குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 15 ம் திகதி புதன் கிழமை .

புறந்தள்ளும் காய்கறிகளில் உண்டு எல்லையற்ற பயன்கள்

இன்றைய நவீன உலகில், உணவு கூட சக்தின்றி மாறியுள்ளது. இதனாலேயே பல்வேறு நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது. இதில், பெரும்பாலானவர்களுக்கு உடலுக்கு தேவையான சக்துக்கள் கிடைப்பதில்லை. இதனாலேயே பல மருத்துவர்கள், காய் கறிகளை அதிகளவில் உணவில் சேர்க்க வலியுறுத்துகின்றனர். ஆனாலும், பலரும் சக்தில்லாத காய்கறிகளை மட்டுமே உணவில் சேர்க்கின்றனரே தவிர, சக்தான காய் கறிகளை புறந்தள்ளி விடுகின்றனர். நாம் புறம்தள்ளும் காய்கறிகளில், சத்துகள் மட்டுமல்ல; பல நோய்களுக்கு மருத்துவ சக்தியும் உள்ளது. அந்த வகையில், சில காய்கறிகளும் அதில் உள்ள குணங்களும்:

கத்திரிக்காய்: பொதுவாக கத்திரிக்காய் என்றாலே பலருக்கு பிடிப்பதில்லை. சிலருக்கு இது எட்டி காயாக கூட இருக்கலாம். ஆனால், இதில் அரிய குணங்கள் இருப்பது யாருக்கும் தெரியாது. ஆனால், இதை தரம் பிரித்து உண்பதிலும் கவனம் இருப்பது அவசியம் கத்திரிக்காயில் பல வண்ணங்கள் உண்டு, என்றாலும் அனைத்திலும் உள்ள சக்துக்கள் ஒன்றுதான்.

 

பிஞ்சு கத்திரிக்காய் சமைப்பதற்கு ஏற்றது. முற்றின கத்திரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி, சிரங்கை ஏற்படுத்தும். இதில், தசைக்கும், ரத்தத்திற்கும் உரம் தரும் வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால், வாயு, பித்தம், கபம் போகும். அதனால்தான், பத்தியத்துக்கு இக் காயை பயன்படுத்துகின்றனர். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

 

அவரைக்காய்: அவரையிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரை பிஞ்சு நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இது சூட்டுடம்புக்கு மிகவும் ஏற்றது. ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் உகந்தது. மேலும், இதில் உள்ள நார்ச் சத்து உடலை வலுவாக்கும் என்பதுடன், அதிக எடை உள்ளவர்கள் இதை உட்கொண்டால், உடம்பு இளைக்கவும் உறுதுணை புரியும்.

 

வெண்டைக்காய்: பொதுவாக வெண்டைக்காயை மூளை வளர்ச்சிக்கு ஏற்றது என்று குறிப்பிடுவது உண்டு. ஆனால், இதன் சுபாவம் குளிர்ச்சி தருவது. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது.

 

இது வறண்ட குடலை பதப்படுத்தும். இதில் வைட்டமின் சி, பி உயிர்சத்துக்கள் உள்ளன. இதை உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட வயிற்றுப்போக்கும் நீங்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். வெப்ப இருமலை குணமாக்கும்.