குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தமிழர்களின் தொண்டைக்குள் மீண்டும் முள்ளுவைக்கும் குள்ளநரியை வென்ற கொக்காக இந்தியா! சிங்களக் கூடியேற்றத்திற்கு யோசினையும் உதவியும்.

 

13.03.தி.ஆ2044-01.04.கி.ஆ2013-ரணிலுக்கு புதுடெல்லி அவசர அழைப்பு – மட்டக்களப்பு உரையின் எதிரொலி?“ ரோம் (தமிழர் இசுலாமியர் மனங்கள்) எரியும் போது...” சிரித்து மகிழும் கக்கீமும் மகிந்தவும் .வடக்கில் அரசியலில் ஈடுபடும் அரசாங்கத்திற்கு எதிரான வர்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்ப்பு-வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் மாற் றமில்லை– மகிந்த தேசப்பிரிய காரணம் குமரிநாடு.நெற் எண்ணுகிறது சிங்கள உறுப்பினரை உருவாக்கவே!

கருணாவிற்கும் பிள்ளையானுக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் - ஐக்கிய பிக்குகள் முன்னணி.இந்தியாவுக்கு மேர்வின் எச்சரிக்கை-அரச தலைவரின் ஒலி பெருக்கிஆளும் கட்சியின் 46 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஐ.தே.க.யுடன் இணைவர்: பல செய்திகளுக்கு குமரிநாடு.நெற் kumarinadu.net  செல்லுங்கள்.

 

சிங்களக் குடியேற்றங்களுக்கு இந்தியாவும் உதவி - உறுதிப்படுத்தும் வன்னிப் படைத்தளபதி வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான இந்தியாவின் வீடமைப்புத் திட்டம், வன்னியில் சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருவதை, சிறிலங்கா இராணுவத்தின் வன்னிப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை இந்தியா அமைத்துக் கொடுக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருந்தார்.

போர் முடிந்து நான்கு ஆண்டுகளாகின்ற போதிலும், இந்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை ஒரு சில ஆயிரம் வீடுகள் கூடக் கட்டிக் கொடுக்கப்படாமல் உள்ள நிலையில், இந்த உதவித் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் வடக்கில் சிங்களக் குடியேற்றங்களுக்கும் பயனபடுத்தி வருகிறது.

தமிழர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இந்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வவுனியாவில் போகவெவ என்ற சிங்களக் குடியேற்றக் கிராமத்தில் சிங்களவர்களுக்கு 50 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன.

'சண்டே ஒப்சேவர்' வாரஇதழுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றில் சிறிலங்கா இராணுவத்தின் வன்னிப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வன்னியில் 6000 சிங்களவர்களை அவர்களின் சொந்தக் காணிகளில் மீளக் குடியேற்றியுள்ளதாகவும் கூறியுள்ள அவர், அங்கு குடியேற்றப்படும் சிங்களவர்களுக்கு மேலும் உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு புதுடெல்லி அவசர அழைப்பு – மட்டக்களப்பு உரையின் எதிரொலி?

சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்திய அரசாங்கத்தினால் அவசரமாக புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்திய - சிறிலங்கா உறவுகளில் நெருடல் ஏற்பட்டுள்ள சூழலிலேயே, சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ரணில் விக்கிரமசிங்கவை புதுடெல்லி அழைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதுடெல்லியின் அழைப்பை ஏற்று, இன்றிரவு இந்தியா செல்லும் ரணில் விக்கிரமசிங்க, வரும் வியாழக்கிழமை கொழும்பு திரும்புவார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

யெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்த பின்னணியில், இருநாடுகளுக்கும் இடையில் சுமுக உறவுகள் நிலவவில்லை.

நேற்றுமுன்தினம் மட்டக்களப்பில் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பு ஒன்றில், சிறிலங்காவில் தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவினால் எதனையும் செய்ய முடியாது என்று ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.

சிறிலங்காவில் நீடித்து நிலைக்கக் கூடிய அமைதியையும், அதிகாரப் பகிர்வையும் கொண்டு வருவதற்கு இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையிலேயே ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியா அவசர அழைப்பு விடுத்துள்ளது.

“ரோம் (தமிழர் இசுலாமியர் மனங்கள்) எரியும் போது...” சிரித்து மகிழும் கக்கீமும் மகிந்தவும்

கொழும்பு ஹவ்லொக் மைதானத்தில் நேற்றுமாலை நடைபெற்ற சிறிலங்கா - சீன தாய்பே அணிகளுக்கு இடையிலான ரக்பி ஆட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராயபக்சவும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் கலகலப்பாக சிரித்துப் பேசும் ஒளிப்படம் ஒன்றை கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று முகப்புப்படமாக வெளியிட்டுள்ளது.

“ரோம் எரியும் வேளையில்” என்று இந்த ஒளிப்படத்துக்கு தலைப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான பெளத்த அடிப்படைவாதக் குழுக்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அதனைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஹக்கீம் விசனம் வெளியிட்டிருந்தார்.

பெபிலியானவில் முஸ்லிம் வணிக வளாகம் தாக்கப்பட்ட பின்னர், அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டும் படி சிறிலங்கா அதிபரிடம் ரவூப் ஹக்கீம் கேட்டிருந்தார். ஆனால் அதற்கு சிறிலங்கா அதிபர் செவிசாய்க்கவில்லை.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு தொடக்கம் நேற்றுகாலை வரை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்மட்டக்குழுவின் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து ஆராயப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

கக்கீமும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை சிறிலங்கா அரசாங்கம் தடுக்கத் தவறினால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்தநிலையிலேயே நேற்றுமாலை சிறிலங்கா அதிபருடன் இணைந்து அவர் ரக்பி ஆட்டத்தை ரசித்து மகிழ்ந்துள்ளார்.

நேற்று நடைபெற்ற சீன தைபே அணியுடனான ரக்பி ஆட்டத்தில் சிறிலங்கா அதிபரின் மகனும் சிறிலங்கா கடற்படை அதிகாரியுமான யோசித ராயபக்ச சிறிலங்கா அணிக்கு தலைமை தாங்கியிருந்தார்.

இதில் சிறிலங்கா அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் மாற்றமில்லை– மகிந்த தேசப்பிரிய காரணம் குமரிநாடு.நெற் எண்ணுகிறது சிங்களஉறுப்பினரை உருவாக்கவே!

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில்; மாற்றமில்லை என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லாத காரணத்தினால் பாராளுமன்ற பிரதிநிதகளின் எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், வன்னி மற்றும் முல்லைத் தீவு மாவட்டங்களுக்கான பிரதித் தேர்தல் ஆணையாளர் ஏ.எஸ்.கருணாநிதி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

2012ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் 219196 வாக்காளர்கள் குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, பிரதி தேர்தல் ஆணையாளரின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிப்பதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் அதிகாரம் பிரதித் தேர்தல் ஆணையாளருக்கு கிடையாது எனவும், இது குறித்த ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதிவு வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பதுளை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை குறைத்து நுவரெலியா மாவட்டத்திற்கு அதனை சேர்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் அரசியலில் ஈடுபடும் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்ப்பு-

வடக்கில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதை தற்போது மிகவும் தெளிவாக காணக் கூடியதாக உள்ளது எனவும் இதனால் வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர், சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்குடாவில் நேற்று கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.  கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் கிளை மற்றும் அமைப்புகளை நிறுவும் அடிப்படை விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்த கூட்டம் நடைபெற்றது.

தாம் கடந்த பெப்பரவரி மாதம் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலும், கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்ற சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் பாதுகாப்பு தரப்பை சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இவர்கள் அனைவரும் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர், எவ்வித சட்ட நடவடிக்கைகளும் எடுக்காமல் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறைகள் தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது, சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படுவதன் மூலம் குறித்த வன்முறை செயல்களுடன் அரசாங்கத்திற்கு நேரடியான தொடர்பு இருப்பதை தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது.

சாதாரண அரசியல் நடவடிக்கைகளுக்கு கூட அரசாங்கம் இவ்வாறான வகையில் தடைகளை ஏற்படுத்துமானால், வடமாகாண சபைத் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறும் என்பது குறித்து எந்த நம்பிக்கையும் கொள்ள முடியாது. இதனால் தேர்தலுக்கு முன்னர், சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட வேண்டிய நடவடிக்கை கட்டாயமாக செய்ய வேண்டியது எனவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

அல்-குவைதா போன்ற பொதுபல சேனாவுக்கு கோத்தபாய ராயபசஆதரவு வழங்கி வருகிறார் - பத்தேகம சமித்த தேரர்

பொதுபல சேனா என்ற அமைப்பு அடிப்படைவாத அமைப்பு இந்த அமைப்புக்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராயபச ஆதரவு வழங்கி வருகிறார் என தென் மாகாண சபையின் உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் தெரிவித்துள்ளார்.

இனவாத,மத வாதம் என்பன அதிகரித்து வருவது, மிகவும் தவறான நிலைமையாகும். இந்த நிலைமை நாட்டுக்கு சரியில்லை.  இலங்கை பல இனங்கள் வாழும் நாடு.  இதனால் ஒரு இனத்தையோ மதத்தையோ தூக்கி சுமக்கும் உரிமை எந்த இனத்திற்கும் இல்லை. தற்போது நடைபெற்று வருவது தவறான முன்னுதாரணங்கள்.

எந்த சமூகத்திலும் பிரதான இன, மதத்திற்கு பிரதான இடம்கொடுக்க வேண்டும் என்ற நிiமை சமூகத்தில் இருக்கக் கூடாது. மனிதர்கள் சரிநிகர் சமமானவர்கள்.  அந்த சம உரிமை அனைவருக்கும் உள்ளது. பிரச்சினைகள் இருந்தால் அதனை பேசி தீர்த்து கொள்ள வேண்டும்.

பொதுபல சேனா என்பது சமூகத்திற்கு கெடுதியானது என்பது போல கூடாத ஒன்று. அவர்கள் அல்-குவைதா அமைப்பை போல் செயற்படுகின்றனர். இது பௌத்த சம்பிரதாயமல்ல.  இதனால் சம்பிரதாய விரோதமாக செயற்பட்டு குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்படும் இவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்பதே அந்த அமைப்பு தொடர்பான எனது நிலைப்பாடு எனவும் சமித்த தேரர் கூறியுள்ளார்.

கருணாவிற்கும் பிள்ளையானுக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் - ஐக்கிய பிக்குகள் முன்னணி

ஆளும் கட்சியின் 46 நாடாளுமன்ற உறுப்பினர்கள் UNPயுடன் இணைவர்:-

பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென ஐக்கிய பிக்குகள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய பிக்குகள் முன்னணி ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

கருணா மற்றும் பிள்ளையானுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மாறாக அவர்களுக்கு அரசியல் தஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாகவுமு; தெரிவித்துள்ளது.

சனாதிபதி மகிந்த ராசபச நாட்டை பற்றி கருத்திற் கொண்டு புலிப் பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென ஐக்கிய பிக்குகள் முன்னணியின் பிரதம அமைப்பாளர் அம்பலாவே கனகொல தேரர் தெரிவித்துள்ளார்.

2005ம் ஆண்டு தேர்தலின் போது தர்ம இராச்சியமொன்றை அமைப்பதாக வாக்குறுதி அளித்த இந்த அரசாங்கம் தற்போது கசினோ மன்னர்களை அழைத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் கொழும்பு அருங்காட்சியக படிக் கட்டுகள் இடிந்து வீழ்ந்தனைப் போன்று நாட்டின் அரசாங்கமும் திடீரென இடிந்து விழும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியை சேர்ந்த 46 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைவர்:-

ஆளும் கட்சியை சேர்ந்த 46 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து கொள்ள போவதாகவும் இவர்களில் அமைச்சர்களும் இருப்பதாகவும்  அகில இலங்கை ஐக்கிய பிக்குகள் அமைப்பின் தேசிய அமைப்பாளர் அபன்கொட ஞானாலோக்க தேரர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள கூட்டணி கட்சிகளை சேர்ந்த எவரும் இதில் இல்லை என தெரிவித்துள்ள அவர்,  அரும்பொருட்காட்சி சாலையில் அண்மையில் ஏற்பட்ட உடைவு போன்று, அரசாங்கமும், அவர்கள் அறியாமலேயே கவிழ்ந்து விடும் என கூறியுள்ளார்.  கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய தர்ம ராஜ்ஜியம் ஒன்றை ஏற்படுத்த போவதாக கூறியது, ஆனால் நாட்டில் எத்தனை கசினோ நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன, எத்தனை மாட்டை இறைச்சிக்கு அறுக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள என்பது எமக்கு தெரியும்.  இன்று கே.பி. கருணா, பிள்ளையான் போன்றோர் தேசப்பற்றாளர்களாக மாறியுள்ளனர்.  இவர்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் சிறப்புரிமைகளை பெற்றுக்கொண்டு இலங்கை எதிராக சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர் என்பதை நான் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன்.

தமிழகத்தில் இலங்கை எதிராக நடைபெற்று வரும் அடக்குமுறை செயற்பாடுகளின் பின்னணியில் கே.பி மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உள்ளிட்ட பலர் உள்ளனர். பிக்குமாரை தாக்கும் முன்னுதாரணம் இலங்கையிலேயே வழங்கப்பட்டது. மாநாயக்க தேரர்களும், ஏனைய மத தலைவர்களும் நாட்டின் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தி சகவாழ்வை ஏற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பான விசாரணை நடத்த பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுகின்றன. சம்பவத்தை மூடி மறைக்கவே ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுகின்றனவே தவிர சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக அல்ல.  எந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டு தீர்வுகள் வழங்கப்பட்ட என தாம் கேள்வி எழுப்புவதாகவும் அபன்கொட ஞானாலோக்க தேரர்  தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தை குழப்பும் நோக்கில் தாக்குதல் நடத்தப்படுவதாக த.தே.கூ. குற்றச்சாட்டு

வட மாகாணசபைத் தேர்தலுக்கான முன் ஆயத்த பிரச்சாரங்களை குழப்பும் நோக்கில் அரசாங்கம் தாக்குதல்களை நடத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

இதன் ஓர் கட்டமாகவே அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற தாக்குதலை கருத வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தேசிய மற்றும் உள்ளுர் அரசியல் தலைவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகைள அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியான முறையில் நடத்தப்பட்ட கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவினர் உரிய முறையில் செயற்பட்டு தங்களுக்கு பாதுகாப்பை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சிலரை காவல்துறையினரிடம் ஒப்படைத்த போதிலும் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு மேர்வின் எச்சரிக்கை-அரச தலைவரின் ஒலி பெருக்கி

இலங்கை யாத்திரீகர்களின் பாதுகாப்பு தொடர்பாக மிக விரைவில் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது போனால், சிங்கள் பௌத்தன் என்ற முறையிலும் துட்டகைமுனுவின் பரம்பரையை சேர்ந்தவன் என்ற முறையிலும் கடும் தீர்மானங்களை எடுக்க போவதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் பண்டைய காலம் தொட்டு இருந்து வரும், உறவுகளை, கருணாநிதி உள்ளிட்ட புலிகளின் ஆதரவாளர்களினால் சீர்குலைக்க முடியாது.

வழிப்பாட்டு தளங்களுக்கு இலங்கையர்கள் உட்பட மத தலைவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கு தாம் கடும் எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறேன். துட்டகைமுனுவின் பரம்பரையை சேர்ந்த இரத்த உறவுகள் நாங்கள்.  இந்த இரத்தம் எப்போதும் பின்நோக்கி சென்றதில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.