குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

தமிழையும் சைவத்தையும் கோவிலில் வெளியேற்றி விட்டு பட்டுக்கட்டிப் புலிச்சங்கிலியுடன் வெளியில் நின்று

பூநுால்காரரின் இந்து சமயத்தை(ஆரியச்சமயத்தை) தமிழ்ச்சமயமென ஏமாற்றும் தமிழர்களே!ஏமாறும் தமிழர்களே!!13.01.2012தமிழான்டின் நிறைவெய்தும் காலம் .புதிய திருவள்ளுவராண்டு தமிழாண்டு2043 பிறக்கின்றது. தைப்பொங்கல் அன்று தமிழாண்டு எப்போதும் பிறக்கும். நீதி பிழைக்கின்ற போது இயற்கை தண்டிக்கும்  என்று நம்பினார்கள் தமிழர்கள். இயற்கைக்குள்ளேயும் தன்மனத்திற் குள்ளேயும் இறைவன் இருப்பதாய் உணர்தனர். தமிழன் சோழன் இந்தோனேசியாவில் கதிரவனுக்கு கட்டியகோவிலே உலகில் இன்றும் பெரியகோவில்.

வத்திக்கான் மக்கா எல்லாமே அதைவிடச்சிறியவையே. இதைநீங்கள் பி.பி.சி. ஆவணப்பகுதியில் பார்க்கலாம். தமிழர்கள் இதை அறியாது அதைத்தமிழர் பெருமையாக உரிமை கோராததால் இந்தியர் கட்டியதாக அதில் இருக்கிறது.

திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடியபின் வான்சிறப்பு என இயற்கையைத்தான் பாடினார். இந்த உலகிற்கு அடிப்படை மழை.மழையை முதன்மைப்படுத்திப்பாடினார்.

தமிழன் வான்முகில் வழாது பெய்க என்று பாடி மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம் என்று பாடினானே ஒழிய மேன்மைகொள் இந்து நீதி என்று பாடவில்லை. இது பாடியகாலத்திலும் இந்து அநீதியாக தமிழர்களையும் தமிழையும் அழித்துவந்தது. இதை உணராது தமிழர்கள் சைவநெறிகளை மறந்து அதன் பெயர்களைப்பயன் படுத்திக் கொண்டு சைவத்தை மறந்து இந்து என்று கூத்தாடும் அறியாமையை ஆராய்வது நன்று.

ஒரு சிவன்கோவிலுக்கு என்பிள்ளைகளைத் தேருக்கு அழைத்துச்சென்றேன்  அங்கே  பூநுால் இல்லாததமிழர்கள் தேரில் கடவுளுக்கு அருகில் இருந்து வழிபாடு நிகழ்துவதைக்கண்டு மகிழ்தேன். அந்தமகிழ்ச்சி ஒருகணத்தில் அகன்றது. எனது மகன் கேட்டான் ஒரு கேள்வி அப்பா அவர்கள் கடவுளுக்கு கொல்லும் மொழிஎன்ன? எனக்கு விளங்கவில்லை என்று? அதுதமிழ் இல்லை அதனால் ஒருவருக்கும் விளங்காது என்றேன்.  அவர்நடையில் அப்பா எங்களுடையகோவிலில் ஏன் வேறை சுபிறாகை என்றான்? வடஇந்தியமொழியில் சொல்லுகிறார்கள் என்றேன். அவர்கள் பிழையாகச் செய்யினம் என்னப்பா என்றான்.

இறைவனில்  இருக்கும் அன்புடன் இவர்களுக்கு இந்தியமொழியில் அன்போ! அல்லது அய்யர் என்ற கௌரவத்தைப் பெறுவதற்காக இப்படிச் செய்கிறார்களோ! என்று எண்ணி இதை அப்படியே விட்டுவிட்டுஇறைவனை  வணங்கிவிட்டு வந்தேன்.

இது தமிழுக்கும் சைவத்திற்கும் இழுக்கு ஒரு குழாமினர் ஏன் இந்தியருடைய முறையில் அவர்கள் மொழியில் தமிழச் சைவக்கோவில்களை வழிநடத்தி தமிழத் தேசியத்தை இந்தியச்தேசிய மாக்கின்றார்கள்.

இந்தி அடையாழத்தை தமிழச் சைவ அடையாழமாக ஏற்று ஏமாற்றுகிறார்கள் ஏமாறுகிறர்கள். இதுயாரையும் புண்படுத்துவதற்காக இல்லை.  தமிழர்களின் கவலைகளில் ஒன்று. பொய்த்தனமான  உண்மை              இல்லாதன என்றுமே  மக்களிடம் பயன்தருவதுமில்லை  நிலைக்கப் போவதுமில்லை. புதியதலைமுறைகள் புதிய தேசங்களில் சரியானவற்கை் கடைப்பிடித்துப் பயிற்றலாமே!  தமிழர்கள் சைவர்கள் என்று இல்லாது இந்து என்று இருக்கும்வரை மீட்சியே இல்லை. இந்து ஆரியமே அன்றிலிருந்து தமிழையும் சைவத்தையும் அழித்து ஒடுக்கிவந்திருக்கிறது.

மணிவாசகர் இந்தநாடும் எந்தநாடும் நன்றாக இருப்பற்காய் வழிபட்டிருக்கின்றார்

பாரிடை அய்ந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி........... என்று தொடர்ந்தவர்
தென்னாடுடைய சிவனே போற்றி 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி        என்று நிறைவு செய்திருக்கின்றார்.

இப்பாடலில் அவர் தனித்தமிழ் கையாண்டிருப்பதைப் பாருங்கள்  அக்கினி என்று அவர் பாடவில்லை  தீ என்று துாயதமிழ் கையாண்டிருப்பதைப் உணராது. நாம் தற்காலத் தவறுகளைச் சரியென்று கூறி மொழியை அழிக்கின்றோம். அக்கினி பூசை என்று வடபொழிகளைத் திணிக்கின்றோம். திருமுழுக்கு என்று அழகான தமிழ் இருக்கும் போது அபிசேகம் என்கின்றோம். வழிபாடு இருக்கும்போது பூசை என்கின்றோம். எமது சொற்களில்லாமல் எப்படி எமது மதமாகும்.? நாம் பலதமிழச்சொற்களை கைவிட்டுவிட்டு இடையிட்டு வந்திருக்கும் வடமொழிக்கு முன்னுருமை கொடுக்கின்றோம் நாம் மொழிப்பற்றாளர்களா? இனப்பற்றாளர்களா? இறைவனைக்காட்டி அதுவும் தமிழர்களின் இறைவன் என்று காட்டி தமிழைப் பின்தள்ளலாமா? எல்லோருக்கும் இறை பத்தியிருக்குமாப் போல் அது தவறாக வழிநடத்தப்படுவது போல் எல்லோருக்கும் மொழிப் பற்றிருக்கிறது. அது பல உண்மைகளை உணராது தவறு விடுகிறது.தமிழைக் கெடுத்து அழித்து வருகிறது. தமிழுக்காக உயிர்கொடுத்த இலங்கைத் தமிழர்கள் இதை சிந்திக்காது எழுந்த மான மாக தமது ஊர்வழமை தேசவழமை என்பது போல் தவறுகளை வளர்த்து தமிழை சமயங்களின் துணை கொண்டு அழிக்கிறார்கள்.

தமிழர்கள் ஆதியில் சைவசமயத்தை வகுத்த போது பொதுத்தன்மை கொணடிருந்தார்கள்.  இந்து சமயக் கூட்டிலுள்ள வடநாடுசார்த வைசுணவம் போன்றன குறுகிய கருத்துக்களைப் போதித்தன கிருச்ண பரமாத்மாவை அடைந்தாலே முத்தி என்பார்கள் அதே போன்றே ஏனைய உலக சமயங்களும்  என்னிடம் வருவோரை நேசிப்பேன் காப்பேன் ஏனையவர்கள் பாவிகள். என்ற குறுகிய மனிதநிலையில்  தமது மதமரபினை உடையோரை மட்டும் கடவுள் ஏற்பார் ஏனையவர்கள் பாவிகள் என்பது எமது சைவத்தில் இல்லை.

நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன் சலமின் பேர்சங்கரன்.  இதை உணர்துபாருங்கள் இறைதன்மை புரியும்.தன்னை வழிபடாதவர் என்று அவரில் வெறுப்பு அற்றவர் கடவுள்  தன்னை வழிபடுபவர் என்று விருப்பும் அற்றவர் இறைவன் அதனால் அவர் பெயர் சங்கரன். அப்பப்பா என்னே கருத்து. இது திருவருட்பயன்.

இத்தகைய சைவத்தையும் தமிழையும் கோவிலுக்கு வெளியில் விட்டுவிட்டு பட்டுக்கட்டி புலிச்சங்கிலியுடன் வெளியில் நின்று பூநுால் காரரின் சமயத்தை தமிழச் சமயம் என்று ஏமாற்றும் தமிழர்கள் பெருகிவிட்டதால் சோதிடர்களையும் கடவுளையும் காட்டி ஏமாற்றும் கூட்டம் அதிகமாகிவட்டது. விழித்துக் கொள் தமிழா! இதற்காக தமிழ்நாயன் மார்கள் தோன்றுவார்கள்.

வெளிநாடுகளில் கோவில்களை நடத்துவோர்கள் தமக்கிடை போட்டிகளை உருவாக்கி எந்தக்கோவில் பெரியது என்பதே அடிப்படை. எதுசரியானது சரியாக நடத்தவேண்டும் என்று இல்லை. மக்களின் அறியாமைகளைப் போக்குவன  கோவில்கள் இவர்களோ அறியாமைகளை வைத்து கோவில்களை நடத்த விளைகிறார்கள். அய்யப்பபக்தர்களை எப்படிக்கவருவது அம்மன் பக்தர்களை எப்படிக்கவருவது என்ற அவதந்திரங்களோடு இயங்குவதை எப்படி அனுமதிப்பது.

இவர்களின் புலித்தோல்களை உரிப்பார்கள் போலித் தனங்களை  அகற்றுவார்கள். இந்து என்று தமிழன் தெளிவின்றி அலையும் வரை எம்மினம் அழிந்து கொண்டும்  பிறகலாச்சாரமரபில் சென்று இறுதியில் இந்தியச் சதியில் உலகமெலாம் தமிழர்கள் இந்தியர் எனநிறுவப்படுவார்கள் என்று குமரிநாடு.நெற் எச்சரிக்கை செய்து நிறைவு செய்கின்றது.

பூநகரி பொ.முருகவேள் ஆசிரியர். சுவிற்சர்லாந்து.13.01.2012