குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

கையில் ஒரு பைசா கூட இல்லை! மாருதி கார் மட்டுமே சொந்தம்: மன்மோகன் சிங் -தமிழர்களின் பல ஆண்டு கால கனவு சேது சமுத்திர திட்டம்: கனிமொழி

16.05.2013தருமபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்தில் நடைபெற்ற எழுச்சி நாள் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் முல்லை வேந்தன் தலைமை தாங்கினார்.விழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:- 

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு தமிழகமெங்கும் பொதுக் கூட்டங்கள் தி.மு.க. சார்பாக நடைபெற்று வருகிறது. சேது சமுத்திர திட்டம் தமிழர்களின் 150 ஆண்டு கால கனவுத் திட்டம்.

பண்டைய தமிழச் சமூகம், கடல் கடந்து வாணிபம் செய்த வரலாறு உள்ள சமூகம். இந்தத் திட்டம் தமிழர்களின் பல ஆண்டு கால கனவு. ஆனால் இன்று இத்திட்டத்தை நிறைவேற்ற விடாமல் பல சக்திகள் தடுத்த வண்ணம் உள்ளன.

150 ஆண்டுகளாக இத்திட்டத்துக்கு எதிராக எந்த ஒரு எதிர்ப்பையும் எழுப்பாத சில சக்திகள் செயல்படுத்தப்படும் நேரத்தில் திடீரென்று  ராமர் பாலம் என்ற காரணத்தைக் காட்டி முட்டுக்கட்டை போடப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்படுகையில் இந்தத் திட்டத்தை உருவாக்கியதே நாம்தான். எனது முன் முயற்சியில் தான் இந்த திட்டம் உருவாகியது.

இத் திட்டம் குறித்து நான் இரண்டு முறை ராச்யசபையில் பேசியிருக்கிறேன் என்று பேசிய யெயலலிதா இன்று ராமர் பாலம் என்ற காரணத்தைக் கூறி இத்திட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

இத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் கலைஞருக்கு நற்பெயர் வந்து விடுமே என்ற ஒரே காரணத்துக்காகத்தான்யெயலலிதா எதிர்க்கிறார். கலைஞர் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் மக்களால் பாராட்டப்பட்டன. இன்று அந்த திட்டங்களை அழிக்கும் வேலையில் யெயலலிதா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

தமிழகமே இருளில் மூழ்கியிருக்கிறது. மாணவர்கள் படிக்க முடியாமல் தவிக்கின்றனர். சிறு தொழில்கள் பெரும்பாலும் நசிந்து விட்டன. விவசாயிகள் எப்போது மின்சாரம் வரும் என்ற எதிர்ப்பார்ப்பில் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

விரைவில் மின்வெட்டு தீரும் என்கிறார். ஆனால் மின்பகிர்மானக் கழகம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அளித்த அறிக்கையில், மின்வெட்டு அடுத்த ஆண்டும் தொடரும் என்று தெரிவித்துள்ளது.

திடீரென்று தமிழார்வம் வந்தவராக தமிழன்னைக்கு 100 கோடி செலவில் மதுரையில் சிலை வைக்கப் போவதாக அறிவித்துள்ளார் யெயலலிதா. ஒரு திருவள்ளுவர் சிலையையும், தொல்காப்பியப் பூங்காவையும் பராமரிக்க மறுக்கும் யெயலலிதா, தமிழன்னைக்கு சிலை வைப்பேன் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கையில் ஒரு பைசா கூட இல்லை! மாருதி கார் மட்டுமே சொந்தம்: மன்மோகன் சிங்

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தற்போதைய நிலையில் கைவசம் எந்தவொரு பணமும் இல்லையாம்.

ராய்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அசாம் மாநில அதிகாரியிடம் வேட்புமனுவை சமர்ப்பித்தார்.

அதில் அளிக்கப்பட்ட உறுதி சான்றில் மன்மோகன் சிங்கிற்கு சொந்தமாக பணம் ஏதும் இல்லை எனவும், ஒரு பழைய கார் மட்டுமே அவருக்கு சொந்தமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் தனது வேட்புமனுவில், தனது மொத்த ஆண்டு வருமானம் ரூ.40,51,964 என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 5 பிக்சட் டெபாசிட் மற்றும் 3 சேமிப்பு கணக்குகளுடன் சேர்த்து தனக்கு இருக்கும் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.3,87,63,188 என குறிப்பிட்டுள்ளார்.

சண்டிகரில் இருக்கும் வீடு மற்றும் டெல்லியில் உள்ள அபார்ட்மெண்ட் ஆகிய அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.7,52,50,000 எனவும், ரூ.21,033 மதிப்புள்ள 1996 ம் ஆண்டு மாடல் மாருதி கார் தனக்கு சொந்தமாக இருப்பதாக கூறிய உள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கவுரிடம் ரூ.20,000 பணம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் ரூ.3,45,332 மதிப்புள்ள 150.8 கிராம் தங்கமும், வங்கி சேமிப்பு தொகையாக ரூ.16,62,570 ம் உள்ளதாக மன்மோகன் சிங்கின் சொத்து விபர கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வேட்புமனுவில் பிரதமரின் முகவரியும் கவுகாத்தியின் சாருமோட்டோரியா பகுதியில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடு, 1991ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் மன்மோகன் சிங் அசாம் மாநிலம் சார்பில் போட்டியிடுவதற்காக அசாம் முன்னாள் முதல்வர் ஹிடிஸ்வர் சாய்கியாவிடம் இருந்து விலைக்கு வாங்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.