குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

மனித உடல்: ஆச்சரியப்படத்தக்க செய்திகள்

நாம் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறந்து முழுவளர்ச்சியடைந்த பின் 206 எலும்புகளே இருக்கும். நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள் குறைகின்றன.

மனித உடலில் பல்வேறு ஆச்சரியப்படத்தக்க செய்திகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை காணலாம்:-

 

மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639.

 

மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.

 

மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது.

 

மூளையில் உள்ள நியுரான்க்ளின் எண்ணிக்கை 1400. மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33.

 

மனித மூளையின் எடை 1.4 கிலோ. உடலின் சாதாரண வெப்ப நிலை 98.4

 

மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு 5 லிட்டர். உடலின் மெல்லிய சருமம் கண் இமை.

 

மனித உடலில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 23 இணை

 

ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.

 

மனிதனின் கண் நிமிடத்திற்கு25 முறை மூடித்திறக்கிறது.

 

நாம் ஒருவார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன.

 

மனித நாக்கின் நீளம் 10 செ. மீ.

 

ஒருமனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக குடிக்கும் தண்ணீரின் அளவு 60,000 லிட்டர்.

 

மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள இனாமல்.

 

நமது கால் பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.

 

நாம் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.

 

நம் உடல் எடையில் 9 சதவிகிதம் இரத்தத்தினால் ஆனது. இந்த ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான்.

 

நம் உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 விநாடிகள் ஆகின்றன.

 

நாம் குள்ளமாக இருப்பதற்கு காரணம் பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருப்பது.