குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 6 ம் திகதி திங்கட் கிழமை .

செந்தமிழன் சீமான் சுவிசிற்கு வருகை! அவரைவரவேற்ர தமிழர்கள் வணக்கம் சேர் என்றனர். கொள்கைகள் தெரியாது உணர்வுகள் இருந்து பயன் என்ன?

 

கிலாரி சொன்னதையே இப்போது செய்கிறோம் – அமெரிக்க இராயாங்கத் திணைக்களப் பேச்சாளர். ஐ.நா. மனித உரிமைப் பேரவை நிகழ்வில் கலந்துகொள்ள செந்தமிழன் சீமான் சுவிசிற்கு வருகை! அவரைவரவேற்ர தமிழர்கள் வணக்கம் சேர் என்றனர். கொள்கைகள் தெரியாது உணர்வுகள்  இருந்து பயன் என்ன?இலங்கைக்கு எதிரான இறுதியான தீர்மான வரைபை சமர்ப்பித்தது அமெரிக்கா

 

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், சிறிலங்கா அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அனைத்துலக கடப்பாடுகளை நிறைவேற்றவும் ராயபக்ச அரசாங்கம் தவறியதால் தான் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

 

வொசிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராயாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட்,

 

“இலங்கையின் நிலைமைகளில் முன்னேற்றங்கள் ஏற்படாதது குறித்த கவலைகளை கொண்டுள்ள ஏனைய நாடுகளின் அரசாங்கங்களுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றி வருகிறது.

 

எமது இந்த செயற்பாடு, சிறிலங்கா அரசுக்கு ஆச்சரியமாக இருக்காது.

 

ஏனென்றால், உண்மையான பதிலை நாம் எதிர்பார்ப்பதாக வெளிப்படையாகவும் தனிப்படவும் எடுத்துக் கூறியிருந்தோம்.

 

ஆனால் அதற்குத் தேவையான நகர்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதை எம்மால் காணமுடியவில்லை.

 

வாக்குறுதிகளை நிறைவேற்றப்படுவதை காணமுடியவில்லை.

 

இலங்கை அரசுடன் நாம் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறோம்.

 

இந்தத் தீர்மானத்தை பலமான ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இலங்கையின் நிலைமையில் முன்னேற்றத்தை காணாவிட்டால், நாம் முன்னோக்கிச் செல்வோம், என்று கடந்த ஆண்டு இலங்கை வெளிவிவகார அமைச்சர் யீ.எல்.பீரிசு வொசிங்டன் வந்திருந்த போது, அப்போதைய இராயாங்கச்செயலர் கிலாரி கிளின்டன், மிகத் தெளிவாக கூறியிருந்தார்.

 

அதையே தான் நாம் இப்போது செய்திருக்கிறோம்.“ என்று தெரிவித்தார்.

 

அமெரிக்காவின் தீர்மானம், இலங்கையிலும் உலகிலும் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவுக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு உந்துசக்தியாக அமையும் என்ற விமர்சனங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த விக்ரோரியா நுலன்ட்,

 

“இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதிகளையும் அனைத்துலக கடப்பாடுகளையும் நிறைவேற்ற வேண்டிய தேவை உள்ளது.

 

இந்தக் குழுக்களைப் பலவீனப்படுத்த, இலங்கை அரசாங்கம் தனது மக்களுக்கான கடப்பாடுகளை நிறைவேற்றுவதே சிறந்தது.

 

அதன் மூலம் அனைத்துலக சமூகம் முன்னோக்கி நகரும். ஆனால் அது நடக்கவில்லை.

 

தெளிவான முன்னேற்றத்தை அடைவதற்குத் தேவையான முயற்சிகளை நாம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் எடுத்து வருகிறோம்” என்று குறிப்பிட்டார்.

 

தீர்மான வரைபில் மாற்றம் செய்வது தொடர்பாக இந்திய அரசாங்கம் அமெரிக்காவை அணுகியதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போது நடந்து வரும் கலந்துரையாடல்கள் தொடர்பான விபரங்கள் தம்மிடம் இல்லை என்றும், யெனிவாவில் உள்ள தூதரகம் மூலம் தாம் பதிலளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு எதிரான இறுதியான தீர்மான வரைபை சமர்ப்பித்தது அமெரிக்கா

 

இலங்கைக்கு எதிரான இறுதியான தீர்மான வரைபை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா நேற்று சமர்ப்பித்துள்ளது.

 

யெனிவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் எலீன் செம்பர்லைன் டோனஹே இந்த தீர்மான வரைபை பேரவையில் சமர்ப்பித்தார்.

 

அமெரிக்காவின் அனுசரணையுடன் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்துக்கு 32 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.

 

ஒஸ்ரியா, கனடா, குரோசியா, பெல்ஜியம், டென்மார்க், எஸ்தோனியா, பிரான்ஸ், பின்லாந்து, டென்மார்க், ஜோர்ஜியா, ஜேர்மனி, கிறீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து. இத்தாலி, லிச்ரென்ஸ்ரெய்ன், லித்வேனியா, மால்டா, மொன்ரினிக்ரோ, நோர்வே, போலந்து, போர்த்துக்கல், ருமேனியா, சுலோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெய்ன், சென்.கிட்ஸ் அன் நெவிஸ், சுவீடன், சுவிற்சர்லாந்து, பிரித்தானியா, வட அயர்லாந்து ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியுள்ளன.

 

முன்னர் வெளியான தீர்மான வரைபுகளில் இருந்த கடுந்தொனி இறுதி வரைபில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

கோத்தாவுடன் நடத்தவிருந்த பேச்சுக்களை நிறுத்தியது இந்தியா – கொழும்பு பயணமும் கைவிடப்பட்டது

 

இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராயபக்சவுடன் இந்தியப் பாதுகாப்புச் செயலர் சசிகாந்த் சர்மா அடுத்தவாரம் நடத்தவிருந்த பேச்சுக்களை இந்தியா திடீரென இடைநிறுத்தியுள்ளது.

 

யெனிவா தீர்மான விவகாரம் மற்றும் இலங்கைக்கு எதிராக தமிழ்நாட்டில் எழுந்துள்ள போராட்டங்களை அடுத்தே புதுடெல்லி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்க்ள வெளியாகியுள்ளன.

 

எனினும், இந்திய - இலங்கை பாதுகாப்புச் செயலர்கள் மட்டத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தக் கலந்துரையாடல் திடீரென இடைநிறுத்தப்பட்டதற்கான காரணத்தை இந்திய அரசாங்கம் வெளியிடவில்லை.

கைவிடப்பட்டுள்ள இந்த பேச்சுக்கள் எப்போது நடைபெறும் என்று இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.

 

 

ஐ.நா. மனித உரிமைப் பேரவை நிகழ்வில் கலந்துகொள்ள செந்தமிழன் சீமான் சுவிசிற்கு வருகை! அவரைவரவேற்ர தமிழர்கள் வணக்கம் சேர் என்றனர். கொள்கைகள் தெரியாது உணர்வுகள்  இருந்து பயன் என்ன?

.

 

நாம் தமிழர் இயக்கக் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் சுவிற்சர்லாந்துக்கு வருகை தந்துள்ளார்.

 

அவர் யெனீவா நகரில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைப் போரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கோரும் பணியில் ஈடுபடவுள்ளார்.

 

இவருடன் கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி தடா சந்திரசேகர் அவர்களும் வருகை தந்துள்ளார். இவர்கள் இருவரும் இன்று பிற்பகல் 2.15 அளவில் யெனீவா விண்ணுந்து நிலையத்தில் வந்திறங்கிய பொழுது அங்கு திரண்ட நூற்றுக் கணக்கான ஈழத்தமிழர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

 

மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் அமெரிக்கா முன்மொழியும் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ள இந்தத் தருணத்தில் அவரின் சுவிசிற்கு வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

 

 

அதேவேளை, குறித்த தீரமானத்துக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டுமெனக் கோரி தமிழக்கத்தில் மாணவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் இன்றைய தருணத்தில் சீமானின் வருகை இரட்டிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

 

மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் சீமான் அவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி யெனீவா நகரில் ஐ.நா. முன்றலில், தாய்த் தமிழகத்தில் தன்னெழுச்சியாக நடைபெற்றுவரும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏற்பாடு செய்யப் பட்டுள்ள மாபெரும் கவன ஈர்ப்பு நிகழ்விலும் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

 

சுவிசிற்கு தமிழர் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தக் கவன ஈர்ப்பு நிகழ்வு வெள்ளிக் கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணிவரை நடைபெறும்.

 

முதற்தடவையாக சுவிசிற்கு நாட்டிற்கு வருகை தந்துள்ள செந்தமிழன் சீமான் அவர்களின் வருகை சுவிஸ் தமிழர் மத்தியிலே புதுவித உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

 

 

இலங்கை எதிர்ப்பு தீவிரம் – சென்னை மகாபோதி நிலைய பிக்குகள் வடமாநிலங்களுக்கு ஓட்டம்!

 

இலங்கைக்கு எதிரான போராட்டங்களும், சிங்கள, பௌத்தர்கள் மீதான தாக்குதல்களும் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு சிறிலங்கா அரசாங்கம் தமது குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கலாம் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

நேற்றுமுன்தினம் தங்சாவூரிலும், நேற்று சென்னை தொடருந்து நிலையத்திலும் இரண்டு பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டதை அடுத்தே பயண எச்சரிக்கை விடுப்பது குறித்து இந்தியா ஆலோசித்து வருகிறது.

 

நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், சிறிலங்கர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இந்திய அரசிடம் வலியுறுத்தும்படி புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவர் பணிக்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக கோரப்பட்டுள்ள அறிக்கை புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவரிடம் இருந்து இன்று காலைக்குள் கிடைக்கும்.

 

அதனைப் பொறுத்தே பயண எச்சரிக்கையை விடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் இலங்கை வெளிவிவகாரச் செயலர் தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையே, பௌத்த பிக்குகள் தாக்கப்பட்ட சம்பவம் மற்றும் தமிழ்நாட்டில் எழுந்துள்ள சிறிலங்கா எதிர்ப்புணர்வை அடுத்து, நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புகள் உள்ளதால், சென்னை எழும்பூரில் உள்ள மகபோதி நிலையத்தில் தங்கியிருந்த அனைத்து பௌத்த பிக்குகளும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

 

மகாபோதி நிலையத்தில் தங்கிருந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சுமார் 63 பேர் நேற்றிரவு தொடரூந்து மூலம், காவல்துறை பாதுகாப்புடன் வடமாநிலங்களுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

 

இந்திய - இலங்கை பாதுகாப்பு செயலர்கள் மட்டத்திலான இந்தக் கலந்துரையாடல் வரும் 25ம் நாள் கொழும்பில் ஆரம்பமாகவிருந்தது.

 

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவிருந்த இந்தப் பேச்சுக்களில் பங்கேற்பதற்காக, இந்தியப் பாதுகாப்புச் செயலர் சசிகாந்த் சர்மா வார இறுதியில் கொழும்பு செல்லவிருந்தார்.

 

அவரது பயணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புதுடெல்லியில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த இருதரப்புப் பேச்சுக்களில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் பயிற்சிகளை அளிப்பது, கூட்டுப் போர்ப்பயிற்சிகளை நடத்துவது குறித்து கலந்துரையாடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

 

யெனிவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கக் கூடும் என்பதால், உடனடியாக இந்தப் பேச்சுக்களை நடத்துவதை புதுடெல்லி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

 

இந்திய வெளிவிவகார அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் கலந்துரையாடியே இந்த முடிவை எடுத்துள்ளன.

 

அதேவேளை, இந்த முடிவு குறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்திய அதிகாரி ஒருவர்,

 

“மார்ச் 25 நாள், பேச்சுக்களை நடத்துவதென்று இறுதியான தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை. மார்ச் 25ம் நாள் ஒரு தெரிவாக மட்டுமே இருந்தது.

 

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் இது இருதரப்பு இணக்கத்துடன் ஒரு நாளுக்கு பிற்போடப்பட்டுள்ளது.

 

பெரும்பாலும் இந்தக் கலந்துரையாடல் மே மாத பிற்பகுதியில் இடம்பெறலாம்.” என்று தெரிவித்துள்ளார்.