குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

தமிழ் ஆண்டு எது? தமிழ்க்கிழமைகள் (நாட்கள்) எவை? மாதங்கள் எவை? எண்களின் அடிப்படை என்ன?தனித்தமிழ்உணர்

 

 

 

1.தமிழ்த்தைப்பிறப்பான தைப்பொங்கல் நாளே தமிழ் ஆண்டுப்பிறப்பு.இதுவே திருவள்ளுவர் ஆண்டு.
2.நாட்கள்(கிழமைகள்)புதனும்,சனியையும் தவிர ஏனையவை தமிழிலேதான் இருக்கின்றது.அறிவன் (புதன்) காரி-(சனி)
3.மாதங்கள் 12 உம் தமிழில் இல்லை.
4.உலகம் பயன்படுத்தும் 1,2,3,4,5,6,7,8,9, ...என்ற எண்கள் தமிழ் எழுத்துக்களிலிருந்து தோன்றியவையாகும்.
இவைதொடர்பாக மேலும்.
எதிர்வரும் 15.01.2012-தைப்பொங்கல் 01.01.2043ஆம் தமிழாண்டு ஆகும்.  புதிய இணைப்புக்களுடன்.....

 

மாதங்களின் பெயர்கள் தமிழில்        வடமொழியில்
சுறவம்                                                   தை
கும்பம்                                                   மாசி
மீனம்                                                     பங்குனி
மேழம்                                                   சித்திரை 
விடை                                                    வைகாசி
இரட்டை                                                ஆனி 
கடகம்                                                   ஆடி
மடங்கல்                                               ஆவணி
கன்னி                                                   புரட்டாதி
துலை                                                   அய்ப்பசி
நளி                                                       கார்த்திகை
சிலை                                                    மார்கழி


உலகம் பயன்படுத்தும் எண்கள் தமிழருடையது.1,2,3,4,5,6,7,8,9, ...இதை அராபியருடையது என்று கூறப்படுகின்றன

.ஆனால் அராபியர்களுக்கு எண்ணின் பழைய வரலாறு தெரியல்லை.இந்திய எண்கள் என்பர்.வடநாட்டு இந்தியருக்கும்

இவை பற்றி ஒன்றும் புரிவதில்லை ஏனென்றால் அவர்கள் தமிழர்களிடமிருந்து பெற்றமையே.

இந்த எண்கலையை பழம் தமிழகத்தாரே உலகுக்கு வழங்கினர் என்ற உண்மையை மூதறிஞர் வரதராசனார் கூறுகின்றார்.

தமிழாண்டை எப்படிக்கணக்கிடுவது?
கிறிசுது ஆண்டுடன் 31 அய்க்கூட்டினால் வரும் கூட்டு எண்ணிக்கையே தமிழாண்டாகும்.
2011+31 = 2042 இது இனிவரும் நடைமுறைத்தமிழாண்டு.
அத்துடன் தமிழர் தொன்மையில் இயற்கையின்மீதும் நன்றி உணர்விலும் எவ்வளவு
ஆழமாக இருந்தார்கள் என்பதை பிற இனத்தாருக்கும் தமிழர்களுக்கும் விளக்கவேண்டும்.
சுவையான  சக்கரைப்பொங்கல்...முறுக்கு...சீனிஅரியாரம்... பால்ரொட்டி...பயிற்றம்பணியாரம் போன்றவற்றை
அழகாகப்பொதிசெய்து வழங்கி உரையாடும் போது எம்துயர்களையும் விளக்கவேண்டும்.
அதிகமான தமிழர்கள் பிறப்பியம்(சாதகம்) எழுதிவைத்திருப்பது வழக்கமாகயிருக்கிறது.
தனிமனித வாழ்வில் கவனம் செலுத்தியதமிழர்கள் குமுகாயம் (சமுதாயம்) இனம்.. மொழி என்று
எண்ணி தமக்கான ஆண்டுக்கணக்கை ஏன்பழக்கிக்கொள்ளவில்லை.
ஆரியரின் கற்பனைக்கதைகளின் ஒன்றில் ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த பிள்ளைகளின்
பெயர்களே ” பிரபவ ” முதல் ”அட்சய” வரையான 60 ஆண்டுகளின் பெயர்களும் கூட தமிழிலில்லை.
இவை எப்படித்தமிழாண்டு ஆகும்? நாடு கேட்ட நாங்கள் இதையெல்லாம் எண்ணவில்லையே...!

எனவே தமிழர் ஆண்டாக 1921 ஆம் ஆண்டுசென்னைப்பச்சையப்பன் கல்லுரியில் 500 தமிழ்
அறிஞர்கள் மறைமலை அடிகள் தலைமையில் ஆராய்ந்து முடிவுசெய்தனர். தமிழர்கள்
வடஇந்தியர்களின் ஆண்டுமுறையைப் பின்பற்றுவதால் சீனர் மற்றும் இனத்தாவர்களின் 
ஆண்டுமுறைபோல் எம்மிடையே இல்லை என்றும் இதனால் திருவள்ளுவரின் பிறப்பை ஆதாரம்
கொண்டு கிறிசுது ஆண்டுடன் 2011+31  = 2042 முறையை தமிழக அரசபதிப்பில் பதிவாகிவந்தது.
இதைத்தொடர்ந்து தமிழ்ப்பற்றாளர்கள் அரசியலில் ஈடுபாடுஅற்ற சுவிற்சர்லாந்து போன்ற அய்ரோப்பிய நாடுகளிலுள்ள

நல்நோக்காளர்களும் ஆபிரிக்க மலேசியத்தமிழர்களுடன் தமிழகத்தமிழுணர்வாளர்களும்.. இலங்கை நண்பர்களும்

இணைந்து இனம்.. மொழி.. வாரலாற்றில் சீர்திருத்த எண்ணமுள்ளோரும் ஆரிய ஆரவாரத்தில்
அகப்படாத நுண்ணாற்றல் பெற்றோரும்.. இந்திய அரசின் அனுமதியுடன் தமிழக அரசில் பதிவாக்கி சென்றாண்டு

02.01.2009 இல் முதலமைச்சர் திரு மு.கருணாநிதி அவர்கள் அறிவித்தார்.அத்தோடு தமிழாண்டுப் பிறப்பு வழிபாட்டை தைப்பொங்கல் அன்றே செய்யலாம் என்று சட்டமும் இயற்றினார்.சித்திரைப் பிறப்பில் தமிழாண்டுப்பிறப்பிற்கு வழிபாடு செய்வதை மறுத்துள்ளார்.இவற்றை ஆர்வமாக அறியாது அரசியல் வெறுப்பால் ஓர் இனத்துக்கானதை மறுப்பது மடைமை.முதலில் நிலம் (பூமி) உருண்டை என்றபோது மதச்சட்டக்காரர் அவர்களை உயிரோடு கொழுத்தவேண்டும் என்றார்கள்.மிதியுந்து..விண்ணுந்தை அறிமுப்படுத்தியவர்களை அடித்து விரட்டியதை அறிவோம்.இன்று அவற்றையே பயன்படுத்துகின்றார்கள் என்பதை எண்ணி தமிழர் மூளை விலங்கை உடைக்கவேண்டும். தமிழர் இந்தியாவிடமிருந்து முதலில் விடுதலை பெறவேண்டும்  தமிழருக்கான பண்பாட்டு வாழ்வியலை நெறிப்படுத்தவேண்டும் அதன்பின்னரே  தமிழர்கள் விடுதலை பெறத் தகுதியுடையவர்களாகி சிங்களவரிடமும் இந்தியரிடமும்  விடுதலை பெறலாம். இது நடக்காதவரை எதுவும் நடக்காது. இதைக் கல்லில் எழுதிவையுங்கள். தனித் தமிழ் உணர்வோடு நடைமுறைப்படுத்துவோம்.

பொ.முருகவேள்.