குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 19 ம் திகதி செவ்வாய் கிழமை .

எம்மைப்பற்றி..

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..
பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..
மனம் நோகாது கருத்துச்சுதந்திரம் பேணுவோம்.

கருத்தை வெளிப்படுத்த உரிமையுண்டு..

கருத்தை நிராகாரிக்கவும் உரிமையுண்டு..
ஒரு கருத்தை கருவாகக்கொண்டு
சான்றோரிடம் இணைந்து ஆராய உரிமையுண்டு.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு என்ற
திருவள்ளுவரின் ‘‘குறளை”துணையாக கொள்வோம்.

ஒரு கருத்தை வெளிப்படுத்தல் அக்கருத்தை ஏற்றல் மறுத்தல்
நிலையில் சினம்கொள்ளல் பகைமை பாராட்டல் தேவையற்றது
என்பதைப் புாரிந்துகொள்வோம்.உடன்பாடுடைய கருத்துக்களால்
மகிழ்வதைவிடவும் முரண்பாடுடைய கருத்துக்களை உள்வாங்கும் போதும்
வருத்தமைடையாது இருக்கப்பழகவேண்டும் இது நற்பண்புகளில் உயர்வானது.

03.1.2012-தமிழாண்டு2042 எதிர்வரும் தமிழ்ப்புத்தாண்டு14.01.2012-தமிழாண்டு2043
முதல்  தமிழியக்கருத்துக்கள் தாங்கப்படும். போலித்தமிழ் உணர்வோ காரணத் தமிழ் உணர்வோ
தமிழைக்காப்பாற்றாது. உண்மைத்தமிழுணர்வைப்பெறும் தமிழன் அதிகரிக்கவேண்டும்.
தமிழ்பற்றித்தெரியாது தமிழுக்கு என்னசெய்ய முடியும்? எழுதி எழுதி கேடுதான் செய்ய முடியும்.
சுவிசிலிருந்து என்பதைக்கூட சுவிஸிலிருந்து என்றுதான் எழுதுகிறார்கள். எமது இணையத்தில்
செய்தியென்பது முன்னிலைப்படாது. கல்விப்பகுதியில் சிறுவர்களுக்கான பாடல்கள்
சிறுவரர்களுக்கான பேச்சுக்கள் பேர்ண் வள்ளுவன் பாடசாலையின் வினாத்தாள்கள்.
இளைய தமிழ்ச்சிறார்களை கணினி விசைப்பலகையில் தமிழ்எழுதவைக்கவேண்டிய
தேவையிருப்பதையாரும் கண்டுகொள்ளாதிருப்பது பெரும்தவறாகவிருக்கிறது மற்றும்
கற்பிக்க ஆர்வமுடையவர்களுக்கு ஏற்ற வழிமுறைகள் பற்றியும் முயலுகின்றோம்.
தமிழர்கள் பிறப்பால் தமிழராகமுடியாது என்பதை உணரவேண்டும். தமது வாழ்வில்
குடும்பத்தில். தமிழியம் எந்தளவிற்கு உள்ளது என்ற சுயவிபரம்தேவை.

காரணம் செய்திகளை எல்லா
ஊடகங்களும் ஒன்றைப்பார்த்து ஒன்று வெளியிட்டுக்கொண்டிருப்பதே  உண்மை அதுதவறுமில்லை.
காரணம் யப்பானில் நிலநடுக்கம் என்றால் அதை எல்லாரும் வெளியிடுவார்கள். அதற்கு எந்தஇணையம்
உரிமைகோரமுடியும். சேர்மன்மொழியில் அறிபவர் பிரஞ்சுமொழியில் அறிபவர் இத்தாலிமொழியில்
அறிபவர்ரென ஆங்கிலமொழியில்  மலேசியா சிங்கப்புர் சீனமொழித் தொடர்புடையோர் எனபலவித
முறைகளில் செய்திகள் கிடைக்கின்றன. அதைமீண்டும் தமழில்எழுதிக்கொண்டிருக்கும்போது மறு ஊடகம்
இதேசெய்தியை வெளியிட்டிருக்கும் இதனால் அதேபாணியில் அல்லதுஅதையே அல்லது வெறு இடத்திலிருந்தொ
செய்தியை விரைவாகப் போடமுனைகின்றனர்.அப்படியே பிரதிசெய்கின்றனர். செய்தியொன்றுதானே!
கடினஉழைப்புடன் பெறப்படும் செய்திகள் இலகுவாகபிறிது இணையங்களில் வெளியாகுவது வளக்கமாகிவிட்டது.
பிரபல்யமான இணையங்கள் மூன்றுநாள் பிந்திபிறிதொரு இணையத்திலிருந்து எடுத்துப்போடும்போது
அது அவ்இணையத்தின் செய்திபோல் இருக்கும்.காரணம் ஆறஅமரபிரபல்யமான ஊடகங்களைப்
பொழுதுபோக்காக பார்ப்பவர்களே அதிகம். அடுத்து பலசமர்த்தியங்களை இணையங்கள் கையாழுகின்றன.
தவறானபாலியலை வெறுப்பது போன்றுதலைப்பெழுதி ஆசாபாசப்படங்களை அதன்கீழ்ப்போட்டு தமது
இணையாத்தை அறிமுகப்படுத்துவதும் நடக்கிறது. பல பல பெயர்களில் இணையங்களை ஒரேநபர்களே
நடத்துகின்றார்கள் இதற்குபலகாரணங்கள் உண்டு.(தப்பிக்கவும் ஏமாற்றவும் இன்னம்வேறுக்கும்) எனவே
ஊாடகங்கள் பெரிதுசிறிது என்று போட்டிபோடுவது சிரிப்புக்கிடமானது. சிலஊடகங்கள் தொழில்
நுட்பங்களால் மட்டும் வாழுகின்றன சில விளம்பரங்களால் மட்டும்வாழுகின்றன. போர்க்கால ஊடகங்கள்
பலவற்றைக்காணவில்லை காரணம் கார்த்திகைமலர் சிலசின்னம் சில பிரபல்யங்களின் படங்கள்
சில சண்டைக்காட்சிகள் அழிவுவிபரங்கள்  அவ்வாறன கவிதை என்ற வரிகள் உணர்வுரீதியான தொடர்புகள்.
பாலர்வகுப்பு போன்று படங்கள் சினிமா உடையற்றபடங்கள் தொழில்நுட்பஏமாற்றுக்களை உண்மைபோல்
நம்பிப்பார்த்தல் இவைநடக்கின்றது. இவையே அதிகம்.பலவித கட்டுரைகள் போடும் இணையங்களை
புறந்தள்ளுவார்கள் அது சும்மா அலட்டல் ஆரும்வேலையில்லாதவன் தான்அதைப்பார்ப்பான் இப்படிப்
பல ஆனால் சில ஊடகங்கள் எழுந்தமானத்தில் செய்திகள் வெளியிடுவதை தலபை்புக்கள் இடத்தெரியாததை
சில ஊடகங்களை சில ஊடகங்கள் பார்த்து திருந்துவது நடக்கிறது. இது ஒருவகையில் நன்றுதானே!
மக்களுக்கு பயன்படுவதை நாம் வெளியிடுவது என்பதில் போட்டியிருந்தால் தவறேயில்லை.
என்ன புதிய சிறிய சிறிய  இணையங்கள் ஆரம்பமாகும் போது பழையபிரபல்லமான  ஊடகங்கள்
எழுந்தமானத்தில் இருக்க முடியவில்லையே என்ற கவலைவருவது இயல்பு.
யேசுநாதர்காலத்துகீபுருமொழிக்கதைகள் பல உண்மைகளைவிளக்கும்.

கடலில் பெரியமீன்கள் சின்ன மீன்களைச்
சாப்பிடுவது வழமை ஒருநாள் ஒருசின்னமீன்  பெரியமீனிடம் கேட்டதாம் என்ன நெடுகலும் நீதான்
எங்களைச் சாப்பிடுவதா நான் உன்னைத்தின்ன முடியாத என்று கேட்டது பெரிய மீனுக்கு
உள்ளுக்கு சிரிப்பு காட்டிக்கொள்ளாது (பறுவாய்யில்லைத்தனமாக) சொன்னது எனக்கொன்று
மில்லை நீ என்னைச்சாப்பிடு என்று. ஓம்  என்று சொல்லிச் சிறியமீன் மெரியமீனின் எல்லாஇடங்களிலம்
ஓடிஓடிக்கொத்தியதுதான் மிச்சம் பெரியமீனின் செதிலில் கூடஒன்றும்நடக்கவில்லை. பெரியமீனுக்கு
இதமாக இருந்திருக்கிறது. தெதிலில் இருந்த அழுக்கும் போய்விட்டது.  இறுதியில் சின்னமீன் கோபத்தில்
தானாக ஓடிப்போய் பெரியமீனின் வாயில் புகுந்தது. பெரியமீன் ஒரு விழுங்கு.

தப்பவேண்டு மென்றால்
தன்பலம் மற்றவர் பலம் தெரியவேண்டும். இல்லையேல் சும்மாபோய்விடவேண்டும். இதில்
இன்னுமொன்றிருக்கிறது. இயல்பாகவே சிறியவை தானாகவே பெரியவைக்கு இரையாகும் என்பதாகும்.

அதில்  பெரியவை உண்மையான பெரியவையாக இருந்தால் மட்டுமே.போலித்தனமாகப் பெரியவையாக
இருந்தால் நேர்மாறானவை நடக்கும். அது இப்போ இணையங்களில் நடந்துகொண்டிருக்கிறது.

குமரிநாடானது மூன்று ஆண்டுகள் கடந்து செல்லும்போது எதிலும் வருமானம் எதிர்பார்க்கும்
உலகில். வருமானமின்றி அதிக நேரத்தை இதில் செலவு செய்கின்றோம். அதற்கு காரணம்.
நாம் உணரும்கருத்துக்ளை அறியும் அறிவியலை எமக்குதேவையான அரசியலை மற்றவர்களுடன்
பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற  அவாவோ அல்லது தேவையற்ற ஆசையோ தெரியவில்லை.

எமது இணையத்தில் தைப்பொகல்த்தமிழ்ப்புத்தாண்டு என்றதலைப்பில் முகப்பில் இருக்கும் கட்டுரைகளைப்
பாருங்கள். பயனடையுங்கள் தமிழுக்கு வலுச்சேர்ப்பவர்களாக மாறுங்கள். இது தமிழப்புத்தாண்டுக்காலம் அல்லாவா?யுத்ரிப்பில்(youtube) light strpro 1 என்று இலக்கமிட்டு மூன்று வரையும்என்ற இலக்கமில்லாதும் காணொளிக்காட்சிகள் உண்டு  இவை எமது பாடசாலையின் சில நிகழ்சிகளே இவற்றைப் பார்வையிட்டு விட்டு உங்கள் கருத்துக்களைப்பதிவு செய்யுங்கள் (youtube) bernvlluvanschool முகவரியில்(என்பதில் சிலகாட்சிகள் இன்னமிடுவோம் .www.bernvalluvanschule.weebly.com  என்ற இலக்கமில்லாதும் காணொளிக்காட்சிகள் உண்டு  இவை எமது பாடசாலையின் சில நிகழ்சிகளே இவற்றைப் பார்வையிட்டு விட்டு உங்கள் கருத்துக்களைப்பதிவு செய்யுங்கள் முகவரியில்

தமிழ்ப்புத்தாண்டு நிகழ்வுக்காட்சிகளைப் பார்வையிடலாம். தமிழாண்டு2036கிறசுஆண்டு2002முதல்
தமிழாண்டு2040கிறிசுஆண்டு2009 வரை இருக்கிறது2042-2011 மிகவிரைவில் உள்ளீடு செய்யவுள்ளோம்.

பூநகரி பொ.முருகவேள் ஆசிரியர் சுவிசிலிருந்து-03.01.2012

தொகுக்க

குமரிகண்டம் பற்றி அமெரிக்க தொல்லியல் ஆய்வுக்கழகம் ஒரு வரைபடத்தையே உருவாக்கியது.

குமரிக்கண்டம்
இதுவரை நடந்திருக்கிற உலகத் தமிழ் மாநாடு எதிலுமே தமிழ்மாண உரிமைப் பண்பாடு என்பதை எந்த ஈர வெங்காயமும் திட்டவட்டமாக தெளிவுபடுத்தவில்லை. அப்படி எந்த அக்கறையும் இல்லை. மதுரை மாநாட்டில் பாவலரேறு அய்யாவுக்குப் பதிலாக அனுமதிக்கப்பட்ட திரு.காளிமுத்து அவர்களின் உரை மட்டுமே சிறிது ஆறுதலாக இருந்தது.




ஒப்பியன் மொழிநூலை செய்த மொழிநூல் மூதறிஞர் தேவநேயப் பாவாணர் அவர்களை ஆதரிக்காமல் இருட்டடிப்பு செய்தார் கருணாநிதி. எம்ஜிஆர் தான் பாவாணரை அன்புடன் ஆதரித்தார். குமரிக்கண்டத்தின் உண்மை பற்றி அமெரிக்க தொல்லியல் ஆய்வுக் கழகம் இந்துமாக்கடலில் ஆய்வுசெய்து ஒருவரைபடத்தையே உருவாக்கிவிட்டது. இதுகூடத் தெரியாமல் எத்தனையோ முண்டங்கள் குமரிக்கண்டம் ஒரு கற்பனைதான் என்று வரலாற்றுத் துரோகம் செய்கிறார்கள். செம்மொழி மாநாட்டில் என்ன கிழிக்கப் போகிறார்களோ?