குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 8 ம் திகதி புதன் கிழமை .

சனாதிபதித்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது?

05.01.2010 இல் பிரசுரிக்கபட்டது.
"தை பிறந்தால் வழிபிறக்கும்." இதனடிப்படையில் போரில் பாதிக்கப்பட்ட மக்கள் சற்று நிம்மதிக் காற்றை சுவாசிக்க முன்னர் இத்தேர்தல் வந்து குழப்புகின்றது. தமிழராகிய நாம் யாரை ஆதரிப்பது என்பதே அந்தக்குழப்பம். அதற்கான மேல்வாரியான ஒரு ஆய்வாகவே இது அமைகின்றது. காரணம் நுணுக்கமாக ஆய்வுசெய்தால் தமிழரின் அரசியல் நகர்வு எதிரிக்கு வாய்ப்பாகிவிடும் எனவே தமிழராகிய நாம் ஆழமாக அடுத்தகட்ட நகர்வுகளை கருத்தின் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.

 "எமது குறிக்கோள் நிறைவேற  போராட்ட வடிவங்கள் மாறலாம்". என்பதற்கு அமைவாக நாம் யாருக்கு வாக்களிப்பதன் மூலம் எற்படும் நன்மை, தீமைகளை மதிப்பீடு செய்வோமானால் தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவுக்கு வரலாம்.

1. வாக்களிக்காது கறுப்புக்கொடி காட்டுவதன் வளைவு:-

1. எமது போராட்ட வரலாற்றில் நாம் தேர்தலில் கறுப்புக்கொடி காட்டிய காலமே அதிகம் எனலாம்.எனவே அதன்மூலம் ஏதாவது நன்மையுண்டா?
 
2.நாம் வாக்களிக்காமல் விடுவதன் மூலம் தேர்தல் நடைபெறாமல் அல்லது சனாதிபதித் தெரிவு செய்ய முடியாதுள்ளது எனின் கறுப்புக்கொடி காட்டி உரிமைகளைப்பெறலாம்.

3.கடந்த சனாதிபதித்தேர்தல் மாபெரும் கறுப்பு நாளாக வடக்குக் கிழக்கில் நடைபெற்றது, ஆனால் சனாதிபதி தேர்தெடுக்கப்பட்டார், இதுபற்றி சர்வதேசம் சரி, சிங்களபௌத்த துறவிகள் சரி சனநாகக்கோட்பாடுகளை கூறுபவர்களாவது எம்மைப்பற்றி எதாவது கருத்துக்கூறினார்களா? அல்லது எம்மீது இரக்கப்பட்டார்களா?.

4.வரலாறுகளையும் அரசியல் சட்டதிட்டங்களையும் நாம் அவதானிக்கவேண்டும். அதாவது நாம் செய்யப்போகும் போராட்டத்தில் மேற்கூறிய சட்டத்தில் இடமுண்டா? தாக்கத்தை ஏற்படுத்துமா? என பார்க்கவேண்டும். எடுத்துக்காட்டாக :- ஐம்பது விழுக்காடுகளிற்கு வாக்களிக்காது இருப்பின் தெரிவு நடைபெறாது. இத்தகுதி தமிழினத்திற்கு உண்டா? என ஆய்வுசெய்யுங்கள்.

5. தேர்தலில் வாக்களிக்காது விடுவதால் ஏற்படும் விளைவு சனநாயகத்தை மதிக்கவில்லை என பொருட்படும். அதாவது வாக்களிப்பதோ! வாக்களிக்காது விடுவதோ! ஒருவரின் தனிமனிதவுரிமையாக கணிக்கப்பட்டு சனநாயக சட்டவிதியில் உள்ளடக்கப்படும்.எடுத்துக்காட்டாக சென்றகாலங்களில் நடைபெற்ற தேர்தல்களை ஒப்பிடலாம். எனவே தான் தமிழர்கள் வாக்களிப்பது அவசியமாகின்றது.

6.வாக்களிக்காது விடுவதால் கள்ளவாக்குகள் அளிப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம். அதாவது ஒருதனிமனிதனின் வாக்குரிமையை என்னொருவர் பறித்தெடுத்து எமது தேசத்திற்கு தூரோகத்தனமாக வாக்களிக்க நாம் இடமளிப்பதாக அமையும். எடுத்துக்காட்டாக அண்மையில் நடைபெற்ற யாழ் மாநகரசபைத்தேர்தலைக் குறிப்பிடலாம்.

7.தமிழினத்தின் போராட்டம் பல வடிவங்களில், பல நகர்வுகளில் நடைபெற்று வரும் வேளையில் சில அரசியல்வாதிகள் அற்பசலுகைகளிற்காக துணைபோகின்றனர். இதனால் அரசியலுரிமைகளை இழக்க வேண்டியநேரிடுகின்றது. எனவே கூட்டாகதுணைபோய் தமிழர்களின் அரசியல் சாணாக்கியத்தை பாரீட்சித்துப்பார்க்க கூடியதேர்தலாகவுள்ளது. இதுவே நாம் செய்யாத போராட்டமாகவுமுள்ளது. இது வெற்றிபெறாவிட்டால் இதனையும் ஒரு சாதகமாக சர்வதேசமட்டத்திற்கு கொண்டுசென்று எமது போராட்டத்திற்கு மேலும் வலுச்சேர்க்கமுடியும்.


2. தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் விளைவு.

எமது இனத்தின் வேட்பாளர் ஒருவரை நிறுத்தி தமிழர்களின் விருப்பத்தை சர்வதேசத்திற்கு காட்டுவது மற்றும் சிங்களத்தேசத்துடன் வாழமுடியாது, எமது தலைவிதியை நாமே தீர்மானிப்பது, எம்மை அழித்தவனுக்கு எப்படி வாக்களிப்பது? எம்மினத்தின் தலைவர் என்பதை நிரூபித்தல் போன்ற பல்வேறு நன்மைகள் காணப்படுகின்றது. இதுபற்றி பல புலபெயர் வாழ் உறவுகள் நேர்காணலில் கூறிவருகின்றனர். இருப்பினும் இவைகள் முன்னரே செய்து முடித்த பரீட்சையாகவேயுள்ளது. ஆசியா நாடுகளின் கலாச்சாரத்தில் பழிக்குப்பழி வாங்குதல், கோபப்படுதல், சண்டைபிடித்தல், வார்த்தைப்பிரயோகம் செய்தல், எதிரியை எதிரியாக பார்த்தல், கொலை செய்யுமுணர்வு போன்ற பல்வேறு குணவியல்புகள் அரசியலிலும் இழையோடியிருப்பது, "அரசியல் கலாச்சார அபிவிருத்திக்கு" இடையூறானவை. இதனால் தான் மனிதவுரிமை மீறல்கள் அதிகம் இடம்பெறும் நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் மேற்குலக நாடுகளின் அரசியல் பண்புகளை கடைப்பிடித்தால் எமது இனம் அரசியலில் அபிவிருத்தியடைந்து விடலாம். அதாவது தமிழினத்தின் தேசிய அரசியலுக்காக ஒன்றுபட்டு உழைக்கவேண்டும்.

தனித்துப் போட்டியிடுவதன் மூலம் தற்போதைய சனாதிபதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார் என்பதை மிகவும் நுனுக்கமாக ஆய்வுசெய்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக மகிந்தா வந்தால் போர்குற்றத்திலிருந்து தப்பிக்கொள்ளலாம், இனரீதியான கட்சிக்கோ அல்லது பிரசேவாததிற்கோ இடமில்லை தமிழர்களின் பூர்வீக நிலங்களில் திட்டமிடப்பட்ட பௌத்த, சிங்களக்குடியேற்றம்....... இப்படி பலவிடயங்கள் தொடரும்.

"புலபெயர் தமிழர்களின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வலுச்சேர்த்தல்". அதாவது மகிந்தா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வலுச்சேர்க முடியாது காரணம் சர்வதேச தமிழர்களின் வலைப்பின்னல்களை பலகோணங்களில் முறியடித்து வரும் மகிந்தா சர்வதேச சட்டவிதிகளை பயன்படுத்தி சாதாரணமாக மக்களையும் பயங்கரவாத பட்டியல் படுத்தி இலங்கைக்கு திருப்பி அழைக்கலாம், அல்லது சிறைப்படுத்தலாம். எனவே இதனை முறியடிக்க ஆட்சிமாற்றத்திற்கு ஆதரிப்பதா? சுயேட்சை வேட்பாளரை ஆதரிப்பதா? கூட்டமைப்பின் ஒற்றுமைப்பலமும், அதன் முடிவையுமே சர்வதேசம் எதிர்பார்த்து நிற்கின்றது. இதுவே வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கும் வலுசேர்க்குமே தவிர தனிவேட்பாளரின் முடிவு வலுச்சேர்ப்பது மிகக்குறைவு. 
 

தனிவேட்பாளரை நிறுத்துவதால் எதாவது பயனுண்டா? என பழைய அனுபவங்களையும்,  உலகஅரசியல் அனுபவங்களையும் உற்றுநோக்கவேண்டும். அத்துடன் எமது மக்களின் நிதியை வீண்விரையம் செய்வதை தவிர்த்து, பாதிக்கப்பட்ட எமது உறவுகளிற்கு பயன்படுத்துவதே காலத்தின்தேவையாகும். தமிழினத்தின் போரையும், நலன்புரிநிலையங்கள், மற்றும் எமது பிரதேச அபிவிருத்தி போன்ற பல்வேறு காரணங்களால் பெறப்படும் நிதியில் பேரினவாதிகள் தேர்தல் கூத்தையாடுகின்றனர் நாம் ஏன் இத்தேர்தலில் நிதியை செலவு செய்யவேண்டும்.?

எடுத்துக்காட்டாக:- மேற்குறிப்பிட்ட பணிகளிற்கு ஏன் மகிந்தா தனது செல்லத்தம்பிமார்களை நியமிக்க வேண்டும். எமது பிரதேசங்களை அபிவிருத்திசெய்ய நேர்மையான தமிழ் உத்தியோ கத்தர்கள், அல்லது கூட்டமைப்பு உறுப்பினர்கள் இல்லையா? இவர்களை அபிவிருத் தியில்  இணைக்காத அரசாங்கம் தேர்தல் வந்தவுடன் அரவணைப்பது ஏன்?


உறுதிமொழிகளை எழுத்துமூலம் பெறுதல்:- தனித்து அல்லது தேர்தல் புறக்கனிக்கப் போவதாக எச்சரித்து சாதாரணவிடங்களைவிட்டு அரசியல் ரிதியான தீர்வை முன்வைத்து பயனடைதல். மீள்குடியேற்றம், உயர் வலயபாதுகாப்பு வலயங்களின் குடியேற்றம், அபிவிருத்தி போன்றவற்றை சர்வதேச நாடுகளின் அழுத்தங்களால் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய கடைப்பாடு உண்டு. இதனை முன்வைக்காது அரசியல் நகர்வான சிறையிலுள்ள போராளிகளின் விடுதலை, மற்றும் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றத்தை தடுத்தல், வடக்கையும் கிழக்கையும் இணைத்தல், தமிழருக்கான அரசியல் தீர்வு என்ன? இராணுவ குறைப்பு மற்றும் கெடுபிடிகள், போன்றவற்றிற்கு அரசாங்கத்தின் கருத்தையே சர்வதேசம் எதிபார்க்கின்றது. அதாவது எமது அரசியல் பொருளாதார கலாச்சார (தேசம், மொழி, கலாச்சாரம்) அம்சங்களை அங்கீகரிக்கும் வகையில் பிரதாண வேட்பாளர்களிடம் பெற்றுக் கொள்ளுதல்.  கூட்டமைப்பின் பிரதான கடமையாகும்

மேற்குறிப்பிட்ட கருத்தை மதிப்பீடு செய்யுபோது தனிவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதால் பயனில்லை செலவுதான். எனவே மகிந்தா ஆட்சிக்காக எதையும் செய்ய கூடியவர் ஆனால் ஆட்சிக்கு வந்தபின் மாறக்கூடியவர். அதுமட்டுமல்ல தேசத்துரோகிகளை அரவணைப்பவர் இதனால் கூட்டமைப்பே இல்லாது போய்விடும். தமிழினதின் கொடுமைகளை தட்டிகேட்கவோ, அல்லது சர்வதேசத்திற்கு சொல்ல கட்சியில்லாது போய்விடும். எனவேதான் இரு முடிவுமட்டுமே கூட்டமைப்புக்கு தற்போதுள்ளது அதாவது
1. தேர்தலை புறக்கணிப்பதா?
2. பொது வேட்பாளரை ஆதரிப்பதா? இரண்டாவது தெரிவை எடுத்தால் அதன் விளைவுகள் பற்றி விரிவாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.


3.பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் விளைவுகள்.

1.தமிழினத்தை கொடுரமாக அழித்த அரசாங்கத்தை மாற்றுதல் வேண்டும். அதாவது எமது கூட்டமைபப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், மேற்குலக நாடுகள், புலபெயர்வாழ் தமிழ் உறவுகளின் தியாகங்கள் பல்வேறு போராட்டங்களை செய்து போரை நிறுத்தாத அரசாங்கத்தை ஆதரிக்கலாமா?

2.போருக்குப்பின் எமது உறவுகளை சொல்லெனாத்துயரத்தில் வதைத்த அரசாங்கத்தை உடனடியாக மாற்ற அரிய சந்தர்ப்பம். போர் கைதிகளைப்போல உணவுக்கு கையேந்தவைத்து, பெண்களின் கலாச்சாரத்தை சீரழித்த அரசாங்கத்தை மாற்றுவது அவசியம்.

3.வன்னி, மற்றும் மலையக மக்களின் சுதந்திர நடமாட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்த அரசு தேர்தல் என்றால் கட்டுப்பாடுகள் இன்றி வெளியில் விடலாம். அப்படியானால் தேர்தல் முடிந்த பின் மீண்டும் கட்டுப்படுத்துவது அரசின் இயல்பானது எனவே மீண்டும் தேர்தல் வருபோதே கட்டுபாடு தளர்தப்படும்.

4.தற்போதைய அரசாங்கம் தமிழினத்தின் வரலாற்று ஆதாரங்களையும், அரசியல் பொருளாதார கலாச்சார விழிமியங்களை நீண்டகாலத்தில் அடியோடு அழிப்பதற்கு பாரியதிட்டங்களை வகுத்து பலவடிவங்களில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதனை தடுக்க தமிழர்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பது அவசியமாகின்றது.

5.உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தமிழினத்தின் சுயநிர்ணயவுரிமையை அழிப்பதற்கு பயங்கரவாதம் என்ற வாதத்துடன் பாரிய வலைப்பின்ணலை செய்து வெற்றிகண்டு வருகின்றது. எனவே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதால் இத்திட்டத்தை முறியடிக்கலாம். எடுத்துக்காட்டாக ஐக்யநாடுகள் சபை கூடபக்கச்சார்பாக செயற்படுகின்றது. சரணடைய கேட்டதைப்பற்றி தற்போது ஒப்புக்கொள்வது போல மேலும் பல செய்திகளை மறைத்து அரசாங்கத்திற்கு சார்பாகலாம்.

6.சரத்பொன்சேகாவை வெல்லவைப்பதன் மூலம் எமது இனம்பட்ட துன்பத்தை பௌத்தசிங்களத் தேசமும் அனுபவிக்க வழிபிறக்கும்.

7.சனாதிபதி ஆட்சி முறைமையை இல்லாதொழித்தல். அதாவது சனாதிபதி ஆட்சி முறை கொண்டுவரப்பட்ட பின்னரே தமிழின அழிப்பை சிங்களத்தேசத்தின்  ஒருவரே செய்யமுடியும். இதனாலேயே தமிழின ஆயுதப்போராட்டம் கூர்மையடைந்தது; கடந்த சனாதிபதி தேர்தலில் மகிந்தா அவர்கள் சனாதிபதி முறை ஒழிப்பதாக கூறியதை நம்பியே அதிகமானவர்கள் வாக்களித்தனர்; கதிரையில் ஏறியவுடன் அதை அனுபவித்தவர் மீண்டும் அனுபவிக்க விரும்புவதாலேயே மக்கள் விடுதலை முன்ணனி இம்முறை தேர்தலில் எதிர்கட்சிகளுடன் கூட்டுசேர்ந்துள்ளது. பாராளுமன்ற ஆட்சி முறையிருந்திருந்தால் யுத்தம் அல்லது மனிதப்பேரவலம் தடுக்க கூட்டமைப்பால் முடிந்திருக்கும்.

8.சனாதிபதி ஆட்சிமுறை இருக்கும் வரை இனப்பிரச்சனைக்கு தீர்கமான தீர்வு எட்டப்பட வாய்ப்பு மிகக்குறைவு. என பல்வேறு அரசியல் ஆய்வாலர்கள் அன்றும்,இன்றும் கூறிவருவதை மக்கள் விரும்புகின்றபோதும் சிங்களத்தேசமும், ஆட்சியாளர்களும் விரும்பவில்லை. ஏன்? தமிழினத்தின் பிரச்சனையை தீர்வுகான விரும்பாது  உழல் நிறைந்த மனிதநேயமற்ற நாடாக மாற்ற விரும்புகின்றது. 

9.சரத்பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் ஆறுநிமிடத்தில் இராணுவாட்சி வரும் என பலரை பயமுறித்திவருகின்றனர். அப்படியானால் தற்போது என்ன ஆட்சி நடைபெறுகின்றது? தேர்தலுக்காக எதுவும் செய்யலாம் என்ற சட்டமே இலங்கையில் காணப்படுகின்றது. பொது வேட்பாளருடன் பிரதான அனுபவங்கொண்ட கட்சிகள் மற்றும் முன்னைய சனாதிபதியின் ஆலோசனை போன்ற பல புத்திசாலிகளின் பலம் இருப்பதாலேயே மகிந்தா மிகவும் குழப்பம் அடைந்துள்ளார். இருப்பினும் எமக்கு எவர்வந்தாலும் முடிவுகிடைக்கப்போவதில்லை. அப்படி நடந்தாலும் எமக்கு நன்மையே கிடைக்கும் அதாவது சர்வதேச படையின் மூலம் இராணுவாட்சியை முறியடிக்கும் போது சர்வதேசம் தமிழரின் உரிமையை நிலைநிறுத்த வாய்ப்பாக அமையும்.

10.தற்போதைய சனாதிபதி மேற்குலகத்தின் கருத்துக்களை கேட்கவோ அல்லது மதிப்பளிக்கவோ தவறியதால் இன்று தமிழினத்தின் சனநாயகவுரிமை மதிக்கப்பட வேண்டுமென சர்வதேச நாடுகள் உறுதியுடன் இருப்பதால் ஆட்சி மாற்றம் எமது உரிமையை நிலைநிறுத்த சர்வதேசத்திற்கு வாய்ப்பாக அமையலாம்.

போர் அழிவுக்கு சரத் காரணமாக இருப்பினும் முற்படைகளின் தலைவராக மகிந்தாவே சட்டரீதியாகவும், சனாதிபதி ஆட்சிமறையிலும் மேலோங்கி காணப்படுவதால் முதல் குற்றவாளிக்கா? இரண்டாவது குற்றவாளி கோத்தபாய, மூன்றாவது குற்றவாளி சரத்பொன்சேகா ஆகவேதான்  முதல் இருவரும் ஒருகட்சியாகவும் மற்றவர் பொதுவாகவும் போட்டியிடுவதால் தமிழினத்திற்கு குழப்பான நிலை.

எனவே எதிரியைவிட ஆட்சிமாற்றமே காலத்தின் தேவையாகவுள்ளது. இல்லையேன் அடுத்த ஆறு ஆண்டுகளில் தமிழ் தேசம், கலாச்சாரம் போன்ற பல.... அழிவதுடன் சர்வதேச தமிழினத்தின் வலையமைப்புக்களும் அழிந்துவிடும் இதனால் தமிழினம் அரசியல் பொருளாதார கலாச்சார அபிவிருத்தி மிகவேகமாக பாதிக்கப்படும்.


   இறுதியாக எவர் ஆட்சிக்கு வந்தாலும் ஆசிய நாடுகளில் மதம் அரசியலை தலைமைத்துவத்தை தீர்மானிக்கு சத்தியாகவுள்ளது. எடுத்துக்காட்டாக சிங்கள பிரதான வேட்பாளர்கள் பௌத்த பீடங்களில் சென்று ஆசிவாதம் பெறுவதை காணலாம். எனவேதான் தமிழினத்தின் சுதந்திரத்தை பௌத்தபீடங்கள் ஏற்கும் வரை தமிழினத்திற்கு தீர்வு எட்டப்படவாய்ப்பு குறைவாகும். இருப்பினும் நாட்டின் தலைவர்கள் அரசியல் அபிலாசைகளிற்கு அப்பால்சென்று நாட்டின் அபிவிருத்தி மற்றும் அனைத்து மக்களின் விருப்பின் மீதும் அக்கறையுடன் திறந்த மனதுடன் செயற்படுவாராயின் நாடு சுபீட்சத்தையும் நிம்மதியையுமடையும்.

மேற்கூறியவற்றை சுருக்கமாக ஆய்வு செய்தால் பொதுவேட்பாளரை ஆதரிப்பதல்ல வாக்களித்து ஆட்சியைமாற்றுவது மட்டுமே ஆகும். அவருடன்துணைபோவதல்ல தமிழனின் அரசியல் சானாக்கியம் மட்டுமே.இதில் மகிந்தா என்பவரை பற்றி குறிப்பிடவில்லை காரணம் முதல் எதிரிமட்டுமல்ல தமிழினத்தை ஈனஇரக்கமின்றி அழித்தவன். இருப்பினும் சிலர் ஆதரிக்கலாம் அல்லது அவரைப்பற்றி அறிய விரும்பலாம் எனவேதான் பொதுவேட்பாளரைபற்றிய விளைவுகளில் சிலவற்றை சுட்டிகாட்டியும் மற்றும் ஆட்சி மாற்றத்தை வலியுறுத்தும் போது மகிந்தாவின் விளைவுகளை நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

நன்றி - ஆக்கம் வன்னி விஐயன்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.