குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

தற்கொலை செய்து கொள்ளும் பறவைகள்!- சென்னையில் மல்லிகைப் மலருக்கு மௌவுசு..

13.12.2013-உலக நாடுகள் ஒவ்வொன்றும் பறவைகளின் வரவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றன.

ஏனெனில் அவைகள் எழுப்பும் ஒலிகள் நம் மனதில் ஒரு இசை மழையை பொழிந்து செல்கின்றன.

இவ்வாறு அதன் இசை மழையில் நனைய காத்திருக்கும் மக்களுக்க ஒரு அதிர்ச்சியான செய்தியும் காத்திருக்கிறது.

 

இந்த பறவைகள் கூட்டம் கூட்டமாக சென்று தற்கொலை செய்து கொள்கின்றன என்பது தான் அந்த அதிர்ச்சியான செய்தி.

 

இந்தியாவின் அஸ்ஸாம்[Assam] மாநிலத்தை சேர்ந்த ஜெடிங்கா [Jetinga] என்னும் கிராமத்தில்தான் தான் இந்த நிகழ்வு ஒவ்வொரு வருடமும் நிகழ்கிறது.

 

இந்த ஊரில் ஏறக்குறைய 2500 மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் பிரபலம் ஆனதற்கு காரணம் இந்த பறவைகள் தற்கொலைதான்.

 

உலகில் பல இடங்களில் இருந்து இடம் பெயர்ந்து இங்கு வரும் பறவைகள் பெரும்பாலும் திரும்ப செல்வதில்லை. இங்குள்ள வீதிகளில் செத்து விழும். இது இன்று நேற்று நடப்பதில்லை! நூற்றாண்டுக்கும் மேலாக இந்த சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

 

இந்தியாவில் அறிவியலால் விளக்க முடியாமல் இருக்கும் பல நிகழ்வுகள் உண்டு, அதில் மிகவும் முக்கிய இடம் பெற்றது இந்த பறவைகள் தற்கொலை தான்.

 

மேலும் நமது புருவங்களை விரிய வைக்க காரணம், இந்த பறவைகள் அனைத்தும் மாலை 6 முதல் 9.30 மணி அளவில் மட்டுமே இறந்து விழுகின்றது! மேலும் அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாத அம்மாவாசை தினங்களில் மட்டுமே இந்த அமானுஷ்ய நிகழ்வு நடக்கின்றது.

 

இதற்கு பல வகை விளக்கங்கள் கூறப்படுகிறது.

 

*கிராமத்தில் உள்ள விளக்கு வெளிச்சங்கள் பறவைகளை குழம்பி விடுகின்றன என்று கூறுகின்றனர்.

 

*அந்த குறிப்பிட்ட இடத்தில் பூமியின் காந்த சக்தி வெளிப்பாடு அதிகமாக உள்ளது என்றும், அதனால் தான் பறவைகள் இப்படி நடந்து கொள்கின்றது எனவும் ஒரு காரணம் கூறப்படுகின்றது.

 

இந்த மாதிரி பல காரணங்கள் கூறப்பட்டாலும், இது வரை இதை பற்றி தெளிவாக தகவல்கள் எதுவும் சொல்ல படவில்லை!

 

பனி விழுவதால் கிராக்கி காட்டும் மல்லிகை

 

குளிர்காலம் என்பதால் மல்லிகைப்பூவின் விலை விற்பனையில் சூடு பிடித்துள்ளது.

பொதுவாக வாசனை மலர்களுக்கு காற்றைத் தூய்மையாக்கும் சிறப்புக் குணம் உண்டென்பதால், சுப காரியங்கள் ஆனாலும் சரி, துக்க காரியங்கள் ஆனாலும் சரி பூக்களுக்குத் தான் முக்கியத் துவம் அளிக்கப்படுகிறது.

 

அந்தவகையில், கோயில்களுக்கு மாலை போடும் காலம் மற்றும் திருமணம், நிச்சயதார்த்தம் உள்பட எல்லா சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் காலமாதலால் பூக்களின் விலை, தங்கம் விலையைப் போன்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

நேற்று சென்னையில் மல்லிகைப் பூ ஒரு கிலோ ரூ 1200க்கு விற்கப்பட்டதாக பூக்கடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து சென்னை கோயம்பேடு மலர் மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் அருள் விசுவாசம் கூறுகையில், மல்லிகைப்பூவுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ.300 முதல் ரூ400 வரை விற்பனையான மல்லிகைப்பூ, தற்போது ஒரே மாதத்தில் கிலோவுக்கு ரூ.800 வரை விலை உயர்ந்து, கடந்த 2 நாட்களாக மல்லிகைப்பூ கிலோ ரூ.1,000 லிருந்து ரூ.1,200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதால் இன்று மல்லிகைப்பூவின் விலை மேலும் அதிகரிக்கும். பிப்ரவரி மாதத்திற்கு பிறகே பூக்கள் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் மல்லிகைப்பூ மட்டுமின்றி முல்லை, ஜாதி, கனகாம்பரம், ரோஜா, செண்டுமல்லி உள்பட பூக்களின் விலையும் கிலோவுக்கு சராசரியாக 5 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.