பாரதிய யனதா கட்சி நடிகர் ரயினிகாந்தை நம்பியில்லை என்று தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தர்ராயன் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தற்போது பாயகவில் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளதாக தெரிவித்த அவர், கார்த்திகை 1ம் தேதி முதல் புதிய உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை பாரதிய யனதா துவங்க உள்ளதாக தகவல் தெரிவித்தார். தமிழகத்தில் ஒரு கோடி பேரை பாஜகவில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் 2016ல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று பாரதிய யனதா ஆட்சியை பிடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.