குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு எதிரணி இணங்கவில்லையென சம்பந்தரால் கூறமுடியுமா?: வீரவன்ச சவால்

"வடக்கு கிழக்கை இணைத்தல், புலி உறுப்பினர்களை விடுவித்தல், அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கல், சர்வதேச சாசனங்களில் கையெழுத்திட்டு சட்டங்களை இயற்றுதல் போன்ற கோரிக்கைகளுக்கு எதிரணி வேட்பாளர் உடன்படவில்லை என்று, முடியுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்மந்தன் கூறட்டும் பார்க்கலாம் " என்று சவால் விடுக்கின்றோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் தொடர்பான இணை ஊடக பேச்சாளரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். அனுதாபத்தைத் தேடிக்கொள்ளும் பொருட்டு எதிரணி வேட்பாளரின் கூட்டத்திலும் அவர்களின் ஊடகவியலாளர் மாநாடுகளிலும் குண்டு தாக்குதலை அவர்களே மேற்கொள்ள திட்டமிடுவதாகவும் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் விமல் வீரவன்ச எம்.பி. குறிப்பிட்டார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று புதன்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

"எதிர்வரும் 25 ஆம் திகதி வாக்காளர்களின் அடையாள அட்டைகளை அபகரிப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிப்பார்கள் என நம்பப்படுபவர்களின் அடையாள அட்டைகளை அபகரிப்பதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பில் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.

மக்கள் ஏமாந்துவிடக் கூடாது

இறுதி நாட்களில் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுவதற்கு எதிரணி திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது. அதாவது அனுதாபத்தை தேடிக்கொள்ளும் பொருட்டு எதிரணி வேட்பாளரின் கூட்டத்திலும் அவர்களின் ஊடகவியலாளர் மாநாடுகளிலும் அவர்களே குண்டு தாக்குதலை மேற்கொள்வற்குத் திட்டமிட்டுள்ளனர் என தகவல்கள் வருகின்றன. இதன்மூலம் அனுதாபத்தை பெற முயற்சிக்கின்றனர். ஆனால் இவற்றுக்கு மக்கள் ஏமாறாமல் இருக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

தங்களால் வெற்றிபெற முடியாது என்பது உறுதியாகியுள்ளதால் அதிகளவில் வன்முறைகளில் ஈடுபடவும் எதிரணி தயாராகின்றது. காரணம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெறப்போகின்ற வெற்றியை மதிப்பற்றதாக்க முயற்சிக்கின்றனர்.

எதிரணி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் தமிழ்க் கூட்டமைப்பின் சம்பந்தன் ஆகியோரின் உடன்படிக்கை குறித்து பேசப்படுகின்றது. உடன்படிக்கை இல்லை என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவரால் வடக்கு கிழக்கை இணைத்தல், புலி உறுப்பினர்களை விடுவித்தல், அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கல், சர்வதேச சாசனங்களில் கையெழுத்திட்டு சட்டங்களை இயற்றுதல் போன்ற கோரிக்கைகளுக்கு எதிரணி வேட்பாளர் உடன்படவில்லை என்று கூற முடியுமா என்று சவால் விடுக்கின்றோம்.

சர்வதேச சாசனங்களில் இலங்கையை கையெழுத்திடவைத்து அதன்மூலம் முப்படை தளபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ வீரர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சியில் தமிழ்க் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. தற்போதைய நிலையில் எமது நாட்டின் உயர்நீதிமன்ற தீர்ப்பை சர்வதேசம் கேள்விக்குட்படுத்த முடியாது. ஆனால் அந்த நிலைமையை மாற்றுவதற்குத் தமிழ்க்கூட்டமைப்பு முயற்சிக்கின்றது.

எந்தவிதமான பயனுமின்றி தமிழ்க்கூட்டமைப்பு எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு வழங்காது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பழிவாங்குவதற்கு கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. இதற்கு இந்த நாட்டு மக்கள் இடமளிக்கக்கூடாது. 26 ஆம் திகதி மிகவும் அவதானமாக மக்கள் தீர்மானம் எடுக்கவேண்டும்.

எதிரணியின் கொள்கைப்பிரகடனம் தமிழ்க்கூட்டமைப்பின் தேவைக்கு ஏற்பவே அமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அதில் ஒருமைப்பாடு குறித்து எந்த விடயமும் இல்லை" என்றார்.

தொடர்ந்து கேட்ட கேள்விகளும் அவர் தந்த பதில்களும்: கேள்வி: எதிரணி வேட்பாளருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அவ்வப்போது மறக்கடிக்கப்படுகின்றனவா?
பதில்: இல்லை. வெள்ளைக்கொடி விவகாரத்துக்கு மக்கள் பதிலளிப்பார்கள். நாங்கள் சகல விடயங்களையும் நிரூபிப்போம். மக்களுக்கு அனைத்து விடயங்களும் ஞாபகம் இருக்கின்றது.
கேள்வி: இவை அரசியல் நோக்கம் கொண்ட விடயங்களாக மாறியுள்ளனவா?
பதில்: இல்லை. அரசியல் நோக்கம் கொண்டதாக மாறவில்லை. அரசியல் நோக்கம் இருப்பின் ஆயுத கொள்வனவு விவகாரம் தொடர்பில் எதிரணி வேட்பாளரிடம் அரசாங்கம் வாக்கு மூலம் பெற்றிருக்க வேண்டுமே?
கேள்வி: முஸம்மில் எம்.பிக்கு நிதி வழங்கிய விவகாரத்தில் ஏன் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்கூட்டியே அறிவிக்கவில்லை?
பதில்: நான்கு தினங்களுக்கு முன்னர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்தோம். ஏனைய நிறுவனங்கள் தொடர்பில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. அதனால் அறிவிக்கவில்லை. எனினும் இங்கு தொழில்நுட்ப விடயங்களை ஆராயாமல் என்ன நடைபெற்றுள்ளது என்பதனை பார்க்கவேண்டும்.
கேள்வி: குண்டுத் தாக்குதல் தொடர்பில் கூறுகின்றீர்கள். அப்படியானால் இதனைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாமல்லவா?
பதில்: இவ்வாறு கூறுவதன் மூலம் அவர்கள் சிலவேளை அதனை செயற்படுத்தாமல் விடலாம். எனவே இதுவும் ஒரு சிறந்த பாதுகாப்பு ஏற்பாடு தானே ? இது சிறந்த வழி. இது தொடர்பில் மக்களை தெளிவுபடுத்துவதே எமது நோக்கம்.
கேள்வி: இதனை பொறுப்புடன் கூறுகின்றீர்களா?
பதில்: அதிகம் பொறுப்புடன் கூறுகின்றேன்.
கேள்வி: உங்களுக்கு எதிராக சட்டத்தரணி மூலமாகக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளனவா?
பதில்: அவ்வாறு செய்யாமல் நேரடியாகவும் வழக்குப்போடலாமே?
கேள்வி: முஸம்மில் எம்.பி. எவ்வளவு நிதியை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்தார்?
பதில்: 42 லட்சம் ரூபா என்று எனக்கு ஞாபகம் இருக்கின்றது

இணைய செய்திகளிலிருந்து... நன்றி

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.