குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சுற்றுச்சூழலை பாதுகாக்க சீனாவில் 10,000 தொழிற்சாலைகள் முடல்!

பெய்யிங்: சுற்றுச்சூழல் தூய்மையைப் பாதுகாக்க சீனாவில் உள்ள 10,000 தொழிற்சாலைகளை மூட சீன அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சீனாவில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. அதில், வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழலை தூய்மையாக வைக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும், அவை வளரும் நாடுகளுக்கு உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனை நடைமுறைக்கு கொண்டுவரும் வகையில் சீனாவில் உள்ள    10 ஆயிரம் தொழிற்சாலைகளை மூட சீனா உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக, சீன சுற்றுச்சூழல் துறை வெளியிடும் நாளிதழில் வெளியாகிய செய்தியில், சர்வதேச மாநாட்டை ஒட்டி, சீனாவில் உலகத் தலைவர்கள் இருக்கும் நாள்களில் சுற்றுச்சூழல் தூய்மையை உறுதி செய்யும் நடவடிக்கைகளை அதிபர் ஜின்பிங் நேரடியாக பார்வையிட்டார். மேலும், பிரதமர் லீ கெகியாங், துணைப் பிரதமர் ஜாங் காவோலி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் ஜின்பிங்குடன் இருந்தனர்.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பாக 4 லட்சத்து 34 ஆயிரம் பேர் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளைக் கண்காணித்தனர். 60,100 ஆலைகளில் நடத்திய ஆய்வில் மேலும், புதிதாக எழுப்பப்பட்டு வரும் கட்டிடங்கள், பெட்ரோல் நிலையங்கள் போன்ற 1,23,000 இடங்களை கண்காணித்தனர். இதில் குறிப்பாக மாசு ஏற்படுத்தும் 10 ஆயிரம் ஆலைகளை  மூட சீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். மேலும் 39,000 ஆலைகளின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உச்சி மாநாடு நவம்பர் 10, 11 தேதிகளில் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 1.17 கோடி வாகனங்கள் சாலையில் செல்லத் தடை விதிக்கப்பட்டது. மத்திய அரசு, பெய்ஜிங், தியான்ஜிங், ஹெபேய், ஷான்ஸி, மங்கோலியா, ஷான்டோங், ஹெனான் ஆகிய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து சுற்றுச்சூழல் தூய்மை நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.