குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

மகிந்த ராயபக்சவிடம் கற்றுக் கொள்ளுங்கள் ... மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்.

ராயா(அரச)பரமேசுவரி-மகிந்த ராயபக்சவிடம் கற்றுக் கொள்ளுங்கள் ... மக்களின் உணர்வுகளுக்கு மதிப் பளியுங்கள்...ராயா(அரச)பரமேசுவரி...வாசியுங்கள்.30.09.கி.ஆ2013-13.09.2044-வடமாகாண சபைக்கான மேலதிக ஒதுகீடு இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளது. தேர்தல் முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட 6 நாட்களுக்கு பின்புதான் இந்த மகா இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

அதுவும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது போன்று மன்னாரில் போட்டியிட்ட முஸ்லீம் பிரதிநிதி ஒருவருக்கு என்பது வாதப்பிரதிவாதங்கள் இன்றி முடிவாகி உள்ளது. இது வரவேற்கப்பட வேண்டியதே. மன்னாரில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய அயூப் அஸ்மிக்கு இந்த ஆசனம் கிடைத்துள்ளது. இனத்துவ முரண்பாடுகள் நிலவும் நாடுகளில் முதலாவது பெரும்பான்மைத் தேசிய இன ஆட்சியாளர்கள் இரண்டாவது 3ஆவது சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு இடையில் பகைமையை வளர்த்து முட்டி மோதவைத்து அதில் குளிர் காயும் நிலை தொடரும் நிலையில் இரண்டு தசாப்தங்களாக தொடரும் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கிடையிலான பிழையான புரிதல்களை தணிப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக இதனைக் கொள்ளலாம்.

அதனாற்தான் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னுதாரணத்தை இப்படிக் கூறுகிறார்....

'தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனக்கு கிடைத்த போனஸ் ஆசனத்தில் ஒன்றை முஸ்லிம் பிரதிநிதி ஒருவருக்கு வழங்க முன் வந்துள்ளமை பாராட்டுக்குரியது

தேர்தல் காலத்தில் பெரிய கட்சி சிறிய கட்சிகளுடன் செய்து கொள்ளும் உடன்பாட்டினை நிறைவேற்ற வேண்டும் என்ற முன்மாதிரைியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காண்பித்துள்ளது'

'தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்றை முஸ்லிம் ஒருவருக்கு வழங்க முன்வந்தததை நான் வரவேற்கின்றேன். குறிப்பாக தேர்தல் காலத்தில் பெரிய கட்சிகள் சிறிய கட்சிகளுடன் செய்து கொள்ளும் உடன்படிக்கைகளை   நிறைவேற்று வதில்லை. எமது கட்சியும் ஆரசாங்கத்துடன் செய்து கொண்ட உடன்பாடுகள் எவற்றையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை'

இவ்வாறான சூழலில் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஒரு போனஸ் ஆசனத்தை வழங்கியதன் மூலம் தனது  உறுதிமொழியை காப்பாற்றியுள்ளது. இது பெரிய கட்சிகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும் பாடமாகவும் உள்ளது. அத்துடன் பெரிய கட்சிகள் சிறிய கட்சிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதன் மூலம் சிறிய கட்சிகள் மேல் மக்கள் நம்பிக்கை வைப்பர். இந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதிமொழியை நிறைவேற்றி தமிழ் மக்களின் பாரம்பரியத்தை காப்பாற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது.'

இந்தக் கருத்து மிகவும் சிக்கலான காலக்கட்டத்தில் தெரிவித்த முக்கியமான  கருத்து.

மற்றைய போனஸ் ஆசனம்  தமிழர் விடுதலைக்கூட்டணியில் முல்லைதீவு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியினை தழுவிய மேரிகமலா குணசீலனுக்கு 1 வருடத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 4 வருடங்களுக்கு பிராந்திய மற்றும் கட்சி அடிப்படையில் சுழற்சி முறையில் நால்வருக்கு வழங்கப்படவுள்ளது.  இந்த முடிவு எடுப்பதற்கு நீண்ட விவாதம் தொடர்ந்த அதேவேளை பலருக்கு அது குறித்து இன்னுமே திருப்தி ஏற்படவில்லை.

மறுபுறம் கூட்டமைப்பு கட்சிகளிடையே அமைச்சுக்களை பகிருதல் என்பதிலும் இழுபறி தொடர்கிறது. இருப்பதோ முதலமைச்சருடன் 5 அமைச்சுக்கள். அவரைத் தவித்தால் 4 அமைச்சுக்கள். இந்த அமைச்சுக்களை யார் யாருக்கு பகிருதல் என்பதில் நீண்ட வாதப் பிரதி வாதங்கள் தொடர்கின்றன. கூட்டமைப்பில் 5 கட்சிகள் தற்போது அங்கம் வகிக்கின்றன. அதில் மகாண சபையில் 4 கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அந்த நான்கு கட்சிகளின் பிரதிநிதிகளுமே  மக்களின் ஆதரவை பெற்றுள்ளனர். அதிகமான விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு தலா 1 அமைச்சுப் பதவி என 4 அமைச்சுக்களை பகிர்ந்துகொள்வதே கூட்டமைப்பின் இலக்கணத்திற்கு பொருத்தமுடையது. (முதலமைச்சரிடம் 3 அமைச்சுக்கள் செல்கின்றன. மேலதிகமாக 1 அமைச்சசையும் தமிழரசுக் கட்சி பெற்றுக் கொள்கிறது. ஏனைய 3 கட்சிகளுக்கும் தலா ஒரு அமைச்சு.) இந்த நிலையில்  கூட்டமைப்பில் கட்சிகளை இணைத்த பின்பு 'நான் பெரிது நீ பெரிது, நீ முன்பு அப்படிச் செய்தாய் இப்போ இப்படிச் செய்கிறாய், நான் அப்பவும் இப்பவும் இப்படி இருக்கிறேன்' என்றெல்லாம் உள்வீட்டுச் சண்டை பிடிப்பது கூட்டமைப்பு என்பதற்கும் ஒற்றுமை என்பதற்கும் பொருத்தமான விடயங்களாக இருக்க மாட்டாது.

விடுதலைப் புலிகள் பலமாக இருந்த போது கூட அவர்களின் உந்துதலில் கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள்; ஒருகாலத்தில் தமக்கு பரமவைரிகளாக இருந்தும் சம அந்தஸ்த்தை வழங்கியிருந்தார்கள். (இன்னும் ஒருசில கட்சிகளை இணைப்பதற்கு சாத்தியக் கூறுகள் இருந்த போதும் ஒரு சிலரின் சதியால் அப்போது அவை வெளித்தள்ளப்பட்டன என்பது வெளிவராத உண்மைகள்.) என்பதனை அனைவரும்; புரிந்துகொள்ள வேண்டும்.

உண்மையில் இன்று எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் விரும்புவது ஒற்றுமையுடன் கூடிய பலமான அரசியல் சக்த்தியை. அதனால் தான் அரை நுற்றாண்டுகளுக்கு மேல்  கொழும்பில் வாழ்ந்து திடிரென வடபகுதி  மக்களிடம் சென்று தேர்தலில் குதித்த சீ.வீ விக்னேஸ்வரனுக்கும், விடுதலைப் புலிகளின் முன்னாள் திருமலை அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்திக்கும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும், கூட்டமைப்பை கடுமையாக விமர்சித்து ஜனாதிபதிதேர்தலில் போட்டியிட்ட சிவாஜிலிங்கத்திற்கும், சுரேஸ் பிரேமச்சந்திரனுடைய சகோதரர் சர்வேஸ்வரனுக்கும், கஜதீபனுக்கும், சீவீகே சிவஞானத்திற்கும், ஐங்கரநேசன் என இன்னும் பலருக்கும் ஒரு கலவையாக மக்கள் வாக்களித்திருந்தனர்.

இந்த வாக்களிப்பில் அரசியல் குடும்பப் பின்னனிகளும் தனிப்பட்ட ஆளுமைகளும் விருப்பு வாக்குகளில் குறிப்பட்ட செல்வாக்கை செலுத்தினாலும் கூட மக்கள் கூட்டமைப்பிற்கு அதன் ஒற்றுமைக்கே வாக்களித்தார்கள் என்பது முள்ளிவாய்க்காலுக்கு பின் நடந்த பல தேர்தல்களும் ஏன் முள்ளிவாய்க்காலுக்கு முன் நடந்த தேர்தல்களும் நிரூபித்திருக்கிறார்கள்.

இதனைத் தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி தனது தோல்வியின் பின் சொல்லும் போது ' ஒரு தடியை நட்டுவிட்டு அது கூட்டமைப்பு என்று சொன்னாலும் மக்கள் வாக்களிப்பார்கள்' என்று. இதற்கு பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கஜேந்தரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட், ஆனந்தசங்கரி தமைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து  தேர்தல் களத்தில் போட்டியிட்டு இருந்தால் யாழ்ப்பாணத்திலும்;, வவுனியாவிலும் தலா 1ஆசனங்களை கைப்பற்றி இருக்கமுடியும். அவ்வாறாயின் போனஸ் ஆசனமும் அதிகரித்திருக்கும். ஆனால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டதனால் அந்த 2 ஆசனங்களும் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்குச் சென்றது.

இம்முறை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைத் தவிர (இணையாவிட்டாலும் மக்களை வாக்களிக்க வேண்டாம் எனச் சொல்லவில்லை) ஏனைய கட்சிகள் இணைந்தமையினால் இந்த அறுதிப்பெரும்பான்மை பெறப்பட்டது என்பதனை விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையை நன்கு விளங்கிக் கொண்டவர்கள் புரிந்து கொள்ள முடியும். இந்த விடயங்களை புரிந்து கொண்டால் எதிர்காலத்தில் இளம் ரத்தங்களாக வீறுடன் செயற்படும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இந்தப் பொதுவான கூட்டமைப்பில் குறைந்த பட்ச உடன்பாடுகளுடனாவது இணைய வேண்டும்.

அதனை விடுத்து சுய அரசியல் லாபங்களுக்காகவும், தமது இலக்குகளை அiடைவதற்காகவும் தமிழ் மக்களையும் அவர்களது தியாகங்களையும் இழப்புகளையும் மறந்து ஏற்கனவே கூட்டமைப்பில் இணைந்திருக்கும் கட்சிகளையும் வெறுப்பூட்டி துரத்தும் நடவடிக்கைகளில் உள்ளிருக்கும் அரசியல், ஊடக, புத்திஜீவித்தனமான ஜாம்பவான்கள் முனையக் கூடாது.

ஒருமுறை அல்ல அண்மையில் அல்ஜசீராவுக்கு வழங்கிய செவ்வியில் கூட 'உலகிலேயே பல கட்சிகளை பல சித்தாந்தங்களை கொண்ட அரசியல் கூட்டமைப்பை எமது நாட்டில்தான் எனது தலைமையின் கீழ்தான் பார்க்கலாம்' என தெரிவித்திருக்கிறார். அதனைக் கேட்டுப் பாருங்கள். அதாவது மாக்ஸிஸவாதிகள் அவர்களிலும் சோவியத் சார்பு சீனசார்பு மாக்ஸிஸ்டுக்கள், கடும்போக்குவாதிகள், மலையகக் கட்சிகள், முஸ்லீம கட்சிகள், விடுதலைப் புலிகளில் இருந்து சென்றவர்கள்; என பலதரப்படரவ்களை இணைத்து வைத்திருப்பதோடு, அவர்களுக்கு கபினட் அமைச்சுக்களையும், பிரதி அமைச்சுக்களையும்; வழங்கியிருப்பதாகவும் ஒவ்வாருவரும் கட்சிகளும் தனிப்பட்ட கருத்துக்களைக் கொண்டு இருந்த போதும் மகிந்த சிந்தனையை ஏற்று இருக்கிறார்கள் என இன்னுமொரு செவ்வியில் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்குள் இணைந்திருக்கும் வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸவிதாரண, டீயூகுணசேகர, விமல்வீரவன்ஸ, சம்பிக்க றணவக்க, அத்தாவுல்லா, ஹிஸ்புல்லா,  ரிஸாத்பதியுதீன், முன்னர் பேரியல் அஸ்ரப், இப்போ ஹக்கீமோடு முரண்பட்டு நிற்கும் பசீர் சேகுதாவுத் ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்புகளை வழங்கியுள்ளார். கட்சிகளின் பலத்தின் அடிப்படையிலோ மக்களின் செல்வாக்கின் ; அடிப்படையிலோ, அவர்கள் முன்னர் என்ன செய்தார்கள் என்ற அடிப்படையிலோ இந்தப் பதவிகள் வழங்கவில்லை. தன்னை ஆதரித்து தன்னுடன் இணைந்தமைக்காக தனிக்கட்சிகளாக நின்றால் சொற்ப வாக்குகளை எடுக்க முடியாத இவர்களுக்கு பொறுப்புகளை வழங்கியிருக்கிறார்.

மறுபுறம் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளீதரனுக்கு பிரதி அமைச்சர் பதவி, பிள்ளையானுக்கு முன்னர் முதரமைச்சர் பதவி, இப்போ ஜனாதிபதி ஆலோசகர் பதவியை மகிந்த வழங்கியிருக்கிறார். இவர்கள் புலிகளுடன் இருக்கும் போது அரசாங்கங்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எவ்வளவு தலைவலியை கொடுத்திருப்பார்கள்? ஒரு காலத்தில் இலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் சிம்மசொப்பனமாக இருந்த கேபீக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. முதன் முறையாக அண்மையில் செஞ்சோலையில் அருகருகே நின்று படம் எடுத்துக்கொண்டார் மகிந்த. காரணம் கேபியின் மூலம் அவரது அறிக்கையின் மூலம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்ணத்தின் மூலம் வன்னியில் ஒரு சிறு வெற்றியைப் பெற்றாலும் கூட சிறப்பானதே என அவர் கருதுகிறார்.

எக்காலத்திலும் ஒரு கோட்டில் சந்திக்க முடியாது என்று இருந்த பரம எதிரிகளையே ஒரு கூட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் சங்கமமாகவைத்திருக்கிறார். இப்போ அந்த கூட்டில் மகிந்தவுடன் சங்கமித்ததனால் சிறு சிறு கட்சிகளின் பேச்சை கேட்க முடியவில்லை.

இந்த உதாரணங்களோடு இறுதியாக தயாசிறி ஜெயசேகரவை சேர்த்துக்கொள்ள வேண்டும்.  சில வருடங்களுக்கு முன் அரசாங்கத்திற்கும் மகிந்த சகோரர்களுக்கும் எதிரான ஆயுதமாக தயாசிறி ஜெயசேகரவை ஐக்கியதேசியக் கட்சி  பயன்படுத்தி இருந்தது. அவர் நடத்திய ஊடக சந்திப்புக்களில் மகிந்த சகோதரர்களையும் அரசாங்கத்தையும் எப்படி நார் நாராக கிழித்திருப்பார் என்பதனை அவரது ஊடக மகாநாடுகளுக்கு சென்றவர்களுக்கு தெரியும். ஆனால் அவரரை உள்ளீர்த்து முதலமைச்சர் வேட்பாளராக்கி தன்னருகே வைத்திருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ. இத்தகைய நடவடிக்கைகளின் போது மற்றயவர்களின் விமர்சனங்களை அவர் கணக்கில் எடுப்பதில்லை.

ஆனால் அரை நுற்றாண்டுகளுக்கு மேல் இரண்டாம்தரப் பிரஜைகளாக்கப்பட்டு 3 தசாப்பகால ஆயுதப் போராட்டத்தில் லட்சக்கணக்கான இளைஞர் யுவதிகளை காவுகொடுத்து, இறுதியில் முள்ளவாய்காலில் பதைபதைக்க துடிதுடிக்க லட்சக்கணக்கான  எங்கள் மக்கள் பலியெடுக்கப்பட்ட பின்பும்.... அந்த வலிகளை சுமந்து கொண்டும் அறுதிப் பெரும்பான்மையுடன் கூட்டமைப்பை வெற்றிபெற வைத்த மக்களுக்கு மேல் இனியும் சவாரி செய்வதனை போல வேறு அபத்தம் உலகில் இருக்க முடியுமா?

ஓவ்வொருவரும் உங்கள் மனச்சாட்சியை நெஞ்சைத்தொட்டு சொல்லுங்கள் இம்முறை மாகாண சபைத் தேர்தலில் கிடைத்த அறுதிப்பெரும்பான்மை  தனிப்பட்ட கட்சிகளுக்கு அல்லது தனிப்பட்ட தலைகளுக்கு கிடைக்கப் பெற்றதா? பல்வேறு உள்வீட்டுக் குத்துவெட்டுகளிடையேயும் ஒற்றுமையாக நின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அந்த குறியீட்டுக்கு கிடைத்த வெற்றியே அறுதிப் பெரும்பான்மை. அந்தக் குறியீட்டை விட்டு வெளியில் சென்று எத்துணை செல்வாக்கு, ஊடக பலம், பணபலம் என அனைத்தையும் வைத்து தேர்தலில் போட்டியிட்டுப் பாருங்கள்  மக்கள் என்ன சொல்வார்கள் என்று...

ஆக இனிவரும் காலங்களிலாவது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் சாணக்கியத்தை பார்த்து சிறிய பெரிய கட்சிகள், செல்வாக்கு உள்ளவர்கள் செல்வாக்கு அற்றவர்கள், முன்னர் என்ன செய்தார்கள் இப்ப என்ன செய்கிறார்கள் என்ற விடயங்களை உங்கள் சொந்த நலன்களுக்கான கவசங்களாக அணியாமல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்...

ஒரே கூட்டமைப்பாக இருந்து கொண்டு ஒவ்வொரு கட்சிகளைப் பற்றியும், அந்தக் கட்சிகளில் உள்ளவர்களைப் பற்றியும் மொட்டைக் கடிதங்களும், பொய்யான பெயர்களில் அறிக்கைகளும், ஊடக பலத்தை கையில் வைத்துக்கொண்டு புளொக்குகள், சமூக வலைத்தளங்கள், இணையங்களில் சேறடித்து பேரம் பேசும் அரசியலை செய்தாதீர்கள்...

முரண்பாடுகள் விமர்சனங்கள் இருந்தால் மாதத்தில் ஒருமுறை கூடும் உட்கசிக் கூட்டங்களில் பரஸ்பரம் வெளிப்படையாக விமர்சனங்களை முன்வையுங்கள். இல்லை கூட்டமைப்பில் உள்ளவர்கள் ஒவ்வாருவரும் அக்னிப்பிரவேசம் செய்து தங்களை  தூய்மையானவர்களாக நிரூபிக்க வேண்டும் என்றால் அனைவரும் கடந்த காலத்தை முழுமையாக மீள்வாசிப்பிற்கு உட்படுத்தி கட்சி, பதவி, தராதரம் பாராது சுயவிமர்சனத்தை செய்யுங்கள்.. மக்கள் சரியானவர்களை இனம்காணட்டும்... மாறாக ஒவ்வாருவரும் நீங்கள் தூய்மைவாதிகள் என்றும் மற்றவர்கள் கழிசடைகள் என்றும் சான்றிதழ்கள் வழங்காதீர்கள்...

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்...

ஒன்றுமே இல்லாத மாகாண சபையின் வெற்றி என்பது யுத்தக் குற்றத்தை புரிந்த இலங்கை அரசாங்கத்திற்கும் அதனை வழி நடத்தியவர்களுக்கும்  மக்கள் வழங்கிய, அவர்களால் இயன்ற உச்சபட்ச சாட்டை அடி என்பது மட்டுமே. எல்லாவற்றையுமே இழந்து நிர்கதியாகி உள்ள மக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கும் அவருடைய சகாக்களுக்கும் தமது வலியை, எதிர்ப்பை, வெறுப்பை வெளியிட இருந்த இருக்கும் ஒரே ஆயதம் வாக்கு மட்டுமே அதனால் அதன் மூலம் தமது உயர்ந்த பட்ச எதிர்ப்பை வெளியிட்டு இருந்தார்கள்.

இந்த மகாகாண சபையினூடு இனி எதிர்கொள்ளப் போகும் சவால்களை இப்போ வார்த்தைகளால் சொல்ல முடியாது. அப்படி இருக்க இதனை பெரிய வெற்றி விழாக்களாகவோ, கேளிகைக் கொண்டாட்டங்களாகவோ, பெருமெடுப்பிலான பதவியேற்பு வைபவங்களாகவோ கொண்டாடுவது சரியானதா?

புதவிப் பிரமானம் எடுப்பது என்பது அரசியல் அமைப்பில் அவசியமானது... ஆனால் மாகாணசபை பதவிப் பிரமாணத்தில் ஜனாதிபதி முன்னிலையிலும் பதவிப்பிரமாணம் செய்யலாம் எனக் குறிப்படப்பட்டு உள்ளது. அது கட்டாயமான விதி அல்ல. தெற்கில் கிழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தெரிவு செய்யப்பட்ட மகாண முதலமைச்சர்கள் தமது கட்சியின் தலைவரின் ( உத்தியோகபூர்வமற்ற பலம்வாய்ந்த கட்சித் தலைவர ஜனாதிபதி) முன்னிலையில் நாட்டின் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுப்பது அவர்களது விருப்பம் தவிர்க்க முடியாதது.

ஆனால் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஐக்கியதேசியக் கட்சி முன்னர் மாகாண சபைகளை வெற்றி கொண்ட போது எக்காலத்திலும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் காலத்திலும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுத்ததாக வரலாறு இல்லை. அப்படி இருக்கும்  போது வலிந்து போய் ஏன் முன்னாள் நீதிஅரசரும் இன்நாள் முதலமைச்சரும் மாகாண பிரதிநிதிகளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும் என்ற கேள்வி எழ வேண்டும் அல்லவா?

3 தசாப்பத் கால பேரழிவு யுத்தம் நடந்த நாட்டில் நல்லிணக்கம் அவசியம் ஆனால் சுயமரியாதையை இழந்து அடிமைகளாக மாறுவதோ, அதற்கு நிர்பந்திக்கப்படுவதோ நல்லிணக்கம் அல்ல. ஜனாதிபதியின் முன் சத்தியப் பிரமாணம் செய்வதன் மூலம்தான் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்றால் முதலில் பாதிக்கப்பட்டவர் அல்ல பாதிப்பை ஏற்படுத்தியவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.

மாறாக வடக்கு மக்களின் தீர்ப்பின் பின்பும் 'கூட்டமைப்பை அழிக்க வேண்டும், சீவீ விக்னோஸ்வரன் பயங்கர வாதி, பிரபாகரனை விட பயங்கரமானவர், அவரை சிறையில் அடைக்க வேண்டும், வெள்ளவத்தையில் இருந்து மட்டக்குழி வரையும் நந்திக்டல் ஆகும் என பச்சை இனவாதத்தை விதைக்கும் காடயர்களை தனது அமைச்சரவை அமைச்சர்களாக வைத்திக்கொண்டு அவர்களை கட்டுப்படுத்தாத ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்ப்பதுதான் நல்லிணக்கம் என்றால் மக்களின் உணர்வுகளை மிதித்து அலரிமாளிகையில்  அல்லது அவரை யாழ்  அழைத்து மண்டியிட்டு சத்தியப் பிரமாணம் செய்யமுடியும்.

உலகமும் மனித உரிமைகள் அமைப்புகளும், ஊடகங்களும் வன்னியில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்களை அம்பலப்படுத்தி அதற்கு நிவாரணம் தேடும் இந்தக் காலக்கட்டத்தில் மக்களின் அணையைப் பெற்ற கூட்டமைப்பு வலிந்து ஜனாதிபதியின் முன் மண்டியிட்டால் அதனை தனக்கு சாதகமான அரசியல் ஆயுதமாக மகிந்தராஜபக்ஸ உலகத்திற்கு காட்ட முயலமாட்டாரா?

தனது மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்பதற்காக உலக மரபுகளையே தூக்கி வீசி தன்னை தனது மக்களின் காவலராக பலமுறை நிரூபித்திருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ.  ஐநாவினுடைய செயலாளர் நாயகம்  நவநீதம் பிள்ளையை  அவமதிக்க வேண்டும் என்பதற்காக அவரது பிரசன்னத்தின் போது  நாட்டை விட்டு வெளியேறி மேற்குலகின்; கடுமையான விமர்சனங்களைக் கொண்ட பெலாரசிற்கு மகிந்தராஜபக்ஸ சென்றார். தனது கருத்துக்களை வெளிப்படையாக கூற முடியாவிடின் அதனை தனது சகாக்களின் மூலம் சொல்ல வைத்து  தான் அவமதிக்க வேண்டியவர்களை அவமதிப்பார். உலகின் கண்டனங்களையும் தாண்டி அதனை ஐநாவினுடைய செயலாளர் நாயகம்  நவநீதம் பிள்ளைக்கு செய்து காட்டினார்.

இதன் கருத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ செய்கின்ற அநாகரீகமான வேலைகளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செய்ய வேண்டும் என்பதல்ல. ஆனால் ஆட்சியாளர்கள் தங்களின் மக்களுக்கு அவர்களின் உணர்வுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்தாவது பல தசாப்தங்களாக உயிராக, ரத்தமாக, வியர்வையாக, பிள்ளையாக, கணவனாக, மனைவியாக, தாயாக தந்தையாக, உறவுகளாக, தேடிச் சேர்த்த சொத்துக்களாக, கட்டி வளர்த்த பாரம்பரியமாக, காணி நிலங்களாக இழப்பதற்கு எதுவும் இல்லமால் உணர்வுகளையும் தாரைவார்த்து தந்ததன் பின்புதானும் அந்த மக்களின் உணர்வுகளை மதியுங்கள்.... 

 

தமிழ்முதலமைச்சர் முதலில் தேசியமட்டத்தில் தோன்றக்கூடிய இடம் பொதுநலவாய அமைப்பு மாநாடு ஆகும்.

28.09.கி.ஆ2013-12.09.தி.ஆ2044-இன்று வடமாகாணம் என்ன சொல்லியிருக்கிறது. அறிவாளிக்கு முதலிட ம், விக்கினேசுவரன்) 1 37 255 வாக்குகள். போராளிக்கு இரண்டாம் இடம்.87 827( எழிலன்மனைவி-ஆனந்தி )அவர்களுக்கு. அடுத்து வழக்காடு மன்றத்திற்கு அருகமையில் கூட சத்தமிடக்கூடாது. எமது நாடுகளில் கோணடிக்கக்கூடாது.இது நீதித்துறைக்கு உலகு கொடுக்கும் உயர் மதிப்பு. நீதிபதியை நீதி அரசரை நாம் எப்படி மதிக்க வேண்டும் என்ற ஒரு உலகநியதி இருக்கு. அந்தவகையில் திரு. விக்கினேசுவரனை் அவர்களை தமிழர்கள் முதலில் மதித்துப்பழக வேண்டும். இன்று நவநீதம் பிள்ளைக்கு ஐ.நா.வில் உள்ள மரியாதை அவருக்கும் உண்டு என்பதை தமிழர்கள் மறந்துவிடக்கூடாது. முதலில் நாம் மதிக்கப்பளகவேண்டும் பண்பாடு அவசியம். அரசியல் விமர்சம் வேறு தனிமனிதருக்கும் அவருடைய அறிவிற்கும் மதிப்பளிப்பதன் மூலம் அந்த இனம் உயர்ச்சி அடையமுடியும். முதலமைச்சர் தே.கூ. அமைப்பு என்பதைவிட முன்னாள் நீதிபதி கல்வியாளன் பண்பாளன் இறைகொள்கைவாதி என்ற உயர்நிலைகளில் மதம்மொழிகடந்து உச்சத்தில் நிற்கும் பெருமகனை தமிழர்கள் வடமாகாணத்தமிழர்கள் தமது தலைவர் ஆக்கி இருக்கிறார்கள் இது நாம் பட்ட அவலத்திற்கு கேவலத்திற்கு கடவுளே தந்த மிகப் பெரும் பரிசு என்று அதைப்பயன் படுத்தப் பக்குவப்படவேண்டும். தமிழினத்தில் குணத்தின்குன்று காமராசர் தமிழக முதலமைச்சர். அடுத்து அறிஞர் அண்ணா அதற்கு பின் தமிழர்களில் தோன்றிய அறிவாளித்தலைவர் விக்கினேசுவரன் அவ ர்களாகத்தான் இருக்கமுடியும். இதை நாம் மனதில் வைத்திருக்க வேண்டும். அவரை அரசியல் வாதியாகப் பார்ப்பது அரை வேக்காட்டுத் தனமாகும். தமிழர்களை கரம் போட் விளையாடிக் கொண்டிருந்தவர் களின் விரலுக்கு நிகச்சுத்தியாக விக்கி அவர்கள். இதனை தமிழர்கள் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இன்றைய தெற்கு முன்னாள் சனாதிபதிகளைக்கூட மதிப்பதில்லை. நீதியரசர்களையே துாக்கிப் பந்தாடியது. ஆனால் விக்கியின் அரசியல் நுழைவு அவர்களுக்கு வயிற்றைக்கலக்குவது புரிகிறது. இதைத்தமிழர்கள் பெரிதாக எடுக்கவேண்டும். மகாணசபை அதிகாரம் இவற்றை விடுத்து கல்வியாளனை மதித்தல் முதலமைச்சரை மதித்தல் இதற்குரிய பக்குவங்களை நாம்கற்றால் கற்பித்தால் மாகாணசபைக்கு தானாக வரும் மரியாதை அதிகாரம். இதனால் த.தே.கூ, கட்சிகள் அவரை உயர்வாக மதிக்கவேண்டும். அவருடன் மரியாதையாக நாம் பழகுவதன் மூலமே ஏனையவர்கள் எம்மினத்தை மதிக்கத் தொடங்குவார்கள். அதன்பின் எமக்கானவை எமக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும்.

முதலில் மாகாணசபை உறுப்பினர்கள், தே.கூ.அ. கட்சிக்காரர்கள். மதகுருமார்கள்,கல்வியாளர்கள், பல்கலைக்கழகங்கள் கட்சிபாராது அரசியல் பாராது தமிழர்களின் முதல்வர் என்ற உயர்மரியாதை கொடுக்கவேண்டும். இந்தியசனாதிபதியை இந்தியர்கள் அமைச்சர்கள் பிரதமந்திரிகள் மதிப்பதாலே உலகநாடுகளும் மதிக்கின்றன. இதை உணருங்கள். அதற்கான நிதியை அரசு ஒதுக்குகின்றது. தமிழ்முதல மைச்சர் முதலில் தேசியமட்டத்தில் தோன்றக்கூடிய இடம் பொதுநலவாய அமைப்பு மாநாடு ஆகும். அதில் அவர் பங்கு கொள்ளும் போது இலங்கை சனாதிபதியை விட மதிக்கப்படுவார் முதன்மை பெறுவார் இதன் மூலம் நெல்சன் மண்டெலோ நிலைக்கு கிட்ட இவரை தமிழர்கள் உயர்த்த வேண்டும். எனவே அதற்கான நகர்வுகளில் தமிழர்கள் அக்கறை கொள்ளவேண்டும் அமைச்சர்களை ப் போடுவதில் அவரை ஈடுபத்தி ஒருசிலரின் விருபவீனத்திற்கு விட்டுவிடாதீர்கள். பல்கலைக்கழகங்கள் கல்லுாரிகள் கோவில்கள் தேவாலயங்கள் மசுதிகள் அவரைக் கௌரவிக்கவேண்டும். தமிழ் ஊடகங்கள் கட்சிகளை விமர்சிக்கலாம். மாகாணசபையை விமர்சிக்கலாம் ஆனால் முதலாவது முதலமைச்சரை அந்தநிலைக்கு கொண்டுபோகக்கூடாது. உண்மையில் தகுதி பண்பு ஆற்றல் மக்களை ஈர்க்கும் திறன் கொண்டுள்ளார். ஒரு வீச்சை ஏற்படுத்தக்கூடியவர் என்பதை இத்தேர்தல் உணர்த்தி யிருக் கிறது. சீனாப் பணங்களை தவிடுபொடியாக்கி இருக்கிறது. உலகவல்லரசுகள் பயப்பட்ட சீனாவை பயப்படவைத்திருக்கிறது. அதை நாம் உணரவேண்டும். அவரை மதித்துப்பழகுவதன் மூலம் தமிழர்கள் ஒரு தகுதியடைவார்கள் என்ற கருத்து உருவாகும்.

ஊடகங்கள் அவர் ஒரு நீதிபதி என்பதை கருத்தில் கொண்டு அவரை அணுகவேண்டும். அவரைநேர்காணல் செய்பவர்கள் பலதிறன் தகுதிகளை உருவாக்கிக் கொண்டு அவரருடன் தொடர்புகளை ஏற்படுத்தவேண்டும். எமது தமிழ் ஊடகங்களில் ஒரு குறையுண்டு நேர்காணலை நடத்துபவர்தான் தான் எதோ தகுதியாளர்போலும் பேட்டி காணப்படுபவர் தரக்குறைவானவர் போலும் தான் தொலைக்காட்சி களில் வானொலிகளில் நான்பார்த்துள்ளேன். அந்தவிதத்தில் எடுத்துக்காட்டாக நேர்காணலில் மிகவும் தவறுகளை அதிகமாக செய்து கொண்டு இருந்தவர்கள் இன்று இல்லை. அதேதொலைக் காட்சியில் கலைஞர் என்பதற்காக தானே எல்லாம் என்று நடந்தவர்களும் உண்டு. முட்டாள்தனமான பேச்சுப் பேசக்கூடாது என்ற சொற்பதத்தைப் பயன்படுத்தியவர்களும் உண்டு. இது இங்கிலாந்தில் வாழ்ந்துகொண்டு இங்கிலாந்தில் இயங்கும் ஒரு தமிழ்தொலைக் காட்சியில் அறிவிப்பாளராக நிகழ்சி ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் நேரடியாக தொலைக்காட்சியில் பயன் படுத்திய சொற்களில் ஒன்று. அதேபோன்றுதான் இன்று இணையங்களுடாக நடத்தப்படும் வானொலிகள் நல்ல குரலாளர்களை வளமாகக் கொண்டு பல குறைபாடுகளைச் சந்திக்கின்றன. அண்மையில் திரு.விக்கினேசுவரன் அவர்களை ஒரு இணைய வானொலி ஒரு முதலமைச்சருடன் பேசுகின்றோம், ஒருமுன்னாள் நீதிபதியுடன் பேசுகின்றோம் என்று இல்லாது ஒரு இங்கிதமில்லாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இதேதவறுகளை நாம் தொடர்ந்து செய்யக்கூடாது. எமது முதலமைச்சர் அவர்களை உலகஅரங்குகளுக்கு அனுப்பி உலகஅளவில் மரியாதையை உருவாக்குவோம் பின் எந்தவிடயம் என்றாலும் அவருடன் நேரடித் தொடர்புகளை உலகளவில் உருவாகிவிடும். அதனால் தமிழர்களின் கருத்து உலகில் எடுபடும். தமிழ் அமைச்சருக்கு இல்லாத மதிப்பு முதலமைச்சருக்கு உலகளவில் இருப்பதை உணர்வோம்.தமிழ்ச்சிற்றிதழ்கள்,இணையங்கள் இதனைக்கடைப்பிடிக்கவேண்டும் என்ற தாழ்மையான கருத்தை இன்றய முதமைக் கருத்தாக முன்வைக்கின்றேன்.

பூநகரி பொன்னம்பலம் .முருகவேள் ஆசிரியர்-சுவிற்சர்லாந்து. 28.09.2013-

தேர்தலில் அரசியல் வாதிகளுக்கு இருக்கும் அக்கறை மக்களுக்கு இருப்பதாக தெரியவில்லை.

21.09.2013-திரு.விக்கினேசுவரனி ல் சிங்களவரர்களுக்கு இருக்கும் அக்கறை தமிழ் மக்களுக்கு இல்லை. எனவே வாக்களிப்பு ஆர்வமாக இருக்காது. கள்ளவாக்களிப்பு எத்தரப்பால் இடம்பெறவாய்ப்பிருக்கின்றது என்பது அனை வரும் அறிந்தவிடயம். யாழ்மாவட்டத்தில் 60 முதல் 70 விழுக்காடு வாக்குப்பதிவு நடந்தாலே ஆச்சரியம்.

ஏனெனில் மக்கள் தமது சொந்தவாழ்வில் அதிக கவனம் செலுத்துவதில் தீவிரமாக உள்ளனர். மக்கள் அக்கறை கொள்வதற்கு தக்க தலைவர்கள் தற்பொழுது இல்லை. இவ்வளவு ஊடகங்கள் இருந்தும் மக்களைக்கவர எழுச்சியுட்ட முடியவில்லை. கல்வி அறிவு கூடிய இடங்களில் எத்தகைய பிரச்சாரங்களை மேற் கொள்வது என்பது கவனிக்கப்படாமலே இருக்கின்றது. அரசு தரப்பு எல்லாவிதமான ஆய்வு முடிவுகளின் படியும் செயற்படுகின்றது. நேர்மையற்ற முறைகளும் இருக்கின்றது. இது இந்தியா இலங்கையில் புதிதல்ல. தேர்தல் முடிவுடன் தமிழர் வாழ்வின்முடிவுகளில் மாற்றம் இல்லை அரசின் பெரிய பிரயத்தனத்தையும் மகிந்தவின் திறமையான அரசியல் யாழப்பாணத்திலும் எடுபடுகின்றதா என்பதை உலகம்பார்க்கின்றது. கூட்டமைப்பு பெறும் வாக்குகளுக்கு அரவாசிக்கு மேல் அரசதரப்பு பெற்றாலே அரசு வெற்றி என்பதே பொருள். வடக்கில் ஆட்சி அமைக்கும் தந்திரத்தில் அரசு தீவிரமாக இருக்கிறது. தே.கூ.அமைப்பு வெற்றி என்ற இறுமாப்பில் இருக்கிறது. ஒரே சின்னத்தில் போட்டியிடும் தமது தரப்பையும் மாத்தையாவை துரோகி என்றதுபோல் மாத்தையா முதல் முள்ளிவாய்கால்வரை உள்குத்து வெட்டு அடுத்தவர் வெற்றிக்கு வளிவகுத்தது. இது கிளிநொச்சி மாவட்ட தேர்தலில் நடக்க இருக்கிறது. இதனால் அரசு ஒரு ஆசனத்தைப்பிடிப்பதன் மூலம் சிறிதரனின் உறுப்பினர்கள் செல்லாக்காசு ஆவார்கள். அரசு தரப்பு இவர்களைக் கண்டு கொள்ளமாட்டார்கள். எனவே அடுத்த பாராளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு திரு.சிறிதரன் சிறுமைத்தனமாக நடந்து கொள்வது வேதனையாக இருக்கிறது.நாளை கிளிநொச்சியில் அரசதரப்பு ஒரு ஆசனத்தைப்பெறுவது உறுதி இதற்கு சிறிதரன் அவர்களே காரணம்.
Gefällt mir · · Teilen · vor 11 Stunden in der Nähe von Bern ·
Optionen
Murugaverl Poonagari Ponnampalam
கிளிநொச்சியில் இலங்கை அரசு 1 ஆசனம்பெற திரு. சிறிதரன் அவர்களே காரணம்