குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

பூநகரி சித்தன்குறிச்சி முருகன்கோவில் குடமுழுக்கு (கும்பாஅபிசேகம்02.6.14,எண்ணெய்க்காப்பு 01.06.14

பூநகரி சித்தன் குறிச்சியிலிருந்து 22.10.1992  அன்று மக்கள் வெளியேறிய பின்னர்   கிட்டத்தட்ட 25ஆண்டுக ளுக்குப் பின்னர்  பழைய முருகன் கோவில் இருந்த இடத்தில் புதிய கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதற் காக வெளிநாடுகளில் இருக்கும் சித்தன்குறிச்சி மக்க ள் நிதியுதவிகளை கட்டம் கட்ட மாக வழங்கி  பல கட் டங்களாக பலர்  பொறு ப்பாகச் செயற்பட்டு  இன்று  பூநகரியில் பெரிய  கோவிலாக அமையப் பெற்றிரு க்கின்றது. 23.05.2014-10.05.2045. வழிபாட்டு நிகழ்வு களின் பக்கல்(திகதி)  ஒவ்வொரு நாள்  முந்தியதாக தவறாக  அறிவிக்கப்பட்டமைக்கு வருந்துகின் றோம். 31.05.2014 கோவில் மற்றும் சுற்றாடல் சுத்திகரிப்புக் கான வழிபாடுகள் (கிரிகைகள்) பாவை எரித்திழுத் தல் போன்றனவும்,கழிப்புகள் என்பன  இடம் பெறு ம். மறுநாள் 01.06.2014 எண்ணெய்க்காப்பு, 02.06.2014 அன்று குடமுழுக்கு (கும்பாஅபிசேகம்) அதனைத் தொடர்ந்து 10 நாள் திருவிழா நடைபெறும். இதே சமகாலத்தில் தெங்குவீதி (தெங்கு  றோட்)  பெரும் படை அம்மன் கோவிலிலும் குடமுழுக்குநாள் வழி பாடுகள் 02.06.2014 அன்று இடம்பெறுகின்றது. 14.06.2014 அன்று பெரும் பொங்கல் வழிபாடும் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இன்னும் சில நாட்களில் இணையங்களில் முகநுால் களில் எமது கோவிலின்   தோற்றத்தினை  சர்சினி வீடியோ வின் ஒளிப்பதிவில் காணவுள்ளீர்கள். குடமு ழுக்கு,  திருவிழா10 நாட்கள் இடம் பெறும்  சங்குமுழுக்கு விழா  அதனைத் தொடர்ந்து   நாளாந்த வழிபாடு நிகழ்த் தத்தக்க  நிலை காணப்படட்டுள்ளமை அந்த ஊர்மக் களுக்கும் ,அயலுார் மக்களும்  அந்த ஊரில் பிறந்து  பல நாடுகளில் வாழும்  உறவுகளும் பெரும் மனநிறைவையு ம், மகிழ்ச்சியையும்,  நாளும் கடவுளை வழிபடும் போது எமது  கோவில் என்ற வடிவத்தை மனதில் இருத்தி வழிப டும்  ஒரு தருணம்  உருவாகிவிட்டது என்பதில் மகிழ்வு காண்கின்றார்கள்.

அடிப்படை நிலை நிறைவுகள் தான்  நிறைவு பெற்றுள்ள ன. இன்னும் பல கட்டிடங்கள் இறைவனைக்காவும் வாகனங்கள் வாகனக் கொம்புகள்  கோவிலுக்குரிய   பாத்திரங்கள் வழிபாட்டுப் பொருட்க்கள் குத்துவிளக்குகள்  வட்ட விளக்குகள்  வழிபாட்டு நேர தீபங்கள், முகப்புகளுக் குரி சட்ட விளக்குகள் அவை போன்ற பல, மடப்பள்ளி அறைப் பொருட்கள் தீவெட்டிகள் போன்றன பெரிய அலங் காரக் குத்துவிளக்குகள் குடங்கள்  நிறைகுடங்கள் செம்பு கள் எனப் பல அங்கு தேவைப்படுகின்றன.  அயந் தாக்கு டையே தமிழர்பண்பாட்டிற் குரியது, அதற்குரிய குடைத்  தடி பிரம்புகள் பழைய வேலைப் பாடுகள் , இன்று  அவை  போய் நல்லுார்  கோவிலை ப் பின்பற்றி வைசுணவ முறை க்குடைகள் பல கோவில் களில் அழகுக்காகப் புகந்துள்ள ன . அவை தமிழ்நாட்டு ப்பண்பாட் டிற்கே அப்பாற் பட்டவை எனவே  எமது கோவில் குடைகள் அயந்தாக் குடைகள்,

எனவே தொடர்ந்து இன்றைய வளர்ச்சி கண்டுள்ள  உள்ள   உலகில்  அதற்கு தக கோவிலுக்ரிய  தொழைில் நுட்பப் பொருட்கள், மின் உற்பத்தி ஆக்கிப்பொறிகள், கணினிப் பொருட்கள், நவீனஒலிபெருக்கி பெட்டிகளும்  அதற்கான  சாதனங்களும், கணினி,கணினி  காட்சித்திரை,  ஒரு கோவிலில் இருக்கக் கூடிய  இசைக்கருவிகள்,கோவிலில்  நிகழும் காட்சிகளை  ஒளிப்பதிவு செய்ய ஆங்காங்கே ஒளிப்பதிவுக்  கருவிகள்( வீடியோக்க மராக்கள்)  பதிவுக் கருவிகள்,

சமய அறிவினை  ஊட்டும் நுால்களை பாதுகாக்கும்  நுால்கள், தமிழினம்சார் நுால்கள் தமிழ் மொழி சார்நுால்கள் திருமுறைத் தொகுப்புக்கள், எடுத்துக்  காட்டாக மறவன்புலவுச் சச்சிதானந்தம் அவர்களின் கணினித்தொகுப்புகள்(திருமுறைகள்  போன்ற நவீன மயப்பட்ட  கணினித் தொகுப்புக்கள்,   இதற்கான  அறைகள் , தமிழிசை,ஆடற்கலை ,இவற்றைக் கற்கக்கூடிய  மண்டபங்கள்   இவ்வாறாக  ஒரு இனத்தின் தற்போதைய  கால வளர்ச்சிப்பயன் பாடாக  ஒரு இடத்தில் வைத்து ஓர் ஊர்  குமுகாயம்  கூடி பலர் பயனடையும் இடமாக  இந்த கோவில் எதிர்காலத்தில் முன்மாதிரியாகத் திகழும் என்ற பெருமிதத்துடன் குமரிநாடு இச்செய்தியி னை  வெளியிடுகின்றது.

இந்த கோவிலில்  திருவெப்பாவை பிள்யைார் கதையை  பார்க்காமல் பாடிய தம்பு மாமா  மறக்க முடியாதவர். பெரிய கதையை  தொடராக பார்க்காமல் சொல்வதைப் பார்த்து அதிசயத்தவர்கள் பலர் அதில் நானும்  ஒருவன். மோதம் பிடிக்க  அவிக்க, திருமுழுக்கு ஐந்து பழ அமுது (பஞ்சாமிர்தம்) ,மண்டகப்படி  அடுக்கபொங்கல்த ளிசை அடிக்க கற்றுத்தந்த செட்டியாரப்பு, ஞானியாரப்பு, கோவில்  நடை முறைகள் அனைத்தையும்  ஆண்டாண்டாக அறிந்து கடைப்பிடித்து வந்த  மைத்துனர் இரத்தினசிங்கம் அவர் களை எல்லாம் எண்ணவேண்டிய நேரமாக இத்தருணம் இருக்கின்றது. இவர்கள் போன்ற இன்னும்பலரை நினைக் கவேண்டியுள்ளது.குஞ்சர்மாமா பாலுச்சின்னையா, நாம் பழையவர்களை நினைக்கின்றோம், அந்த மரபுகளை காத்தே இன்றைய கட்டத்தில்  எமது  கோவிலை நகர்த் திச்செல்லவேண்டும் . புதிதாக வந்திருக்கும் பூசகர்கள்   புதிய முறைகளைப்   புகுத்தலாம் பழையவற்றை   அறியா து விட்டு விடலாம்  அதனை நாம்   அவருக்கு எடுத்துச் செல்லி விட்ட இடத்திலிருந்து தொடர்வோம்  என எமது  கோவில்  கருத்தில் கொள்ளவேண்டும். எமது கோவில் சைவசமய மரபினை  நன்கு கடைப்பிடிக்கும் கோவிலாக  சீர்திருத்தமுடைய கோவிலாக தமிழ் மொழியை  துாய்மையாகப் பேணும் கோவிலாக முன்மாதிரியாக இருக்க எல்லாம் வல்ல முருகன் அருள் கிட்டும் என்று குமரிநாடு நம்புகின்றது.

இதற்கு முந்திய  பழைய தலைமுறைகளான கந்தர், சின்ன த்தம்பியர்,சிவகுரு,கந்தையா,முத்தையா, கணவதிப்பிள் ளையர்  இவ்வாறு நான் மறந்திருக்கலாம்அறியாத வர்கள் பலர் இருக்கலாம்   1955 ஆம் ஆண்டு கட்டிய மணிக் கூட் டுக்கோபுரம் தான்  பழைய கதைகளை கம்பீரமாக  நிமிர் ந்து  நின்று சொல்லிக்கொண்டு நிற்கின்றது. அந்த மணி இன்று இல்லை அமைதியான வேளைகளில் வில்லடி மட்டுவில்நாடு செட்டிய குறிச்சி வாடியடி வரை நல்நாத மாகக் கேட்கும்.

இந்த முருகன் கோவில் யாழ்நகரில்  சித்தர்பரம்பரை உருவா முனனர் இங்கு இருந்த  சித்தர்கள்  ஞானிகள் வழிபட்ட முருகன் கோவில் என்பது  கோவில் வரலாற்றின் தொன்மையாகும்.

பூநகரி. பொன்னம்பலம்.முருகவேள் ஆசிரியர்- குமரிநாடு.நெற்-சுவிற்சர்லாந்து  23.05.2014- 10.05.2045