் மோடியின் மனைவி யசோதாபென் தகவல் அறியும் சட்டம் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர், அவரது மனைவிக்கு மாநில அரசு பாதுகாப்பு வழங்கியது. இது குறித்து மாநில அரசிற்கு தகவல்அறியும் சட்டத்தின் கீழ் அவர் மாநில அரசிடம் கேள்வி கேட்டுளளார். அதில், பிரதமர் மனைவி என்ற முறையில் பாதுகாப்பை தவிர வேறு என்ன சலுகைகள் எனக்கு வழங்கப்படுகின்றன. பிரதமரின் குடும்பத்தினர், சகோதரர், சகோதரி சகோதரி மற்றும் எனக்கு எந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். நான் பொதுத்துறை வாகனத்தில் செல்கிறேன். பாதுகாப்பு அதிகாரிகள், அலுவலக வாகனத்தில் பயணிக்கின்றனர். முன்னாள் பிரதமர் இந்திராவே, பாதுகாலவர்களால் கொல்லப்பட்ட நிலையில், எனக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து அச்சப்படுகிறேன். எனவே எனக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அசாம் ரயில் நிலையத்தில் 7 கிலோ வெடிகுண்டு கண்டுபிடிப்பு
கவுகாத்தி: அசாம் மாநிலம் கெண்டுகோனா மாவட்டத்தில் லும்டிங்-காமாக்யா இண்டர்சிட்டி ரயில் கழிவறை அருகே துணியால் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்த மர்ம பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த வழியாக வந்த ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். மர்ம பொருளை ஆய்வு செய்த போது, அது 7 கிலோ எடை கொண்ட அதிக சக்திவாய்ந்த வெடிகுண்டு என்று உறுதியானது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு செயலிழக்க செய்யும் பணி நடந்தது.
2015 வரை ரேஷன் கார்டுகள் செல்லும்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ரேஷன் கார்டுகள் 2015ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை செல்லும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகள் 2015ம் ஆண்டிற்கு புதுப்பிக்கும் வகையில், உள்தாள்கள் அச்சிடப்பட்டு ரேஷன் அட்டையில் இணைத்து, ரேசன் கார்டுகள் செல்லும்படி வகையில், 01.01.2015 முதல் 31.12.2015 வரை நீட்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளது என கூறியுள்ளது.
மேலூர் அருகே செம்மரக்கட்டைகள் பறிமுதல்
மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் அருகே சத்யபுரம் என்னும் இடத்தில் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சத்யபுரம் பகுதியில் சந்தேகப்படும் வகையில், 5 நாட்களாக நின்று கொண்டிருந்த வேன் ஒன்றை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சீனாவுடன் பேச்சு: சிறப்பு பிரதிநதியாக அஜித் தோவல் நியமனம்
புதுடில்லி: சீனாவுடனான எல்லைப்பிரச்னையை பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவின் சிறப்பு பிரதிநிதியாக அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சீனாவின் யாங் ஜியாச்சியுடன் பேச்சுவார்த்தி, இரு நாடுகளுக்கு இடையே நிலவும் 3,500 கி.மீ., எல்லைப்பிரச்னையை பேசி தீர்த்து வைக்க முயற்சி செய்வார்.
பெரியாறு அணை பலமாக உள்ளது: நாதன்
குமுளி: 142 அடி வரை தண்ணீர் தேக்கியும், பெரியாறு அணை பலமாக உள்ளது என கண்காணிப்பு குழு தலைவர் நாதன் கூறியுள்ளார். கண்காணிப்பு குழு கூட்டத்திற்கு பின் கருத்து தெரிவித்த அவர், அணை நீர்மட்டத்திற்கு 152 அடிவரை தேக்கும் அளவிற்கு அணை பலமாக உள்ளது எனவும், 152 அடி வரை தண்ணீர் உயர்த்தி கொள்ள ஆயத்த பணிகளை தமிழகம் செய்யலாம் எனவும்,எப்போது வேண்டுமானாலும் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ளலாம் எனவும் கூறினார்.
டிசம்பர் 4ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது
சென்னை: தமிழக சட்டசபை டிசம்பர் 4ம் தேதி காலை 10 மணிக்கு கூடும் என சட்டசபை செயலகம் அறிவித்துள்ளது. தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபை பேரவை மண்டபத்தில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோடியை நவாஸ் சந்திக்கும் திட்டமில்லை: பாக்.,
இஸ்லாமாபாத்: சார்க் மாநாட்டின் போது பிரதமர் மோடியை,நவாஸ் ஷெரீப் சந்திக்கும் திட்டமில்லை என பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து சுஷ்மா கோரிக்கை ஏதும் விடவில்லை எனவும், ஒருவேளை சந்திப்பு குறித்து கோரிக்கை விடப்பட்டால், இது குறித்து பாகிஸ்தான் பரிசீலனை செய்யும் என கூறினார்.
தமிழகத்துக்கு சீனாவிலிருந்து 60 ஆயிரம் டன் யூரியா இறக்குமதி
காரைக்கால்: சீனாவிலிருந்து 60 தமிழகத்துக்கு 60 ஆயிரம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. யூரியாவை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல் காரைக்கால் துறைமுகம் வந்து சேர்ந்தது. இதில்8 ஆயிரம் டன் தஞ்சாவூருக்கும், 5 டன் திருவாரூர் மாவட்டத்திற்கும், எஞ்சியவை மற்ற மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என நாகை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் 1.10 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட உள்ளது. அதில் வரும் புதன் கிழமை 60 ஆயிரம் டன்னும், டிசம்பர் 2ம் தேதி எஞ்சிய 50 ஆயிரம் டன்னும் காரைக்கால் வர உள்ளதாக, கலெக்டர் கூறினார்.
1727 உதவி மருத்துவர் தேர்வு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1727 உதவி மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு பிரிவுகளில் உதவி மருத்துவர் தேர்வு செய்ப்பட உள்ளதாகவும், இட ஒதுக்கீட்டின்படி தேர்வு நடைபெறும் எனவும், இதற்காக www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் டிசம்பர் 1ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி பலாத்காரம்: சிறுவன் கைது
ஓமலூர்: ஓமலூர் அருகே, 7 வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்த, 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், பாலகுட்டப்பட்டி மலையனுாரை சேர்ந்த, 7 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில், 2ம் வகுப்பு படித்து வந்தார். சில நாட்களுக்கு முன், பள்ளி சென்ற சிறுமியை, 14 வயது சிறுவன் வழிமறித்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின், அதுபற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என, சிறுமியை மிரட்டி தப்பி சென்றான். காலை, சிறுமியை குளிக்க வைத்த போது, அவரது உடலில் காயங்கள் இருப்பதை கண்டு, அவரது தாய் அதிர்ச்சியடைந்தார். அதே பகுதியை சேர்ந்த, பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த சிறுவன், தவறாக நடந்து கொண்டது தெரிந்தது. குழந்தையின் தாய் அளித்த புகார்படி, பாலியல் கொடுமை செய்த சிறுவனை, கைது செய்த போலீசார், அவனை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
டில்லி-காத்மாண்டு பஸ் சேவை
புதுடில்லி:பிரதமர் நரேந்திரமோடி கடந்த முறை நேபாளம் சென்றிருந்தபோது, டில்லி-காத்மாண்டு இடையே பஸ் போக்குவரத்து துவக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், சார்க் நாடுகளின் மாநாட்டிற்காக நாளை காத்மாண்டு செல்லும் மோடி, இந்த பயணத்தின் போது டில்லி-காத்மாண்டு பஸ் சேவையை துவக்கி வைக்க உள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.
பெங்களூருவில் முன்னாள் வனத்துறை கமாண்டர் மர்ம கொலை
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முன்னாள் முன்னாள் வனத்துறை கமாண்டர் மர்ம முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். பர்வேஸ் கோக்கார் தனது கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் இந்த கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மசோதாக்கள்: காங்கிரஸ் விளக்கம்
புதுடில்லி: குளிர்கால கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட உள்ள இன்சூரன்ஸ் மசோதா உள்ளிட்ட முக்கியமான மசோதாக்களுக்கு, காங்கிரஸ் கட்சி அவசரமாக ஆதரவு கொடுக்காது என, அக்கட்சி தெளிவுபடுத்தி உள்ளது.
அரக்கோணம்: கொத்தடிமைகள் மீட்பு
திருத்தணி: வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே, செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த 14 பேரை வருவாய் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
பழநி-பொள்ளாச்சி ரயில் சோதனை ஓட்டம்
பழநி: பழநி-பொள்ளாச்சி வழித்தடத்தில் சிறப்பு அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நாளை நடக்கிறது. இந்த சோதனை ஓட்டம் 80 முதல் 120 கி.மீ., வேகத்தில் நடக்கும். ரயில்பாதை அருகே வசிப்பவர்கள், வாகனஓட்டிகள் தண்டவாளம் அருகே செல்ல வேண்டாமெனவும், ஆளில்லாத "லெவல் கிராசிங்' குகளை கடக்கவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆய்வினை முன்னிட்டு ரயில்வே போலீசார், பணியாளர்கள் கூடுதலாக கண்காணிப்புபணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு ஆணையர் சதீஸ்குமார் மிட்டல் கூறுகையில்,""பழநி- பொள்ளாச்சி வரையிலான 63 கி.மீ., ரயில்பாதை பணிகள் முடிந்துள்ளது. இருப்புபாதை, சிக்னல்கள், லெவல் கிராசிங் உள்ளிட்ட வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி- போத்தனூர் ரயில்பாதை பணி 2 மாதத்திற்கு முன்பு முடிந்துள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும்,'' என்றார்.
காங்., கூட்டணி: அமித்ஷா எச்சரிக்கை
ஆதித்யபூர்: ஜார்கண்ட் மாநிலத்தில் ஊழலை காங்கிரஸ் கட்சி ஊக்குவிக்கிறது. இந்நிலையில், அக்கட்சியின் கூட்டணி குறித்து வாக்காளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, பா.ஜ.,தேசிய தலைவர் அமித்ஷா கூறி உள்ளார். காங்கிரஸ்-ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி குறித்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமல், மதுகோடா ஆட்சியில் 4 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை,' என்று ஷா குற்றம் சாட்டினார்.
எந்த சதியும் எங்களை நிறுத்தாது-மம்தா
கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, பா.ஜ.,மீது மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளார். 'எங்களுக்கு எதிராக அவர்கள் (பா.ஜ.,) சதி திட்டம் தீட்டி உள்ளனர். ஆனால், எந்த சதி திட்டமும் எங்களை தடுத்து நிறுத்த முடியாது. நாங்கள் தொடர்ந்து மாநிலத்தின் மேம்பாட்டிற்கான பணியில் ஈடுபடுவோம். மக்களுக்காக நாங்கள் பணி செய்வதால், அவர்களிடம் சதி திட்டங்கள் எங்களை ஒன்றும் செய்துவிடாது,' என்றார்.
புலம்ப தயாராகிறார் நவாஸ் ஷெரீப்
இஸ்லாமாபாத்: காத்மாண்டுவில், சார்க் நாடுகளின் மாநாடு துவங்க உள்ளது. இந்த மாநாட்டில், இந்தியா, பாகிஸ்தான், பூடான், மாலத்தீவு, நேபாளம், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தை, இந்தியாவுடனான காஷ்மீர் பிரச்னைக்கு சாதகமாக பயன்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. சார்க் மாநாட்டில் பாக். பிரதமர் நவாஸ் கலந்து கொள்ள தயாராகி வரும் நிலையில், அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தலைமை அதிகாரி அக்தர், நவாசை சந்தித்து பேசி உள்ளார். அவர்கள் இருவரும், சார்க் நாடுகளின் தலைவர்களிடம் இந்தியா பற்றியும், காஷ்மீர் பற்றியும் என்ன பேசுவது என்பது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். காஷ்மீர் குறித்த பேச்சுவார்த்தையில் இந்தியாவின் நிலைப்பாடு, ஊடுருவல் விஷயத்தில் இந்தியாவின் பதிலடி ஆகியவை குறித்து நவாஸ் சார்க் நாடுகளின் தலைவர்களிடம் விளக்கம் அளிக்க உள்ளதாகவும், அதற்கான தகவல்களை அவர் ஒருங்கிணைத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, பாக்., தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடியை தாங்க முடியாமல், ஐ,.நா.சபைக்கு ஓடி முறையிட்டார் நவாஸ். இப்போது சார்க் நாடுகளின் தலைவர்களிடம் புலம்புவதற்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாஜி அமைச்சரிடம் சி.பி,.ஐ., விசாரணை
புதுடில்லி: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில், அசாம் மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் தலைவருமான அன்ஜன் தத்தாவிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அசாமை சேர்ந்த பல பிரபலங்களுக்கு தொடர்புள்ளது. முன்னதாக, அசாமின் பிரபல பாடகர் சதானந்த கோகய் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், ஒரு எம்.எல்.ஏ., மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தரப்பில் தகவல் இல்லை-பாக்.,
இஸ்லாமாபாத்: .நேபாள தலைவர் காத்மாண்டுவில் நடக்க உள்ள சார்க் நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திரமோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப்பும் கலந்து கொள்ள உள்ளனர். பரஸ்பரம் இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து பாக்., பிரதமர் மற்ற சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பேசுவார் என்று பாகிஸ்தான் கூறி உள்ளது. இந்த வகையில், பிரதமர் மோடியையும் அவர் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வௌியாகி உள்ளன. இதுகுறித்து பாக்., வௌியுறவுத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'அதுபோன்ற ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யும்படி கோரி இந்திய தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை' என்றார்.
நக்சலைட்டுகள் இருவர் கைது
ராய்பூர்: சட்டீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில், நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து அதிக சக்தி வாய்ந்த வெடிபொருட்களை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.
குண்டு வெடிப்பில் தப்பியது அசாம் ரயில்
ராங்கியா: அசாம் மாநிலம், காமரூப் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த லும்டிங்-காமாக்யா இன்டர்சிட்டி ரயிலில், பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ரயில் பெட்டி ஒன்றில் இருந்து, 7 கிலோ எடை கொண்ட, அதிக சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்றை கைப்பற்றினர். இதையடுத்து, பயணிகள் அனைவரும் பெட்டியில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். உள்ளூர் போலீசார் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் ரயில் முழுவதும் சோதனையிடப்பட்டது. வெடிகுண்டை கண்டுபிடித்ததன் மூலம், பெரும் விபத்தில் இருந்து அந்த ரயில் தப்பியது.
காஷ்மீர் தேர்தல்: பண்டிட்டுகள் ஆர்வம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கான தேர்தலில், நாளை, 15 தொகுதிகளுக்கான முதற்கட்ட ஓட்டு பதிவு நடக்க உள்ளது. இந்த தேர்தலில், முதன் முறையாக 3441 பண்டிட்டுகள் ஓட்டு போட, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.
கிரிக்கெட்: சுப்ரீம் கோர்ட் அறிவுரை
புதுடில்லி: ஐ.பி.எல்., சூதாட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய அறிவுரையில், 'கிரிக்கெட் விளையாட்டு என்பது உண்மையானதாகவும், உயிரோட்டம் கொண்டதாகவும், பெருந்தன்மை கொண்டவர்கள் விளையாடும் விளையாட்டாகவும் இருக்க வேண்டும்,' என கூறி உள்ளது.
மம்தா ஒரு கோழை-குணால் கோஷ்
கோல்கட்டா: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி., குணால்கோஷ், மம்தா பானர்ஜி குறித்து கூறுகையில், 'மம்தா ஒரு பயந்தாங்கொல்லி. கோழை. தொண்டர்களை தூண்டிவிட்டு, அவர்களின் உணர்ச்சி வேகத்தை பயன்படுத்தி, சி.பி.ஐ., விசாரணையை தவிர்க்க பார்க்கிறார்,' என்றார்.
தோவாலுக்கு கூடுதல் பொறுப்பு
புதுடில்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவால் உள்ளார். இந்நிலையில், சீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து பேச, இந்தியாவின் சிறப்பு பிரதிநிதியாக அவரை மத்திய அரசு நியமித்துள்ளது.
திரிணமூல் காங்-காங்.,தொண்டர்கள் மோதல்
கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் நகரில், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே நடந்த மோதலில், நான்கு திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் காயம் அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜ., தொண்டர்களுடன் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தியோராவுக்கு ஜனாதிபதி இரங்கல்
புதுடில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோராவின் மறைவிற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார். தனது இரங்கல் செய்தியில், 'தியோராவின் நீண்டகால பொது வாழ்க்கை, அடுத்து வரும் பல ஆண்டுகளுக்கு நினைவு கூறப்படும்,' என்று குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கட்சிகள் ஒத்துழைக்கும்-வெங்கையநாயுடு
புதுடில்லி: லோக்சபாவில், இன்சூரன்ஸ் மசோதாவை நிறைவேற்ற எதிர்கட்சிகள் ஒத்துழைக்கும் என, மத்திய அமைச்சர் வெங்கையநாயுடு கூறி உள்ளார்.
பார்லி., தொடர்: சபாநாயகர் நம்பிக்கை
புதுடில்லி: லோக்சபாவின் குளிர்கால கூட்டத் தொடர் குறித்து கருத்து தெரிவித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், 'இந்த கூட்டத் தொடரில் பல முக்கியமான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டி உள்ளது. இந்த கூட்டத் தொடர் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்,' என்றார்.
உலக குத்துச்சண்டை: இந்தியாவிற்கு வௌ்ளி
ஜேஜு: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை சர்ஜுபாலா வெள்ளிப் பதக்கம் வென்றார். தென் கொரியாவில் உள்ள ஜேஜு நகரில், பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதன் 48 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் சர்ஜுபாலா தேவி, கஜகஸ்தானின் நஜிம் கிசாய்பேயிடம் தோல்வி அடைந்தார். இதன் மூலம் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
வைகோ மீதான பொடா வழக்கு ரத்து
சென்னை: ம.தி.மு.க., பொது செயலர் வைகோ மீதான பொடா வழக்கு ரத்து செய்யப்பட்டதாக சென்னை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை கொலை: மூவர் சரண்
ஒட்டன்சத்திரம்: நெல்லை, மேலப்பாட்டத்தைச் சேர்ந்த ஆறுமுக நயினார் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, பொன் முத்துராஜ், சுரேஷ், கருத்த பாண்டி ஆகியோர் ஒட்டன்சத்திரம் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளனர்.
கூல்... எம்,பி.,களுக்கு மோடி டிப்ஸ்
புதுடில்லி: பார்லிமென்ட் குளிர் கால கூட்டம் துவங்கி உள்ளது. இந்த கூட்டத்தை, மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்களை உருவாக்குவதில் உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ள மோடி, 'நல்ல விஷயங்களை கூலான சூழ்நிலையில், கூலான (அமைதியான) மனநிலையுடன் உறுப்பினர்கள் நிறைவேற்றுவார்கள் என நான் நம்புகிறேன்,' என்று தெரிவித்துள்ளார்.
ஜெ., பட விவகாரம்: ஐகோர்ட் அவகாசம்
சென்னை: அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தை அப்புறப்படுத்தக் கோரும் மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், இது சம்பந்தமாக ஒரு மாத காலத்திற்குள் முடிவெடுக்கும்படி தமிழக அரசுக்கு கூறி உள்ளது.
காஷ்மீர் தேர்தல்: நாளை ஓட்டுப்பதிவு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கான தேர்தலில் நாளை முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. 15 தொகுதிகளில் நடக்கும் இந்த ஓட்டுப் பதவில் 10 லட்சம் பேர் ஓட்டு போட உள்ளனர். ஓட்டுப்பதிவை முன்னிட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தேர்தலை புறக்கணிக்கும்படி, பயங்கரவாத அமைப்புக்கள் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மிரட்டல் விடுத்துள்ளன.
தரங்கம்பாடியி்ல் சாராயம் பறிமுதல்
மயிலாடுதுறை: நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர்.அப்போது, ராஜேந்திரன் என்பவர் காரைக்காலில் இருந்து கடத்தி வந்த சாராயத்தை பாக்கெட்டுகளில் நிரப்பி விற்பனை செய்வது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 150 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
தியோராவுக்கு ராஜ்யசபாவில் இரங்கல்
புதுடில்லி: ராஜ்யசபா உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி தியோராவிற்கு ராஜ்யசபாவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவைத் தலைவர் அமீத் அன்சாரி, மறைந்த தியோராவிற்கு புகழாரம் சூட்டி, அஞ்சலி செலுத்தினார். 'நாடு மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரை இழந்துவிட்டது, அவரின் மறைவிற்கு ராஜ்யசபா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது,' என்று அன்சாரி கூறினார். மறைந்த முன்னாள் உறுப்பினர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
21 வயது நியூஜெர்சி ஆசிரியைக்கு சிறை
நியூயார்க்: நியூஜெர்சியை சேர்ந்த லிண்டா ஹார்டன், என்ற 21 வயது ஆசிரியை, மாற்று அறிவியல் ஆசிரியராக மான்செஸ்டர் உயர் நிலைப்பள்ளியில் பணிபுரிகிறார். இவர் கடந்த வியாழன் அன்று அதே பள்ளியில் படித்த 16 வயது மாணவனுடன் செக்ஸ் வைத்து கொண்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து லிண்டா ஹார்டன் சிறையில் அடைக்கப்பட்டாள்.
பாதுகாப்பாக உள்ளன ஜப்பான் அணு உலைகள்:அணுசக்தி வாரியம்
டோக்கியோ:நிலநடுக்கத்தால் அந்த உலைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ஜப்பான் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் தெரிவித்துள்ளது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு 180 கி.மீ. தொலைவில் உள்ள ககுபா பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவானதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அது 6.2 புள்ளிகளாகவே பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.நிலநடுக்கம் பாதித்த பகுதிகளின் சுற்றுவட்டாரத்தில் 3 அணு உலைகள் உள்ளன. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் அந்த உலைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ஜப்பான் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் கூறிவிட்டது
தீவிரவாத நடவடிக்கைகள் இந்தியாவில் 70சதவீதம் உயர்வு
புதுடில்லி:இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் 70 சதவீதம் உயர்ந்துள்ளன என்றும், இவற்றில் பெரும்பாலான தாக்குதல்களுக்கு மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள்தான் காரணம் எனவும், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனத்தின் (ஐஈபி) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலக அளவிலான தீவிரவாதம் குறித்து இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிவந்த விவரங்கள்:கடந்த 2012-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, 2013-ல், இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் 70 சதவீதம் அதிகரித்துள்ளன. மாவோயிஸ்ட், ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட 43 தீவிரவாத அமைப்புகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களின் எண்ணிக்கை 55 முறையும், இவற்றில் இறந்தவர்களின் எண்ணிக்கை 238-இல் இருந்து 404-ஆக உயர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
மோடியை காஷ்மீர் பா.ஜ.,தவறாக வழிநடத்துகிறது: காங்.,
ஜம்மு: பிரதமர் மோடியை, காஷ்மீர் மாநில பா.ஜ., தவறாக வழிநடத்துவதாக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். மேலும் அவர், காஷ்மீர் மாநிலம் கிஸ்திவாரில் பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் வந்திருந்த அனைவரும் உள்ளூர்வாசிகள் அல்ல எனவும், அவர்கள் வேறுபகுதியிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவி நீக்கம்
சென்னை:செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த, முன்னாள் துணை வேந்தர், அவ்வை நடராசன் நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதில், சென்னை பச்சையப்பன் கல்லுாரியின் தமிழ் துறை பேராசிரியராக பணியாற்றி, ஓய்வு பெற்ற, பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பிறப்பித்துள்ளது.செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவராக, மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் இருந்து வந்தார்.தமிழ் புலமையும், தமிழ் அறிவும் கொண்ட ஒருவரை, இப்பதவிக்கு நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, மார்ச் 20ம் தேதி, முன்னாள் துணை வேந்தர், அவ்வை நடராசன் நியமிக்கப்பட்டார்.துணை தலைவராக நியமிக்கப்பட்ட பின்னும், அதற்குரிய அதிகாரங்களோ, வசதிகளோ, அவ்வை நடராசுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில், ஏழு மாதங்களே ஆன நிலையில், அவ்வை நடராசன் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்கிறது மத்திய அரசு
புதுடில்லி: சிவில் சர்வீஸ் தேர்வில் ஆப்டிடியூட் தேர்வு முறை தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.