குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்த் தாய் சிலை அமைக்கப்படும் மதுரையில் முதல்வர் யெயலலிதா இதன் கரு

கருணாநிதி தான் என்கின்றது குமரிநாடு.நெற் இணையம். திருவள்ளுவர்சிலைக்கு  போட்டியாக ,முள்ளிவாய் கால்   முற்றம் நெடுமாறனுக்க எதிராக தமிழ்த்தாய் சிலை  ஆர்குத்தியும் தமிழுக்க அரிசி ஆகட்டும். தமிழப்புத் தாண்டிற்கு போட்டியாக...சித்சிரைப்புத்தாண்டு பிராமண வாக்ககளைக்கவர எனவே தமிழ் பிராமணத்திக்கு முதடு என்பதை தமிழக மக்கள் உணரவேண்டும்.

“சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  தமிழ்த் தாய் சிலை அமைக்கப்படும்” என்று முதல்வர் செயலலிதா அறிவித்துள்ளார்.(14/05/13)

 

தமிழ்நாடு சட்டப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் யெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:

 

 

 

திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகவும், சீரிளமை குன்றாத மொழியாகவும், வளமையும் தூய்மையும் மிக்க மொழியாகவும், மொழிக்கு மட்டுமல்லாமல் வாழும் நெறிக்கும் இலக்கணம் வகுத்த மொழியாகவும், உலக மொழிகள் அனைத்திலும் தொன்மை மிக்க மொழியாகவும் விளங்குகின்ற தமிழ் மொழிக்கு பெருமை சேர்ப்பதிலும், அதனை உலகெங்கும் பரப்புவதிலும் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

 

 

 

பெருமை வாய்ந்த தமிழ் மொழியை சிறப்பிக்கும் வண்ணம், அமெரிக்கா நாட்டின் பெருமையையும் புகழையும் உலகளவில் பரப்பும் வகையில் அமைந்துள்ள சுதந்திர தேவி சிலையைப் போல, Statue of Liberty  போல  தமிழர்களின் நாகரீகம், பண்பாடு,  இலக்கியச் செல்வங்கள், கட்டடக் கலைத் திறன் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக் காட்டும் வகையில்,  சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  தமிழ்த் தாய் சிலை அமைக்கப்படும். மேலும், ஐவகை நிலங்களான குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை ஆகியவற்றின் மாதிரிகளை உருவாக்கி தமிழர்களின் தொன்மைச் சான்றுகளாய் விளங்கும் சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள மரம், செடி, கொடிகளுடன் தமிழ்த் தாய்ப் பூங்கா ஒன்றும் அங்கு உருவாக்கப்படும்.

 

சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பாளருக்கு ஜி.யு.போப் விருது

 

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டு தோறும் சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு திருவள்ளுவர் விருது, திரு.வி.க. விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, பாரதியார் விருது, கி.ஆ.பெ. விசுவநாதம் விருது ஆகியவை திருவள்ளுவர் திருநாளிலும்,  தமிழ்த் தாய் விருது, கபிலர் விருது,  உ.வே.சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது ஆகியவை சித்திரைத்  தினத்தன்றும் வழங்கப்படுகின்றன.  அந்த வகையில், திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து திருக்குறளை பிற நாட்டு அறிஞர்களும் பாமரர்களும் புரிந்து கொள்ள வழிவகை செய்தவரும், அற நெறிக் கருவூலமான நாலடியார் மற்றும் திக்கெட்டும் தமிழ்ப் புகழ் பரப்பும் திருவாசகம் ஆகியவற்றை மொழி பெயர்த்தவரும் ஆன அயல்நாட்டு தமிழ் அறிஞர் திரு. ஜி.யு. போப்பின் தமிழ்த் தொண்டை போற்றும் வகையில், அயல் நாட்டு மொழிகளில் தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்கும் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பாளர் ஒருவருக்கு ஜி.யு.போப் விருது  வழங்கப்படும்.  விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாய்,  தங்கப் பதக்கம்,  தகுதியுரை, பொன்னாடை ஆகியவை வழங்கப்படும்.  இதற்கென ஒரு லட்சத்து  50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த விருது சித்திரைத் திருநாள்  அன்று வழங்கப்படும். தைப்பொங்கல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்பது வெள்ளிடை மலை.

 

தமிழ் அறிஞருக்கு உமறுப் புலவர் பெயரில் விருது

 

இஸ்லாமிய தமிழ்க் காப்பியங்களில் சிறந்த காப்பியமான சீறாப் புராணத்தை இயற்றிய உமறுப் புலவர் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை போற்றும் வகையில், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றி வரும் தமிழ் அறிஞர் ஒருவருக்கு உமறுப் புலவர் பெயரில் விருது வழங்கப்படும். விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாய், தங்கப் பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும். இதற்கென ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த விருது சித்திரைத் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு அன்று வழங்கப்படும். வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவிட  வகை செய்யும் வகையில்  கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ என்ற பெயரில் ஒரு விருது வழங்கப்படும்.  விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாய், தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவை வழங்கப்படும். இதற்கென ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த விருது சித்திரைத் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு அன்று வழங்கப்படும்.

 

இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் தமிழ்க் கல்வி வளர முதல் நடவடிக்கையாக டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 2003 ஆம் ஆண்டு 50 லட்சம் ரூபாய் நிதி எனது அரசால் வழங்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து, ஒரிசா, உத்தரபிரதேஷ், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை நிறுவிட மானியங்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளன.  ஆந்திராவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் தமிழ் அறிஞர் மு.வ. அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்த் துறை தொடங்கப்பட்டு தற்போது பொன்விழா கண்டுள்ளது. இத்தமிழ்த் துறையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் முதுகலை,  முனைவர் பட்டப் படிப்பு  படித்து வருகின்றனர். ஆனால் தமிழ்த் துறையில் போதிய அளவு ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. எனவே அங்கு தமிழ்ப்  படிக்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில்  கொண்டும்,  வருங்காலத்தில் ஆந்திர மாநிலத்தில்  தமிழ் மொழியை வளர்ப்பதைக் கருத்தில் கொண்டும், திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைக்கு

3 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நிதி உதவியாக ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

 

தமிழர் பண்பாட்டையும் நாகரீகத்தையும் போற்றி வளர்த்து வரும் டெல்லி தமிழ்ச் சங்க வளாகத்தின் நுழைவாயிலில் தமிழர் தம் கட்டடக் கலையை வெளிப்படுத்தும் விதமாக தோரண வாயில் அமைத்திட வேண்டும் எனவும் அதற்கு தமிழக அரசு உதவிட வேண்டும் எனவும் தில்லி தமிழ்ச் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. அவர்களின் கோரிக்கையை ஏற்று டெல்லித் தமிழ்ச் சங்கத்திற்கு தோரண வாயில் கட்ட நிதி உதவியாக  25 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

 

பேரறிஞர் அண்ணாவால்  1968ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலகத் தமிழ்  மாநாட்டின் போது அறிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழர் தம் வாழ்க்கை வளத்தை எடுத்துக் கூறும் தொல் காப்பியத்தின் பெயரால் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்விருக்கை ஏற்படுத்தப்படும். தொல்காப்பியத்திற்கு எழுதியுள்ள பல்வேறு விளக்க உரைகளை ஒன்று சேர்த்து முறைப்படுத்துவது, பிற பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தொல்காப்பியம் குறித்தான பயிலரங்குகள், கருத்தரங்குகள் நடத்துதல்  போன்ற பல்வேறு தமிழ் வளர்ச்சிப் பணிகள் இந்த ஆய்விருக்கையின் மூலம் மேற்கொள்ளப்படும். இதற்கென உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 50 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக வழங்கப்படும். நாட்டிற்காக பெருந்தொண்டாற்றி பல்வேறு தியாகங்களைச் செய்த தலைவர்கள் மற்றும் சான்றோர்களை கவுரவிக்கும் வகையிலும்,  வருங்கால சந்ததியினர் அவர்களின் தியாகங்களை அறிந்து கொள்ளும் வகையிலும் நினைவிடங்கள், நினைவு இல்லங்கள் மற்றும் மணி மண்டபங்களை அரசு உருவாக்கிப் பராமரித்து வருகிறது.

 

அந்த வகையில், வாள் வீச்சு, அம்பு எறிதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் என பல்வேறு போர்க் கலைகளை கற்றறிந்தவரும், பல மொழிகளில் புலமைப் பெற்றவரும், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெயரை பெற்றவரும், சிவகங்கை சீமை மன்னர் பதவியை வகித்தவருமான வீர மங்கை வேலு நாச்சியார் அவர்களுக்கு 80 லட்சம் ரூபாய் செலவில் சிவகங்கை மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தேன்.  இதன்படி,  80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

இந்தத் தருணத்தில், 8.4.2013 அன்று வினாக்கள் – விடைகள் நேரத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் சு. குணசேகரன், வீர மங்கை வேலு நாச்சியார் நினைவைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் அரசு விழா நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்தார். இவரது கோரிக்கையை ஏற்று, சுதந்திர போராட்ட வீரர் வீர மங்கை வேலு நாச்சியாருக்கு சிவகங்கை மாவட்டத்தில் நினைவுச் சின்னம் அமைக்கின்ற பணிகள் முடிக்கப் பெற்றவுடன், அவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்.

 

ஏறத்தாழ 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிட வளாகத்திற்குள் உள்ள 3 ஏக்கர் பரப்பளவிலான இடம் பயன்பாட்டில்  இல்லாத நிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டும், இங்கு வரக் கூடிய லட்சக்கணக்கான மக்களை மகிழ்வூட்டும் வகையிலும், அந்த இடத்தினை மேம்படுத்தி இயற்கை எழில் கொஞ்சும் பூங்கா அமைக்கப்படும்.

 

மேற்காணும் நடவடிக்கைகள் தமிழ் மொழியின் பெருமையையும், தமிழ் அறிஞர்களின் பெருமையையும் உலக அரங்கில் எடுத்துச் செல்ல வழி வகுப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்மை பயக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

அமெரிக்க சுதந்திர தேவி சிலையின் உயரம் 151 அடி. இதன் அடித்தளம் மட்டும் 65 அடி. 90.7 டன் செம்பும், 113.4 டன் இரும்பும் கலந்து இச்சிலை உருவாக்கப்பட்டது. அதன் தலையில் உள்ள கிரீடத்தில் இருக்கும், 7 நீட்சிகள், 7 கடல்களையும், 7 கண்டங்களையும் குறிக்கும். கையிலிருக்கும் புத்தகம், அறிவையும்; அதிலிருக்கும் தேதியான, 1887, ஜூலை, 4 என்ற தேதி, அமெரிக்கா உருவான நாளையும் குறிக்கிறது. 1902ம் ஆண்டு வரை, இச்சிலை கலங்கரை விளக்கமாக பயன்படுத்தப்பட்டது. தற்போது, அமெரிக்காவின் பெருமையை பரைசாற்றும் சின்னமாக கருதப்படும் இந்த சிலை, சுற்றுலா பயணிகளுக்காக அருங்காட்சியகமாக செயல்படுகிறது.

 

திருவள்ளுவர் சிலை

அதே போல், கன்னியாகுமரியில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து, 30 அடி உயரமுள்ள பாறை மீது, 133 அடிஉயரத்தில், திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையை அமைக்கும் பணி, 1990ம் ஆண்டு துவங்கி 2000ம் ஆண்டில் முடிந்தது. பீடம், 38 அடி உயரம்; இது, திருக்குறளின் அறத்துப்பாலின், 38 அதிகாரங்களை எடுத்து காட்டுகிறது. பீடத்தின் மேல் நிற்கும், திருவள்ளுவர் சிலை, 95 அடி உயரம்; இது, திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின், 95 அதிகாரங்களை எடுத்து காட்டுகிறது. இச்சிலை, 3,681 கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலைகளைப் போல், தமிழ்த் தாய் சிலையும் அமைக்கப்படும் என, தெரிகிறது.

 

 

 

முதல்வர் யெயலலிதாவுக்கு மதுரை ஆதீனம் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து ஆதீனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது;

 

மதுரையை ஆண்ட கூன் பாண்டிய மன்னனின் துணைவி பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியாரின் அன்பு அழைப்பை ஏற்று மதுரை வந்து, ஆதீனத்தை நிறுவியருளி, சைவத்தையும், தமிழையும் நிலைநாட்டிய மதுரை மாநகரில், தமிழ்த்தாய் சிலை நிறுவப் பெறுவது மிக மிகப் பொருத்தமான, பாராட்டுக்கு உரிய செயலாகும். இத்தகு உயரிய முதல் அமைச்சர் அவர்களின் செயலுக்கு மனமுவந்த பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அது மாத்திரமல்ல, ஐவகை நிலங்களான குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை ஆகியவற்றின் மாதிரிகளை உருவாக்கி, தமிழர்களின் தொன்மைச் சான்றுகளாய் விளங்கும் இலக்கியங்களில் குறிப்பிடப்பெற்றுள்ள மரம், செடி, கொடிகளுடன் கூடிய தமிழ்த்தாய் பூங்கா அமைப்பதும் மிகப் பொருத்தமானதாகும்.

 

மேலும், 1840, 1841, 1842ஆம் ஆண்டுகளில் மதுரைக்கு வருகை தந்த  அயல்நாட்டுத் தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் ஜி.யூ. போப் அப்போத, ஆதீனத்தில் எழுந்தருளி அருளாட்சி செய்து கொண்டிருந்த 288ஆம் குருமகாசன்னிதானம் அடிகாளார் ஆறுமுக சிறி ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகளைத் தரிசித்து, சைவ சிந்தாந்தம் பற்றியும், தமிழ்மொழியின் உயர்வு பற்றியும் கலந்துரையாடி மகிழ்ந்து, தமது ஆழ்ந்த விருப்பத்தையும் தெரிவித்து, உலகிலேயே முதன்முதலில் திருக்குறளையும், திருவாசகத்தையும், நாலடியாரையும் ஆங்கிலத்திலே மொழிபெயர்த்து, 288ஆவது பட்டத்து குருமகாசன்னிதானம் அவர்களால் ‘’ சைவ சித்தாந்த மகாந்தி’’ என்னும் விருதினைப் பெற்றுச் சிறப்படைந்த தமிழ்மொழிக்கு அருந்தொண்டாற்றிய அப்பெருமானாருக்கு, நமது தமிழக முதல்வர் யெயலலிதா அவர்கள் மேலும் மேலும் சிறப்புச் செய்வது, பெரிய உயரிய வைரக்கல் ஒன்றுக்கு பட்டை தீட்டி ஒளிரச் செய்கின்ற பெருஞ்செயலாகும் என, மதுரை ஆதீனகர்த்தர் பாராட்டியுள்ளார்.