குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

என்றுதணியும் எங்கள் சுதந்திர தாகம்!

விந்தையும் வினோதமும் நிறைந்த இன்றய உலகிலே நீதி தியாயம் பாவம் பழி என்பதெல்லாம் வல்லமைபொருந்தியவர்களுக்கும் அதிகாரவர்க்கத்தினருக்கும் சாதகமாக மாற்றியமைக்கப்பட்டுவிட்டது. புராணங்கள் இதிகாசங்கள் சொல்லும் தத்துவங்களை எல்லாம் சுயநலவாத சாத்தான்கள் சவக்குழிகளுக்குள் மூடிவிட்டு சத்தியசீலர்களாகவும் தர்மத்தின் தலைவர்களாகவும் தமக்கு முகமூடி அணிவித்துக்கொண்டு நீதிக்காகவும் நியாயத்திற்காகவும் போராடும் ஏழை எளிய மக்களை மனித மந்தைகளாக்கி ஏய்த்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கின்றனர் இனவாதம் மதவாதம் என்ற கொடிய அரக்கர்களினால் ஆக்கிரமிக்கப்பட்ட எத்தனையோ அப்பாவி மக்கள் நாளுக்குநாள் நிமிடத்துக்கு நிமிடம் சித்திரவதைப்படுத்தப்பட்டுக்கொண்டும் படுகொலைசெய்யப்பட்டுக்கொண்டும் இருக்கின்றனர்.
அவர்களுக்காக மரணக்குழிகளில் இருந்து எழுந்து வந்து அவர்கள் குரல்குடுத்தால் மட்டுமேயன்றி அவர்களுக்காக உன்மயான கரிசனையோடு குரல்கொடுக்க தயாராக
எவருமே இல்லை காரணம் இது  சுயநலவாத உலகம் மரணித்துப்போன பிள்ளையினை மரத்தில் கட்டும்படி சொல்லும் கழுகுகளும் புதைத்துவிடும்படி சொல்லும் நரிகளும்தான் இங்கே அதிகம் இதனை ஈழத்தமிழர்கள் நன்றாக அனுபவரீதியாக உணர்துள்ளனர்.
முள்ளிவாக்கலிலே பல்லாயிம் மக்கள் படுகொலைசெய்யப்பட்டபேது தமது சுயநலத்திற்க்காக அங்கே நடந்துகொண்டிருந்த மனிதப்படுகொலையினை மனித மந்தைகளாக வேடிக்கைபார்த்த அத்தனை மனிதர்களும் சுயநலவாத பொம்மைகள் என்பதுதான் உன்மை இலங்கைத்தீவினை தனிச்சிங்களத்தீவாக மாற்றுவதற்கு எத்தனையோ இன்னல்களை சிங்களதேசமும் அதன் ஆட்சியாளர்களும் தமிழ்மக்களுக்கு செய்தனர் ஒன்றா இரண்டா எத்தனை படுகொலைகள் எதையுமே மறந்துவிடமுடியாத அளவிற்கு வலிகளை சிங்களப்பேரினவாதம் தமிழ்மக்களுக்கு கொடுத்துளளது சிங்களப்பேரினவாதம் தமிழ்மக்கள் மீது எத்தனையோ
வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்டாலும் அதையெல்லாம் தகர்த்து ஒரு மரபுவழி இராணுவமாக ஒரு வல்லரசுக்கு இணையாக போராடும் அளவு சக்த்திகொண்ட இராணுவமாக விஸ்வரூபம் எடுத்துக்கொண்டது தமிழினம் எத்தனை விலைகொடுத்தும் தமது விடுதலையினை பெற்றுவிடவேண்டும்.
என்று தளராதுபோராடிய ஒரு சமூகத்தினை பயங்கரவாதிகள் என்று சிங்களம் பெயர்சூட்ட அதனை உலகநாடுகள எல்லாம் ஆமாம் என்று தலையசைத்து சிங்களப் பேரினவாதத்திற்கு துணைபோனது இனவிடுதலைக்காக போராடிய ஓரே காரணத்திற்காக எத்தனையோ உயிர்கள் பறிக்கப்பட்டது தமிழிச்சியின் வயிற்றில் பிறந்த ஒரே காரணத்திற்காக எத்தனையோ பிஞ்சுகள் படுகொலைசெய்யப்பட்டது இதையெல்லாம் வெறும் பயநரவாதம் என்ற வார்த்தைக்குள் மறைத்துக்கொண்டு சிங்கள இனவாத அரசு ஒருமாபெரும் இன அழிப்பினை முள்ளிவாய்க்காலில் செய்துமுடித்தது.
ஆனாலும் இனவாதமும் மதவாதமும் இன்னமும் முடிவுக்கு வரவில்லை 2009 மே மாதத்துடன் தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனித்துப்போனது. ஆனாலும் இன்னமும் இலங்கை இராணுவம் தமிழர்களின் தாயகத்தில் நிலைகொண்டுள்ளதன் நோக்கம் என்ன? போர்முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும்
இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட குடியிருப்புக்கள் விவசாயநிலங்கள் இன்னமும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவிலை இன்னமும் மேலும்  நில அபகரிப்பும் நில ஆக்கிரமிப்பும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது இது இன்னும் நீடிக்குமா நிறைவுக்கு வருமா என்பது கேழ்விக்குறியாகவே உள்ளது
ஆனால் சிங்கள அரசும் அதன் அடிவருடிகளும் அபிவிருத்தி என்ற மாயவலையினை வீசி அதற்குள் சர்வதேசத்தினை வீழ்த்திக்கொண்டு மறுபுறத்தில் தனக்கே உரித்தான இனவெறியாட்டத்தினை நவீனமயப்படுத்தி புதிய புதிய யுத்திகளை கையாண்டு தமிழர் தாயகமெங்கும் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது. அதனை எல்லாம் எதிர்த்து தமிழர்தரப்புக்கள் என்னதான் தீர்மானங்கள் போட்டாலும் அதைப்பற்றியெல்லாம் கடுகளவேனும் சிந்திக்காது சிங்களமேலாதிக்கம்  ஈழமண்ணை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது இதனையெல்லாம் தாண்டி தமிழினம் தமது இருப்பினை எவ்வாறு தக்கவைத்துக்கொள்ளப்போகின்றது விடுதலை என்ற சொல்லுக்கு விதிவிலக்காணவர்களா தமிழர்கள்.
வரும்புயர நீர் உயரும் நீருயர நெல் உயரும் நெல்லுயர குடியுயரும் குடியுயர கோண் உயரும் ஒரு அரசு செல்வத்தாலும் பொருளாதாரத்தாலும் உயர்ந்து. நிற்கவேண்டுமாயின் அங்கே வரம்புகளாக வாழுகின்ற சாதாரண ஏழைமக்களின் வாழ்க்கை உயர்ந்த நிலையினை அடையவேண்டும் ஆனால் இலங்கையில்
சிங்கள அரசின் ஆட்சியிலே தாழ்த்தப்பட்ட ஏழை எழியமக்களின் வாழ்கை இன்னும் இன்னும் பிந்தள்ளியநிலையிலேயே உள்ளது ஆனால மகிந்த அரசும் அதன் பரிவாரங்களும் போலியான பரப்புரைகளையும் சில மாயஜாலங்களையும் காட்டி சர்வதேசத்தினையும் சிங்கள மக்களையும் ஏமாற்றி தனது ஆட்சியினை தக்கவைத்துக்கொண்டிருக்கின்றது.
ஆனால் இந்த அபிவிருத்தி என்ற மாயையினைக்காட்டி தமிழினத்திற்கு தான் செய்த அநீதிகளையும் படுகொலைகளையும் மறைத்துவிடலாம் என்றும் சர்வதேச போர்க்குற்ற விசாரனையில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம் என்று  மகிந்த அரசும் அதன் பரிவாரங்களும் நம்பிக்கொண்டிருக்கின்றது எனவேதான் வீதிபோட்டோம் வீடுகட்டித்தந்தோம் அடுக்குமாடிகளை கட்டினோம் புகைவண்டி தந்தோம் அதைச்செய்தோம் இதைச்செய்தோம் என்று பறையடித்துக்கொண்டிருக்கின்றார் சிங்கள  தேசத்தின் ஜனாதிபதி போர்குற்றவாளி மகிந்தர் ஆனால் இதுதான் தமிழ்மக்களின் தேவையா அவர்கள் இதற்காகத்தான் இத்தனை தியாகாங்களை செய்து பல  இழப்புக்களை சந்தித்தார்காளா ?? இதனை ஆராய்து பார்க்க சர்வதேசமோ அல்லது அடிமட்ட சிங்கள மக்களோ தயாராக இல்லை  வேதனைக்குமேல்  வேதனைக்குமேல் வேதனைக்குமேல் வேதனையும் சோதனைக்குமேல் சோதானைகளையும் தமிழர்கள் சந்தித்தவண்ணமே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
கடந்தசில தினங்களுக்குமுன் போர்க்குற்றவாளி மகிந்தர் வடக்கிற்கு வரப்போகின்றார் என்று யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் ஒரே ஆரவாரமாகவும் ஆர்பரிப்புமாக காணப்பட்டது தமிழர்களின் இரத்தத்தில் குழித்த மகிந்தர் வெள்ளைநிற ஆடையிலே உத்தமனாக ஒரு தர்மவானாக வந்தார் ஒலிபெருக்கிகள் எங்கும் ஒரே வாழ்த்துக்களை சொல்லி வாழ்திக்கொண்டிருந்தது ஊடகங்கள் எல்லாம் போட்டிப்போட்டபடி மகிந்தரின் வரவினையும் அவரின் நிகள்ச்சிகளையும் ஒலிபரப்பிக்கொண்டிருந்தன பலமக்கள் வரவேற்றார்கள் வாழ்த்துபாடினார்கள்  ஆனால் உன்மையில் போர்க்குற்றவாளி மகிந்தரின் வருகையினை எவ்வாறு தமிழ் மக்கள் கருதுகின்றார்கள் அவர்களின் மனநிலை எப்படியிருந்தது என்பதை சிங்கள மக்களோ சர்வதேசமோ அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. காரணம் மிருகக்காட்சி
சாலைக்குள்ளே அடைக்கப்பட்ட மிருகங்களாகத்தான் சிங்கள அரசு தமிழ்மக்களை தான் நினைத்த பாட்டிற்கு ஆட்டிவைத்துக்கொண்டிருக்கின்றது எவளவு பலம்  இருந்தும் யானை தன் பாகனின் கையில் இருக்கும் ஈட்டிக்கு பயந்து அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் இசைந்து குடுக்கின்றதோ அதேபோலத்தான் சிங்கள
இனவெறி இரானுவத்தின் ஆயுதங்களுக்கு பயந்து நிராயுதபாணிகளாக தமிழ்மக்கள் அங்கே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதுதான் உன்மை.
எமனை வரவேற்க எவரேனும் விரும்புவார்களா??
எம் இன அழிப்பினை செய்த சிங்களதேசத்தின் தலைவன் போர்க்குற்றவாழி கொலைவெறியன் இனவெறியன் எம் தேசத்திற்கு வரும்போது அவனை வரவேற்க எப்படி எங்களால் முடியும் தன் பிள்ளைகளைக்கொன்றவனை வரவேற்க எந்த தாயாவது விரும்புவாளா  எங்கள் மண்மீது எந்த ஒரு சிங்களவன் கால்கள்
பட்டாலும் அது எங்கள் நெஞ்சிலே மிதிப்பதைப்போல வலியினைக்கொடுக்கும் நாங்கள் என்ன பாவம் செய்தோம் எங்கள் தாயகத்தை அபகரித்த கள்வர்களையெல்லாம் வரவேற்கவேண்டியவர்களாக ஆகிவிட்டோம் எவளவு வலிகள் எவளவு கோபம் அடிவயிற்றிலே அக்கினிக்குழம்பாக கொதித்துக் கொண்டிருக்கின்றது  அதையெல்லாம் அடக்கிவைத்துக்கொண்டு கொலைகாறக்கூட்டத்தை குனிந்து கும்பிட்டு வணக்கம் சொல்லி வரவேற்றோம் எமக்கு வேண்டாதவன் எம் வீடுதேடிவரும் போது அதைப்புறக்க்கணித்து எமது வெறுப்பினை காட்டுவதற்குக்கூட எங்களால் முடியவில்லையே இது எல்லாம் இன்னும் எத்தனை காலம் நீடிக்கப்போகின்றதோ தெரியவில்லை.
கிளிநொச்சியை பிடித்தோம் முல்லைத்தீவைப்பிடித்தோம் என்று நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்ட சிங்களதேசம் அங்கே நிர்க்கதியான தமிழர்களைப்பற்றி சிறிதளவேனும் சிந்திக்கவில்லை இன்று கிளிநொச்சியிலே வந்து நின்று கொக்கரித்துச்சென்ற மகிந்தர் அந்த மண்ணிலே எத்தனை உயிர்கள் பலியெடுக்கப்பட்டன என்பதைப்பற்றி சிந்திக்கவில்லை எங்கள் உறவுகளைக்கொன்று இரத்த ஆறு ஓடவைத்த மகிந்தருக்கு அதே மண்ணிலே எங்கள் கண்முன்னே சொங்கம்பளம் விரிக்கப்பட்டு வரவேற்ப
ளிக்கப்படுகின்றதே எங்கள் நெஞ்சங்கள் படும் வேதனையினை யார் அறிவார் ஒட்டுண்ணிகளும் தமிழினத்துரோகிகளும் கொடுங்கோலர்களை வரவேற்க வீட்டுக்கு ஒருவரேனும் வரவேண்டும் என்றும் பஸ்வண்டிகளை ஊரூராக அனுப்பிவைத்தனர் எம் பிள்ளைக்கொன்றவனை வரவேற்க அதிகாலை 5 மணிக்கு ஆகாரம் ஏதும் இன்றி புறப்பட்டு ஆட்டுமந்தைகளாக அணிவகுத்துநின்றோம். எமக்காக குரல்கொடுக்க யாரும் இல்லையா என்ற ஏக்கத்துடன் கொடியவன் வரும்போது புன்னகைத்து வரவேற்றோம் மனித இயந்திரங்களாக மாற்றி எங்களை தான் நினைத்த நினைப்புக்கெல்லாம் இயக்கிக்கொண்டிருக்கின்றது சிங்கள வால்லாதிக்க அரசும் அதன்  அடிவருடிகளும் இதிலிருந்து எமக்கு விடுதலை எப்போது?
எங்கள் மண்ணிலே எங்கள் முன் நின்று எங்கள் பிள்ளைகளை எங்கள் அக்கா தம்பியரை பயங்கரவாதிகள் என்றும் எங்களால் தேர்வுசெய்யப்பட்ட வடக்கு  மாகனசபையினை வைக்கோல்ப்பட்டறை நாய் என்றும் நையாண்டிசெய்துகொண்டிருக்கும்போதே பாய்ந்து அந்த கொடியவனின் குரல்வளையினை கடித்து
துப்பிவிடவேண்டும் என்று தேன்றியபோதும் எம் பிள்ளைகளையும் துப்பாக்கிதூக்கிய இரானுவபூதங்களையும் கண்டு சற்று தயக்கம் ஆட்ச்சியும் அதிகாரமும் தன்னிடத்தே இருக்கும் மமதையிலே எங்களை கேலிசெய்து சென்ற மகிந்தர் காலம்வரும்போது அதற்கான பலனை அனுபவிப்பார்.
தமிழினப்படுகொலை செய்த தம்மை வரவேற்க வடமாகணசபை உறுப்பினர்களோ  முதலமைச்சரோ வரவில்லை என்ற ஆத்திரத்தில் அவர்களைகேலி செய்து வைக்கோல்பட்டறை நாய்கள் என்று இழிவுபடுத்தியுள்ளார் .வெட்டியவன் வரும்போது வரவேற்கும் வாழைகளை நாங்கள் தெரிவுசெய்து மாகாணசபைக்கு அனுப்பவில்லை என்பதை மகிந்தர் உணர்ந்துகொள்ளவேண்டும் .
என்னதான் தலைகீழாக நின்று தண்ணீர்குடித்தாலும் வானாத்து நிலாவை கொண்டுவந்தாலும் தமிழ்மக்கள் இந்த சலுகைகளுக்கு விலைபோகமாட்டார்க\ல் என்பதை சிங்களமேலாதிக்கத்தின் செவிட்டில் அறைந்ததப்போல் கடந்த வடமாகணசபை தேர்தலிலே மக்கள் தொளிவுபடுத்தியும்கூட வீடுதருகின்றேன் காணிதருகின்றேன்  மோட்டார்சைக்கிள் தருகின்றேன் என்று கூவிக்கூவி அரசியல் வியாபாரம் செய்துகொண்டிருக்கின்றார் ஏய்பவர்ற்கே கால்ம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் இந்த பாவிகளின் பாதங்கள் பட்ட இடம் எல்லாம் விசச்செடிகள் முழைக்கும் இந்த கயவர்கள் சுவாசித்த காற்றினை சுவாசிக்கும் மரங்கள் எல்லாம் கருகிச்சாம்பலாகும்.
மன்னிக்கமுடியாத மாபெரும் பாவத்தினை செய்துவிட்டு எங்கள் மண்ணிலே காலடிவைத்து இந்த கொடியவன் வருவதை நாங்கள் இன்னும் எத்தனைகாலம் அனுமதிக்கப்போகின்றோம் எங்ககிற்கென்று ஒரு கொள்கை எங்களிற்கொன்று ஒரு அரசு எங்களிற்கொன்று ஒருசட்டம் சத்தியத்தின் வழியிலே உருவாகுவது
எப்போது காலம் முழுதும் அழுது துடிக்கும் எங்களிற்கு கண்ணீரில் இருந்து விடுதலை எப்போது??