குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 16 ம் திகதி வியாழக் கிழமை .

அதிகமாக பால் அருந்தினால் ஆயுள் குறையும்: எச்சரிக்கும் புதிய ஆய்வு

நாளொன்றுக்கு 700 மிலி. அளவுக்கு மேல் பால் அருந்தினால் ஆயுள் குறைய வாய்ப்புள்ளதாக புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.

சுவீடனில் உள்ள உப்சலா பல்கலைக் கழகத்தில், பேராசிரியர் கார்ல் மைக்கேல்சன் என்பாரது தலமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாலில் உள்ள அதிக அளவிலான லேக்டோஸ் மற்றும் கிளாக்டோஸ் சர்க்கரை எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

20 ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சுமார் 61,000 பெண்கள் மற்றும் 45,000 ஆண்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் நாளொன்றுக்கு 700மிலி அளவுக்கு மேல் பால் அருந்துபவர்களின் ஆயுட்காலம் குறைவடைய வாய்ப்புள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

39 வயது முதல் 74 வயது வரையிலான இந்த பெண்கள் மற்றும ஆண்களிடன் பால், தயிர், சீஸ் ஆகியவை உள்ளடங்கிய உணவுப் பழக்க முறைகள் குறித்த கேள்விகள் அளிக்கப்பட்டு அவர்களால் பதில்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இதனை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், சராசரியாக நாளொன்றுக்கு 680 மிலி. அளவுக்கு மேல் பால் அருந்திய பெண்களுக்கு ஆயுட்காலம் குறையலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதிக பால் அருந்தியதன் விளைவாக 10,112 ஆண்கள் 11 ஆண்டுகாலத்தில் மரணமடைந்துள்ளதாகவும் 5,066 ஆண்களுக்கு எலும்பு முறிவு, அதாவது இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.