குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

பனை மரமும் பழைய தமிழும்.சீனி உருவானதும் பண்டைய தமிழர்களிடமிருந்தே பனையின் முற்காலச் சொல்லொன்று

கரும்புல்--29.02.கி.அ2012.தமிழாண்டு2043-பனம் சீனி பனம் கற்கண்டு உடலுக்கு ஆரோக்கியமானது. தமிழ்ச் செம்மொழிக்கு மட்டும் இருக்கின்ற பதினொரு தகுதிகள் > உலகில் பழம்பெரும் மொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எந்த ஒரு மொழிக்கும் செம்மொழிக்குரிய 11 தகுதிகளும் முழுமையாக இல்லை. சமற்கிருதத்திற்கு 7 தகுதிகளும், இலத்தின், கிரேக்க மொழிகளுக்கு 8 தகுதிகளும் மட்டுமே உள்ளன என்பது அறிஞர்கள் கூற்று. 

ஆனால், என்ன ஒரு வியப்பு என்றால், நம் அன்னைத் தமிழுக்கு மட்டுமே செம்மொழித் தகுதிப்பாடுகள் பதினொன்றும் முழுமையாக உள்ளது. மேல்நாட்டு வல்லுநர்கள் வகுத்த மொழித் தகுதிப்பாட்டுக்கு நம்முடைய தமிழ்மொழி முற்றும் முழுவதுமாக ஒத்துப் போவது மிகப்பெரிய வரலாற்று உண்மையாகும். -இப்படி 11 தகுதிகளும் முழுமையாக பெற்றுள்ள தமிழ் மொழியைத் தாய்மொழியாகப் பெற்றதற்காக ஒவ்வொரு தமிழரும் பெருமையும் பீடும் கொள்ள வேண்டும். மொழியின் பெருமையை; வரலாற்றை; பாரம்பரியத்தை அறிந்து உணர்ந்துகொண்டால் தமிழர்கள் உலக இனங்களுக்கு இணையாக நிமிர்ந்து நிற்க முடியும் என்பது திண்ணம்.

 

தனித்த விழுமியங்களோடு உலகில் உய்வதற்கும் வாழ்வில் உயர்வதற்கும் தமிழர்களுக்குப் பெரும் தன்னம்பிக்கையத் தரவல்லது தமிழ்மொழி ஒன்றே.

 

ஒரு மொழியைச் செம்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் அதற்கு பதினொரு (11) தகுதிப்பாடுகள் இருக்க வேண்டும் என்று மொழியியல் வல்லுநர்கள் வரையறை செய்துள்ளனர். இந்தப் 11 தகுதிப்பாடுகளையும் உருவாக்கியவர்கள் மேலை நாட்டு மொழி அறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

 

 

 

 

 

பனை மரம் என்பது ஒரு மரம் என்ற அளவில் நின்றுவிடாது பண்டைய தமிழர்களின் கலை, இலக்கிய, விஞ்ஞான அறிவு சார்ந்த கூறுகளை தனது முதுகில் தூக்கி சுமந்த ஓடம். பனையேறும் தொழில் ஏதோ கள், பதனி இறக்குவது மட்டும் என்றல்லாமல் அதையும் தாண்டி அந்த தொழிலுக்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது. பனையேறும் தொழில் என்பது தமிழர்களின் இலக்கியத்தோடு தொடர்பு உடையாது. எப்படி என்று குழம்ப வேண்டாம். பனை மரத்தில் இருந்து தான் அன்றைய காலத்தில் எழுத்தோலைகள் தயாரிக்கப்பட்டன. சங்ககாலத்தில் பனை ஓலையை தயார் செய்வது என்பது தற்காலத்தில் அச்சகத்தை, புத்தக பதிப்பகத்தை நடத்துவதற்கு சமம். ஒரு அச்சகத்தை நடத்துபவர் குறைந்த பட்ச கல்வி அறிவு உள்ளவராகவாவது இருக்க வேண்டும். அதே போன்று பனை மரத்தோடு தொடர்புடையவர்களும் சங்ககால அறிஞர்களோடு தொடர்புடையவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அப்படி எனில் பனையேறுதல் ஏன் இழிவான தொழிலாக கருதப்பட வேண்டும் என்று கேள்விகள் எழும்புவது இயற்கையே.

 

 

 

பார்ப்பனியம் தமிழ்நாட்டில் நுழைந்த போது பெரும்பான்மையான தமிழர்கள் புத்த சமண மதத்தை சேர்ந்தவர்களாகவும் கல்வியில் சிறந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். பார்ப்பனியம் ஒரு சமூகத்தை அழித்தொழிப்பதற்கு செய்யும் வேலையே, அவர்கள் எந்த சமூகத்தை அடிமைபடுத்துகிறார்களோ அந்த சமூகத்தின் கல்வி அறிவை நிர்மூலப்படுத்துவதே. அப்படி தான் பார்ப்பனியத்தின் சதியில் வீழ்ந்த பண்டைய தமிழகத்தில் கல்வியில் தேர்ந்த அறிஞர்களும் அவர்களுக்கு உதவியாக இருந்தவர்களும் கல்வி பயிலுவது தடை செய்யப்பட்டு அவர்கள் இழிமக்களாக ஒடுக்கப்பட்டனர். அவர்கள் சார்ந்த தொழில்கள் இழிவானதாக பரப்புரை செய்யப்பட்டது. தமிழர்களுடைய இலக்கியங்கள் அவற்றை சுமந்து கொண்டலைந்த பனையோலைகளோடு கொழுத்தப்பட்டது. அப்படி பட்ட சூரையாடலுக்கு தப்பி பிழைத்தவை தான் தற்போது நாம் கொண்டாடும் சங்க கால தமிழ் இலக்கியங்கள்.

அது மட்டுமா பண்டைய தமிழர்களின் தொழில் நுட்பங்கள் சிதைக்கப்பட்டன. பார்ப்பனியம் அதற்கு தேவைப்பட்ட தமிழர்களின் அறிவுச்செல்வங்களை திருடி அவர்களது பெயரில் காப்புரிமை செய்து கொண்டது. செத்துப்போன மனித உடல்களை பதப்படுத்தும் பண்டைய எகிப்தியரின் தொழில்நுட்பங்களை உலகத்தின் கவனத்தை கவர்ந்தது என்றால், உயிருள்ள தமிழ் இலக்கியங்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சுமந்த பனையோலைகளை பதப்படுத்தும் தொழில்நுட்பமும் அவற்றை கையாண்ட சான்றோர்களின் நேர்த்தியும் உலகை ஆச்சரியப்படுத்திருக்க வேண்டும் தானே. அது ஏன் நடக்கவில்லை ?..... எகிப்தியர்களின் தொழில் நுடபத்தை பற்றிய குறிப்புகளை அறிவதற்கு தடயங்கள் இருந்தது. ஆனால் பண்டைய தமிழர்களின் அறிவு சார் தொழில் நுட்பங்கள் பார்ப்பனியத்தால் தடயமே இல்லாமல் அழிக்கப்பட்டதும் அந்த தடயங்களை பற்றிய தேடல்களின் முயற்சி பார்ப்பனிய சக்திகளால் அவ்வப்போது முடக்கப்பட்டு வருவதன் விளைவு தான் அது.

தமிழகத்தில் கடந்த காலங்களில் மிகவும் அதிகமாக ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பின்னணியை பார்த்தால் அவர்கள் கலை, இலக்கிய, தொழில்நுட்ப அறிவு சார்ந்த குடியினராக தான் இருப்பர். தமிழகத்தில் புத்த சமண மதங்கள் கோலேச்சின என்பதை நாம் இந்த இடத்தில் நினைவில் கொண்டாக வேண்டும். . ம்ம்ம்ம் சாதிகளே இல்லாது இருந்த தமிழர்களின் அடையாளத்தை சிதைத்து அவற்றை இழிவான சாதிய பெயர்களாக கற்பித்த பார்ப்பனியத்தின் வீச்சை பார்க்கும் போது அது எந்த அளவிற்கு தமிழர்களின் பண்பாட்டை சூறையாடி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

பனம் சீனி பனம் கற்கண்டு உடலுக்கு ஆரோக்கியமானது. தமிழ்நாட்டின் தென்மாவட்டத்தில் தான் பனம்பதனிலிருந்து சீனித்தொழிற்சாலையை வெள்ளையர் நறுவினர். அதன்வருத்தியாக  அதிகதேவையை நிவர்த்தி செய்ய கம்பிலிருந் சீனிசெய்தார்கள் அதன் பெருக்கத்தைக் கூட்டவே கரும்பு விளையக் கூடிய இடங்களுக்கு தமிழர்களை ஏற்றிச் சென்று செய்வித்தார்கள்   கரீபியன் தீவு பீயித்தீவுகளிலும் தென்அமெரிக்காவிலும்  ஆபிரிக்காவிலும் தமிழர்களைக் குடியேற்றியது கரும்புச் செய்கைக்காகவே. கரும்புல் அதற்கு  ஈடாக வந்தது கரும்பு . அதாவது கரும்புல்லில் இருந்து கரும்பு என்று ஆனது.