குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

மக்கள் முன்னணி என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள்!-உறவறுந்த துயரோடு இருள் கவிழும் மனம்...சுவிற்சர்லாந்து SBB யைச் சேர்ந்த தொடருந்தை ஓட்டிச் சென்ற

 

ஓட்டுநர் திடீரென்று மயங்கி விழுந்து மரணம்!27.04.தி.ஆ2044-17.05.கி.ஆ2013-பயங்கரவாதம் அழிக்கப்பட்ட தினத்தை நாம் கொண்டாடுவோம் என்ற வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தின் நகர்ப்பகுதி உள்ளிட் ட பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகளில் உரிமை கோருபவர்களாக மக்கள் முன்னணி என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

எனினும் 2009ஆம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட போர் முடிந்ததையடுத்து அதன் வெற்றிவிழாவினை அரசாங்கம் வெகுகோலாகலமாக கொண்டாடி வருகின்றது.

அதேவேளை  நாளை வட பகுதியில் இறுதி போரின் போது ஆயிரக்கணக்காக உயிரிழந்த மக்களின் நினைவாக அஞ்சலி நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ள நிலையில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சுவிற்சர்லாந்து SBB யைச் சேர்ந்த தொடருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் திடீரென்று மயங்கி விழுந்து மரணம்!

.சுவிற்சர்லாந்து கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடருந்து ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு சூரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.

தானியங்கி முறை செயல்பட்டதால் ஓட்டுநர் “பெடலில்” இருந்து காலை எடுத்து விட்ட பின்னரும் கூட வண்டி தொடர்ந்து ஓடி இடையில் எங்கும் நிற்காமல் சோலோதூன் மாநிலத்தில் உள்ள ஓல்ட்டென் நகரில் வந்து நின்றுவிட்டது.

அங்கு ஓட்டுநரை மாற்றி மீண்டும் வண்டி தன் பயணத்தைத் தொடர 15 நிமிடங்கள் ஆயிற்று, ஓட்டுநரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

கடந்த மாதம் 22ம் நாள் இதுபோன்று ஒரு சம்பவம் பேருந்தில் நடந்தது. பேசெல் நகரில் ஓடிக் கொண்டிருந்த பேருந்தில் ஓட்டுநர் மயங்கிச் சாய்ந்ததால் வண்டி கட்டுபாட்டை மீறி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதியது.

பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் வண்டி இல்லை என்பதை உணர்ந்தவுடன் விரைந்து வந்து  நிறுத்தைியை (பிரேக்கை )மிதித்து வண்டியை நிறுத்தினார். பயணிகள் இருவர் காயமுற்றதால் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உறவறுந்த துயரோடு இருள் கவிழும் மனம்...

சித்திரையின்

 

கடைசிக் கணங்களை

 

காலம் உருட்டிக் கொண்டிருக்கிறது.

 

 

 

ஓடி முடித்த தூரத்தையும்

 

ஓட வேண்டிய தூரத்தையும்

 

கணிக்க முடியாத குழப்பத்துடன் நான்

 

 

 

வாழ்க்கையில்.....

 

ஓடி முடித்த தூரத்தை விட

 

ஓட வேண்டிய தூரம்

 

நீண்டதாய் தெரிகிறது.

 

 

 

வயதில்

 

ஓடி முடித்தது நீண்டதாயும்

 

ஓட வேண்டியது

 

மிகக் குறுகியதாகவும் தெரிகிறது.

 

 

 

எத்தனை கோடி வயதுகளையும்

 

எத்தனை கோடி வாழ்வுகளையும்

 

இந்த நிலம் சந்தித்திருக்கும்.

 

 

 

போராட்டங்களோடு வாழ்வும்

 

போரோடு வயதுமாய்

 

காலம் என்னை

 

கடந்து போய் இருக்கிறது.....

 

 

 

விடுதலைக் கனவுகளின்

 

விளைநிலத்தில்

 

மெய்ப்படாமல் போன கனவுகள்

 

பூமிக்கடியில் புதையுண்டு கிடக்கின்றன.

 

 

 

நிமிர்ந்து நிற்கும் ஆயுதங்களின்

 

நிழல் விழுகிற இருள் வட்டத்தினுள்

 

ஒடுங்கிப்போன என் நிலமெங்கும்

 

போர்வீரர் மாதத்தின்

 

பிரகடனப் பேரிகை முழங்குகிறது.

 

 

 

யுத்த வெற்றியின் குதூகலத்தோடு

 

தலைநகரில் பனைவளராக் கடற்கரை

 

களை கொள்கிறது.

 

 

 

சகோதரா...!

 

யார் யாரைக் கொன்றதற்காய்

 

உனக்கிந்த வெற்றி

 

தரப்பட்டிருக்கிறது.....!

 

 

 

நீயெறிந்த குண்டுகளும்

 

ஏவிய ஷெல்களும்

 

விசிறிய இரசாயனங்களும்

 

யார் யார் மீது வீழ்ந்தன......!

 

 

 

கையடக்கத் தொலைபேசிகளில்

 

நீ கைப்பற்றி வந்த காட்சிகள்

 

வெற்றியின் சாட்சியங்களா....!

 

 

 

மனிதம்

 

தோற்றுப்போய்க் கிடக்கிறது

 

போர்வீரர் மாதத்தின்

 

பிரகடனப் பேரிகை

 

பாரெங்கும் முழங்குகிறது.....

 

 

 

இந்தப் பேரிரைச்சலில்

 

உறவறுந்த துயரோடு

 

இருள் கவிழும் மனமெங்கும்

 

விளக்கெரிய வழியிருக்கா.....!

 

 

 

08.05.2013