குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

முதல் இன்னிங்ஸில் 643 ரன்கள் இந்தியா.

முதல் இன்னிங்ஸில் இந்தியா  அதிரடியாக ஆடி 6 விக்கெட் இழப்புக்கு 643 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்காவை 296 ரன்களில் சுருட்டிய இந்தியா பின்னர் தனது ரன் வேட்டையைத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரரான வீரேந்திர ஷேவாக் அதிரடியாக ஆடி 165 ரன்களைக் குவித்து ஓய்ந்தார். பின்னர் வந்தவர்களில், சச்சின் அபாரமாக ஆடி 106 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

இதையடுத்து வி.வி.எஸ்.லட்சுமண், டோணி வசம் ரன் குவிப்பைத் தொடரும் பணி வந்து சேர்ந்தது. இருவரும் அதை செம்மையாக செய்து ஆளுக்கு ஒரு சதம் போட்டனர்.

டோணியை விட லட்சுமண் மிக நிதானமாக ஆடினார். 260 பந்துகளில் 143 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதேசமயம் டோணி, 187 பந்துகளைச் சந்தித்து 132 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 643 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக டோணி அறிவித்தார்.

இதையடுத்து தென் ஆப்பிரிக்கா தனது இன்னிங்ஸை தொடங்கியது. ஸ்மித் 5 ரன்களுடனும், பீட்டர்சன் ஒரு ரன்னும் எடுத்திருந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இந்தியாவை விட தென் ஆப்பிரிக்கா 341 ரன்கள் பின் தங்கியுள்ளது