குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சீனாவுக்கான இணைய தணிக்கை நிறுத்தப்படுகிறது: கூகுள்

சீனாவில் இணைய பாவனையாளர்கள் மிக அதிகம்சீனாவில் சில இணைய தளங்களை தணிக்கை செய்யும் தனது கொள்கையை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்படி செய்வதன் மூலம், கூகுள் சீனாவில் இருந்து வெளியேற நேரிடலாம். கூகுள் அளிக்கும் இணைய சேவையின் சில வசதிகளை பயன்படுத்தி சீன அரசு தனது அதிருப்தியாளர்களைப் பற்றி தகவல் பெற முயற்சி செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை என்று கூகுள் கூறியுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து, பீஜிங்கில் உள்ள கூகுள் அலுவலகத்துக்கு சீன குடிமக்கள் குழு ஒன்று மலர் கொத்துக்களுடன் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளது. அதேநேரம் இது தொடர்பாக கடுமையான விமர்சனங்களும் வந்துள்ளன.

கூகுள் அவ நம்பிக்கையுடனும் முட்டாள்தனமாகவும் செயல்படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இது தொடர்பாக கூகுளிடம் கூடுதல் விபரங்கள் கோரியுள்ளதாக சீன அரசு கூறியுள்ளது.