குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

அமெரிக்காவில் செல்போன் தடை செய்யப்பட்ட கிராமத்தை விரும்பும் மக்கள்

அமெரிக்கா, க்ரீன் பேங்க்: அமெரிக்காவில் உள்ள க்ரீன் பேங்க் கிராமத்தில் செல்போனின் சத்தத்தைவிட மாட்டின் சத்தம் தான் அதிகமாக கேட்கும். ஏனெனில் இங்குதான் உலகின் மிகவும் உணர்திறன் கொண்ட ரேடியோ தொலைநோக்கி உள்ளது. இந்த தொலைநோக்கி நட்சத்திரங்களின் பிறப்பு இறப்பையும், விண்வெளியில் இருக்கும் மெல்லிய ஒலியுடைய சிக்னல்களையும் படம்பிடிக்கும். இதனால் இங்கு எலக்ட்ரானிக் பொருட்களான மொபைல் மற்றும் வைஃபை தடை செய்யப்பட்டுள்ளது. எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாத இந்த க்ரீன் பேங்க் கிராமத்தில் வயதான நோயாளிகள் வந்து தஞ்சம் அடைகின்றனர், அதனால் இந்த இடம் மெக்காவை(mecca) போல திகழ்கிறது.

க்ரீன் பேங்க் கிராமத்தில் உள்ள மக்கள் தொகை 143 ஆகும், இங்கு செல்போன் போன்றவவை தடை செய்யப்பட்டுள்ளதால் நிம்மதியாக இருக்க விரும்புபவர்கள் இங்கு வந்து தஞ்சமடைகின்றனர்.

க்ரீன் பேங்க் கிராமத்தில் வந்து தஞ்சமடைந்தவர்களில் ஒருவரான 53 வயதுடைய சார்லஸ் மெக்னா கூறியதாவது, 'ஜூலை மாதத்தில் நெப்ராஸ்கரின் நகரில் இருந்து வெளியேறி இங்கு வந்து சேர்ந்தேன், ஏனெனில் நான் செல்போனால் உருவாகும் மின்காந்த அலைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தேன், ஆதலால் செல்போன் உபயோகிக்காத இந்த கிராமத்திற்கு வந்தேன்' என்று கூறியுள்ளார்.

க்ரீன் பேங்க் மற்றும் Pocahontas நாட்டினை சுற்றி உள்ள பகுதிகளை 1958ம் ஆண்டில் 'அமைதியான மண்டலம்' என்று அறிவித்துள்ளனர். 100 மீட்டர் (330 அடி) விட்டம் கொண்ட ஒரு வெள்ளை டிஷ், 150 மீட்டர் (500 அடி) உயரத்தில் நிற்கிறது. இந்த தொலைநோக்கி விண்வெளியில் இருந்து இரவும், பகலும் சிக்னல்களை படம்பிடிப்பதற்காக செயல்படுகிறது. இந்த 'தேசிய வானொலி அமைதியான மண்டலம்' 33,000 சதுர கிலோமீட்டர் (13,000 சதுர மைல்) பரப்பளவு முழுவதும் தொலைநோக்கி கண்காணிக்கிறது.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.