குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

கச்சதீவை சட்டப்படி இந்தியாவால் மீளப்பெறமுடியும் இந்திய சட்டவியலாளர் விளக்கம்

கடல் வலயச் சட்டத்தின் ஐந்தாவது பிரிவானது குறிப்பாக 'இந்தியாவின் பாதுகாப்புடன்' சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தலையீடு செய்வதற்கான அனுமதியை இந்திய நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது. இவ்வாறு 'த கிந்து' ஊடகத்தில் தீபக் ராயு கச்சதீவு தொடர்பாக எழுதிய கட்டுரையில் எழுப்பப்பட்ட சட்ட அடிப்படையிலான கேள்விகளுக்கான பதிலினை டெல்லியில் சட்டம் பயிலும் மாணவரான Manuraj Shunmugasundaram* பதில் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

மே 27, 2013 அன்று 'த கிந்து' ஊடகத்தில் தீபக் ராஜூ [Deepak Raju], 'Chasing a boat we missed long ago' என்கின்ற தலைப்பில் எழுதிய ஆக்கத்தில், கச்சதீவை இந்தியா மீண்டும் தனது உடைமையாக்கிக் கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அனைத்துலகச் சட்டத்தின் பிரகாரம் இதனை மீள உடைமையாக்குவதில் எழும் பலவீனம் தொடர்பாக விபரித்து எழுதப்பட்டிருந்தது.

இந்திய உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்படும் கட்டளையானது சிறிலங்காவைக் கட்டுப்படுத்தாது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இந்தியாவின் கடல் எல்லையில் 24 கடல் மைல்களுக்கு அப்பால் இடம்பெறும் பிரச்சினையில் இந்திய உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்பது நினைவுபடுத்தப்பட வேண்டிய விடயமாகும்.

கடல் வலயச் சட்டத்தின் ஐந்தாவது பிரிவானது குறிப்பாக 'இந்தியாவின் பாதுகாப்புடன்' சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தலையீடு செய்வதற்கான அனுமதியை இந்திய நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது.

இந்நிலையில் கச்சதீவானது இந்தியாவின் கரையோரத்திலிருந்து 18 கடல் மைல்கள் தூரத்தில் அமைந்துள்ள ஒரு தீவு என்பதுடன், இக்கடல் பிரதேசத்தில் இந்திய மீனவர்களின் பாதுகாப்பு தொடர்பாக இந்திய நீதிமன்றங்களின் அதிகார வரையறுக்குள் விவாதிக்கப்பட முடியும்.

கச்சதீவை சிறிலங்காவிடமிருந்து இந்தியா மீளப்பெற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான எம்.கருணாநிதி இந்திய உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதற்கு இந்திய மத்திய அரசாங்கமானது தனது அமைச்சரவை செயலர் மற்றும் வெளியுறவுச் செயலர் போன்றவர்களின் ஊடாகப் பதிலளிக்க வேண்டும்.

Berubari Union வழக்கில் நீதி வழங்கியது போன்று கச்சதீவை மீளப் பெற்றுக் கொள்வதில் இந்திய மத்திய அரசாங்கமானது அரசியல் யாப்பின் முதலாவது அட்டவணையில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக திரு.ராயு தனது ஆக்கத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், 1974 மற்றும் 1976களில் உருவாக்கப்பட்ட உடன்படிக்கைகளை இந்திய மத்திய அரசாங்கமானது நாடாளுமன்றில் முன்வைக்கத் தவறியமை தொடர்பில் பல்வேறு வினாக்கள் எழுப்பப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதே.

இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்ட இரு நாடுகளும் ஒத்துழைக்கும் பட்சத்திலேயே இந்தியா, கச்சதீவை மீளப்பெற்றுக் கொள்ள முடியும் என ராயு சுட்டிக்காட்டியிருந்தார். வியன்னா உடன்படிக்கையின் 14(1)(b) சரத்தின் பிரகாரம், உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டு கைச்சாத்திட்ட இரு நாடுகளும் உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கு சமரசம் செய்ய வேண்டியது அவசியமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய-சிறிலங்கா உடன்படிக்கைகள், இந்திய அதிபரால் உறுதிப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதற்கு எவ்வித யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை. இந்த உடன்படிக்கைகளை சட்ட ரீதியாக செயற்படுத்துவதற்கு இந்திய மத்திய அரசாங்கத்தால் நல்லெண்ணத்துடன் ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்பது அறியப்பட வேண்டும்.

கச்சதீவானது மெட்ராசு மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்ததா என ராயு கேள்வியெழுப்பியிருந்தார். இராம்நாதபுரத்தைச் சேர்ந்த ராயாவின் சமிந்தாரியின் கீழேயே கச்சதீவு இருந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இதன் பின்னர் இது தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறியது.

1757 தொடக்கம் 1762 வரை இலங்கையின் ஆளுநராக இருந்தவரின் நினைவுக் குறிப்பில் கச்சதீவானது இராம்நாதபுர ராயாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 1921ல், கொழும்பில் பிரித்தானிய அதிகாரிகள் நடாத்திய விவாதத்தின் போது கடல் சார் எல்லைப் பிரச்சினைகளும் கலந்துரையாடப்பட்டன.

இதன் போது, கச்சதீவானது இந்தியாவுக்குச் சொந்தமானது எனக் குறிப்பிடப்பட்டது. இந்தியா சுதந்திரமடைந்ததன் பின்னர், 1972ல் எழுதப்பட்ட வர்த்தமானியில் கச்சதீவானது இராமநாதபுரத்தின் ஒரு பகுதி என வரையறுக்கப்பட்டது.

இவற்றுக்கப்பால், முதலாவதாக, இந்திய-சிறிலங்கா உடன்பாடுகளின் உள்ளடக்கங்கள் தொடர்பாக ராயு தனது ஆக்கத்தில் விளக்கத் தவறியுள்ளார். இந்த உடன்பாடுகளை விளங்கிக் கொள்வதற்கு இவற்றின் சாராம்சங்களை தெளிவுபடுத்த வேண்டியது மிகமுக்கியமானதாகும்.

1974ல் சிறிலங்காவுக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்பாட்டில், "இந்திய மற்றும் சிறிலங்காவுக்குச் சொந்தமான படகுகள் இவ்விரு நாடுகளுக்கும் சொந்தமான கடற்பரப்புகளில் நடமாட முடியும். இதனை அவர்கள் பரம்பரை பரம்பரையாக கைக்கொண்டு வருவதால் இது அவர்களுக்கு உரித்தானதாகும்" எனவும், "ஆனால் இவ்விரு நாடுகளும் தமக்குச் சொந்தமான கடற்பிரதேசங்களின் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்துவதுடன், இவற்றின் மீதான இறையாண்மையையும் கட்டுப்பாட்டையும் கொண்டுள்ளன" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகள் சட்டக் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இந்த உடன்பாடானது, எமது மீனவர்கள் சட்ட ரீதியாக சிறிலங்காவுக்குச் சொந்தமான கடலில் மீன்பிடிக்க முடியும், ஆனால் அதேவேளையில் சிறிலங்கா சட்டங்களுக்கு அமைவாக அவர்கள் கைதுசெய்யப்பட முடியும் என்பதைக் குறிக்கிறது.

இரண்டாவதாக, 1976 உடன்படிக்கையால் ஏற்பட்ட வரலாற்று நிகழ்வுகளை ராயு சுட்டிக்காட்டத் தவறிவிட்டார். 1975 யூனில், இந்தியா முழுவதிலும் அவசரகாலம் பிறப்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 1976 ஜனவரியில் தமிழ்நாடு அரசாங்கம் கலைக்கப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற மற்றும் சட்டசபை செயற்பாடுகள் எதுவும் இடம்பெறுவதற்கான சாத்தியம் இல்லாத வேளையில், மார்ச் 23, 1976ல் இந்திய வெளியுறவுச் செயலருக்கும் சிறிலங்கா வெளியுறவுச் செயலருக்கும் இடையில் 1976 உடன்படிக்கை தொடர்பான கடிதங்கள் பரிமாறப்பட்டன. "சிறிலங்காவின் கடல்சார் பொருளாதார வலயத்தில் இந்திய மீன்பிடிப் படகுகள் மற்றும் இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடமாட்டார்கள்" என 1976ல் உருவாக்கப்பட்ட உடன்பாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் இந்த உடன்படிக்கையில், முன்னைய உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்ட, உத்தரவாதமளிக்கப்பட்ட பாரம்பரிய மீன்பிடித்தல் உரிமைகள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அரசியல் குழப்பங்கள் மற்றும் அரசியல் நிச்சயமின்மை போன்ற புறச்சூழலில் உருவாக்கப்பட்ட இவ்விரு உடன்படிக்கைகளாலும் மிகவும் இக்கட்டான, குழப்பமான, சிக்கலான, முரண்பாடான நிலை ஏற்பட்டுள்ளதுடன், இவற்றால் தமிழ்நாட்டு மீனவர்கள் துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அறிக்கைகளின் படி, கடந்த 30 ஆண்டுகளில் இந்திய – சிறிலங்கா கடற் பரப்புக்களில் 500 வரையான மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவானது தனது அனைத்துலக கடப்பாடுகளின் படி இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் என்பது இங்கு மறுக்கப்படவில்லை. ஆனால், சிறிலங்காவாலும் அதன் கடற்படையாலும் அனைத்துலக கடல்சார் சட்டங்கள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்படுவதால் இந்தியா இந்த விடயத்தில் வேறெந்த தெரிவையும் கொண்டிருக்கவில்லை.

ஆனால் 1974 மற்றும் 1976களில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள் மீள ஆராயப்பட வேண்டும். இந்திய அரசாங்கமானது இந்த உடன்படிக்கைகளை மீள ஆராய்ந்தால், கச்சதீவு விவகாரத்தை இந்திய உச்ச நீதிமன்றின் வரையறைக்குள் தீர்வு காணமுடியும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.