குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

யப்பானை முந்தும் இந்தியா!நித்யானந்தாவின் சீடரானார் ரஞ்சிதா

28.12.2013-இந்தியா உலகிலேயே மூன்றாவது பொருளாதார வல்லரசாக உயரும் என்று சமீபத்திய கணக் கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சிபர்ஸ் என்ற பொரு ளாதார கன்சல்டன்சி நிறுவனம் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது.

உலகின் மிகப்பெரிய பொருளதாரமிக்க நாடுகளின் பட்டியல் குறித்து சிபர் அமைப்பு அட்டவணைப்படுத்தியுள்ளது. அதில் 2028ல் உலகின் 3வது பெரிய பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக இந்தியா பெரிய பொருளாதார நாடாகும் என்றும் வரும் 2028 ம் ஆண்டு யப்பானை முந்தி பொருளாதாரா வல்லரசாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது 1.7 பில்லியன் டொலர் ஜிடிபி வளர்ச்சியுடன் 11 வது இடத்தில் இந்தியா உள்ளது. வரும் 2018 ம் ஆண்டு 2,481 பில்லியன் டொலர் ஜிடிபி வளர்ச்சியுடன் 9 வது இடத்தை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

 

அதேசமயம் 2018ம் ஆண்டு ரஷ்யா 6 வது இடத்திலும், மெக்சிகோ 12 வது இடத்தினையும், கொரியா 13 வது இடத்திலும் துருக்கி 17 இடத்தினையும் வகிக்கும்.

 

மேலும் வரும் 2023ம் ஆண்டு 4,124 பில்லியன் டொலர் ஜிடிபி வளர்ச்சியுடன் 4 வது இடத்தை பிடிக்கும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வரும் 2028ம் ஆண்டு 6,560 பில்லியன் டொலர் ஜிடிபி வளர்ச்சியுடன் 3வது இடத்தை பிடிக்கும் என்று சிபர் அமைப்பு தெரிவித்துள்ளது.

 

அதேசமயம் கனடா பத்தாவது இடத்தைப் பிடிக்கும் என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

 

நித்யானந்தாவின் சீடரானார் ரஞ்சிதா

 

நடிகை ரஞ்சிதா முறைப்படி தீட்சை பெற்று நித்யானந்தாவின் சீடராக சேர்ந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன், நடிகை ரஞ்சிதா படுக்கையறையில் இருந்ததாக காணொளி ஒளிபரப்பானது.

 

இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக பல சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தது. மேலும் தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்டது. பல இடங்களில் இவருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது.

 

இந்நிலையில் இன்று நித்யானந்தாவுக்கு 37வது பிறந்தநாள் ஆகும். பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு மா ஆனந்தமாயி என்று பெயர் சூட்டப்பட்டது.

 

தீட்சை பெற்ற ரஞ்சிதா நிரூபர்களிடம் பேசுகையில், சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச்சார்யத்தை புரிந்து கொண்டுள்ளேன். சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்ததுவங்களுடன் வாழ்வேன் என்றும் எப்போதும் நித்யானந்த ஆசிரமத்தில் இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

 

ரஞ்சிதா சன்னியாசம் பெற்றது குறித்து தகவல் அறிந்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்ற பத்திரிகையாளர்களை அங்குள்ள சீடர்கள் தடுத்து நிறுத்தியதோடு, புகைப்படக்காரர்களின் கமெராக்களையும் பறித்து கொண்டு அடாவடி செய்துள்ளனர்.

 

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அனைவரும் எதிர்ப்பு குரல் எழுப்ப பின்னர் கமெராவை திருப்பி கொடுத்துள்ளனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.