குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 6 ம் திகதி திங்கட் கிழமை .

நோர்வேயின் முதன்மை வெளிநாட்டவர்களில் ஒருவராகத் தமிழர் தெரிவு

நோர்வேயின் பத்து முதன்மை (Top10) வெளிநாட்டவர்களில் ஒருவராக, தமிழரான பேராசிரியர் வேலாயுதபிள்ளை தயாளன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நோர்வே சமூகத்தின் சமூகக் கலாசார மற்றும் தொழில்சார் விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய 10 முதன்மையான வெளிநாட்டவர்களை வருடந்தோறும் சுயாதீனமாக ஓர் அமைப்பு தெரிவு செய்து வருகிறது.

16 வயதுக்கு மேல் நோர்வே நாட்டுக்குப் புலம்பெயர்ந்து, மற்றைய வெளிநாட்டவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் தலைமைத்துவ பண்புகளைக் கொண்ட வெளிநாட்டவர்களையே இவ் அமைப்பு தெரிவு செய்து வருகிறது.

இவ்வகையில், நோர்வே, பேர்கன் பல்கலைக்கழக, பொறியியல்துறையில் பேராசிரியராகக் கடமைபுரியும் வேலாயுதபிள்ளை தயாளனை இவ்வமைப்பு 10 முதன்மையான வெளிநாட்டவர்களில் ஒருவராகத் தெரிவு செய்துள்ளது.

பேராசிரியர் தயாளன் 1984 ம் ஆண்டிலிருந்து நோர்வேயில் வசித்து வருபவர். தான் பிறந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் ஒருவரான இவர், பேர்கனில் தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெரும் அக்கறையோடு செயற்பட்டு வருவதோடு, பேர்கன் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் அதிபராகவும் சேவையாற்றி வருகிறார்.

இளைய சமூகம் பல்வேறு ஆளுமைகள் கொண்ட வளம்மிக்க சமூகமாக வளரவேண்டுமென்பதில் அக்கறையுடன் செயற்படும் பேராசிரியர் தயாளன், நோர்வே TECH அமைப்பின் தலைவராகவும் இருந்து, தனது மண் வளம்பெற தனது பங்களிப்பைச் செய்துள்ளார்.

பேராசிரியர் தயாளன், பேர்கன் பல்கலைக்கழகத்தின் முதன்மைப் பேராசிரியராக மாணவர்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அத்துடன் நோர்வே அரசுக்கு, அங்கு குடியேறியவர்களுக்கான விடயங்களில் ஆலோசனை வழங்கும் KIM அமைப்பில் நியமிக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் நோர்வே கல்வித் திணைக்களத்துக்கான ஆலோசனைக்குழுவிலும், நோர்வேஜிய ஆய்வு நிறுவனத்தின் ஆலோசனைக்குழுவிலும், மற்றும் வேறு அரச, அரச சார்பற்ற ஆலோசனைக் குழுக்களிலும் பேராசிரியர் தயாளன் அங்கம் வகித்து வருகிறார்.

தமிழர்களுக்குப் பெருமை தரும் விதத்தில் அமைந்துள்ள இத்தெரிவையிட்டு தமிழ்மக்கள், குறிப்பாக மாணவர் சமூகம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
by வீரகேசரி இணையம்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.