குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

தலைகளுக்குமேல் தொங்கிய தூக்குக் கயிறுகளை தவிடு பொடியாக்கிய தாய்: தமிழக முதல்வருக்கு உலகத் தமிழ்

பண்பாட்டு இயக்கம் பாராட்டு[ வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2014, 03:24.18 AM GMT ]ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினி உள்ளடங்கிய ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு எடுத்துள்ள, மேலும் எடுக்கப் போகின்ற உடனடி நடவடிக்கைகளை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வாழ்த்துகின்றது.

மேற்படி நடவடிக்கைளை எவ்வித தாமதமும் இல்லாமல் எடுத்த முதல்வர் ஜெயலலிதா அவர்களை தமிழகம், தமிழீழம் மட்டுமல்ல, உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்கள் வாழ்த்தியும் பாராட்டியும் மகிழ்ந்து கொண்டிருக்கும் இந்தவேளையில், எமது இயக்கம் தங்களை வாழ்த்துகின்றது.

 

அந்த அப்பாவிகளின் தலைகளுக்குமேல் தொங்கிக் கொண்டிருந்த தூக்கு கயிறுகளை தவிடு பொடியாக்கிய தாய் நீங்கள் என்று வாழ்த்துவதிலே எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மகிழ்ச்சியடைகின்றது.

 

இவ்வாறு முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முருகன்,சாந்தன்,பேரறிவாளன் மற்றும் நளினி உள்ளடங்கிய ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா எடுத்துள்ள முயற்சிகளுக்கு தாமதமற்றதும் சிரத்தை மிகுந்ததுமான செயற்பாடுகளுக்கும் நன்றி உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேற்படி இயக்கத்தின் செயலாளர் நாயகம், ஜேர்மனி வாழ் திரு. துரை கணேசலிங்கமும் அனைத்துலக ஊடகப் பொறுப்பாளர், கனடா வாழ் திரு ஆர். என். லோகேந்திரலிங்கமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும், தூக்கு தண்டனைக்கு ஆளாகி சிறைக் கொட்டடியில் தவித்த எமது தமிழகத்து மற்றும் ஈழத்து உறவுகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருடைய தூக்குத் தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் வெளியிட்டிருக்கும் உத்தரவு உலகத் தமிழர்களின் இதயங்களில் தேன்வார்த்தது போன்ற உணர்வை தந்துள்ள இந்தவேளையில்,

 

வேலூர் சிறையில் வாடும் ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அரசு தீவிரமான நடவடிக்கை எடுத்துள்ளமை உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனங்களில் பூரணநிறைவு ஏற்பட்டுள்ளது.

 

நமது தமிழக முதல்வர் இதற்கு முன்னரும் இவ்வாறான நற்காரியங்களை ஆற்றியுள்ளார் என்பதற்கு பலசான்றுகள் உள்ளன. ஏற்கனவே இலங்கையின் போர்க்குற்றத்தைக் கண்டித்தும், மூவர் உயிர் காக்கவும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஏழு பேரையும் விடுவிக்க எடுத்திருக்கும் நடவடிக்கை உலகத் தமிழர்கள் பாராட்டும் வகையில் அமைந்துள்ள இந்தவேளையில்,

 

பலர் ஆனந்தக் கண்ணீர் வடிப்பதையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது. இந்த மூவரின் உயிர் காக்கவும் சிறையில் வாடும் இதர நால்வரை மீட்கவும் தமிழக மக்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட போராட்டங்களுக்கு கிடைத்தவெற்றி இது.

 

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஏனைய தலைவர்களைப் போல் அல்லாது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களின் தலைகளுக்குமேல் தொங்கிக் கொண்டிருந்ததூக்குக் கயிறுகளை அறுத்து எறிந்திருக்கின்றார்.

 

இந்தகைகளுக்காக எத்தனையோ தமிழக உறவுகள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்துள்ளார்கள். எனவே இந்தவேளையில் அந்ததியாகிகளுக்கும் எமது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

இவ்வாறான தீர்ப்புகள் மற்றும் மாற்றங்கள் என்பன நமக்கு பல பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது. எம்மைப் பாதிக்கும் எத்தகைய கொடிதான விடயங்களையும் ஒருமித்த ஒற்றுமையுடனும் உணர்வு கொண்ட போராட்டங்களாலும் தகர்க்கமுடியும் என்பதை இந்த உலகுக்கே எமது ஒப்பற்ற தமிழனம் எடுத்துக் காட்டியுள்ளது என்பதைநாம் உணரவேண்டும்.

 

முதல்வர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக  அரசின் கோரிக்கையைஏற்று இந்திய மத்திய அரசு உடனடியாக நமது ஏழு உறவுகளையும் விடுவிக்க துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எமது கோரிக்கையையும் எமது இயக்கத்தின் சார்பில் சமர்ப்பிக்கின்றோம்.

 

இறுதியாக மனதில் உறுதியும் தன் செயற்பாடுகளில் நம்பிக்கையையும் கொண்டு தனது முதல்வர் பதவியை வகித்துவரும் மாண்புமிகுமுதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஈழத்தமிழ் மக்கள் தங்கள் தாயகத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு அவசியமான அடிப்படை உரிமைகள் பெற்றுத் தர இந்திய மத்திய அரசுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற எமது தாழ்மையான வேண்டுகோளையும் அவரிடம் சமர்ப்பிக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.