குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

கல்வியமைச்சே!! கல்லூரிகளே!! தமிழைக் காப்பாற்றுவீர்களா?

எங்கள் வாழ்வும் வளமும் மங்காத தமிழ் என்று முழங்கு சங்கே ! என்று பாடிய எங்கள் புரட்சிக்கவிஞனின் பிள்ளைகள் நாங்கள்.நெற்றிக்கண்ணைத்திறப்பினும் குற்றம் குற்றமே ! என்று சொன்னவன் எங்கள் முப்பாட்டன் . ஆத்திசூடியும் கொன்றைவேந்தனும் பாடியவள் எங்கள் ஔவைப்பாட்டி உலகம் போற்றும் பொதுமறையாம் திருக்குறளை பாடிவிட்டு கன்னியாகுமாரிகடற்கரையில் தலைநிமிர்ந்து நிற்பவன் எங்கள் பாட்டனார் வள்ளுவனார் .
இப்படிப்பட்ட பரம்பரையில் வந்த தமிழர்களாகிய நாங்கள் இன்று எத்தனையோ இழப்புகளுக்கு மத்தியிலும் தமிழர்கள் என்ற தனித்துவத்தை இழந்துவிடாது
வழ்ந்துகொண்டிருக்கின்றோம் . உலகத்தில் நாம் தனித்துவம் மிக்க தமிழ்மொழியினை தாய்மொழியாய் பேசுவதால்தான் நாம் தமிழர்கள் என்று எம்மை அடையாளப்படுத்திக்கொள்கின்றோம் . ஆனால் நாளைய சந்ததிகள் நாம் தமிழர்கள் என்ற தனித்துவத்தினை இழந்தவர்களாய் மாறிவிடுவார்களா ?
என்ற அச்சம் தமிழை நேசிக்கும் எத்தனையோ அறிஞர்கள் மனதிலே ஒரு கவலையினையும் ஆதங்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளது .
இதற்கான காரணம் சமத்துவம் சமநீதி அகிம்சை என்றெல்லாம் தங்களை அடையாளமிட்டுக்கொள்ளும் எத்தனையோ நாடுகள் ஈழத்தமிழர்களுக்கு
ஒரு மாபெரும் துரோகத்தினை இழைத்துவிட்டு இன்று தமது ஆதங்கத்தினையும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறனர் . மாங்கனித்தீவுக்குள் தமிழர்களை
மந்தைகளாகநினைத்து சிங்களப்பேரினவாதம் ஒதுக்கித்தள்ளியபோது ஏற்பட்ட எதிர்வலைகளால் சிங்களமேலாதிக்கம் பயங்கரவாதிகளாய் தமிழர்களை
சித்தரித்து கொலைவெறியாட்டம் போட்டு உலகத்தின் ஒட்டுமொத்த சக்திகளையும் ஒன்றாய் இனைத்து முள்ளிவாய்காலை இரத்தவாய்காலாக்கி அதிலே
புத்தனை குளிப்பாட்டி கொண்டாட்டம் போட்டு இன்று ஐந்து ஆண்டுகள் ஆகின்றது .
யுத்தம் முடிந்து தமிழர்களின் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு ஒட்டுமொத்த இலங்கைத்தீவும் சிங்கள ஆட்சியாளர்முற்றுகைக்குள் .
ஆனால் இன்றும் தமிழர்கள்மீதான இன அழிப்பு தொடர்ந்துகொண்டே இருப்பதை அன்மித்த நாட்கள் நடைபெற்றுவரும் நிகள்வுகள் நினைவுபடுத்தும் .
ஒருவன் ஆங்கிலம் பேசினால் அவன் ஆங்கிலேயன் . பிரஞ்சு பேசினால் அவன் பிரஞ்சுக்காறன் . சிங்களம் பேசினால் சிங்களவன் அரபு பேசினால் அவன்
அரேபியன் . என்று தமது மொழியினை வைத்தே தமது இனத்துக்கான அடையாளத்தை உலகத்தில் அதிகமான இனத்தவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்
அதேபோல தமிழ் பேசுவதினால் தான் இன்று நாம் தமிழர்கள் . தமிழ் என்பது ஒரு தனித்துவமான மொழி இதைப்பேசும் தமிழர்கள் கலையிலும்
கலாசாரத்திலும் கல்வியிலும் சிறப்பான தன்மையினையும் தனித்துவத்தினையும் கொண்டவர்கள் தமிழ் என்ற மொழியோடு தனித்துவம்மிக்க ஒரு கலாசாரமும்
பண்பாடும் உள்ளது என்பதை உலகமும் இலங்கையின் ஆட்சிபீடத்தில் இருந்த அத்தனை ஆட்சியாளர்களும் அறிந்த ஒன்று .
இலங்கைத்தீவில் மேலைத்தேய ஆட்சியாளர்களின் காலத்திலும் சரி பிருத்தானியாவெளியேறியதன் பிற்படும் சரி தமிழர்கள் கல்வி கலை கலாச்சாரம் அரசியல்
போராற்றல் என்று அத்தனை துறையிலும் சிறந்து விளங்கியமை சிங்கள மேலாதிக்கத்தை எரிச்சலூட்டிக்கொண்டே இருந்தது நிதர்சனம் 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களசட்டத்தினை அமுல்படுத்தி தனது சினத்தினை சிறிது குறைத்துக்கொண்ட சிங்களப்பேரினவாதம் தொடர்ந்து செய்த படுகொலைகள் எத்தனையோ ஆனால்
இன்று தமிழர்கள்மீது நேரடியான தாக்குதலை எந்தக்கோனத்திலிருந்தும் நடாத்தமுடியாதவர்களாய் பேரினவாதிகளும் போர்வெறியர்களும் சர்வதேசத்தின்
கண்காணிப்புக்குள்ளே அகப்பட்டுகொன்டுள்ளது ஆனாலும் அதன் சீற்றமும் இரத்ததாகமும் அடங்கவில்லை
தமிழர்களை அழிக்கமுடியாத பேரினவாதம் தமிழினத்தின் ஆணிவேரான தமிழ் மொழியினை அழித்து நாளைய சந்ததியினரை தமிழர்கள் என்ற அடையாளமற்றவர்களாய்
மாற்றிவிடுவதற்கான எத்தனையோ இழிவான செயல்களை செய்துகொண்டிருக்கின்றது இதனை எத்தனையோ செயற்பாடுகளினூடாக வெளிசமிட்டுக்காட்டிக்கொண்டிருக்கின்றது .
பாடசாலை நூல்களில் எழுத்துப்பிழைகள்
தமிழ் எழுத்துப்பிழைகளுடன் எத்தனையோ பெயர்ப்பலகைகள் ஊர்களின் பெயர்கள் என்று தொடங்கி அடுத்தகட்டமாக நாளேடுகளில் தமிழ்
எழுத்துப்பிழைகளை நாளாந்தம் பிரசுரித்து இறுதியில் பாடசாலை மாணவர்களுக்கான கல்வி நூல்களையும் எழுத்துப்பிழைகளுடன் வினயோகித்து ஒரு
மாபெரும் மொழிக்கொலையினை மேற்கொண்டு வருகின்றது இன்றய ஆட்சிபீடம் . ஒரு எழுத்து இரண்டு எழுத்துக்கள் என்பது சாதாரன விடயம் என்று
சிலர் நினைக்கலாம் ஆனால் அதுவே நாளை மாபெரும் தாக்கத்தினை எற்படுத்திவிடும்
சாதரனமாக மாணவர்கள் மொழியையும் மொழியாற்றலையும் கல்வியினையும் கலாசாரத்தினையும் இன்னும் எத்தனையோ பழக்கவளக்கங்களையும் பாடசாலைகளில் இருந்தே கற்றுக்கொள்கின்றனர் . பாடசாலைகள் என்பது நாட்டின் ஒவ்வெரு தூண்களையும் செதுக்கி நாளைய தேசத்தை தாங்கி நிற்கும் வல்லமையினை கொடுக்கின்றது
எனவே பாடசாலை நூல்களில் இவ்வாறன எழுத்துப்பிழைகள் என்பது மன்னிக்கமுடியாத குற்றம் என்றே கூறலாம் காரணம் தம்மிடத்தே எழும் சந்தேகங்களையும்
தமக்குத்தெரியாதவற்றினையும் மாணவர்கள் பாடசாலை நூல்களினூடாகத்தான் அறிந்து கொள்கின்றனர் இவ்வாறான கல்வி நூல்களில் எழுத்துப்பிழை என்பது
தமிழ் மாணவர்களது மொழி அறிவினை எவளவு பாதிக்கும் என்பது சாதாரனவிடயமாக எடுத்துக்கொள்ள முடியாது
ஆதாரம் தமிழே ! வெல்லும் என்ற கதையில் தமிழை கொன்றது யார் ?
தரம் எட்டு தமிழ்மொழியும் இலக்கியமும் என்ற நூலில் தமிழே வெல்லும் என்ற ஒரு வரலாற்று கதை அதில் ‘ போரிழைப்பு பெருழிழைப்பு ‘ என்று தவறாக உள்ளது
எத்தனையோ தமிழ் ஆசிரியர்கள் கல்விமான்கள் என்று இருந்தும் யாருமே இவ்வாறன பிளைகளை கண்டுகொள்ளாமல் போனது வேதனையான விடயம்
கற்பிற்கும்போது எத்தனை ஆசிரியர்கள் இதைத்தவறு என்று சொல்லியிருப்பார்கள் பல்களைக்கழகம் சென்று பட்டப்படிப்பினை மேற்கொண்டு தமிழ் ஆசிரியர்களாய் கடமையாற்றும் யாருக்குமே இது தென்படாமல் போனது வேதனையான விடயம் உன்மையில் இன்று கற்பித்தலை ஒரு தொழிலாக நினைக்காது தமது கடமையாக நினைத்திருந்தால் இவ்வாறன தவறுகளுடன் வினயோகிக்கப்படும் நூல்களை தமது மாணவர்கள் கையிலே எந்த ஒரு ஆசிரியரும் கொடுத்திருக்க மாட்டார்கள்
இவ்வாறான பிழைகளுடன் படசாலைநூல்கள் வெளியிடும்போது அதனை புறக்கணித்து உடனடியாக சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தி அதை சீர்
செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பார்கள் ஏன் அவ்வாறு செய்யவில்லை
பாடசாலைக்கான கல்விநூல்கள் கல்வித்தினைக்களத்தினால் வெளியிடும்போது எத்தனை அரச பணியாளர்கள் அதனை
ஆய்வுசெய்பவர்கள் இவ்வாறன பிழைகள் யார் கண்களுக்கும் தென்படாமல்போனது எவ்வாறு ? அல்லது வேண்டுமென்றே இவற்றை கண்டுகொள்ளவில்லையா ? என்பது நிச்சயமாக சந்தேகமான விடயம் . காரணம் எத்தனையோ அதிகாரிகள் கல்வித்தினைக்களத்தில் கடமையாற்றுகின்றனர் அத்தனைபேருக்கும் மாதம் சம்பளம் வருடம் தீபாவளிக்கு விசேடகொடுப்பனவுகள் எல்லாம் வளங்கப்பட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் இவர்களுக்கு வளங்கப்படும் சம்பளப்பணத்தினை எங்கள்வீட்டில்
இருந்து நாங்கள் எதற்காக கொடுக்கின்றோம் எங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியினை கொடுப்பார்கள் என்றுதானே ஆனால் இவர்களே தவறுகளை
விடுவார்களேயானால் எதிர்காலம் எவ்வாறு அமைந்துவிடும் ஒருவன் ஒரு பிழையினை செய்யும்போது அது பிழை என்று இன்னொருவன்
எடுத்துக்கூறமுடியும் ஆனால் ஒரு சந்ததியினையே பிழையான பாதைக்குள் தள்ளிவிட்டால் நாளை அதை சீர்செய்வதற்கு இயலாமல்ப்போய்விடும்
அடுத்து தரம் ஒன்று மாணவர்களுக்கான அட்டைப்படத்துடன் கூடிய எழுத்துக்கள் முயல் என்பது மூயல் ” பூனை என்பது புனை பாய்க்கப்பல் என்பது பாய்க் அப்பல் இன்னும் எத்தனையோ எழுத்துப்பிழைகள் இதை எழுத்துப்பிழைகள் என்பதைவிட எழுத்துக்கொலைகள் என்றே கூறலாம்
தமிழ் ஆசிரியர்களே ! தமிழை காப்பாற்றுங்கள்
உன்மையில் இந்த கட்டுரையினை எழுதும் ஒரு தமிழனாகியநான் அதி சிறந்த அறிவாளி அல்ல . ஆனால் தவறுதலாக இரண்டு பாடசாலை நூல்களை
படிக்கும்போது எனது கண்களிலே பட்ட தவறுகள் இந்த தவறுகள் நாளேடுகளில் ஏற்பட்டிருந்தால் அதை கண்டுகொள்ளாமல் போயிருப்போன் ஆனால்
நாளையசரித்திரங்களாய் மாறும் எங்கள் மாணவசமுதாயத்தின் அறிவுக்கு ஆகாரமாகும் கல்விநூல்களிலே கண்டபோது மனம் பொறுக்கவில்லை
எதிரில்நிற்பவன் சிவன் என்று தெரிந்தும் நெற்றிக்கண்ணைத்திறந்தால் என்ன குற்றம் குற்றமே என்று சொன்ன நக்கீரனது பரம்பரையல்லவா நாங்கள்
உங்கள் அறிவுக்கண்களைத்திறவுங்கள் பாடசாலைநூல்கள் வினயோகிக்கப்படும்போது அதை மாணவர்கள்
கைகளிலே கொடுக்கமுன்னே அதை நன்கு சரிபார்த்து அதன் பின்னர் அதை மாணவர்களிடம் கொடுங்கள் எனது கண்களில் பட்ட இரண்டு நூல்களுமே
எழுத்துப்பிழைகளுடன் பிரசுரிக்கப்படும்போது இன்னும் எத்தனைநூல்களில் இந்த தவறுகள் இருக்குமென்பதை ஆராய்ந்து பாருங்கள்
தரம் ஆறாம் வகுப்புமாணவன் ஒருவரின் வினாத்தாளிலே ; சூறாவழி புயல் போன்ற அனர்த்தங்கள் நிகளும்போது எங்களை எவ்வாறு
பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்று ஒருகேழ்வி அதற்கான பதிலாக அந்த மாணவன் எழுதியது இதுதான் / முதலில் அடையாள அட்டையினை எடுக்கவேண்டும் நிவாரணகாட்எடுக்கவேண்டும் வங்கருக்குள் அல்லது பெரிய மரத்துக்கடியில் ஒழிந்து கொள்ளவேண்டும் மிக மிக வேதனையான பதில் அவனை அழைத்தபோது
இறுதியுத்தம்வரை முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்டு வந்ததாக கூறினான் . கேட்கப்பட்ட கேழ்விக்கு எதிர்மாறான பதிலை அவன் எழுதியிருந்தபோதும் மனசாட்சி
அதற்கு பிழை என்று சொல்வதற்கு தயங்கினாலும் வேதனையுடன் அதற்கு பிழை என்று அடையாளம் இட்டேன் . இவ்வாறு ஒரு ஆசிரியர் மிகவும் அன்மையில்
வேதனையுடன் இதை கூறினார் உன்மையிலே இந்த
கொடியபோரின் வடுக்களை இன்னும் அந்த பிஞ்சு உள்ளங்கள் மறக்கவில்லை மறக்கவும் மாட்டார்கள்
தரம் ஆறாம் ஆண்டிற்கான நூலில் உறவுமுறைகள் அக்கா அண்ணா அப்பா அம்மா அண்ணா தம்பி மாமா மாமி பாட்டன் பாட்டா
தமிழிலே இல்லாத உறவுமுறைகள் எல்லாம் மாணவர்களுக்கு போதிக்கப்படவேண்டிய கட்டாயம் என்ன ?
ஆத்திசூடி புதிய ஆத்திசூடியானது எப்போது யாரால்
ஔவைப்பாட்டியார் ஆயிரம் வருடம்முனே சொன்ன ஆத்திசூடி ஓலைச்சுவடுகளில் அழிந்துவிடாது தமிழன்வீட்டுப்பிள்ளைகளை சென்றடைந்து அச்சுகளிலும்
கணணிகளிலும் ஒளிவீசிக்கொண்டிருக்கும்போது புதிய ஆத்திசூடி என்று நெருப்புத்தமிழன் பாரதியாரின் அச்சம் தவிர் என்ற பாடல் வரிகளை எமது
பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கும்படி சொன்னது யார் ? அதன் நோக்கம் என்ன ஆயிரம் வருடம் கடந்த போதும் அறம் செய்ய விரும்பு ஆறுவது சினம் என்று
சொன்ன ஔவையாரின் ஆத்திசூடியினை பழமைப்படுத்த நினைப்பது ஏன் இவ்வாறு தொடர்ந்து சென்றால் ஆத்திசூடியினை எழுதியவர் யார் என்று நாம்
கேழ்வி கேட்டால் பாரதியார் என்றுதான் பதில்வரும் நாளை அதுவே நிஜமாக்கப்படும் இன்று நினல்களாக இருக்கும் தவறுகளை நாம் திருத்தி
அமைக்காவிட்டால் நாளை இன்ணொரு சந்ததி ஆத்திசூடியை மகிந்ததேரர் எழுததினார் என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை
கல்வித்திணைக்களமே ! தமிழ்மாணவர்களை மந்தப்படுத்த நிணைக்கின்றாயா ? ஆசிரியர்களே!கல்வித்துறைசார்ந்தவர்களே!
பதில்சொல்லுங்கள் நாளைய சமுதாயம் தமிழை மறந்து தன்மானத்தை இழந்து தமிழர்கள் என்ற அடையாழத்தை இழந்து வாழவேண்டுமா ?
அன்று தமிழ் எழுத்துக்களுடன் இருந்த வடமொழி எழுத்துக்களை களையெடுத்தோம் ஆனால் இன்று தமிழ் எழுத்துக்களை அறுவடைசெய்வதற்கு தமிழ்மொழி
பழமையாகிப்போனதா ? என்றுமே தமிழுக்கு பதினெட்டுவயது அவள் பருவமைங்கை என்று கவிஞர்கள் வர்னிப்பார்கள் ஆனால் ஆத்திசூடி புதிய ஆத்திசூடி
என்று மாறியது எப்போது ? அதை பாடியவர் யார் ? சம்மந்தப்பட்டவர்களே ! கல்வித்துறைசார்ந்தவர்களே பதில்கூற முடியுமா ?
மூடநம்பிக்கைக்குள் தள்ளப்படும் மாணவர்கள்
காகம் ஏன் கறூப்பு ? யாரால் இதற்கு பதில் சொல்லமுடியும் தமிழர் பண்பட்டிலே தமிழர்வரலாற்றிலே வியக்கத்தக்க எத்தனையோ விடயங்கள் வரலாற்றிலே
உள்ளன அவற்றை எல்லாம் பாடசாலைநூல்களிலே அச்சிட்டு அதை கற்பித்து மாணவர்களை நல்லபுத்தியீவிகளாக்கப்படவேண்டிய கல்லூரிகளிலே
மூடநம்பிக்கைகளான கதைகளும் புனைகதைகளும் போதிக்கப்படவேண்டிய கட்டாயம் என்ன காகம் ஏன் கறுப்பானது நாய் ஏன் சண்டை போடுகின்றது
இன்னும் எத்தனையோ அறிவியலுக்கு ஒவ்வாத விடயங்களை பாடப்புத்தகத்தில் பாடங்களாக்கி அதற்கு நேரத்தை வீணடித்து ஒரு புத்தியை மந்தப்படுத்தும்
செயற்பாட்டினை கல்வித்திணைக்களம் தமிழ் மாணவர்கள் மீது திணித்துள்ளது மூடநம்பிக்கைகளுக்கும் புனைகதைகளுக்கும் முற்றுப்புள்ளிவைக்கவேண்டிய கல்லூரிகளிலே அதை கற்பித்தல் என்பது மிகவும் மோசமான எதிர்கலாத்தை உருவாக்கும் இவ்வாறன கதைகளை பிரசுரிப்பதற்கு செலவிடப்படும் பக்கங்களிலே ஏன் நல்ல அறிவான வரலாற்றுச்சொய்திகளை பிரசுரிக்கமுடியாது ?
கவர்ச்சி உடைகளாகும் கல்லூரி சீருடைகள்
ஒழுக்கத்தினையும் கலாச்சாரத்தினையும் மாணவர்கள் கல்லூரிகளில் இருந்துதான் கற்றுக்கொள்கின்றார்கள் நடை உடை பாவனை என்று அத்தனையும் அங்கே
கற்பிக்கப்படுகின்றது ஆனால் இன்று பாடசைலைசீருடைகளையும் கவர்ச்சி உடைபோன்ற சாயலிலே மாணவர்கள் அணியத்தொடங்கியுள்ளனர் அதை கல்லூரி
நிர்வாகமோ அல்லது அதிபர் ஆசிரியர்களோ ஏன் கண்டுகொள்வதில்லை இன்று அதிகமான பெண்பிள்ளைகள் முழங்கால் வரைக்கும் வெள்ளைச்சட்டையினை
அணிந்து செல்வதை காணக்கூடியதாக உள்ளது இது தேவையற்றவிடயம் என்று சிலர் கருதலாம் ஆனால் முன்னர் கல்லூரிகளில் மாணவர்கள் உடற்பயிற்சி
முடிந்து வகுப்பறைகளுக்கு செல்லும்போது அல்லது பாடசாலை பிரதான வாசலுகுள் நுளையும்போது குட்டையான சட்டைஅணிந்து யாரும் மாணவர்கள் வருகைதந்தால் ஆசிரியர்கள் கண்டிப்பார்கள் ஆனால் இன்று அதிகமான பெண்பிள்ளைகள் முழங்களைவிட சற்று உயர்ந்த குட்டையான சட்டையினையே அணிந்து செல்கின்றனர் இது வேதனையான விடயம் எமது கலாச்சாரத்திற்கு ஒவ்வாத விடயம்
கல்லூரிகளிலே ஒழுக்கசீலர்களாகவிளங்கும் மாணவர்களே இவாறு ஆடைகள் அணியும்போது கல்லூரிகளை விட்டு வெளியேறியபிற்பாடு அவர்களின் ஆடைகுறைப்பு
இன்னும் சற்று முன்னேற்றமைடைந்து காணப்படும் எனவே கலாச்சாரதினை கற்பிக்கவேண்டிய கல்ல்லூரிகள் இவாறன செயற்பாடுகளுக்கு அனுமதியளிக்ககூடாது
அடுத்து வடக்கு கிழக்கை பொறுத்தவரை அரசபாடசாலைகள் அதிகமானது தமிழ்ப்பாடசலைகளே சில ஆனால் பாடசாலையின் பிரதான நுளைவாசலில் தமிழிலே
படாசாலையின் பெயர்கள் பொறிக்கப்படுவதில்லை ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது இது கண்டிக்கப்படவேண்டிய விடயம் காரணம் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை
அதிகமாக தமிழ்மாணவர்கள் உள்ளனர் அரசபாடசாலைகள் அதிகமானது தமிழ்ப்பாடசாலைகள் ஆனால் தமிழ்மொழிக்குரிய முகியத்துவத்தினை கொடுக்காது சில
கல்லூரியின் அதிபர் அதன் நிர்வாகத்தினர் ஆங்கிலத்தில் கல்லூரியின் பெயர்களை எழுதிவிடுகின்றனர் அங்கிலம் பொது மொழி என்று இதற்கு இவர்கள் காரணம்
கூறுகின்றனர் மொழியாற்றலையும் இன உணர்வையும் மொழிக்குரிய முக்கியத்துவத்தினையும் கற்றுக்கொடுக்கவேண்டிய கல்லூரிகளிலே தமிழ்மொழி புறக்கணிக்க
ப்பட்டால் அங்கே கல்விகற்கும் மாணவர்கள் நிலை எவ்வாறிருக்கும் உதாரணமாக வலிகாமம் மேற்கில் சுழிபுரம் விக்கோரியாக்கல்லூரி இது முற்றுமுழுதாக
தமிழ்ப்பாடசாலை இங்கே எங்காவது ஒரு இடத்தில் தமிழ் எழுத்துக்கள் உள்ளனவா மிக மிக வேதனையான விடயம் எங்கேயும் அங்கே தமிழ்ப்பெயர்கள்
இல்லை ஏன் நடராஜப்பெருமான் எழுந்தரிளியுள்ள பிரதான மண்டபத்திலிம்கூட அங்கே தமிழ் எழுத்துக்கள் எதுவுமே இல்லை சம்மந்தப்பட்டவர்கள்
இதை கவனத்திற்கொள்ளவேண்டும்
தமிழ் கல்லூரிகள் எல்லாம் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் தமிழர் கலாசாரத்திற்கும் பண்பாட்டுப்பெருமைய்யும் ஒப்பான மாணவர்களை
வளர்த்து எடுக்கவேண்டும் சிறந்த கல்விகளைபுகட்டி நாளைய தலைவர்களை உருவாக்கித்தரவேண்டும் சம்மந்தப்பட்டவர்களே ! இவற்கு உடனடியக ஒரு
நடவடிக்கையினை எடுங்கள் எங்கள் மொழியையும் எமது இனத்தின் தனித்துவமான தன்மையினையும் காப்பாற்றும் பொறுப்பு உங்களுடயதே
புத்தியீவிகள் கல்விமான்கள் யாரையும் நான் விமர்சனம் செய்யவில்லை தவறுகள் என்மீதிருந்தால் மன்னிக்கவும்