குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 15 ம் திகதி புதன் கிழமை .

குடற்புண்களை ஆற்றும் சக்தி இதற்குண்டு :-

வாழைத் தண்டில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தி சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவும். உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து தினமும் அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும். பெண்களுக்கு மாத விலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைம், வெள்ளைப் படுதலையும் குணப்படுத்தும். இரத்த அழத்தத்தைக் குறைக்கும். வயிற்றில் உள்ள கீரி பூச்சிகளை அகற்றும். தோல் நோய்களைக் குணப்படுத்தும். உடலில் நச்சுப் பொருட்கள் கலந்திருந்தால் விரைவில் குணமாக்கும். நீர்ச்சுருக்கம், நீர் எரிச்சல் இவற்றை போக்கும்.பச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும்:-

அருகம்புல் சாறு – இது ரத்ததை சுத்த படுத்தும்,வாய் புண் ஆற்றும்,

மற்றும் தாய்பால் சுரக்க உதவும்

… இளநீர் – இளமையாகவும் ஆனந்தமாகவும் இருக்க உதவும், அசிடிட்டியை குறைக்க உதவும் மற்றும் வெய்யில் காலத்தில் உடம்பை குளிர்விக்க கூடியது.

வாழைதண்டு சாறு – சிருநீரக கல்லை அகற்ற கூடியது, மூட்டு வலியை நீக்கும், உடல் இடையை குறைக்கும். ஊல சதையை குறைக்க உதவும்.

வெல்ல பூசணிசாறு – குடற் புண்னை நீக்கும்.

வல்லாரை சாறு – நரம்பு சமந்தபட்ட நோய்களை நீக்கும், நாபகசக்தியை அதிகரிக்கும்

வில்வம் சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது, நரம்பு சமந்தபட்ட நோய்களுக்கும் உகந்தது. சர்க்கரையின் அளவை குறைகவல்லது சீரான இரதத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.

கொத்தமல்லி சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது.

புதினா சாறு – இருமலை குணபடுத்தும். முகபருவை நீக்க வல்லது. மற்றும் அணைத்து ரத்த சமந்தமான, வாயு சமந்தமான நோய்களுக்கும் ஏற்றது.

நெல்லிக்காய் சாறு – அழகு தரும் மருந்து.

துளசி சாறு – சளி மற்றும் சோம்பேரிதனத்தை குறைக்க வல்லது. அளவுக்கு அதிகமாக துளசி உட்கொள்ளுவது விந்தணுவை குறைத்துவிடும்.

அகத்தி சாறு- மலசிக்கலை குணபடுத்தும் , சர்க்கரை நோயை குணபடுத்தும்.

கடுக்காய் சாறு – முக நிறம் நல்ல பொலிவாகும். கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது.

முடக்கத்தான் சாறு – மூட்டு வலிக்கு நல்லது, வாயு தொல்லைக்கு நல்லது

கல்யாண முருங்கை சாறு – உடல் எடை குறைக்க உதவும். இதை வாயில் மென்று நம் உமிழ் நீருடன் கலந்து சாபிட்டால், உடனடியாக மலச்சிக்கலுடன் வாய்வு தொல்லை நீங்கும். ஆனால் கர்ப்பிணி

பெண்களுக்கு நல்லது இல்லை கருக்கலைய கூடியது.

தூதுவளை சாறு – சளி தொல்லை நீங்கும்

ஆடாதோடா சாறு – ஆஸ்மாவைய் குணப்படுத்த வல்லது

கரிசலாங்கண்ணி சாறு – கண் பார்வைக்கு நல்லது,

முடி வளர்ச்சிக்கு நல்லது.