குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

கிடைக்க வேண்டிய கண்ணியம், கிடைத்த கண்ணியம் மற்றும் நிலை நிறுத்தப்பட்ட கண்ணியம்

2013 புரட்டாதி 21 திகதி இலங்கையர்களுக்கு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நளாகும். இது ஒரு புது போரின் ஆரம்ப நாள் என்றால் அது முற்றிலும்உண்மையேபல தசாப்தங்களாக வன்முறை, மோதல்களினால் துன் புற்றிருந்த வடக்கு மாகாணத்தில் சனநாயக முறைமையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு நிர்வாக சபை பதவிக்கு வந் துள்ளது. சனநாயக விழுமியங்களையும் சுதந்திரத்தையும் போற்றுபவர்ளுக்கு, அவர்கள் எந்த மதத்தை, இனத் தை சேர்ந்த வராக அல்லது மொழியை பேசுபவராக இருந்தாலும், வடக்கு மாகாணத்தின் தேர்தல் முடிவுகள் மட்ட ற்ற மகிழ்ச்சியை தந்திருக்கும் என்பதில் ஐயம் கிடையாது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஃபெடரல் கட்சி ஆரம்பித்த மனிதத்தன்மை மிக்க போராட்டத்துடன் விடுதலைக்கான முயற்சி ஆரம்பமாகியது. அதன் பின், அந்த அமைதி வழி போராட்டம் கொடூரமான முறையில் நசுக்கப்பட்டதை தொடர்ந்து ஆயுதம் ஏந்திய போராட்டம் வெடித்தது.

மூன்று தசாப்தங்களுக்கும் அதிக நீண்டதொரு காலகட்டம் அழிவிலும் நாசத்திலும் கடந்து முடிந்தது. தோல்விகளுடனும் அவமானத்துடனும் கடந்து முடிந்த பல ஆண்டுகளுக்குப் பின் தமிழ் பேசும் மக்கள் பெற்றுள்ள இந்த மாபெரும் வெற்றியானது, தமது உரிமைகளை ஒருநாள் ஜனநாயக வழிவகைகள் மூலம் அடையலாம் என்ற நம்பிக்கையை நம் மக்களின் மனங்களில் மீண்டும் தோற்றுவித்துள்ளது.

தமிழ் மக்கள் தமது விருப்பங்களை அடைந்து கொள்வதற்கு 13 வது சட்ட மூலம் எவ்வகையிலும் போது மானத ல்ல என்ற கருத்தை நானும் என்னுடைய கட்சியும் பல காலமாக வழியுறுத்தி வந்துள்ளோம். இந்த அடிப்படையில் அர்த்தமுள்ள ஒரு அதிகாரப் பகிர்வொன்று தொடர்பான பேச்சு வார்த்தைகளுக்கான முயற்சிகளை வன்முறை யற்ற, ஜனநாயக வழிமுறையில் முன்னெடுப்பது எம்முடைய நோக்கமாகும். அது போன்ற ஒரு முயற்சிக்கான நம்பிக்கையை இந்த தேர்தல் நமக்குள் துளிர் விடச் செய்துள்ளது.

கிடைக்க வேண்டிய கண்ணியம்

பல காலங்களாக வடக்கில் சனநாயகம் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகங்கொடுத்து வந்துள்ளது. தேர்தலுக்கான தினம் வரை பல வாரங்களாக எண்ணற்ற சம்பவங்கள் வடக்கில் நடைபெற்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றுமின்றி வேட்பாளர்களும் அச்சுறுத்தளுக்கும், மிரட்டல் களுக்கு ம் ஏன் தாக்குதல்களுக்கும் கூட ஆளாகினர். வாக்களிக்கும் தினத்திலும் அச்சுறுத்தல்களும் தாக்கதல்களும் முற் றுப் பெறவில்லை என்பதோடு இவற்றை இராணுவத்தினரே முன்னின்று மேற்கொண்டனர் என்பதே கவலைத் தரும் விடயமாகும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் நடவடிக்கைகளில் தயக்கமின்றியும் வெளிப்படையாகவும் இராணுவம் ஈடுபட்டதோடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகளை ஒடுக்கும் கைங்கரியத்திலும் இராணுவம் வெட்கமின்றி பகிரங்கமாகவே களமிறங்கியிருந்தது.

இது போன்ற சூழலிலேயே வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு அரசை கூட்டமைப்பு வழியுறுத்தி வருகின்றது. எது எவ்வாறிருந்த போதிலும், அடக்குமுறையை தோல்வியுறச் செய்து மக்களின் ஆணை வெற்றி பெற்றதோடு வடக்கு மக்களின் மன உறுதி பற்றி அரசாங்கம் செய்திருந்த மதிப்பீடு முற்றிலும் தவறானது என்பதும் உறுதியாகியுள்ளது.

வன்முறைக்கு முகங் கொடுத்தவர்களாக வடக்கு மக்கள் வெளிப்படுத்திய திடசங்கற்பம் உண்மையில் அகிலத்தார் மெச்சத் தகுந்ததாகும். ஒரு மாபெரும் வெற்றியை நாம் அடைந்திருந்தாலும் அதன் களிப்பில் மூழ்கி விட இது தருணம் அல்ல என்றே நான் கருதுகின்றேன்.

நீண்ட நெடுங்காலம் நடைபெற்று வந்து மோதல் காரணமாக கணக்கிட முடியாத மனித உயிர்களை நாம் இழந்துள்ளதோடு பெரும் எண்ணிக்கையானோர் நிரந்தர ஊனமுற்றோராகவும் ஆகியுள்ளனர். இன்று சாத்தியமாகியுள்ள இந்த வெற்றி பல உயிர் தியாகங்கள் மற்றும் இழப்புகள் மிதே கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அவர்கள் செய்த தியாகங்களுக்கு நாம் என்றென்றும் கடன் பட்டவர்களே. இது போன்றதொரு பின்னணியில் நாம் பெற்றுள்ள இவ்வெற்றியை நாம் அதிக ஆரவாரமின்றி அமைதியாக கொண்டாடுவதே பொருத்தமாகும். நிலை உயரும் போது பனிவு கொள்வதே போற்றத்தகு உயர் பண்பாகும்.

கிடைத்த கண்ணியம்

அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் எதிராக பல ஆண்டுகளாக நாம் குரல் கொடுத்து வந்துள்ளோம். ஆனால் நம்முடைய போராட்டம் பெரும்பாலும் தனியாக மேற்கொள்ளப்பட்டதொரு போராட்டமாவே இருந்து வந்துள்ளது. பின்விளைவுகளை பற்றி அஞ்சாது மேற்கொள்ளப்பட்டு வந்த அக்கிரமங்களுக்கு எதிராக நாம் குரல் எழுப்பும் சமயத்தில் ஏனைய கட்சிகள் வாய் மூடி மௌனிகளாகவே இருந்து வந்துள்ளனர்.

பெரும்பான்மையின் மனோ இச்சைக்கு துணை போனவர்களாக, உறுதியற்ற நிலையில் ஏனையோர் இருந்த தருணத்தில் இந்நாட்டின் அரசியல் சட்ட மூலத்தை பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்புகளை நாம் தனியாக மேற்கொண்டு வந்தோம். இதன் காரணமாக தெற்கில் இருப்பவர்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள நன்மக்களின் பாராட்டை நாம் பெற்று வந்தோம்.

தன்மானம் என்பது அபிவிருத்தியை விட முக்கியமானது என நம்பும் வடக்கு மக்களின் உள்ளங்களை எமது கொள்கைகள் வென்றெடுத்துள்ளன. அதே போன்று, பொருளாதார அபிவிருத்தி, வசந்தம் போன்ற பசப்பான வார்த்தைகளை கூறி தம்மை எவரும் எளிதில் ஏமாற்றி விட முடியாது என்ற செய்தியையும் வடக்கு மக்களை தௌ்ளத் தெளிவாக அறிவித்து விட்டனர்.

இதன் மூலம் தேசத்தின் உண்மையான முன்னேற்றத்தை ஆசிக்கும், ஒத்த குறிக்கோள் உள்ள ஏனைய நன்மக்களின் அபிமானத்தையும் வடக்கு மக்கள் பெற்றுள்ளனர். இந்த நிலை மாற்றத்தை அரசாங்கம் கூர்ந்து கவனித்தல் வேண்டும்.

அதி மேதகு சனாதிபதி அவர்களின் செல்வாக்கும் மதில் மேல் பூனையின் நிலையை அடைந்துள்ளது. தனது நிலையை சீராக்கிக் கொள்வதற்காக தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்தற்காக அவர் பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்கலாம், அல்லது ஒரு சிலருக்கு வெற்றியை தேடித்தந்த, ஆனால் பெரும்பான்மையால் ஒதுக்கப்பட்ட ஒரு தலைவராக அவர் சரித்திரத்தில் ஒரு ஓரத்தில் இடம் பெறலாம். சுருங்கக் கூறின், தமிழ் பேசும் மக்களின் அபிமானத்தை அரசு கைப்பற்றுவதற்கான தருணம் இதுவே.

பேச்சை செயலாக மாற்றிக் காட்டுவதற்கு தமக்குள்ள ஆர்வத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் புதிய முதலமைச்சரும் வெளிப்படுத்தியுள்ளனர். 13 ம் சட்ட மூலத்தின் குறுகிய வழிகள் ஊடாக சுகாதாரம், கல்வி உட்பட்ட பல துறைகளில் பாரிய மாற்றங்களை செய்த வண்ணம் வடக்கை அபிவிருத்தி செய்யும் பிரம்மாண்டமான சவால் நம் முன்னே உள்ளது என்பதை நாம் நன்கு உணர்ந்துள்ளோம்.

இருப்பினும், வடக்கின் நிர்வாகத்தில் முறைகேடான கிடுக்குப் பிடி ஒன்றை வைத்திருப்பதற்கு அரசாங்கம் பிடிவாதமாக முயற்சித்த வருகின்றது. இதன் காரணமாக எமக்குள்ள சவால்களின் பிரம்மாண்டம் மேலும் அதிகரிக்கலாம். இருந்த போதிலும், எமது மக்களுக்கு நாம் அளித்த வாக்குறுதிகளை மாற்றமின்றி நிறைவேற்ற நாம் அயராது பாடுபடுவோம்.

முன்மாதிரியான தலைமைத்துவம் ஒன்றை வழங்கும் கடப்பாடும் நமக்குள்ளதை நாம் நன்கு உணர்ந்துள்ளோம். வடக்கில் வாழும் ஏனைய சிறுபான்மை இனத்தவர்களின் கண்ணியத்தை பேணி அவர்களை சமத்துவத்துடன் நடத்துவதன் மூலம் சகவாழ்விற்கான முன்மாதிரியை முழு இலங்கைக்கும் தருவதில் கூட்டமைப்பு சிறப்பாக செயற்பட இயலும் என்பது நம்முடைய உறுதியான நம்பிக்கையாகும்.

நம்மை நோக்கி வரும் விமர்சனங்கள், மாற்றுக் கருத்துக்களை ஏற்று அவற்றிற்கு மதிப்பளிப்பதன் மூலம் சட்டத்தின் ஆளுகை, கருத்துக் கூறும் சுதந்திரம் மற்றும் அச்சமற்ற பொது வாழ்விற்கான அடிப்படை சூழ்நிலை வடக்கில் இருக்கின்றது என்பதை உலகிற்கு காண்பிப்பதற்கும் நாம் உறுதி பூண்டுள்ளோம்.

இவை மூலம் சிறந்தசனநாயகக் கொள்கைகளின் அடிப்படையில் செயற்படும் ஒரு நிர்வாகம் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக வடக்கு மாகாண சபையை திகழச் செய்வது நம்முடைய குறிக் கோளா கும். இதன் மூலம் நம்மை பற்றி நேச எண்ணம் இல்லாதவர்களின் அபிமானத்தை நாம் பெற முடியும் என்பது நமது நம்பிக்கை.

நிலை நிறுத்தப்பட்ட கண்ணியம்

பெற்ற வெற்றியின் மகிழ்ச்சியில் திளைத்தவர்களாக, கடந்த காலத்தையும் நினைவு கூர்ந்த வண்ணம் புதிய பொறுப்புக்களை ஏற்க நாம் தயாராகும் இத்தருணத்தில் சுய மரியாதையை பாதுகாப்பதோடு பரஸ்பர கண்ணியத்தையும் பேணத் தவறக் கூடாது என்பதில் நாம் அதிக அக்கறை கொண்டுள்ளோம். நம்மை விட ஏனையோர் எவ்விதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்பதோடு கண்ணியம் எனப்படுவது சகலருக்கும் சொந்தமான ஒன்று என்பதை புறிந்து செயற்படுவதன் மீதே நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படுகின்றது.

இதற்கு ரிஷி மூலம் நதி மூலம் பாராது சமத்துவத்துடன் அனைவருடனும் உறவாடுவதற்கான பரந்த மனோபாவம் அவசியமாகும். மேலும் அதிக எண்ணிக்கையானது ஒரு இனத்தை கண்ணியப் படுத்துவதற்கான அளவீடாக கருதப்படுதல் தற்கால உலகில் காலாவதியான ஒரு கோட்பாடாகும் என்பதையும், ஒவ்வொரு தனி மனிதனும் போற்றத் தகுந்தவனே என்பதையும் நாம் அனைவரும் ஏற்க வேண்டும்.

உண்மையான மாற்றம் ஒன்று வஸ்துக்களில் எற்படுவது அல்ல. மாறாக அது மனித உள்ளங்களில் ஏற்பட வேண்டிய ஒன்றாகும். சக மனிதர்களை மதிக்கும் போதே இது சாத்தியமாகின்றது. இங்கு வசிப்பவர்கள் அனைவரும் சமமானவர்களே என்றும் ஒருவரை விட மற்றவர் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்ல என்ற நிலைப்பாட்டின் மீது நிலைத்தவர்களாக நாம் செயற்பட எண்ணியுள்ளோம்.

இதற்காகவேதான், மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கான சூழல் மற்றும் ஐக்கியமான ஒரு தேசத்தின் மக்களின் கனவை நனவாக்கும் பின்னணியை வடக்கின் இவ்வெற்றி நமக்கு உருவாக்கித் தந்துள்ளது.

எம்.ஏ.சுமாந்திரன்
பா.உ
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு