குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

தமிழர் பண்பாடு சமற்கிருத மயமாக்கப்பட்டமை!தமிழர்களின் சமயம் சைவசமயமா? இந்துசமயமா? 05.12.2009

ஓர் இனத்தின்  உயிர்மை அதன் பண்பாட்டினால்  புலனாகின்றது. அதன் உண்மையான வெளிப்பாட்டினை இலக்கியத்தால் அறிய முடிகிறது. இலக்கியம் மொழியாலாகிறது மொழியால் இலக்கியமும் இலக்கிய வாயிலகப் பண்பாடும்.. பண்பாட்டினால் இனமும் வாழ்கிறது.. வளருகிறது.

வேற்று மொழிக்கலப்பால்  மற்ற மொழியை அழிக்க வேண்டும் என்றுதிட்டமிட்ட ஆதிக்கத்தால்.. அம்மொழி மறைந்து..மறைக்கப்பட்டு இலக்கியத்தின் வெளிப்பாடாகிய பண்பாடுகுலைந்து பண்பாட்டினை வளர்த்த இனம் மங்கிப்போகிறது. 3000 ஆண்டுகளுக்கு முன்னே இத்தகையநிலை தமிழினத்திற்கும் பண்பாட்டிற்கும் உருவாக்கிய விளைவுகளைப்பார்போம்.

 

கி.மு-தி.மு 1500 ஆண்டளவில் கந்தார நாட்டிலிருந்துகைபர் கணவாய் வழியாக வந்து

நம் நாட்டில் புகுந்த ஆரிய இனம் இங்கு வாழ்ந்த திராவிட இனத்தோடு போராடி அவர் வாழ்வை  அழித்துப்  பல பகுதிகளில்  குடியேறிற்று . பேரினமாய்யிருந்த திராவிடர்களைக் கொன்று வெற்றிகாண்பது எளிதானதல்லவெனக் கண்டு அவர்களோடு உறவாடி அடிமைப்படுத்தி ஆளமுற்பட்டது.

 

வேதங்களை இயற்றியவர்களுக்கு எழுத்துக்கலை  தெரிந்திருக்கவில்லை என்று நாகரிக வரலாற்றின் ஆசிரியர் வில் டு ராண்டும் ஆரியர்கள் நாகரிக உலகோடு தொடர்பு  கொள்வதற்கு முன்பாக  எழுத்துக்கலை அறியாதவர்கள் என உலக வரலாற்று ஆசிரியர் எச் யி வெல்சும் எழுதியுள்ளார். பல்வேறு நாடுகளில் பரவிய ஆரியர்கள் அவர்கள் குடியேறிய நாடுகளில் வாழ்ந்த நாகரிக மக்களின் எழுத்துக்களையே பயன்படுத்தித் தங்கள் நெடுங்கணக்கை அமைத்துக்கொண்டார்கள் என அறியக்கிடைக்கிறது.

 

 

 

அநாசாசு எனத் தங்களால் எள்ளி நகையாடப்பட்ட திராவிடர்களின் எழுத்துக்களையும் குறியீடுகளையும் பயன்படுத்தியே தங்கள் எழுத்துக்களை அமைத்துக்கொண்டார்கள். என்று கிராசு பாதிரியார் கூறுகிறார். ஆரியர்களின் வேதங்கள் சுருதியாக எழுதாக்கிளவியாக  இருந்து தலைமுறை தலைமுறையாக செவிவழியாகவே நிலவிவந்ததற்கு அவர்கள் எழுதும் முறையை அறியாமையே காரணமாகும். ஆரியருடைய முதனூலாகிய இருக்குவேதத்தில் பல தமிழ்ச் சொற்கள் அணி, இராத்திரி, கணம், பழம், பூசனை போன்றன ஆளப்பட்டுள்ளன என்பதையும் எண்ணிப்பார்கவேண்டும்.

உணவு உற்பத்திக்காக எதிர்கொண்டு மண்ணைக் கிளறி உழவுத் தொழிலை மேற்கொள்வது பாவம் மனுநீதி மூலம்ஆரியர்கள் ஒரு சித்தாந்தத்தை உருவாக்கிக்கொண்டு அடிமைப்படுத்தப்பட்ட திராவிடர்களை  அத்தொழிலில்     ஈடுபடுத்தி ஏற்றம்கொண்டனர். ஆக்கம் பெற்றனர். வேதமொழியும்

வடநாட்டில் நிலவிய பிரகிருதமும் கலந்து உருவாகிய சமற்கிருதக் கலவை மொழியை திராவிடர்கள்

கற்கவேண்டியதாயிற்று .இந்திய நாகரீகத்தில் திராவிடப்பண்பு  என்ற தம் நூலில் கில்பர்ட் சிலேட்டர் இதையேதிராவிடர் மொழியில் ஆ ரிய மயமாக்கப்பட்டனர். எனக்குறிப்பிடுகின்றார்.

 

அகத்தியரும் தமிழும்

ஆரியர் மொழி நிலை இவ்வாறிருக்க.  ஆரிய முனிவராகிய அகத்தியர்  பொதிய மலையில் தங்கித் தமிழுக்கு முதனூலும்  இலக்கணமும் வகுத்தார் என்றகதையைப்  புனைந்து தமிழர்களை இயன்றளவு

நம்ப வைத்துள்ளனர். அகத்தியர் வருகை தென்னகத்தில் ஆரியர் வருகைக் குறிப்பேயாகும்.

பல்வேறு காலங்களில் நீண்ட இடைக்காலத்திற்கிடையில் அவ்வையார் வாழ்து பாடியதாக  இலக்கியத்தில் காட்டப்படுவதுபோல். அகத்தியரும் பல்வேறு காலங்களில் பல்வேறுநாடுகளில்செய்யற்கரிய செய்ததாக இலக்கியத்தில் இடம்பெறிருக்கிறார். ஒருவரே ஒரு மொழியையும் அப்போதே அதன் இலக்கணத்தையும் படைக்கக் கூடும் என்ற கூற்றினை ஆராயவும் தயங்கும் அறிஞர்கள்  முச்சங்க வரலாறு- அவைகளின் காலக்குறிப்பு புலவர்களின் எண்ணிக்கை போன்றவற்றை நோக்குமிடத்து- அறிவுக்குப் பொருந்தாது . உண்மைக்குப்புறம்பானது என்று மாற்றார் அறையும் போது  அலமந்து  போகிறார்கள்.

தமிழ் இலக்கியத்தின் சிறப்பையும் அதன் விரிவையும் கண்டு பொறாது தமிழ் எழுத்து பிற்காலத்தில் அசோகரது பிராமிஎழுத்தினின்றும் கிரந்த எழுத்தினின்றும் தோன்றியது என்றும் சாதித்தனர்.

 

உணவு உற்பத்திக்காக எதிர்கொண்டு மண்ணைக் கிளறி உழவுத் தொழிலை மேற்கொள்வது பாவம் மனுநீதி மூலம்ஆரியர்கள் ஒரு சித்தாந்தத்தை உருவாக்கிக்கொண்டு அடிமைப்படுத்தப்பட்ட திராவிடர்களை  அத்தொழிலில்   ஈடுபடுத்தி ஏற்றம்கொண்டனர். ஆக்கம் பெற்றனர். வேதமொழியும் வடநாட்டில் நிலவிய பிரகிருதமும் கலந்து உருவாகிய சமற்கிருதக் கலவை மொழியை திராவிடர்கள் கற்கவேண்டியதாயிற்று .இந்திய நாகரீகத்தில் திராவிடப்பண்பு  என்ற தம் நூலில் கில்பர்ட் சிலேட்டர் இதையேதிராவிடர் மொழியில் ஆரிய மயமாக்கப்பட்டனர். எனக்குறிப்பிடுகின்றார்.

 

அகத்தியரும் தமிழும்

ஆரியர் மொழி நிலை இவ்வாறிருக்க.  ஆரிய முனிவராகிய அகத்தியர்  பொதிய மலையில் தங்கித் தமிழுக்கு முதனூலும்  இலக்கணமும் வகுத்தார் என்றகதையைப்  புனைந்து தமிழர்களை இயன்றளவு  நம்ப வைத்துள்ளனர். அகத்தியர் வருகை தென்னகத்தில் ஆரியர் வருகைக் குறிப்பேயாகும்.

 

பல்வேறு காலங்களில் நீண்ட இடைக்காலத்திற்கிடையில் அவ்வையார் வாழ்து பாடியதாக  இலக்கியத்தில் காட்டப்படுவதுபோல். அகத்தியரும் பல்வேறு காலங்களில் பல்வேறுநாடுகளில்செய்யற்கரிய செய்ததாக இலக்கியத்தில் இடம்பெறிருக்கிறார். ஒருவரே ஒரு மொழியையும் அப்போதே அதன் இலக்கணத்தையும் படைக்கக் கூடும் என்ற கூற்றினை ஆராயவும் தயங்கும் அறிஞர்கள்  முச்சங்க வரலாறு- அவைகளின் காலக்குறிப்பு புலவர்களின் எண்ணிக்கை போன்றவற்றை நோக்குமிடத்து- அறிவுக்குப் பொருந்தாது . உண்மைக்குப்புறம்பானது என்று மாற்றார் அறையும் போது  அலமந்து  போகிறார்கள்.

 

தமிழ் இலக்கியத்தின் சிறப்பையும் அதன் விரிவையும் கண்டு பொறாது தமிழ் எழுத்து பிற்காலத்தில் அசோகரது பிராமிஎழுத்தினின்றும் கிரந்த எழுத்தினின்றும் தோன்றியது என்றும் சாதித்தனர்.

 

தமிழ் நெடுங்கணக்கு பழைமையானது

சிந்துவெளி எழுத்துகளிலிருந்து பிராமி எழுத்துக்கள் தோன்றியிருக்கவேண்டும் என்பது பேராசிரியர்  லாங்டன்.  டாக்டர்கண்டர். சர்.அலச்க்சாண்டர் ஆகியோரின் முடிவாகும். தமிழ் நாட்டுக்குகை எழுத்துக்களும்பிராமி எழுத்துகட்கும் தொடர்பைக்காணலாம். இன்றைக்கு நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழைய தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தின் காலம் கி.மு அய்நூற்றுக்கு முந்தியது எனத் திட்டவட்டமாய் நிறுவி.  கி.மு . எழுநூறு என்று சொல்வதற்கான சான்றுகளையும் ஆராய்ச்சியார்கள் தந்துள்ளார்கள். அத்தகைய  அரிய இலக்கியம் தோன்றுவதற்கு முன் எத்தனை யெத்தனை நூல்கள் இருந்திருக்கவேண்டும் அவற்றுக்கு எவ்வளவு காலத்திற்கு முன்பாக தமிழ் நெடுங்கணக்கு ஏற்பட்டிருக்கவேண்டும் என்று சிந்திக்க மறக்கலாமா?

 

தமிழ் இலக்கியம் ஆரிய மயமானது

தமிழர்களின் மறைநூல் மந்திரநூல்போன்ற அரிய நூல்களைச் சமற்கிருதத்தில் மொழி பெயர்த்துக்கொண்டு. மூலநூல்களை அழித்துவிட்டு வடமொழியின்றே அவ்அரிய கருத்துக்கள்வந்தனபோலக் காட்டினார்கள். பிராமணர்கள் எனத்தாம் எழுதிய தமிழ் வரலாறு என்ற நூலில் பரிதிமாற் கலைஞர்(வி.கோ.சூரியநாராயண சாசுதிரியார்) எழுதுகிறார்.

 

தொன்னூல்களான தென்னூல்களெல்லாம் வடமொழியில்பெயர்க்கப்பட்டபின் அழிந்தும் அழிக்கப்பட்டும் போயின என்று தமிழர் வரலாறு என்ற தம் நூலில் ஞா.தேவநேயப்பாவாணர் விரிவாக விளக்கியுள்ளார்கள். இவ்வழிப்புப்பாணியால் இந்திய நாகரிகம் பெருமளவு ஆரியருடையது எனவும்கருதுமாறும் செய்யப்பட்டு விட்டது. அகத்தியத்தைதமிழ் முதனூல் என்றனர். தொல்காப்பியத்தமிழில் வேண்டாத சமகிருதச் சொற்களையும் ஆரியக் கருத்துக்களையும் புகுத்தினார்கள்.

 

திருவள்ளுவரை சீவல்லபர் என்று ஆரிராக்கியதோடு திருக்குறளின் அறத்துப்பால் வடமொழிதர்மசாத்திரத்தையும்   பொருட்பால் அர்த்தசாத்திரத்தையும் காமத்துப்பால் காமசூத்திரத்தையும் தழுவின எனக் கூறவும் தலைப்பட்டனர்.

 

தொடரும்..

 

தமிழியல் ஆறாம் பட்டமளிப்பு விழா மலரில் இருந்து பொ.முருகவேள் ஆசிரியர்.

 

 

 

தமிழ் மக்கள் தங்கள் மதமாக வைத்து  வழங்கி வருவது ஆரிய மதமாகிய இந்து மதமாகும். இவ் இந்து மதம் தமிழ் நாட்டில் பரவிய காலம் ஆரியர்கள் நம்நாட்டில் வந்து குடியேறிய காலத்தைக் குறிப்பதாகும். அதற்குமுன் இந்துமதம் தமிழரிடம் இருந்ததற்கு சான்றுகள் இல்லை. ஆகையால் ஆரிய மதமாகிய இந்து மதத்தை தமிழ் மக்களுடைய மதமென்றுகூற ஆராய்ச்சித்துறை கண்டஅறிவுடைய எவரும் முன்வரமாட்டார்கள் என்பது துணிபு. ஆரியர் தமிழரிடையே புகமுன்பே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிறந்த நாகரீக வாழ்க்கையை செம்மை நெறியில் ஒழுகிவந்தனர். இடைக்காலத்தில் ஆரியர்களால் கொண்டு புகுத்தப்பட்ட இந்து மதம் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்பதை விளக்கவே இக்கட்டுரை கருவாகின்றது.

 

இந்துக்கள் யார்? அவர்களின்வாழ்க்கை கொள்கை என்ன என்பதை அறிவோம்.

இந்தியாவில் உள்ளவர்களின் மதம் என்பதால் இந்து என்றும், சிந்து நதிக்கரையில் ஆரியர்கள் தங்கி இருந்ததால் அவர்கள் இந்துக்கள் என்றும் இந்து மதத்தினர் என்றும் அழைக்கப்பெற்றனர் என்றும் மேற்சொன்ன இரண்டும் பொய் என்பதை ஒரு உபநிடதம் அதன் உண்மைப்பொருளை விளக்கித்தருகிறது.

"ஹிம்சாபாம் தூயதேயச,

ச:ஹிந்துரி த்யபிதீளதே"

எவன் துன்பத்தில் நின்று அல்லல் படுகின்றானோ,  அவன் இந்து என அழைக்கப்படுகின்றான் என்பதாகும் ஆரியர்கள் இருக்க இடமும்,  உடுக்க உடைளும், உண்ண உணவும் இன்றி ஊர் ஊராய்ச் சுற்றித்திரிந்து துன்பமுற்றதால் அவர்களை இந்துக்கள் என்று கூறும் உபநிடதக்கருத்தை நாமும் உண்மையெனக் கொள்ளலாம்.

தமிழர்கள் இப்படி இருந்ததாக வரலாறு இல்லை ஆரியர்களின் முதல் நுாலாகிய இருக்குவேத முதல் மண்டிலத்தில் உள்ள 42ம் பாகத்தில் ஆரியர்கள் தமது தலைவனான இந்திரனிடம் இப்படி வேண்டுகிறார்கள்.

 

1." யாகங்கள் வெல்வத்தை எளிதில் அடையுமாறு செய்"

2." புல்லடர்ந்திருக்கின்ற மேய்ச்சல் நிலங்களுக்கு எம்மை வழி காட்டிச் செலுத்து"

3." எங்களுக்கு வயிறு நிறைய உணவு கொடு,  எங்கள் உடம்பிற்கு உரம் ஏற்று" (இருக்கு01 ல்-33ம் பதிகம்)

4." சுவித்திராளின,  இழங்கன்றே,  ஓ மகவானே சுக்கிரனுடைய வீடுகளிடையே எங்களுக்கு நிலங்கிடைத்தல் வேண்டி கடந்த போரில் எங்களுக்கு உதவி செய்கின்றனை!

இதன்மூலம் ஆரியரின் இருண்ட துன்ப வாழ்வு தெளிவாகத்தெரிகிறது. வேத காலத்துக்குமுதலே தமிழர்கள் சிறந்த செல்வ வாழ்க்கையில் சிறந்திருந்தனர் என்பதற்கும் இருக்கு வேதமே சான்றாக உள்ளதைக்காண்போம்.

1."பொன்னணிகளாலும் மணிக்கலங்களாலும் தம்மை ஒப்பனை செய்து கொண்ட அவர்கள்(தமிழர்கள்) இந் நிலத்தை விரித்து ஓர் ஆடை விரித்தார்கள்"

 

ஈழத்தடிகளராரின் நுாலில் இருந்து பொ. முருகவேள் ஆசிரியர் ...... தொடரும்.....

 

 

 

தமிழின் வரலாறு

 

07.08.2011த.ஆ.2042--தமிழினத்தின் சிறப்பை அறிய வேண்டுமெனில் தமிழ் மொழியைப்பற்றி அறிதல் வேண்டும். மொழியின் இலக்கண கட்டமைப்பில் திகழக்கூடிய திகட்டாத இலக்கியங்களை அறிதல் நலம். இவைகளுக்கெல்லாம் தொடக்கமாகத் திகழும் தமிழ் வரிவடிவங்களைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது சிறப்பாகும். ஏனெனில் பிறிதொரு உதவி ஏதுமின்றி தமிழினம் தனக்காக, தானே முயன்று உருவாக்கிய மொழியே தமிழ். இத்தனித்துவமே தமிழினத்தின் சிறப்பு. இது குறித்து அறிய இதன் வரலாற்றை நான்கெனப் பகுத்து அதன் தோற்றத்தையும், தனித்துவத்தையும் விரிவாகப் பார்ப்போம். அவையாவன..

 

மொழி வரலாறு

இலக்கிய வரலாறு

இன வரலாறு

தமிழ் எழுத்து வரலாறு

 

 

 

மொழியின் தோற்றம்

ஒரு அமைப்போ, சமுதாயமோ தன் கருத்துக்களை பரிமாறிடவும், ஒத்த கருத்தைப் பகிர்ந்து கொள்ளவும் அவசியம் தேவை மொழி. தமிழர்கள் பேசிய மொழி எக்காலத்தைச் சேர்ந்தது, என்கிற வினாவுக்கு அறிஞருலகம் தெளிவாகவே விடை தருகிறது.

 

அகழ்வு ஆய்விலும் பல இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள், பாறை செதுக்கல்களில் உள்ள ஆதாரங்கள் கிடைத்த காலம் வரலாற்றுக் காலமெனவும், சான்றுகள் இல்லாத பழமையான மக்கள் வசித்த இருப்பிடங்கள், அங்கு கண்ட சீரற்ற கருவிகளால் கற்காலம் அதாவது கல்வி அறிவு, சிந்திக்கும் திறனற்ற வளர்ச்சியுறா காலத்தை பழைய கற்காலம், புதிய கற்காலம் என பிரித்து வழங்கிடுவர்.

 

சிந்தனை வளர்ச்சியே நாகரிக காலத்தின் தொடக்கம், அத்துடன் வேட்டை கருவிகளை சீராக செப்பனிட்டுப் பயன்படுத்தத் தொடங்கிய போது ஏற்பட்டதுதான் மொழித் தோற்றத்தின் காலமாகும்.

 

இவ்வாறான மொழியின் தோற்றம் ஏற்பட பல்வேறு கட்டங்களை புதிய கற்காலம் கொண்டிருந்தது. ஒலிகளைக் கூர்மையாக அறிந்து, புரிந்து கொள்வது தொடக்கமாகும். பின்னர் புள்ளினங்கள், விலங்குகளின் ஓசை போன்றே தாமும் ஒலி எழுப்ப முயன்று ஒலியை வெளிப்படுத்தியது ஒரு கட்டம். இதனைக் கேட்பொலிக் காலம் என்பர்.

 

செவியால் கேட்ட ஒலிக்குத்தக்கவாறு தாம் பார்த்ததை, கேட்ட ஒலிகளை நினைவில் தேக்கி, சிந்தித்து மறுபடியும் அவற்றை கண்ட போதும், கேட்ட போதும் சக மனிதருக்கு சுட்டிக் காட்டும் அல்லது அந்த உணர்வைப் பகிர்ந்து கொள்ளும், பரிமாறிக் கொள்ளும் காலமே சுட்டொலிக் காலம் எனலாம்.

 

கேட்பொலியின் செழுமையும் சுட்டொலியின் பயனும் இணைந்த போது அழுத்தமான சைகைகள் வாயிலாக உணர்வுகளை வெளிப்படுத்தும் காலம் தோன்றியிருக்கலாம்.

 

கேட்பொலி, சுட்டொலி, சைகைகளுக்கு பின் ஒரே விதமான ஓசை நயம் அச் சமூகத்தில் பகிர்ந்திடும் போது ஓசைகள் ஒரு வடிவாகி ஒரு மொழியாய் தோன்றியது. தமிழும் இவ்வாறு தான் தோன்றியதாக மொழியியல் ஆய்வில் தன்னையே ஒப்படைத்த தேவநேயப் பாவாணர் அவர்கள் கருத்துரைக்கிறார்.

 

 

 

இலக்கிய தோற்றம்

 

மனித மனங்களில் தோன்றும் கருத்துக்களின் பரிமாற்ற சாதனமே இலக்கிய பதிவுகள். இலக்கியம் என்பது எல்லோரும் அறியத்தக்க, அறியவேண்டிய ஒரு உண்மை போன்றதொரு கருத்து. அந்த கருத்தைச் சொல்பவரின் மேதைத் தன்மை, மேதைமையுடன் இணைந்த கற்பனை, கற்பனையை உருவகமாக்கும் ஒன்றைப் பற்றிய முழுமையான சேதி அறியும் ஆர்வம். இவைகளெல்லாம் ஒருங்கே சேர்ந்தால் தான் இலக்கியம் உருவாகும்.

 

இது போன்ற தன்மை கொண்ட ஏராளமான இலக்கியங்கள் வேறெந்த இயற்கை மொழியிலும் இந்தளவுக்குப் படைக்கப்படவில்லை. தமிழில்தான் உண்டு.

 

சங்க காலத்திற்கு முன்பே இலக்கியம் என்பது இருந்துள்ளது. அக்காலப்புலவோர் புனைந்த பல பாடல்கள் வாய் மொழியாக, வழிவழியாகக் கூறி இரசிக்கும் பண்பு மிகுந்திருந்தது. பின்னர் வாய்மொழி இலக்கிய காலத்தின் சீரிய மேம்பாடாக உருவானது பதிவு செய்து பாதுகாக்கும் ஏட்டிலக்கிய காலமாகும்.

 

ஏட்டிலக்கிய காலம் தொடங்கி பலநூறு ஆண்டிற்குப் பின் அறிவியல் மேம்பாட்டால் ஒரு சுவடி இலக்கியம் ஆயிரக்கணக்கான நூல் பிரதியாக மாறியது. இது இலக்கியப் பதிவு காலமாகும்.

 

இவ்வாறான இலக்கியப் பதிவின் போதுதான் மூல ஏட்டுச் சுவடிகள் பலவும் பதிப்பிக்கப்பட்டதுடன் மூல இலக்கியங்களுக்கு விளக்கவுரை, பதிப்புரை, பதவுரை என இலக்கியத் தளம் வாசிப்பிற்கு எளிதானது. தமிழின் சங்க இலக்கியம் அனைத்தும் செய்யுள் வடிவங்கள்.

இச் செய்யுள் வடிவ இலக்கியங்களுக்கு குறுகிய அடிகளைக் கொண்ட தனிப்பாடல்கள், நூற்றுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட பாடல்கள், தொடர் நிலைச் செய்யுளாக வரும் காப்பியங்கள் எனப்பல வகையுள்ளது.

 

இச்செய்யுள்களை படைக்கும் புலவர்கள் அதற்கென வகுக்கப்பட்டுள்ள இலக்கண நெறிகளைக் கையாண்டுள்ளனர். அந்த இலக்கண நெறிகள் இன்றும் கையாளப்பட்டு மரபு செய்யுள்களில் பாடல்கள் புனைகின்றனர்.

 

விருந்தே தானும்

புதுவது கிளந்த யாப்பின் மேற்றே

 

என தொல்காப்பியர் யாப்பு எனும் செய்யுள் படைப்புக்கு நெறிவகுக்கிறார். இதனால் எத்துறையாயினும் தமிழ் மொழியை அத்துறைக்கு ஏற்றவாறு பயன்படுத்திட இயல்கிறது.

 

 

 

இனத் தோற்றம்

 

மொழிதான் ஒரு இனத்தின் மூலம் மொழியைப் பயன்படுத்தும் இனக் குழுக்களை வகைப்படுத்தும் போது அம்மொழி பேசும் கூட்டம், சமூகம், நாட்டவர்கள் என்கிற பல உள்ளார்ந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு இனம் அடையாளம் காணப்படுகிறது.

இனங்கள் பேசும் மொழி இரு வகைப்படும் ஒன்று இயற்கை மொழி பிரிதொன்று உருவான மொழி.

இயற்கை மொழி பலவும் மனித இனத்தொடக்க காலத்திலிருந்து மக்கள் பயன்பாட்டில் இருப்பது.

உருவான மொழி பல இனத்திலிருந்து பிரிந்தவர்கள் கூடி தமக்குள் ஒரு பரிமாற்ற சாதனமாகப் பயன்படுத்தும் பொருட்டு உருவாக்கிக் கொள்ளும் மொழி. காட்டாக ஆங்கிலத்தைக் குறிப்பிடலாம்.

 

தமிழர் தமிழைத் தங்கள் மொழியாகக் கொண்டதால் தமிழினம் என சுட்டப்படுகிற்து. இயற்கை மொழிக் குடும்பத்தில் தமிழ் பழமையானது. அதன் பழமையின் கால அளவைத் தெளிவாக வரையறை செய்ய இயலாத அளவுக்கு பல்லாயிரம் ஆண்டுகால மனித நாகரீக காலத்தின் வரையரைகளான பழங்கற்காலம், புதிய கற்காலம் என்பவற்றோடு தொடர்புடையது.

 

மானுடவியல் ஆய்வாளர்கள் உலகளவிலான மானுட சமூகத்தை நான்கு பிரிவாக பிரித்து அறிவித்துள்ளனர்.

 

1.திராவிட இனம்

2.ஆப்பிரிக்க இனம்

3.மங்கோலிய இனம்

4.ஐரோப்பிய இனம்.

 

மேற்காணும் இந்த நிலஅளவிலான இனக்குழுக்களின்அடையாளம் உடல் அமைப்பு, தலைமயிரின் வடிவம், தோலின் நிறம், முக அமைப்பு என்கிற பன்முகத் தன்மையான ஆய்வில் மூலமாக விளங்கும். இந்த நான்கு இனப்பிரிவுகளில் தனித்த, ஒன்றுடன் ஒன்று கலந்த மனித இனங்களே இன்று உலகெங்கும் உள்ளனர்.

அந்த வகையில் க்வார்ட்ஸ் எனப்படும் இயற்கையாக நிலத்தில் உருவாகும் தனிமமான படிகக் கற்களை பழங்கால திராவிட இனம் பயன்படுத்தத் தொடங்கியது. நிலத்தில் விளையும் இந்த படிகக் கற்கள் உறுதியாகவும், கூர்மையாகவும் விளங்கத்தக்கது. இதனைப் பயன்படுத்திய காலமே பழங்கற் காலம். உலகில் அதே சமயம் பிற இனமக்களும் ஆங்காங்கு நிலத்தில் கிடைத்திட்ட கூர்மையான கூழாங்கற்கள், பாறைக் கற்களை வேட்டைக்குப் பயன்படுத்தினர்.

 

தொடக்க கால மனிதன் கரடுமுரடான கற்களைப் பயன்படுத்தி, பின்னர் பிரிதொரு கற்களால் ஏனைய ஆயுத கற்களைத் தயாரிக்கும் நிலைக்கு உயர்ந்தனர். இக்காலத்தை வரலாற்றாய்வாளர்கள் "லெவ்ல்லோசியன்" என்பர். வேட்டைக் கருவிகளை க்வார்ட்ஸ் கற்களில் தயாரிக்கத் தொடங்கிய திராவிட இனம் காலப்போக்கில் இதர பயன்பாட்டுக் கருவிகளையும் செய்யும் ஆற்றல் பெற்றது. திராவிடர்களின் நுண்ணறிவுத் திறன் வளர வளர கருவிகள் மட்டும் சீராகவில்லை, அவர்கள் உச்சரிக்கும் மொழிகளும் சீராகத் தொடங்கியது.

 

இவ்வாறுதான் திராவிட இனக் குழுக்களில் மூத்த மொழியான தமிழ் பேசப்பட்டு பெரியதொரு மனித இனத்தின் பயன்பாட்டில் விளங்கியது. காலப்போக்கில் திணை நிலங்களின் தன்மைகளுக்கேற்றவாறும் உணவிற்காகவும் நீர் நிலைகளை நாடி இடம் பெயரத் தொடங்கினர். இவ்வாறு இடம் பெயர்ந்து இந்தியா எங்கும் பரவிய திராவிட இனம், மூல மொழியான தமிழுடன் வேறு வகை ஒலிகளையும் சேர்த்து பிரிதொரு மொழிகளாகப் பயன்படுத்தத் தொடங்கியது.

 

திராவிட மொழிக் குடும்பத்தை மொழியியலார். தென் இந்தியத் திராவிடமொழிகள், மத்திய இந்திய திராவிட மொழிகள், வடஇந்திய திராவிட மொழிகள் எனப் பகுப்பார்கள். தென்னக திராவிட மொழிகளை இரண்டு பகுதியாக நோக்கப்படுகிறது. இலக்கிய வளமுள்ள திராவிட மொழிகள். இலக்கிய வளமில்லா திராவிட மொழிகள் என இதனை வரையறை செய்கின்றனர்.

 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவை இலக்கிய வளமிக்கவை.மலையின திராவிட மக்களால் பேசப்படும் தோடா, கோத்தர், படுகு, கேடகு, துளு, வர, கொலமி, நயினி முதலான மொழிகள் பேசப்படினும் இலக்கிய வளம் இல்லாதவை.அதே போன்று பலுகிஸ்தானில் திராவிட பழங்குடி மக்களால் பேசப்படும் பிரோகுய், மத்திய இந்தியாவில் பேசப்படும் பர்ஜி, ஒல்லரி, குய்யி, கோண்டி, பென்கோ, குவி, போர்ரி, கோய், குரூக், மோஸ்ரா முதலிய தொன்மை திராவிட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளதேயன்றி இலக்கிய வளம் இல்லாதவை.

 

பெருங்கற்காலத் தொடக்கத்திலேயே திராவிட மொழிகளின் தாயான தமிழ் சீரிய பயன்பாட்டில் விளங்கியுள்ளது. அச்சமயம் பதிவு செய்திடும் சாதனமோ, வழிமுறைகளோ, அதனை உருவாக்கும் சிந்தனையோ எழவில்லை. காலப்போக்கில் பாறைகளைப் பண்படுத்தும் நுட்பம் அறிந்த வெகுகாலத்திற்குப் பின்புதான் பாறையில் செதுக்கத் தொடங்கி இருத்தல் கூடும். இந்தப் பதிவுகளைச் செய்திடும் முன்பு தமிழ் மொழி மனங்களிலும், மனத்திரைகளிலும் நினைவாற்றல் எனும் திறனாலேயே பதிவு செய்யப்பட்டன. மனித மனம் ஒன்றை அறிந்தவுடன் அதனை மறவாமல் நினைவில் நிறுத்தும் பொருட்டு இயல்பான இலக்கண சூத்திரங்கள் தமிழ் மொழியில் அன்றே பயன்படுத்தியுள்ளனர்.

 

திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து பலமொழிகள் பிரிந்தாலும் மூலமொழியான தமிழ் இன்றளவும் தன் நயத்தை இழக்காமல் என்றும் இளமையாக விளங்கக் காரணமே அதன் இலக்கண கட்டமைப்புதான்.

இயற்கை மொழியாம் தமிழ் தன் குடும்பத்திலிருந்து பிற திராவிட மொழிகள் பிரிந்த போதும் எவ்வித மாற்றமும் இல்லாமல் எத்தகைய மாற்றங்களுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்ளும் வகையில் உரிய கட்டமைப்புடன் இயங்குவதால் கி.மு.ஆயிரமாவது ஆண்டுகளில் அதாவது கற்காலப் பண்பாட்டின் இடைக் காலத்திலேயே கிளை மொழிகள் பிரிந்தாலும் தனித்துவமாக இன்றும் துலங்கி வருகிறது.

இவ்வாறு மொழி மட்டுமே துலங்கவில்லை. தமிழும் அதைப் பேசும் தமிழினமும் உலகெங்கும் பரவி உலக மொழிகளில் தனக்கென ஓர் உன்னதமான நிலையை அடைந்துள்ளது. தமிழ் மொழியின் வளர்ச்சிதான் தமிழினத்தின் வளர்ச்சியும் என்பது நோக்கத்தக்கது.

 

 

 

வரிவடிவ வரலாறு

 

தமிழ் எழுத்துக்கள் இன்றைய வடிவிற்கு மாற்றம் காண பல நூற்றாண்டுகளைக் கடந்தன. ஒலியாய் விளங்கிய பேச்சுத் தமிழ் மொழி வரிவடிவாய் உருப்பெற்றிட்டது எக்காலம் எனும் ஆய்வு இன்னமும் தொடர்கிறது. எனினும் (ஒலியை வரிவடிவமாக்கும் திண்மை, அச்சிந்தனை எக்காலத்தில் உருவாகி இருக்கலாம் என்று யூகிப்பதற்கும் அந்த யூகங்கள் நிலை பெற்றிடவும் ஏராளமான சான்றுகள் அகழ்வு ஆய்வுகளில் கிடைத்துள்ளன.)

பொதுவாக தமிழ் எழுத்து வரிவடிவத்திற்கான சிந்தனை வடக்கிலிருந்து தென்னகமாம் தமிழ் நிலத்தில் புகுந்ததாக பல வரலாற்று தொல்லியலார் கூறுகின்றனர். எனினும் பேரறிஞர் பாவாணரின் கூற்றுப்படி மனித நாகரீக தோற்றமே தென்னகத்தில் தான் நிகழ்ந்தது. எனவே எத்தகைய ஆய்வுகளும் இங்கிருந்து தான் தொடங்க வேண்டும் என்கிறார். இது குறித்து அவர் கூறியது

 

"ஒரு வீட்டிற்கு ஆவணம் போன்றதே ஒரு நாட்டிற்கு உரிமை வரலாற்று சான்றாகும்.ஆயின் ஓர் ஆவணத்தில் எதிரிகளால் ஏதேனும் கரவடமாகச் சேர்க்கப்படலாம். அது போன்றே ஒரு நாட்டு வரலாறும் பகைவரால் அவரவர்க்கு ஏற்றவாறு மாற்றப்படலாம். ஆதலால் இவ்விரு வகையிலும் உரிமையாளர் விழிப்பாயிருந்து தம் உரிமையைப் போற்றிக் காத்துக் கொள்ள வேண்டும்" என்கிறார்.

 

இவருக்கு முன்னோடியாக பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, பி.டி.சீனிவாசய்யங்கார், வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் போன்ற அறிஞர் பெருமக்களும் கூறியுள்ளனர்.

இவர்கள் கூற்று மெய்யே என்பது போல் அரிக்கமேடு, உறையூர் தொடங்கி ஈழம் வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் காணப்பட்ட திராவிட வரிவடிவம் தமிழே என மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

அரிக்கமேட்டில் கிடைத்த பொருட்களில் பொரித்துள்ள எழுத்து வரி உருக்கள் கி.பி.முதல் நூற்றாண்டுக்கும் முன்னம் பொரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதே போன்ற எழுத்துருக்கள் ஈழத்தில் நிகழ்ந்த அகழ்விலும் கண்டறிந்துள்ளனர் என்பதை இலங்கை வரலாற்று அறிஞர் கருணா இரத்தினா சுட்டிக் காட்டுகிறார்.

 

புத்தர் காலத்திற்கு முன்பே கி.மு.5ஆம் நூற்றாண்டில் அதாவது அசோகரின் காலத்திற்கு சில நூற்றாண்டிற்கு முன்பே திராவிட நிலத்தில் வழக்கிலிருந்த மொழிகளைப் பற்றியும் வரிவடிவங்கள் பற்றியும் அசோகர் காலத்து பவுத்த நூலான லலிதவிஸ்தாரம் அன்றைக்கு வழக்கில் இருந்த பிராமி, திராவிட வரிவடிவங்களுடன் மொத்தம் அறுபத்து நான்கு வரிவடிவம் காணப்பெற்றதாகக் கூறுகிறது. அதைப் போன்றே சமண நூல் சமவயாங்க சூக்தமும், பன்னவான சூக்தமும் கி.மு.5ஆம் நூற்றாண்டில் பதினெட்டு வரிவடிவம் காணப்பட்டதாகவும் அதில் திராவிடமும் ஒன்று எனக் கூறுகிறது.தமிழ்கத்திலும், ஈழத்திலும் காணப்பட்ட தமிழ் வரிவடிவங்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்திருந்தன என்கிறார் ப்யூலர் எனும் அறிஞர்.

 

தமிழின் தொன்மை வரிவடிவம் தொடர்பான ஆய்வுகள் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் பெருமளவு தொடங்கின. தொடக்கத்தில் கல்வெட்டு, பாறை செதுக்கல் வரிவடிவங்களைப் படித்து விளக்கம் கூறி ஆய்வுக்கு வழிவகுத்தவர் பிரின்செப் எனும் ஆய்வாளராவார். இவ்வாறு ஆய்வில் வெளிப்பட்ட பல உண்மைகளை மேலும் தெளிவாக அறிஞர்கள் ஆய்வு செய்து ஒரு பட்டியலை வெளிட்டுள்ளனர். அதில் காலம் தோறும் தமிழ் வரிவடிவம் அதைப் பதிவு செய்யும் பொருட்களையொட்டி மாறுதலைக் கண்டே வந்துள்ளதை படத்தில் காண்க.

 

19ஆம் நூற்றாண்டு வரையுள்ள இந்த வரிவடிவங்கள். 17ஆம் நூற்றாண்டில் அச்சேறிய போது சுவடி எழுத்துக்களை ஒட்டியே காணப்பட்டன. பின்னர் வீரமா முனிவர் தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்தில் சீர்மை கண்டவுடன் தமிழின் வரிவடிவம் மேலும் அழகு பெற்றன. அது மேலும் ஹண்ட் எனும் அச்சுவியலாளரால் செம்மையாக ஈய அச்சுருக்களின் உதவியால் அதன் மொத்த வடிவமும் ஓர் உலகார்ந்த கட்டமைப்புக்குள் உருப்பெற்றது. காலங்கள் மாறிடினும் இன்று கணியத்தில் அழகுற தமிழ் தன் இளமையான தோற்றப் பொலிவுடன் விளங்கி வருகிறது.

தமிழர் வீழ்ச்சி ஏன்?

 

நம் குமுகாய வீழ்ச்சிக்குத் காரணங்களாக இருப்பவை யாவை?

 

1.பொருளியல் தாக்கமும் அதனைத் தேடும் போராட்டத்தில் மன உழைச்சல்.

 

2.வேலைப்பளு மற்றும் குடும்பச் சிக்கல்கள் காரணியமாக மொழி.இனம்பற்றிச் சிந்திக்காமை.

 

3.மனக்குழப்பங்கள்..தெளிவான சிந்தனைப் போக்கின்மை.

 

4.தமிழரிடையே கூட்டுறவு மனப்பான்மை சிதைவினால்.. தன்னலப் போக்கும் நானுணர்வும் மலிந்துவிட்டது.

 

5.புறத்தாக்கங்கள் அரசியல் கேடுகள் திரைப்படத்தீமையினால் பண்பாட்டுதச் சீர்ழிவுகள்.

 

6.எல்லாத்துறையிலும் ஒழுங்கற்ற தமிழுணர்வற்ற தலைமைத்துவம் சந்தர்ப்பவாதம்.

 

7.திட்டமிடாதவாழ்வு வீண்செலவுகள் கட்டொழுங்கு கிடையாது.

 

8.தொலைக்காட்சி வானொலி காணொளி போன்றவை பரப்பும்.. மூடத்தனங்கள் பண்பாட்டிலன்றி

கலாச்சார உணர்ச்சியில் மிதமிஞ்சிய பற்று.

 

9.தமிழுக்கு அரசுரிமையில்லாத நிலை அதனால் மொழியைப் புரக்க எண்ணுவதில்லை.

 

10.பிறமொழிகளின் ஆதிக்கமும் அதன் மீதுதான் மோகம்கொண்டு அலைதல்.

 

11.அக்கம்பக்கம் நடக்கும்நிகழ்வுகளால் மனச்சீர்ழிவுகள்.

 

12.பல கடவுள் நம்பிக்கையால் ஏற்பட்டமனவேறுபாடுகள் சகோதரத்துவ அண்ணன் தம்பி

மனப்பான்மைகிடையாது.மதவியல் கோளாறுகள் மனதுகளை வேறுபடுத்தியுள்ளது.

 

13.இந்தியன் என்ற போலி உணர்வில் தமிழன் நலன் கருதாமை.

 

14.தாய்மொழி கற்காததால் சிறு அகவை முதல் தளர்ச்சியான மனவியல் கேடுகள் நலிவுகள்.

 

15.பண்பாடுற்றபெற்றோர்களால் பண்பாடற்றபுல்லறிவு மக்கள் உருவாக்கப்படுதல்.

 

16.அறிவும் செறிவும் இல்லாது சாதியக் குடும்பங்களாக தமிழர் பிரிந்து கிடப்பது.

 

17.தமிழியம் காக்க முன்வராது அரசியலோடும் சினிமாவோடும் ஒதுங்கியிருப்பது.

 

18.தமிழிய வாழ்வுக்குப்புறம்பான வேலைகளில் அமர்ந்து பதவியு உதவியும் பெறத் தம்மை

அடகுவைத்து குமுகாயத்தை மறந்துவிடுவது அல்லது காட்டிக்கொடுப்பது.

 

19.அஞ்சாமை துணிவுடைமை கொண்டோர் நம் குமுகாயத்தில் மிகக்குறைவு.

 

20.தமிழர் வரலாறு  படிப்பதில்லை தமிழறம் போற்றும் திருக்குறளைக்கற்பது இல்லை

தமிழிய நூல்களை வாங்கிப்படிப்பதில்லை.

 

21.தமிழரைத்தமிழர் மதித்து நடப்பதில்லை; சான்றோர் வாய் மொழி போற்றுவதில்லை.

 

22.கல்வியில்விழிப்பற்ற மனத்தினராக வாழும் குடும்பச்சுழல்.

 

23.சொதிடத்தை நம்பி தன்னம்பிக்கை இழந்து சோம்பேறிகளாக இருப்பது.

 

24.மகிடி மாயையில் மிகுதியான மருள்கொண்டு முடத்தனமான வீண் செலவுகளைச் செய்தல்.

 

25.மொழி இன வரலாற்றுப் பெருமையினை நிலைநிறுத்த நாடமைத்து வாழமுற்படாத அடிமைச்சிந்தை.

 

26பகுத்தறிவு இல்லாது எல்லாம் தலைவிதியென்று  இருந்துவிடல்.

 

27. சிலரைத்தவிர பேசுவதையும் எழுதுவதையும் வயிற்றுப் பிழைப்பாக்குதல் துணிவின்றி அடங்கல்.

 

 

 

 

தமிழரின் கடல் ஆய்வு

 

21.04.தி.ஆ204412.05.கி.ஆ2013ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர். முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது. கப்பல் கட்டுமானத்துக்கு மற்ற நாட்டவர் 2 மரங்களைப் பயன்படுத்த, தமிழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். பாறைகளில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழட்டி விடும்படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர். பிற்காலத்தில்தான் தென்னிந்தியர்களிடம் இருந்து ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டனர். தெப்பம் என்ற சொல், பல்வேறு மொழிகளில் படகைக் குறிப்பதாகவே உள்ளது. கிரேக்கத்தில் பாண்டியன்-1, 2 என்ற மன்னர்கள் ஆண்டுள்ளனர். அங்கு சிற்றரசர்களாக பல்லா என்ற வம்சத்தினர் ஆண்டுள்ளனர். பல்லா இனத்தவர் கிழக்கில் இருந்து வந்த வேளாண் தொழில் சார்ந்தவர்கள் என கிரேக்க பழம் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகடூரில் இரும்பு சார்ந்த நாகரிகம் இருந்துள்ளது. அப்பகுதியை ஆண்டவன் அதியமான். அவன் மகன் பெயர் எழினி. துருக்கியில் இரும்பு சார்ந்த பகுதி இன்றும் அதியமான் என அழைக்கப்படுகிறது. இரும்பு உருக்கும் ஆலைப் பகுதி எழினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பிரேசிலில் உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன.யப்பானில் குரில் என்ற பகுதியில் மருதை என்ற ஊர் உள்ளது. சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் அமைந்துள்ளன. பாண்டியன் என்ற சொல்லுக்கு சீனத்தில் வேர்ச்சொல் இல்லை. ஆகவே இது தமிழகம் சார்ந்த பெயர் என அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார். கி.பி. 45-இல் இந்தோனேசியாவை சிறிமாறன் என்ற தமிழ் மன்னன் ஆண்டுள்ளான். ஆசுதிரேலியாவில், குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. பெரு, சிலியில் நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன. பழந் தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன. ஆமைகளே தமிழரின் கடலோடும் வாழ்வுக்கு பெரும் உதவிகரமாக இருந்திருக்கின்றன. பாண்டியர்கள் காளை, மீன் ஆகியவற்றோடு ஆமை இலச்சினைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமைச் சிற்பங்கள் உள்ளன. கிரேக்க, பாண்டிய நாணயங்களில் ஆமை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழக பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். இந்த வழக்கம் விலங்குகளில் ஆமைக்கு மட்டும் உண்டு. இனப் பெருக்கத்துக்காக ஆமைகள் தாங்கள் பிறந்த பகுதிக்குச் செல்கின்றன. தமிழகத்தில் மட்டும் இந்த பண்பாட்டுக் கூறு உள்ளது ஆராயத்தக்கது. பிராங்ளின் ஜோசப், கொலம்பஸ் ஆகியோர் கண்டறிந்த கடல் வழித்தடங்களும், ஆமைகளின் கடல்வழித்தடமும் ஒன்றுதான். ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் கடலோரப் பகுதிகளே பழங்காலங்களில் துறைமுகமாகச் செயல்பட்டுள்ளன. பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை வெட்டி கடலில் போட்டால் அவை தாமாகவே தனுஷ்கோடி வந்தடைந்துள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த கடல் நீரோட்டத்தைத் தமிழன் பயன்படுத்தியுள்ளான்