குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, மார்கழி(சிலை) 7 ம் திகதி சனிக் கிழமை .

என் வழி தனி வழி - டாட்டா காட்டிய வண்டு முருகன்

எல்லாம் அவன் செயல், அழகர்மலை படங்களில் ஹீரோவாக நடித்த ஆர்கே அடுத்து ஹீரோவாகியிருக்கும் படம் என் வழி தனி வழி. எல்லாம் அவன் செயல் படத்தை இயக்கிய ஷாஜி கைலாஷ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். எல்லாம் அவன் செயல் உள்பட ஆர்கே யின் அனைத்துப் படங்களிலும் காமெடி வேடத்தில் நடித்தவர் வடிவேலு. எல்லாம் அவன் செயல் படத்தில் அவர் நடித்த வக்கீல் வண்டு முருகன் கதாபாத்திரம் உலகப் பிரசித்தம். கைப்புள்ளக்குப் பிறகு வக்கீல் வண்டு முருகன்தான் வடிவேலுவை உயரத்தில் கொண்டு சேர்த்தது.

 

என் வழி தனி வழி படத்திலும் வடிவேலு நடித்தால் நன்றாக இருக்கும் என அவரை அணுகிய போது, நடிக்க மறுத்துவிட்டார். ஹீரோவாக நடிப்பதால்தான் அவர் வாய்ப்பை மறுத்துள்ளார். அதனால் அவருக்குப் பதில் சிங்கமுத்து, தம்பி ராமையாவை வைத்து சமாளித்துள்ளனர்.

 

 

வடிவேலு இனி காமெடி வேடங்களில் நடிப்பாரா என்பது கேள்விக்குறிதான்.